Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைனுக்கு பிசிசிஐ தடை
 

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் ஆப் ஸ்பின்னராக ஐபிஎல் போட்டியில் பந்துவீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தடை விதித்துள்ளது.

அவரது பந்து வீச்சு முறை சர்ச்சைக்குரியதாக இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி அவரால் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற முடியாது.

 

மேற்கிந்தியத்தீவுகளைச் சேர்ந்த சுனில் நரைன் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ளார். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அவர் அணியில் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் பிசிசிஐ நடத்தும் அனைத்து வகை போட்டிகளிலும் அவர் பந்துவீச்சாளராக விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 22-ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நரைன் பந்து வீசினார். அவர் பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டதால், சென்னையில் வைத்து பையோமெக்கானிக்கல் முறையில் அவரது பந்து வீச்சு வீடியோ ஆய்வு செய்யப்பட்டது.

 

இதில் அவர் விதிகளுக்கு புறம்பாக பந்து வீசுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆப் ஸ்பின்னராக பந்து வீச பிசிசிஐ தடை விதித்துள்ளது. எனினும் அவர் பந்து வீசும் முறையை மாற்றிக் கொண்டால், அதனை ஆய்வு செய்து தடையை நீக்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

முன்னதாக 2014-ம் ஆண்டு சாம்பியன் லீக் டி20 போட்டியில் நரைன் தூஸ்ரா முறையில் பந்து வீசியது விதிகளுக்கு முரணானது என்று கூறி பந்து வீச தடை செய்யப்பட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/article7157371.ece

  • Replies 449
  • Views 23.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கை விரலில் காயம்: அடுத்த 2 போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்
 

 

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரு போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ரவிச் சந்திரன் அஸ்வின் விளை யாட மாட்டார் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை அஸ்வின் கேட்ச் பிடிக்க முயன்றார். அப்போது வலது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் பந்துவீச வரவில்லை.

இந்நிலையில் அவரது கைவிரலில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே அடுத்த 2 ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

 

இன்று நடக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மே 2-ம் தேதி நடக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் அஸ்வின் பங்கேற்க மாட்டார். இது சூப்பர் கிங்ஸ் அணிக்கு பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது.

 

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் 2 ஓவர் பந்து வீசி 5 ரன் கொடுத்து உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7157368.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2015: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்- சென்னை 13 ஓவர் முடிவில் 104/5

 

கொல்கத்தா: நடப்பு 8-வது ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்களை எடுத்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் இதர அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையை நேற்றுமுன்தினம் சென்னையில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரையில் இன்றைய போட்டியிலும் வென்றால் 7வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும். சென்னை அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. கொல்கத்தாவைப் பொறுத்தவரையில் சென்னையின் வெற்றிக்கு செக் வைத்து வெல்லவே போராடும். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்னையின் தொடக்க வீரர்களாக ஸ்மித், மெக்கல்லம் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். தொடக்க வீரரான மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் ரெய்னா 8 ரன்களை எடுத்த நிலையில் 3.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் மெக்கல்லமுடன் டூபிளெஸிஸ் இணைந்தார். டூபிளெஸிஸ் பவுண்டரிகளாக விளாசினர். இந்த வேகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.

 

5.1வது ஓவரில் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் அவுட் ஆனார். பிராவோ களத்துக்கு வந்தார்.. அடுத்த சில பந்துகளில் 5.5வது ஓவரில் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த டூபிளெஸிஸ்ஸும் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து கேப்டன் டோணி களத்துக்கு வந்தார். டோணி 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் கிளீன் போல்டு அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6.5வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-kkr-opt-field-first-against-csk-225838.html

  • தொடங்கியவர்

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள்

 

  • தொடங்கியவர்

Chennai Super Kings 165/9 (20/20 ov)
Kolkata Knight Riders 169/3 (19.5/20 ov)
Kolkata Knight Riders won by 7 wickets (with 1 ball remaining)

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.2015: 'சென்னை' சிங்கத்தை சாய்த்தது கொல்கத்தா! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!! 

 

கொல்கத்தா: நடப்பு 8-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் உத்தப்பா 80 ரன்களுடனும் ரஸ்ஸல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கொல்கத்தா அணி வெற்றிக்கு வித்திட்டனர். முன்னதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்திருந்தது.

