Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள்

Featured Replies

 kanapathipillai-tribute_CI.jpg
 
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின்  மறைவு  குறித்து சில நினைவுக் குறிப்புகள் :-
 
எஸ் எம் வரதராஜன் 
 
 " ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியை முன்னாடு.." 
 
என்று  தாயகம் முதல் புலம்பெயர் தேசம் எங்கும் மேடைகளில் கம்பீரமாக ஆரம்பித்த அந்தக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது!  
 
நான் மட்டுமல்ல எனது வயதைச் சேர்ந்தவர்கள் பாடசாலை நாட்களில் வில்லிசையை இரசிக்கக் காரணமானவர் சின்னமணி. எண்கள் பாடசாலை  நாட்களில்   கோவில் திருவிழாக்களின் பொழுது  நாதஸ்வரக் கச்சேரி தொடங்கிச் சிலநிமிடங்களில் உறங்கும் நாம் மேளச் சமா விறுவிறு ப்பாயிருந்தால் எழும்புவது வழக்கம். அல்லது  சின்னமணி   வந்தால் தான்  உஷா ருடன்  எழும்பியிருப்போம். 
 
எனது காலத்தில் நாம் ஒன்றாயிருந்து வில்லுப்பாடுப் பார்த்தவர்கள் இன்று என்னுடன் இல்லை. சுக்லா என்று போராளியாக   இருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரன், விசு என்று பிற்காலத்தில் அழைக்கப்பெற்ற  அரவிந்த்ராம் ; நியூட்டன் என்று பிற்காலத்தில் அழைக்கப்பெற்ற  சிவகுமார்     என நாங்கள் ஒன்றாக மாலுசந்தி யிலும் கரணவாய் மூத்த  விநாயகர் கோவிலிலும் பாடசாலை நாட்களில் ஒன்றாக இருந்து சின்னமணி வில்லுப்பாட்டுப் பார்த்த  நினைவு கடந்த சிலநாட்கள் என் கண் முன்னே வந்தன. 
 
அப்படி நினைக்கும்போது ஒன்று என் மனதில் பட்டது-  எத்தனையோ பேரை அவர் வயது பால் வித்தியாசமின்றி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார். அவருக்கு முன்னர் அவரை ரசித்த பலர் போய்  விட்டனர்.  அவர் இப்பொழுதுதான் மேடையிலிருந்து இறங்கிப் போகிறார். 
 
அதுமட்டுமல்ல - நான்கு தலைமுறைக்கு மேலாக இவராலும்  மற்றும் அச்சுவேலி  ராஜ் நாடகக் கலாமன்ற சக்கடத்தார்  போன்றவர்களால் தமிழ்ச் சமூகம் சிரித்துச் சுவைத்து மகிழமட்டும் முடிந்தது .ஆனால் அரசியல் ரீதியாக அதற்கு இன்னமும்  சிரிக்க முடியவில்லை -என்பதையும் அன்னாரது பிரிவு ஒரு சமூகம் சார் செய்தியாக நமக்குத் தந்துள்ளது. 
 
நெல்லியடி முருகன் கோவிலுக்கு அடிக்கடி வருவார் சின்னமணி.  நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி  ஆலய உறசவம் போல யாழ் குடாநாட்டின் பல ஆலயங்களின் முன்றல்கள்  தோறும்  அவரது வில்லிசை நிகழ்சிகள் இடம்பெற்றிருக்கின்றன . சிறந்த நாடகக் கலைஞர் என்பதால் வில்லடிப் பவராக மட்டுமன்றி  அந்த அரங்கத்தை ஒரு கலையரங்கமாகவே தமது முக  அங்க அசைவுகளால்  மாற்றி  ரசனையை  தம்மீது  வசீகரித்துக் கொண்டு தமது வில்லிசையால் அந்தக் கணங்கள்  முழுவதையும் ஆட்சி செய்தவர்  சின்னமணி!  தூங்கியவர்கள் எல்லோரையும்  தமது நகைச்சுவையால் எழுப்பி வைத்து அடுத்த நிகழ்ச்சியான ராஜன் கோஷ்டி அல்லது கண்ணன் கோஷ்டியைப்  பார்ப்பதற்கு அவர்களைத் தயார்ப்படுத்திச் சென்றவர் சின்னமணி!  
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கவலைகளில் ஒன்று தாம் பெண் வேடம் போட்டு நடிக்க முடியவில்லை என்று . பெண்ணாக ஆண்  ஒருவர் நடித்தால் அவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதுண்டு. 
சின்னமணி வில்லிசையின் பொழுது  சொல்ல வந்த கதையின் பாத்திரங்களாகவே தாம் மாறுவதுடன் வள்ளி ,சீதை ,சந்திரமதி போன்ற பாத்திரங்களாகவே மாறி ரசிகர் மனங்களில்  கதையினைப் புகுத்திய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.  இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் அன்னாரது சந்திரமதியும் சாவித்திரியும்  அங்க அசைவில் முக பாவனையில் வித்தியாசமானவர்கள் என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒருமுறை சொன்னது ஞாபகம். 
 
