Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகனிற்காக அதி வேகப்படகு ஓட்டுவதற்கு வாவியை வாங்கிய மகிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகனிற்காக அதி வேகப்படகு ஓட்டுவதற்கு வாவியை வாங்கிய மகிந்த! 

[sunday 2015-02-08 08:00]
Magnta-Son-080215-200-seithy.jpg

யோசித ராஜபக்‌ஷ பொல்கொட வாவியில் அதி வேகப்படகு ஓட்டுவதற்கு கடற்படையினர் பொல்கொட வாவியைச் சுற்றியுள்ள ஈர நிலத்தை ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட பணம் செலுத்தி வாங்கியுள்ளனர். இப் பணத்தை எட்டு நபர்களுக்கு வழங்கி பிரதேச செயலக காரியாலயத்தினூடாக 38 உறுப்புரையின் கீழ் 2011/09/27 அன்று இலக்கம் 1725/10 வர்த்தமானி அறிவித்தலின் கீழ் உரிமையாக்கியுள்ளனர். இதற்காக பணமாக ரூ. 50,400,000/= (ஐந்து கோடி நானூறு இலட்ச்சம்), 8 நபர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக காணி அமைச்சினால் 2013/03/07 அன்று பிரதேச செயலகத்தின் செயளாளருடைய பெயருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

 

   

இந் நிலங்களை கடல் கண்காணிப்பு நிலையம், இழுவைப்படகு மற்றும் படகு களஞ்சியசாலை என்பவற்றை நிர்மாணிக்க வாங்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவ்விடமானது முழுமையாக ஈரநிலம் என்பதுடன் இவ் விட்த்தில் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையை அடுத்து நிர்மாணிப்புப் பணிகளை நிறுத்தி,இதற்காக எடுத்து வரப்பட்ட தொன் கணக்கான இரும்புத் தொகைகளை மீண்டும் கொழும்பிற்கு கடற்படையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 ½ வருடத்திற்கும் மேலாக மக்கள் உட்பிரவேசிப்பதற்கு தடை செய்யப்பட்ட வலயமாக இருந்த இப் பிரதேசம் ஜானாதிபதித் தேர்தலின் பின்னர் 2015.02.04 அன்று ஊடகவியளாலருக்கு உட்பிரவேசிக்கக் கிடைத்தது.

அவ்விடத்தில் மூன்று கடற்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததுடன் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாவிகள் காப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தரப்பினரிடமிருந்து அனுமதி கிடைக்காத போதும் இவ்விடத்தில் கட்டிடம் நிர்மாணிக்க கடற்படையினருக்கு என்ன உரிமை இருக்கின்றது? என ஊடகவியளாளர்களுடைய கேள்விக்கு கடற்படைத்தளபதி உரிய பதிலளிக்காது வேறு கதைகளைக் கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு அதிக பனம் செலுத்தியிருப்பது யோசித பொல்கொட வாவியில் படகோட்டி மகிழ்வதற்கென மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

http://www.seithy.com/breifNews.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.