 

சென்னை அணியில் மிக அதிகபட்சமாக மெக்கல்லம் 32, பிராவோ 30 ரன்களை எடுத்திருந்தனர். ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் இதர அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையை சென்னையில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

 

 

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்னையின் தொடக்க வீரர்களாக ஸ்மித், மெக்கல்லம் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். தொடக்க வீரரான மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் ரெய்னா 8 ரன்களை எடுத்த நிலையில் 3.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. சென்னையின் முன்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 5.5வது ஓவரில் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த டூபிளெஸிஸ்ஸும் அவுட் ஆனார்.

 

இதனைத் தொடர்ந்து கேப்டன் டோணி களத்துக்கு வந்தார். டோணி 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் கிளீன் போல்டு அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6.5வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் பிராவோ-ஜடேஜா ஜோடி சற்று நிலைத்து நின்று ரன்களை விறுவிறுவென குவித்தது. சென்னை அணி 16.3வது ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ அவுட் ஆனார். அவர் 32 பந்துகளில் 30 ரன்களில் எடுத்திருந்தார். சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து மீண்டும் விழுந்தன. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டுத் தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்ல 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தா அணியில் பிராட் ஹக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பாவும் கேப்டன் காம்பீரும் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ரன்களை எடுத்து வந்தனர். 4.2வது ஓவரில் மொகித் சர்மா வீசிய பந்தில் காம்பீர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது கொல்கத்தா அணி 4.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை எடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து மணீஷ் பாண்டே 3 ரன்கள் எடுத்த நிலையில் 8.2வது ஓவரில் அவுட் ஆனார்.

 

அடுத்த 9.1வது ஓவரில் யாதவ் 2 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டி கொல்கத்தா போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் தொடக்க வீரரான உத்தப்பாவுடன் கை ரஸ்ஸல் கை கோர்த்த பின்னர் இந்த ஜோடியை பிரிக்க சென்னை பெரும் போராட்டம் நடத்தியது. இருப்பினும் கடைசி 4 ஓவர்களில் முதல் 2 ஓவர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது. வழக்கம் போல கடைசி 2 ஓவர்கள் டென்ஷன் ஓவர்களாக மாறியது.

 

அதுவும் கடைசி ஓவர் படு த்ரில்லாக அமைந்தது. கடைசி ஓவரின் 5வது பந்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்தது கொல்கத்தா அணி. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. நடப்பு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இது 4வது வெற்றியாகும். பிராட் ஹக், உத்தப்பா, ரஸ்ஸல் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றியை ருசித்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-kkr-opt-field-first-against-csk-225838.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2015: டெல்லியை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா பஞ்சாப்?

 

டெல்லி: ஐ.பி.எல். போட்டியில் தம்மை தோற்கடித்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பதிலடி கொடுக்கும் வகையில் இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில்மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. 

 

டெல்லி 7 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் உள்ளது. அந்த அணியில் டுமினி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் பேட்டிங் மட்டுமே சிறப்பாக இருக்கிறது. யுவராஜ்சிங் இன்னும் அதிரடியை வெளிப்படுத்த வில்லை. இது பின்னடைவாக கருதப்படுகிறது. பந்து வீச்சில் இம்ரான் தாகீர் நல்ல நிலையில் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஜாகீர்கான் விளையாட வாய்ப்பு இருக்கிறது. பஞ்சாப் அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. இதனால் இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியில் ஷேவாக், முரளிவிஜய், டேவிட் மில்லர், மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி போன்ற சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஜார்ஜ் பெய்லி, ஷான் மார்ஷ் காயம் அடைந்து இருப்பதால் இன்று விளையாடுவது சந்தேகம்.

 

 

இது அந்த அணிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸிடம் தோற்றதால் பஞ்சாப் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். மும்பை- ராஜஸ்தான் மோதல் மற்றொரு ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 4 லீக் போட்டிகளில் 2 தோல்வி, 2 முடிவு இல்லை என ராஜஸ்தானுக்கு சிறப்பாக அமையவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றது. 5 போட்டியில் தோற்றது. லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பழி தீர்க்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-delhi-daredevils-seek-bounce-back-against-kings-xi-punjab-225877.html

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: டில்லி அணி வெற்றி

 

புதுடில்லி: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டில்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டி டில்லியில் நடக்கிறது. இதில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற டில்லி அணி முதலில் பீல்டிங் செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் 'டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்ப, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. சுலப இலக்கை துரத்திய டில்லி அணி 13.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1243262

 

 

  • தொடங்கியவர்

சொல்லி அடித்த டில்லி: பஞ்சாப் அணிக்கு ஆறாவது அடி
 

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங் என, எதிலும் சாதிக்காத பஞ்சாப் அணி, தொடரில் 6வது தோல்வியை பதிவு செய்தது.