அதுபோல கிறிஸ்துராஜா பற்றிய தமது வில்லிசைக்கு  கிறிஸ்து பிறந்த செய்தியைக் கேட்ட ஏரோதுவின் அங்க அசைவுகள் எப்படி இருக்கும் என்பதை தமது ஊரிலிருந்த தாவீது அடிகளாரிடம் (யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கண்டபின்னர்  மறுநாள் உயிர் நீத்தவர்)  
 
 
எனது தாயார் தந்தையாருடன் அவர்கள் ஆசிரியர்கள்  என்பதாலும்  எனது தாயார் ஒரு இசைக் கலைஞர்  என்பதாலும்   நட்புடன் பழகியவர். நான் ரூபவாஹினிக்குச் சென்றபின்னர்  கொழும்பிற்கு வந்தால் எனக்கு தொலைபேசி எடுப்பார். "தம்பி வந்திருகிறேனடா ..விக்கியுடன் கதைத்து ஒரு ஸ்டூடியோ புக் பண்ண முடியுமெண்டால்  கேட்டுச் சொல் இரண்டு  அல்லது மூன்று  வில்லுப்பாட்டு செய்துவிட்டுப் போவேன்   " என்பார். அப்போ நான் கல்விச் சேவையில் பணியாற்றிய காலம்.  என்   பெற்றோரின் நட்பால்  வந்த உரிமை என்னைத் தொடர்பு கொள்ள வைத்தது. 
 
நான் தமிழ் பிரிவுக்குப் போன பின்னர்- அங்கு பணிப்பாளராக இருந்த திரு விஸ்வநாதன்  சின்னமணி அவர்களின்  வில்லுப்பாட்டை அவர் கொழும்புக்கு வரும்போதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் தந்தார். 
 
சின்னமணி அவர்கள் கொழும்புக்கு வந்தால் அவரைப் போய்ச் சந்தித்துப் பேசுவதில் அலாதியின்பம் ! பல கதைகள் பேசுவார். அறிவுக்குகந்த அவரது நகைச்சுவை மிக்க அனுபவப் பகிர்வுகள் எனது கலை வாழ்வுக்கு வளமூட்டியவை என்றால் மிகையல்ல. 
 
நேரம்முகாமைத்துவம்  என்ற விடயத்தில் அவர் அக்காலத்திலேயே எவ்வளவு  திடமாக இருந்தார் என்பதற்கு இரண்டு உதாரணங்களைக் குறிக்கலாம் 
 
1. ரூபவாஹினிக்கு கலையரங்கம் நிகழ்ச்சிக்கு வில்லிசை வழங்கும்போது அவற்குக் கொடுக்கப்படும்  நேர அளவு 23 நிமிடங்கள்  கடைசி எழுத்தோ ட்டத்தையும் போட்டு முடிக்க 25 நிமிடங்கள் வரும். ஒரு செக்கண்ட் கூட கூடக்கூடாது என்பது நிலைய முறைமை. அரை மணி நேர நிகழ்சிகளுக்கு அதுவே நேர அளவு ஆகும்.  சின்னமணி எமக்கு வழமைபோல ஐந்து நிமிடம் வர முன்னர் ஒரு "சிக்னல்"  (சைகை) மட்டும் தந்தாள் போதும் என்பார் .அதுபோலவே 22க்கும் 23 மூன்றுக்கும் இடையில் சரியாக முடித்திருப்பார். திருவிழாவில் இரண்டு மூன்று மணி நேரம் செய்த நிகழ்ச்சியை தொலைகாட்சிக்கு இரண்டு  அங்கமாக ஒரு மணி நேரத்தில் செய்து தருவார். மீண்டும் எடிட் செய்கின்ற  வேலை எமக்கு இருப்பதில்லை. 
 
2. அந்த நாட்களில் யாழ் குடா நாட்டில் பல ஆலயங்களில் திருவிழாவுக்கு இவரை அழைத்திருப்பார்களாம்    ஒருவருக்கும் குறை வைக்காமல் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே வீடு திரும்புவார் என்றார். அதற்கேற்றபடி சில இடங்களில் வில்லிசையில் பாடல்கள் குறைந்து நகைச்சுவை கூடி விடயதானம் வழுவாமல்  ரசிகர் மனங்களை குறை சொல்லவிடாமல் தமது கலைப் பணியைச் செய்துள்ளார். 
 
