Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா, எங்கடை பிள்ளைகள் எங்கை அம்மா ? கோபி ஒரு பேப்பர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“Political power, as is known, lies with Presidents, Prime Ministers and heads of states. It is the office they hold that gives them the authority (if not the wisdom) to determine the political fate of the countries they head. Why does it happen therefore that in a country like Sri Lanka where the constitution itself bestows extraordinary powers to the president – powers unmatched by those of a Clinton or a Chirac – that the incumbent in office looks powerless ether to carry forward her mandate for peace, or rescue her country being bogged down in war? The answer is simple. The one who is determining the political and military agenda in Colombo is nowhere in Colombo, holds no office, sports no military title, but what is more ridiculous, he carries a price on his head, and is known in Sri Lankan political terminology as a ‘terrorist’.” (Editorial, Hot Spring, August 1996).

பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர்
முல்லைத்தீவு படைத்தளத்தை விடுதலைப்புலிகள்
கைப்பற்றி அப்பிரதேசத்தினை விடுவித்த தருணத்
தில் புகழ்பெற்ற ஊடகவியலாளர் காலஞ்சென்ற
திரு. சிவநாயகம் அவர்கள் `ஏச்ஞ் நசிசுகூஙூகீபீ மாத
சஞ்சிகையில் எμதிய ஆசிரியர் தலையங்கத்தி
லிருந்து ஒரு பந்தியே மேலே தரப்பட்டுள்ளது.
இது விடுதலைப்புலிகள் அடைந்த இராணுவ
வெற்றியினையிட்டு உணர்ச்சிவசப்பட்டு எμதப்
பட்ட ஒன்றல்ல, மாறாக, இலங்கைத்தீவின் அரசிய
லில் தமிழர்கள் கொண்டிருந்த தீர்க்கமான வகி
பாகத்தை குறிக்கின்ற ஒரு வரலாற்றுக் குறிப்பா
கவே அமைந்துள்ளது. ஆறாண்டுகளுக்கு முன்னர்
தமிழ் மக்களின் ஆயுதபலம் முறியடிக்கப்பட்டு,
இன்று ஒரடி நிலத்தத்தைதானும் தமது கட்டுப்
பாட்டுப் பிரதேசம் என குறிப்பிடமுடியாதுள்ளது.
இத்தகைய புறநிலையைக் கவனத்தில் எடுத்துக்
கொண்டே, தமிழ் மக்களின் இன்றைய அரசியலை
ஆராயவேண்டியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சிறிலங்காவின்
ஆட்சிமாற்றம் பற்றி மேற்குலக ஊடகங்களில்
அதிகப்படியான பரப்புரைகள் மேற்கொள்ளப்படு
கின்றன. நாளுக்கு ஒன்று என்ற வகையில் இவ்
விடயம் பற்றிப்பேசும் கட்டுரைகளைக் காணமுடி
கிறது. ஏறத்தாள ஆங்கிலத்தில் வெளிவரும் எல்லா
முன்னணி ஊடகங்களும் இதுபற்றிய பேசிவரு
கின்றன என்றே கூறவேண்டும். சிறிலங்கா
விவகாரத்தில் முன்னர் தொடர்புபட்டிருந்த இராஜ
தந்திரிகளான ரிச்சர்ட் ஆர்மிரேஜ், எரிக் சொல்
ஹெய்ம் போன்றவர்கள் ஆட்சி மாற்றம் பற்றி
எμதிய கட்டுரைகளில் அவர்கள் தமது
மகிழ்ச்சியை மறைக்க முற்படவில்லை.
எகிப்தில் ரகிரிர் சதுக்கத்தில் (பஹகுசுகூசு சூசீஞிஹசுக்)
நடைபெற்ற `அரபு வசந்தம்' எனக்குறிக்கப்படும்
ஆர்ப்பாட்டங்களினால் ஹோஸ்னி முபாரக் இன்
ஆட்சி மாற்றப்பட்டதைவிட மிக இலகுவான முறை
யில், அமைதி வழியில் இலங்கைத்தீவில் ஆட்சி
மாற்றம் நடைபெற்றிருக்கிறது. அதன் குதூகலமும்
சம்பந்தப்பட்ட மக்களைக்காட்டிலும் வெளித்தரப்பி
னரிடமே காணப்படுகிறது என்பதிலிருந்து இவ்
வாட்சிமாற்றத்தின் பயனாளிகள் யார் என்ப
தனை உணர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில்
இவ்வாட்சி மாற்றம் ஈழத்தமிழர்களை எங்கே
கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதனையிட்டு
தமிழ் அரசியற் தரப்புகள், ஆர்வலர்கள், புலமை
யாளர்கள் ஆகியோர் காய்த்தல் உவத்தலின்றி
வெளிப்படையாகவே விவாதிக்க முன்வர
வேண்டும்.