 

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் நேற்று டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி, பேட்டிங் தேர்வு செய்தார்.

 

 

ஜாகிர் வருகை: ஒரு ஆண்டாக எவ்வித போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், டில்லி அணியில் நேற்று களமிறங்கினார். பஞ்சாப் அணியில் முரளி விஜய், ஜான்சன், ரிஷி தவான் நீக்கப்பட்டு சேவக், திசரா பெரேரா, ஷர்துல் தாகூர் (அறிமுகம்) இடம் பெற்றனர்.

 

 

கூல்டர் அபாரம்: பஞ்சாப் அணிக்கு நேற்று எதுவுமே சரியாக அமையவில்லை. துவக்க வீரர் சேவக் (1), ஜாகிர் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் அவுட்டானார். டுமினி சுழலில் ஷான் மார்ஷ் (5) வெளியேறினார். ஜாகிர் தனது இரண்டாவது ஓவரில், வோராவை (1) திருப்பி அனுப்பினார்.
சகாவும் (3) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாக, பஞ்சாப் அணி 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. சற்று போராடிய கேப்டன் பெய்லி (18), பெரேரா (3), அக்சர் படேல் (22) நிலைக்கவில்லை.

 

 

மில்லர் மட்டும் 42 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது. ஷர்துல் (7), அனுரீத் (8) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி சார்பில் கூல்டர் நைல் 4, ஜாகிர் கான் 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிய வெற்றி: போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஜோடி 'சூப்பர்' துவக்கம் கொடுத்தது. அறிமுக வீரர் ஷர்துல் வீசிய, தனது முதல் ஓவரில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்த போது அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் (54) அவுட்டானார். இருப்பினும், மயங்க் அகர்வால் தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார்.

 

 

கடைசியில் சவுரப் திவாரி ஒரு பவுண்டரி அடிக்க, டில்லி அணி 13.5 ஓவரில், 1 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் (52), திவாரி (5) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் அணிக்கு இது 6வது தோல்வியாக அமைந்தது.

 

 

'கேன்சர்' விழிப்புணர்வு நாள்
இந்திய வீரர் யுவராஜ் சிங், கடந்த 2011ல், 'கேன்சரால்' பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். தற்போது டில்லி அணியில் விளையாடும் இவர், 'யு வி கேன்' என்ற பெயரில் 'கேன்சருக்கு' எதிரான விழிப்புணர்வு அமைப்பு நடத்துகிறார்.

இதன் சார்பில், டில்லி அணி மற்றும் மேக்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து நேற்று (மே 1) 'கேன்சர்' விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து மேக்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச 'கேன்சர்' கண்டறியும் முகாம் நேற்று நடத்தப்பட்டது.

 

 

டில்லி அணி வீரர்கள் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இளஞ்சிகப்பு ('லாவண்டர்') நிற சீருடை அணிந்து விளையாடினர். தவிர, இந்நோயினால் பாதிக்கப்பட்ட 100 சிறுவர்கள், போட்டியை நேரில் கண்டு ரசிக்க வாய்ப்பு தரப்பட்டது.

 

 

இரண்டாவது மோசம்
பஞ்சாப் அணி 2011 தொடரில் புனே அணிக்கு எதிரான போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளை 9 ரன்னுக்கு இழந்தது. தற்போது நேற்று 10 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இது பஞ்சாப் அணியில் இரண்டாவது மோசமான துவக்கமாக அமைந்தது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1242611

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • தொடங்கியவர்

மீண்டும் வெல்லுமா சென்னை கிங்ஸ் மே 01,2015
 

ஐதராபாத்: ஐ.பி.எல்., லீக் சுற்றில் சென்னை, ஐதராபாத் அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன. இதில் சென்னை அணி மீண்டும் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை அணி, வார்னரின் ஐதராபாத் அணியை சந்திக்கிறது.

