Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் கழிவு ஓயில் விவகாரம்! முடக்க சதி செய்கின்றதா கூட்டமைப்பு?

Featured Replies

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் நிலத்தடி நீரினில் கழிவு ஓயில் வேகமாகப்பரவி வருகின்ற நிலையினில் இது தொடர்பினில் ஊடகங்கிற்கு செய்தி வெளியிட தடைவிதித்துள்ளார் வடமாகாண சுகாதார அமைச்சர்.

இது தொடர்பினில் வெளியிடப்பட்டுள்ள உள்ளக சுற்றுநிருபத்தினில் தமது அனுமதியின்றி ஊடகங்களிற்கு செய்திகளை வெளியிட வேண்டாமென மாவட்ட சுகாதார அதிகாரிகளிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட தன்னார்வ தரப்புக்கள் சில கழிவு ஓயில் சர்ச்சைகளிற்கு காரணமான மின்பிறப்பாக்கிகளை முடக்க  கோரி அடையாள எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையினிலேயே ஊடகங்களிற்கு செய்திகளை வழங்க முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடமாகாண விவசாய அமைச்சரும் போராட்டங்களை முடக்கும் வகையினில் செயற்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதிய அரசாங்கத்தின் கீழ் பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக  ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பானத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பியதன் பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/37363/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவுஓயில் குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு தடை

 

 

 30 ஜனவரி 2015
lg-share-en.gif
 

 

helth1_CI.jpg

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் வேகமாகப்பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பில் ஊடகங்கிற்கு செய்தி வெளியிட தடைவிதித்துள்ளார் வடமாகாண சுகாதார அமைச்சர்.


இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள உள்ளக சுற்றுநிருபத்தில் தமது அனுமதியின்றி ஊடகங்களிற்கு செய்திகளை வெளியிட வேண்டாமென மாவட்ட சுகாதார அதிகாரிகளிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட தன்னார்வ தரப்புக்கள் சில கழிவு ஓயில் சர்ச்சைகளிற்கு காரணமான மின்பிறப்பாக்கிகளை முடக்க  கோரி அடையாள எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


இந்நிலையினிலேயே ஊடகங்களிற்கு செய்திகளை வழங்க முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.


ஏற்கனவே வடமாகாண விவசாய அமைச்சரும் போராட்டங்களை முடக்கும் வகையில் செயற்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனிடையே புதிய அரசாங்கத்தின் கீழ் பத்திரிகை சுதந்திரம் அதிகரிக்கும் என்று தான் நம்புவதாக  ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூ ஸ்வைர் தெரிவித்துள்ளார். அவர், யாழ்ப்பானத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பியதன் பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 

 

இதேவேளை இந்த விடயங்கள் குறித்து வியூகன் என்பவர் அனுப்பி வைத்த விடயமும் இங்கு இணைக்கப்படுகிறது....

யாழ்பாணம் கழிவு எண்ணைப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களைச் சார்ந்து நிற்கிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அண்மையில் தெல்லிப்பளை  மஹாஜனாக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கு வட மாகாண விவசாய அமைச்சர் திரு.ஐங்கரநேசன் மேற்கொண்ட பிரயத்தனம் இந்த வினாவை எழுப்பியுள்ளது.


ஆர்ப்பாட்ட விடயத்தை முன்கூட்டியே அறிந்து கொண்ட அவர், குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாகவும் அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளார். ஆயினும் இது  பற்றி ஊடகங்களுக்கு அறிவிக்க நேரும் என மாணவர்கள், ஆசிரியர்களால் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களைச் சார்ந்து நின்று பணியாற்றாத வரை மக்கள் அவர்களைக் கடந்து சென்று போராடுவதைத் தவிர்க்க முடியாது.

-வியூகன்.


இந்த விடயங்கள் குறித்து மாகாண சுகாதார அமைச்சு, மற்றும் விவசாய அமைச்சு, அமைச்சக அதிகாரிகள் தங்கள் தரப்பு விளக்கங்களை அனுப்பி வைத்தால் அவை முழுமையாக பிரசுரிக்கப்படும்.
ஆ.ர்

 

radiokuru@yahoo.com

00447769686764

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116086/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.