புதிய ஆட்சி பதவிக்கு வந்ததும், முன்னர்
இருந்து பாதுகாப்புக் கெடுபிடிகள் தற்போது
குறைந்து ஒரளவிற்கு இயல்பு நிலை தோற்றுவிக்
கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால்
அதற்கு அப்பால் சாதாரணமாக சட்டத்தின் ஆட்சி
நடைபெறுகிற நாடுகளில் செய்யக்கூடியவற்றைக்
கூட செய்யமுடியாதுள்ளது என்பதனை நடை
பெற்றுவரும் சம்பவங்கள் உறுதிசெய்வதாக
அமைந்துள்ளன. இதற்கிடையில், முப்படைகளுக்
கும் உள்நாட்டு விடயங்களில் தலையிடக்கூடிய
பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதாக மைத்திரி
அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்புச்
செய்துள்ளமை கவனத்திற்குரியது,
ஏற்பட்டிருக்கும் இயல்புநிலையை வாய்ப்பாகப்
பயன்படுத்தி, படையினரால் கைது செய்யப்பட்டு
சிறைகளில் அல்லது முகாங்களில் அடைத்து
வைக்கப்பட்டிருக்கிற தமிழ்மக்களின் உறவினர்
கள் அமைதியான முறையில் போராட முன்வந்தி
ருக்கிறார்கள். அண்மைய நாட்களில் மன்னார்,
கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில்
இத்தகைய மக்கள் போராட்டங்கள் நடைபெற்றிருக்
கின்றன. பெப்பிரவரி 2ம்திகதி கிளிநொச்சியில்
நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட
ஒரு பெண்மணி, கிளிநொச்சி அரசாங்க அதிபர்
ரூபவதி கேதிஸ்வரனிடம் தனது விண்ணப்பத்தைக்
கையளிக்கும்போது உருக்கமாக தனது ஆதங்
கத்தை வெளியிட்டார். காணொளியில் பதிவாகியி
ருக்கும் அந்த உரையாடல் இவ்வாறு அமைந்
திருந்தது:
"அம்மா, எங்கடை பிள்ளைகள் எங்கை அம்மா ? ''
"கூனோ, குருடோ எங்கடை பிள்ளைகளை எங்
கடை கண்ணில் காட்டுங்கோ அம்மா!? ''
"தேர்தலுக்கு பிறகுதான் எங்ககடை பிள்ளை
களை காணேல்லை என்கிறார் அம்மா.''
"சிறையிலை இருந்த எங்கடை பிள்ளைகளைக்
காணேல்லையாம் அம்மா, கடத்தீட்டாரா அம்மா? ''
"வாகனங்களை கடத்தினது மாதிரி எங்கடை
பிள்ளையளையும் கடத்தீட்டாரா அம்மா?''
"இவ்வளவு காலமும் இருந்த எங்கடை பிள்ளை
கள் எங்கை அம்மா?''
`` இல்லாமல் செய்திட்டாரா அம்மா?''