 

சென்னை அணி இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டிகளில் 2 ல் வென்றால், 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி விடலாம்.

 

ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சதம் அடித்த பிரண்டன் மெக்கலம், ஸ்மித், ரெய்னா, டுபிளசி, பிராவோ மீண்டும் எழுச்சி காணலாம். இந்த அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் கேப்டன் தோனி, கடந்த முறை போல, இன்றும் அரைசதம் எட்டுவாரா என, பொறுத்திருந்து பார்க்கலாம். பின் வரிசையில் 'புதிய வரவு' பவான் நேகி, ஜடேஜாவும் ரன் குவிப்புக்கு உதவலாம்.

 

நெஹ்ரா ஏமாற்றம்: பந்துவீச்சை பொறுத்தவரையில் பவான் நேகி தவிர மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இதுவரை 13 விக்கெட் வீழ்த்திய நெஹ்ரா, பிராவோ (11 விக்.,), மோகித் சர்மா (7) என, அனைவரும் கோல்கட்டா அணிக்கு எதிராக ஏமாற்றினர். இன்று இவர்கள் கைகொடுப்பர் என நம்புவோம். தொடர்ந்து சொதப்பும் ஜடேஜாவுக்கு சற்று ஓய்வு கொடுத்தால் நல்லது.

 

நல்ல துவக்கம்: ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், ஷிகர் தவான் இணைந்து நல்ல துவக்கம் தருகின்றனர். ஆனால், பின் வரும் லோகேஷ் ராகுல், நமன் ஓஜா, போபரா, 'ஆல் ரவுண்டர்' ஹென்ரிக்ஸ் இதை சரியாக பயன்படுத்த மறுக்கின்றனர்.

 

பவுலிங்கில் புவனேஷ்வர் குமார். இஷாந்த் சர்மா, ஸ்டைனுடன், நியூசிலாந்தின் பவுல்ட் இருப்பது கூடுதல் பலம். பிரவீண் குமார், கரண் சர்மா விக்கெட் வேட்டை நடத்தாது பலவீனம்.

 

ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 7 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வி பெற்று 5வது இடத்தில் (6 புள்ளி) உள்ளது. அடுத்து வரும் இரண்டாவது சுற்று போட்டிகளில் அசத்தும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்கலாம்.

 

இதனால், இன்று சென்னை அணிக்கு எதிராக கடும் போராட்டத்தை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது.

 

இதுவரை
ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, ஐதராபாத் அணிகள் 5 முறை மோதின. இதில் சென்னை 4, ஐதராபாத் ஒரு போட்டியில் வென்றன.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1243251

  • தொடங்கியவர்

சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதன் மூலம் முக்கியமான பரீட்சையில் வென்றிருக்கிறோம்: கம்பீர் பெருமிதம்
 

 

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. உத்தப்பா 58 பந்துகளில் 80 ரன்களும், ஆன்ட்ரே ரஸல் 32 பந்துகளில் 55 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் சென்னையில் நடைபெற்ற முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்தது கொல்கத்தா.

 

 

வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறியதாவது: முந்தைய இரு போட்டிகளில் வெற்றி பெறாததால் இந்தப் போட்டி எங்களுக்கு முக்கியமான பரீட்சையாக அமைந்தது. எங்களின் மனப்போக்கையும், இயல்பையும் சோதனை செய்யும் வகையில் இந்தப் போட்டி இருந்தது. நடப்பு சாம்பியனைப் போன்று நாம் விளையாட விரும்பினால் இந்தப் போட்டி நமக்கு முக்கியமான பரீட்சையாக இருக்கும். இதில் எவ்வித நெருக்கடியுமின்றி விளையாட வேண்டும் என அணியினரிடம் கூறியிருந்தேன். உத்தப்பாவும், ரஸலும் நான் கூறியதைப் போன்று விளையாடிவிட்டனர்.

