Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானம் கண்டுபிடித்தது யார் ?

Featured Replies

விமானம் கண்டுபிடித்தது யார் ?

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில.இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/)
இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.
இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…
இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.

 

10968350_374528539385908_689574182905803

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார்.

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?
(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

 

https://www.facebook.com/photo.php?fbid=374528539385908&set=a.107159202789511.13193.100004862950308&type=1&theater

 

 

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

1895 ஆம் வருடம் இந்திய என்ற ஒரு நாடே இல்லையே ?

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.