சின்னமணி  ஏன்  கொழும்புக்கு வந்தார்  அதற்குப் பின்தான் எம்மைத் தொடர்பு கொண்டார்.. என்று நீங்கள் கேட்கலாம். 
 
நான் ரூபவாஹினியில் பின்னர் ஐ ரி என்  பின்னர் சக்தியில் பணியாற்றிய காலத்தில் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகளுடன் கதைப்பதற்கு  யாழ்ப்பாணப் பெற்றோரெல்லாம்  கொழும்புக்கே வரவேண்டியிருந்தது.   இப்படிக் கலைஞர்கள் யாரும் வரும்போது நாம் தேடிக் கண்டுபிடித்து நிகழ்ச்சி செய்யும்  காலத்தை அன்றைய தயாரிப்பாளர்களான நாம் கண்டோம். 
 
அவர் இப்படி கொழும்பு வந்த காலை சக்தியிலும் ஒரு தீபாவளி வில்லிசை தயாரித்த  நினைவு உண்டு!   
 
அவரது வில்லிசைகளை  மாதனையூரைச் சேர்ந்த தொழிலதிபர்  சதா அவர்கள் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார். அத்துடன் அவருக்கு மணி விழா ஒன்றையும் நடத்தி மலர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இவை ஆவண மாக்கப்படவேண்டியவை.  தேசிய அரசால் முடியாத காரியமாயினும் மாகாண சபை அல்லது  பிரதேச சபை ஒன்றாவது அன்னாரின் கலைப் படைப்புக்களையும் அவரது ஆவணங்களையும் பதிவு செய்தல் வேண்டும் என்பது எனது அவா! 
 
அவரது நகைச்சுவைகள் பல யதார்த்த மானவை  பார்க்கும் ரசிகப் பெருமக்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்தவை ! 
 
அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு சொல்லி  இக்குறிப்பை முடிக்கிறேன்:- 
 
ஒரு வில்லிசையில் சொன்னார்:- 
 
தபாற்சேவை பற்றிய அவரது நகைச்சுவை. கொழும்பிலிருந்து   சின்னமணி க்கு ஒரு தந்தி  வந்ததாம். தந்தியில்  முகவரி சின்னமணி , அச்சுவேலி என்று இருக்கவேண்டும் ஆனால் தந்திய எழுதிய தபால் ஊழியர் " அச்சுமணி , சின்ன வேலி " என்று  எழுதிவிடாராம். எப்படியோ தந்தி தமக்கு வந்து சேர்ந்ததாம் . ஏனெனில் தலைமைக் கந்தோரில் உள்ள தபால் அதிபர் சொல்லியிருப்பராம் .. அச்சுமணி என்று ஒரு பெயர் இல்லை "சின்ன  வேலி"  என்று ஒரு ஊரும் யாழ்பாணத்தில் இல்லை. அதால இது எங்கட "சின்னமணி" க்குத்தான்  அதால இது " அச்சுவேலி" க்குத்தான் -போகவேண்டும் ...என்று !
 
ஆம் ! "சின்னமணி"  என்றாலே அவர் ஒருவர் தான் என்பதை தமது கலைத் திறத்தால் நிலைநாட்டிச் சென்றவர் . அப் பெயரே  அவருக்கு உரிய பெரும் விருதாக அமைந்தது 
 
அவரது மரண அறிவித்தல் தெரிந்ததும் எங்கு நடைபெறுகிறது என்று முதலில் பார்த்தேன். 
 
அன்னாரின்  மரணச் செய்தியில் அச்சுவேலியைச் சேர்ந்த கலாவிநோதன்  கணபதிப்பிள்ளை  என்றும்  அச்சுவேலியில் நடைபெறும் என்றும்  அறிவிக்கப்படுகையில்  எனக்கு அவர் தம் ஊர் பற்றிச் சொன்ன அந்த நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது. 
 
பெற்ற தாயும் பிறந்த பொன்  நாடும் நற்ற  வானிலும் நனி சிறந்தனவே ! என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார்  பெரியார்  சின்னமணி  கணபதிப்பிள்ளை அவர்கள்! 
 
நீண்ட நேரம் கதை சொல்லிய தமது வில்லிசையின் இறுதியில் அவர் தமது கண்ணீர்க் குரலில் "...நமபார்வதி பதயே! ஹர ஹர மஹாதேவா! " என்ற குரல் இன்னமும் ஒலி த்துக் கொண்டிருக்கிறது!
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்ற தாயும் பிறந்த பொன்  நாடும் நற்ற  வானிலும் நனி சிறந்தனவே ! என்பதை நினைவூட்டி நிற்கும் ஒரு கலைஞராக நம் முன் இன்று நிற்கிறார்  பெரியார்  சின்னமணி  கணபதிப்பிள்ளை அவர்கள்! 

  • 2 weeks later...

ஈழம் தந்த மாபெரும் கலைஞனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.