 

நேர்மறையான எண்ணத்துடன் போட்டியை அணுகுவதோடு, விக்கெட்டுகளை வீழ்த்தவும், சிறப்பாக ஆடி இலக்கை எட்டவும் விரும்பினோம். ஒரு கட்டத்தில் சூப்பர் கிங்ஸை 140 முதல் 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் டி20 போட்டியில் அது எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை. சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அதிரடியாக ஆடினால் இலக்கை எட்ட முடியும் என்பது எனக்கு தெரியும். ஒட்டுமொத்த பாராட்டும் உத்தப்பா மற்றும் ரஸலுக்கே உரியது என்றார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7164193.ece

  • தொடங்கியவர்

பெங்களூரில் மழை.

 

fkbjww.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

nwzyat.jpg:(

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி 111 ரன்கள்
 

பெங்களூரு:பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 10 ஓவரில் 111 ரன்கள் எடுத்துது

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு செய்தார்.

மழை குறுக்கிட போட்டி துவங்க 2.45 மணி நேரம் தாமதம ஆனது. இதன் பின் தலா 10 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.

கோல்கட்டா அணிக்கு காம்பிர் (12), உத்தப்பா (23) நிலைக்கவில்லை. 17 பந்தில் 45 ரன்கள் விளாசிய ரசல் அதிரடி காட்டினார். டஸ்காட்டே 12 ரன்கள் மட்டும் எடுத்தார்.

 

கோல்கட்டா அணி 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் (11), சூர்யகுமார் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1243249

  • தொடங்கியவர்

Kolkata Knight Riders 111/4 (10/10 ov)
RCB 115/3 (9.4/10 ov, target 112)
Royal Challengers Bangalore won by 7 wickets (with 2 balls remaining)

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

பெங்களூரு: பிரிமியர் லீக் தொடரின்33வது போட்டியில், பெங்களூரு மற்றும் கோல்கட்டா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா அணி 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 9.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1244002

  • தொடங்கியவர்

10 ஓவர் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
 

 

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 

மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டம் அணிக்கு 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

 

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

ஆர்.சி.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 2 ஓவர்களில் 6 டாட் பால்களுடன் 1 பவுண்டரி மட்டுமே கொடுத்து 15 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

 

ராபின் உத்தப்பா (23 ரன்கள், 21 பந்துகள் 3 பவுண்டரி), கம்பீர் (12 ரன், 8 பந்து 2 பவுண்டரி) 23 பந்துகளில் 33 ரன்கள் என்ற தொடக்கத்தை கொடுத்தனர். முதலில் கம்பீர் வெளியேறினார். மந்தீப் சிங் பிடித்த அற்புதமான பாயிண்ட் திசை கேட்சுக்கு வீஸவிடம் விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு உத்தப்பா, ஆந்த்ரே ரசல் ஜோடி 3 ஓவர்களில் 38 ரன்கள் விளாசினர். அப்போது சாஹல் பந்தில் உத்தப்பா வெளியேறினார்.

ஆனால் ஆந்த்ரே ரசல் அசத்தினார். வருண் ஆரோன் வீசிய 6-வது ஓவரில் ரஸல் விருந்து படைத்தார். ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை உடைந்து விடும் அளவுக்கு விளாசினார் பந்து மிட்விக்கெட் ஸ்டாண்டில் போய் விழுந்தது.

 

அடுத்த 2 பந்துகள் ஸ்லோ பந்துகள் ரன் இல்லை. ஆனால் 5-வது பந்தை ,மிட்விக்கெட்டுக்குச் செல்லுமாறு சுழற்றினார் ரஸல், ஆனால் வருணின் வேகம் ரசல் மட்டையின் அடர்த்தியான விளிம்பு ஆகியவற்றினால் பந்து எட்ஜ் எடுத்து தேர்ட்மேனில் பவுண்டரி ஆனது. அடுத்த பந்து பவுலர் தலைக்கு மேல் சிக்ஸ். அந்த ஓவரில் 17 ரன்கள் விளாசினார் ரஸல். பிறகு சாஹல் ஓவரில் 2 பவுண்டரிகள், பிறகு வீஸ பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர்.

 

17 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்த ரசல் 9-வது ஓவரில் பை ரன் ஒன்றை எடுக்க ரன்னர் முனையிலிருந்து ஓடி வந்து கார்த்திக்கின் த்ரோவில் ரன் அவுட் ஆனார். டென் டஸ்சதே 6 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து கடைசி ஒவரின் முதல் பந்தில் வெளியேறினார்.

யூசுப் பத்தான் 11 ரன்கள் எடுக்க கொல்கத்தா 111/4 என்று முடிந்தது.

