Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மு.காவுக்கு முதலமைச்சர் பதவி: ஐ.தே.க. கடும் எதிர்ப்பு

Featured Replies

dhaya%20gamage%2007%2002%202015.jpg

 

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "கிழக்கு மாகாணசபையில் 7 ஆசனங்களுடன் சிறுபான்மை பலத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியமை நியாயமற்றது.
 
கிழக்கு மாகண முதலமைச்சராக என்னை நியமிப்பதற்கு அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், நான் குறுகிய காலமே கிழக்கு மாகாண சபையில் இருக்கப் போகின்றேன். தற்போதுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும். ஏனெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்தியாளர்கள் மற்றும் மு.காவின் அதிருப்தியாளர்கள் எனப் பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளனர்" - என்றார்.
 
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய முதலமைச்சர் பதவி மு.கா.வுக்கே வழங்கப்பட வேண்டும் என மு.காவினர் போர்க்கொடி தூக்கியதையடுத்து அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியும் பச்சைக் கொடி காட்டினர்.
 
இதனால், ஹாபீஸ் நசீர் அஹமட்டை கிழக்கின் முதல்வராக மு.கா. உயர்பீடம் தெரிவுசெய்தது. இதற்கமைவாக நேற்று அவர் முதல்வராகப் பதவியேற்றார்.
 
இந்நிலையில், "கிழக்கு மாகாணசபையில் சபையில் சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸினால் எவ்வாறு ஆட்சியமைக்க முடியும்? அவர்களால் அவ்வாறு செயற்பட முடியாது. இவ்விடயம் தொடர்பில் நாம் பேசி வருகின்றோம்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
அவர்களால் அவ்வாறு செயற்பட முடியாது. இவ்விடயம் தொடர்பில் நாம் பேசி வருகின்றோம்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஐயா சட்ட மேதைதானே எதாவது வழக்கு போட்டு தமிழ் முதலமைச்சரை 2020 நியமிப்பார்

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.