`` எங்கை அம்மா அவையள்? ''
"எங்கடை பிள்ளைகளை எங்களிட்டை தாருங்கோ
அம்மா? ஆறு வருசம் பார்த்திட்டம் இதுக்கொரு
முடிவு காணவேண்டும் அம்மா''
இக்கேள்விகள் எதற்கும் அரசாங்க அதிபர்
ரூபவதியிடம் பதிலிருக்கவில்லை. தான் அந்த
விண்ணப்பங்களை உரிய இடத்திற்கு அனுப்பி
வைப்பதாக மாத்திரம் அவர் கூறினார். இக்கேள்வி
களுக்கான பதில்களை ரூபவதி அறிந்திருக்க
நியாமில்லை, ஆனால் ஆட்சி மாற்றம் சட்டத்தின்
ஆட்சியை மீளக் கொண்டுவந்திருக்கிறது என்றால்,
சிறிலங்காவின் நீதித்துறையே காலதாமதமின்றி
இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
பெப்பிரவரி 3ம்திகதி யாழ்ப்பாணத்திற்கு பயணம்
மேற்கொண்டிருந்த தெற்காசிய பிராந்தியத்திற்
கான அமெரிக்காவின் பிரதி இராஜங்கச் செயலா
ளர் நிஷா பிஸ்வால் கூட்டமைப்பினரைச் சந்தித்
தார். அதன்போது கூட்டமைப்பினர், ஆட்சி மாற்றத்
திற்கு தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்
கள் எனவும், ஆகையால் தமிழ் மக்களின் பிரச்
சினைத் தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்தின் மீது
அமெரிக்கா அμத்தங்களைக் கொடுக்க வேண்டும்
எனவும் கோரிக்கை விடுத்ததாக செய்தி வெளியாகி
யிருந்தது. இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட
நிஷா பிஸ்வால் அவற்றை இலங்கை அரசாங்கத்
திடம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டதாக மேற்படி
செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த்து.
புதிய ஆட்சி பதவிக்கு வந்ததும்,
முன்னர் இருந்து பாதுகாப்புக்
கெடுபிடிகள் தற்போது
குறைந்து ஒரளவிற்கு இயல்பு
நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக
அறிய முடிகிறது. ஆனால் அதற்கு
அப்பால் சாதாரணமாக சட்டத்தின்
ஆட்சி நடைபெறுகிற நாடுகளில்
செய்யக்கூடியவற்றைக் கூட
செய்யமுடியாதுள்ளது என்பதனை
நடை பெற்றுவரும் சம்பவங்கள்
உறுதிசெய்வதாக அமைந்துள்ளன.
இங்கு எμகின்ற கேள்விகள் என்னவெனில் புதிய
அரசாங்கத்திற்கு முμமையான ஆதரவு வழங்கி
வரும் கூட்டமைப்பினர் இக்கோரிக்கைகளை தமது
அரசாங்கதின் முன் வைக்க முடியாதா? தேசிய
நிறைவேற்றுச் சபையில் (சஹஞ்கூச்ஙூஹஙீ க்ஞூக்ஷஞிஞ்கூஞீக் இச்ஞிஙூஷகூஙீ)
அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைவர்
சம்பந்தன் இவ்விடயங்களை அச்சபையின்
கவனத்திற்கு கொண்டுவர முடியாதா? ஆட்சிமாற்
றத்திற்கு தாம் பங்களித்தோம் என்று கூறுவதன்
மூலம் யாருடைய ஏவலை தாம் நிறைவேற்றிய
தாக கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு ஒப்புக்கொடுக்
கிறது? சிறிலங்கா அரசாங்கத்திடம் தமது நியாய
மான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இன்ன
மும் வெளித்தரப்பு ஒன்றின் அμத்தம் கூட்டமைப்
புக்குத் தேவைப்படுகிறது என்றால், வெளித்தரப்பு
களை நம்பியிருக்கும் நிலையே தொடரப்போகிறதா ?
தமது ஒμங்குக்குள் வந்து சேர்ந்திருக்கும்
சிறிலங்கா அரசாங்கத்திற்கு காலமும், செயற்
பாட்டு வெளியும் வழங்குமாறு மேற்குலக இராஜதந்
திரிகள் கோரி வரும் நிலையில், இவர்களை நம்பி
யிருந்த கூட்டமைப்பும், ஏனைய தமிழ் அமைப்புக
ளினதும் அரசியற்பலம் வலுவிழந்து போய்
விட்டமை வெளிப்பட்டு நிற்கிறது. இதிலிருந்து
மீழெμம் வழிவகைகளைக் கண்டுகொள்வதில்
தான் ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலம்
தங்கியிருக்கிறது. இவ்விடயத்தில காலனித்துவ
மனோபாவத்துடன் இயங்கி வரும் கூட்டமைப்பின்
கொμம்புத்தலைமையை நம்பியிருப்பதில்
பயனில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்
திற்கு இடையூறாக இருக்கும் இத்தலைமையை
வண்டியிலிருந்து இறக்கி விடாமல் பயணம்
இம்மியளவும் நகரப்போவதில்லை.
கோபி
ஒரு பேப்பர

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.