 

மந்தீப் சிங்கின் கடைசி நேர அதிரடியில் பெங்களூரு வெற்றி:

10 ஓவர்களில் 112 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கினர் கெய்ல், கோலி ஜோடி. முதல் ஓவரை பேட் கமின்ஸ் நன்றாக வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

2-வது ஓவரில் கோலி, உமேஷ் யாதவ்வை எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன லெந்த் பந்தை நேராக சிக்சர் அடித்த்தார். அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் செய்ய அது பவுண்டரிக்குப் பறந்தது. கடைசி பந்தில் கெய்ல் ஸ்ட்ரைக்கு வர லாங் ஆஃப் ஸ்டாண்டுக்கு சிக்சர் தூக்கினார்.18 ரன்களை விட்டுக் கொடுத்தார் உமேஷ் யாதவ்.

அடுத்த ஓவரை கமின்ஸ் வீச புல்டாஸில் பவுண்டரி அடித்த கோலி, அடுத்த பந்தில் லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு லாங் ஆனில் ஒரு அருமையான சிக்சரை விளாசினார்.

 

 

3 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் வர, பிராட் ஹாக் பந்து வீச அழைக்கப்பட்டார். அவரை கெய்ல் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்சரும், டீப் மிட்விக்கெட்டில் இன்னொரு காட்டடி சிக்சரும் விளாசி, அதே ஓவரில் ஹாகிடம், ஆந்த்ரே ரசலின் அற்புதமான கேட்சுக்கு 9 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.

4-வது ஓவரில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை சாவ்லா வீழ்த்தினார். சற்றே வெளியே சென்ற பந்தை டிவில்லியர்ஸ் கட் செய்ய முயல பந்து அடிவிளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

 

பெங்களூரு அணி 5 ஒவர்களில் 52/2 கோலி 25 ரன்களுடன் இருக்க, மன்தீப் சிங் களம் கண்டார். ஹாக் பந்தை சிக்சர் அடித்து மன் தீப் சிங் தன் அதிரடியைத் தொடங்கினார்.

 

பிறகு சாவ்லா ஓவரில் மன்தீப் சிங் 2 பவுண்டரிகளை அடிக்க கோலி லாங் ஆனில் சிக்சர் அடித்தார். 7-வது ஓவரில் 80/2.

ரஸல் 8-வது ஓவரை வீச வந்தார். கோலி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் (20 பந்துகள் 2 பவுண்டரி 3 சிக்சர்) வெளியேறினார்.

 

8-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 87/3. தேவை 2 ஓவர்களில் 25 ரன்கள்.

 

9-வது ஓவரை உமேஷ் யாதவ் வீச யார்க்கர் நன்றாக விழ முதல் 4 பந்துகளில் 5 ரன்களே வந்தது. ஆனால் 5-வது பந்தை மந்தீப் சிங் அபாரமாக ஸ்கூப் செய்து பின்னால் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து அதிர்ஷ்ட எட்ஜ், தேர்ட்மேனில் பவுண்டரி சென்றது. 13 ரன்கள் இந்த ஓவரில் வர 100/3 என்று இருந்தது.

 

ரஸல் கடைசி ஓவரை வீச மந்தீப் சிங் பாயிண்ட் திசையில் அற்புதமான ஒரு சிக்சரையும், பிறகு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் இன்னொரு சிக்சரையும் அடிக்க 2 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு வென்றது.

 

இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

 

ஆட்ட நாயகனாக மந்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உண்மையில் ஆந்த்ரே ரஸலின் ஆல் ரவுண்ட் திறமைக்காக அவரே ஆட்ட நாயகன் விருதுக்கு உரியவர்.
 

 

http://tamil.thehindu.com/sports/10-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/article7164968.ece

  • தொடங்கியவர்

சென்னை அணிக்கு 193 ரன்கள் இலக்கு

 

 

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் (61) அரைசதம் கடந்தார்.

 

ஐதராபாத்தில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில், சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் ரவி போபராவுக்கு பதிலாக இயான் மார்கன் தேர்வு செய்யப்பட்டார். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

 

முதலில் 'பேட்டிங்' செய்யும் ஐதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய வார்னர், 20 பந்தில் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த போது வார்னர் (61) அவுட்டானார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் (19) நிலைக்கவில்லை. ஷிகர் தவான் (37), நமன் ஓஜா (20) ஓரளவு கைகொடுத்தனர். ஆஷிஸ் ரெட்டி (6), ஹனுமா விஹாரி (8), கரண் சர்மா (4) ஏமாற்றினர்.

