Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த நீதித்துறையை செம்மைப்படுத்த வேண்டியது அவசியம் - மங்கள சமரவீர:-

Featured Replies

சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த நீதித்துறையை செம்மைப்படுத்த வேண்டியது அவசியம் - மங்கள சமரவீர:-
02 பெப்ரவரி 2015
 
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Judgement_CI.jpg

 

சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த நீதித்துறையை செம்மைப்படுத்த வேண்டியது அவசியம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு ஒழுங்காகவும் கிரமமாகவும் காணப்படுகின்றது என்பதனை உலகிற்கு உணர்த்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றம் சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இயங்குவதனை உறுதி செய்வதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்களை இலங்கை சிறந்த முறையில் கையாள்கின்றது நிரூபிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மனித உரிமை விவகாரங்கள் குறித்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமை மேற்கொள்ள இலங்கை தகுதியானது என்பதனை உலகிற்கு உணர்த்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகள் பூர்த்தியாகும் தருவாயில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் மூலம் இலங்கை படையினர் மற்றும் சிவிலியன்கள் சர்வதேச நீதிமன்றில் ஆஜராகக் கூடிய நிலைமை உருவாக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்துக்களிலிருந்து மீள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கத் தவறியமையே சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட ஏதுவாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இன சமூகங்களுக்கு இடையிலான காயங்களை ஆற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச விசாரணைகளை தவிர்க்க முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நம்பகமான பக்கச்சார்பற்ற உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை துரித கதியில் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நாகரீகமடைந்த உலகின் ஏனைய நாடுகள் அனுபவித்து வரும் உரிமைகள் வரப்பிரசாதங்களை இலங்கையும் அனுபவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதம நீதியரசரின் நிர்வாகத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் சர்வதேச சட்ட நியதிகளுக்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தை ஏமாத்த,  இன்னொரு நாடகத்துக்கு வேசம்  போடப்போறீங்க,   எண்டு சொல்ல வாறீங்கள். காயத்துக்கு மருந்து போடாமல், நாடகம் போட்டால், வெற்றி கிட்டாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.