Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சுற்றுப்பயணத்தின் போது மோடி யாழ்ப்பாணம் செல்கிறார்: தமிழர் பகுதிகளை பார்வையிட திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி, பிப். 4–

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணம் வடக்கு மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. விடுதலைப் புலிகள் ஆதிக்கம் இருந்த போது யாழ்ப்பாணம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது.

தற்போது வடக்கு மாகாண முதல்–அமைச்சராக விக்னேஸ்வரன் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா ராஜபக்சேவை தோற்கடித்து புதிய அதிபர் ஆனார். சிறிசேனாவுக்கு தமிழர்கள் ஓட்டு பெருவாரியாக கிடைத்ததால் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சிறிசேனா இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார். அதிபர் ஆன பின்பு முதல் வெளி நாட்டுப் பயணமாக வருகிற 16–ந் தேதி இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

அதன்பிறகு பிரதமர் நரேந்திரமோடி மார்ச் மாதம் இலங்கை செல்கிறார். கொழும்பில் அதிபர் சிறிசேனாவுடன் பேச்சு நடத்துகிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போருக்குப் பின் அங்கு இந்திய அரசின் நிதி உதவியுடன் பல்வேறு நிவாரணப்பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அந்த பணிகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்தியா–இலங்கை மீனவர்கள் பிரச்சினை முக்கிய பேச்சு நடத்துகிறார்.

மோடி தனது இலங்கை பயணத்தின் போது தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். 1987–ம் ஆண்டுக்குப்பின் இந்தியப் பிரதமர்கள் யாரும் யாழ்ப்பாணம் சென்றது கிடையாது.

முதல் முறையாக 28 ஆண்டுகளுக்குப்பின் பிரதமர் மோடி யாழ்ப்பாணம் சென்று தமிழர் பகுதிகளை பார்வையிடுகிறார். அங்குள்ள தமிழ் மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்று தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரல் இன்னும் முடிவாகவில்லை.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது 2013–ம் ஆண்டு கொழும்பில் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். அப்போது அவரை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு வடக்கு மாகாண முதல்– அமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழின படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே நடத்தும் காமன் வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசும், தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மன்மோகன்சிங் இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

இலங்கை அதிபர் சிறிசேனா அடுத்த வாரம் டெல்லி வந்து சென்ற பின்பு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கொழும்பு செல்கிறார். அப்போது பிரதமர் மோடியின் சுற்றுப் பயண விவரங்கள் முடிவு செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி யாழ்ப்பாணம் வருவதை அங்கு வசிக்கும் தமிழர்கள் வரவேற்றாலும் அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது. இதை கருத்தில் கொண்டே மோடி யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

http://www.maalaimalar.com/2015/02/04103659/Modi-tour-of-Sri-Lanka-in-Jaff.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.