 

ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இயான் மார்கன் (32) அவுட்டாகாமல் இருந்தார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1243251

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 192/7 (20/20 ov)
Chennai Super Kings 170/6 (20/20 ov)
Sunrisers Hyderabad won by 22 runs

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: சென்னை அணி தோல்வி

 

ஐதராபாத்: பிரிமியர் லீக் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் ஐதராபாத் அணி அணி வெற்றி பெற்றது. பிரிமியர் லீக் தொடரின் 34வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது..

 

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

 

தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1244046

  • தொடங்கியவர்

அடுத்தடுத்து தோற்ற சூப்பர் கிங்ஸ்... "ஷாக்"கில் ரசிகர்கள்!

 

ஹைதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். அடுத்தடுத்து 2 தோல்வியை தங்களது அணி சந்தித்துள்ளது அவர்களை வருத்தமடைய வைத்துள்ளது. முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வியுற்றது சென்னை. அடுத்த போட்டியாக நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வியைத் தழுவியது. நேற்று ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையைத் தோற்கடித்து விட்டது ஹைதராபாத்.

 

வார்னர் போட்ட அரை சதம் முதலில் பேட் செய்த டேவிட் வார்னர் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து விட்டார். சிறப்பாக ஆடிய அவர் 61 ரன்களைக் குவித்தது ஹைதராபாத் அணி பெரும் ஸ்கோரை எட்ட வழி வகுத்து விட்டது.

 

மறுபக்கம் ஷிகர் மறுபக்கம் ஷிகர் தவன் சிறப்பாக ஆடி ஸ்கோர் ஏறுவதை பார்த்துக் கொண்டார். அவர் 37 ரன்கள் குவித்தார். அவரும், வார்னரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 37 ரன்களைச் சேர்த்தார்.

 

சாகசம் செய்த ஹென்றிக்ஸ் ஹென்றிக்ஸ் வந்த வேகத்தில் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு சிக்ஸருடன் 19 ரன் சேர்த்துக் கொடுத்து வெளியேறினார். மறுபக்கம் இயான் மார்கன் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

 

மோர்கன் - ஓஜா இயான் மோர்கன் 27 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார். அவருடன் நமன் ஓஜா துணை நின்று சிறப்பாக ஆடி 12 பந்துகளில் 20 ரன்களைக் குவித்தார். இது ஸ்கோர் வேகமாக ஏற உதவியாக அமைந்தது

 

லேட்டாக பிரேக் கொடுத்த பிராவோ பிராவோ கடைசி நேரத்தில் பவுலிங் செய்ததால் தேவையான பிரேக்கை உரிய நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. கடைசி நேரத்தில் அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஆனால் அதற்குள் ஹைதராபாத் அணி 192 ரன்களை எடுத்து விட்டது.

 

சொதப்பிய தொடக்க ஜோடி சென்னை அணியின் தொடக்க ஜோடி சேசிங்கில் சற்று சொதப்பியது. ஸ்மித் 21, மெக்கல்லம் 12 என விழ, ரெய்னா சற்று வேகம் காட்டி 23 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

 

பாப் டு பிளஸ்ஸிஸ் பாப் டு பிளஸ்ஸிஸ் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் டோணி வேகமாக ஆடி 16 ரன்களில் 20 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தாரா்.

 

பிராவோ போராட்டம் வீண் கடைசி வரிசையில் பிராவோ கடுமையாகப் போராடிப் பார்த்தார். 20 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் 12 பந்துகளில் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜடேஜா. ஆனாலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் வீழ்ந்தது சென்னை

 

அஸ்வின் இல்லாததால் அஸ்வின் இல்லாததால் ஸ்பின் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது. பவன் நேகி கை கொடுக்கிறார் என்றாலும் கூட உரிய நேரத்தில் விக்கெட்களைச் சாய்க்கவோ, ரன்களை நிறுத்தவோ அவர் தவறுகிறார்.

 

தொடக்க ஆட்டம் சோபிக்கவில்லை இதற்கு முந்தைய போட்டிகளில் தொடக்க ஆட்டம் சென்னையிடம் சூப்பராக இருக்கும். நேற்று சரியில்லாமல் போனதும் தோல்விக்கு முக்கியக் காரணம்.

 

ரன்களை வாரிக் கொடுத்த மோஹித் மோஹித் சர்மா நேற்று நிறைய ரன்களைக் கொடுத்து விட்டார். இதனால் 20 ரன்கள் கூடப் போய் விட்டது. இதுவே நமது வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

 

தொடர்ந்து முதலிடம் தற்போது 6 வெற்றி, 3 தோல்விகளுடன் சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஹைதராபாத் அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-david-warner-inspired-hyderabad-trump-table-toppers-chennai-by-22-runs-225954.html

  • தொடங்கியவர்

‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி மும்பை: இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்

 

மொகாலி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று மும்பை,  பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் அசத்ததும்பட்சத்தில் மும்பை அணி  ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யலாம்.      

      

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை அணி, பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.            

 

மும்பை அணி தொடர்ந்து இரண்டு வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. துவக்க வீரர் சிம்மன்ஸ் பலமான அடித்தளம் அமைக்கிறார். ஆனால், பார்த்திவ் படேல், உன்முக்த் சந்த் சொதப்புகின்றனர். கேப்டன் ரோகித் (271 ரன்கள்) நம்பிக்கை அளிக்கிறார். கடந்த போட்டியில் 27 பந்தில் 53 ரன்கள் விளாசிய ராயுடு இன்றும் மிரட்டலாம். போலார்டின் பங்களிப்பும் கிடைத்தால், இமாலய இலக்கை எட்ட முடியும்.       

                             

மெக்லீனகன் அசத்தல்: வேகப்பந்துவீச்சில் மெக்லீனகன் ஜொலிக்கிறார். இவருக்கு ‘யார்க்கர்’ மலிங்கா, வினய் குமார் கைகொடுத்தால், வேகத்திற்கு சாதகமான மொகாலி ஆடுகளத்தில் அசத்தலாம். சுழற்பந்துவீச்சாளர் (7 போட்டி, 8 விக்.,) ஹர்பஜன் சிங் பொறுப்புணர்ந்தால், இத்தொடரில் ஏற்கனவே பஞ்சாப்பிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி தரலாம்.                        

 

துவக்கமே மோசம்: தொடர்ந்து 3 தோல்விகளால் துவண்டுள்ளது. துவக்க வீரர் முரளி விஜய், சேவக் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடரின் பாதியை தாண்டியபோதும், இன்னும் இவர்கள் ‘பார்முக்கு’ வரவில்லை. கடந்த 3 போட்டிகளில் 16 ரன்கள் (10, 1,5) மட்டும் எடுத்த ஷான் மார்ஷ் வெறுப்பேற்றுகிறார். இப்படி துவக்கமே படுமோசமாக இருப்பதால்தான், அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கிறது. கேப்டன் பெய்லி மட்டுமே போராடுகிறார். சகா, மில்லர், ‘ஆல்–ரவுண்டர்’ திசரா பெரேரா உள்ளிட்டோர் எழுச்சி பெற்றால் வெற்றி பற்றி சிந்திக்கலாம்.   

                           

பவுலர்கள் ஏமாற்றம்: தங்கள் பங்கிற்கு பவுலர்களும் ஏமாற்றுகின்றனர்.  சந்தீப், அனுரீத் சிங், மிட்சல் ஜான்சன் போன்ற வேகங்கள் எழுச்சி கண்டால் நல்லது. ‘சுழல்’ வீரர் அக்சர் படேல் எதிரணிக்கு தொல்லை தர முயற்சிக்க வேண்டும்.        

                      

இதுவரை...     

ஐ.பி.எல்., அரங்கில் இரு அணிகள் 15 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் பஞ்சாப் 8, மும்பை 7ல் வெற்றி பெற்றுள்ளன.      

 

மழை வருமா     

மொகாலியின் இன்றைய வானிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 37, குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை.

 

http://sports.dinamalar.com/2015/05/1430579181/MumbaiPunjabIPLCricket.html

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: மும்பை அணிக்கு ஹாட்ரிக் வெற்றி

 

மொகாலி: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணியை, மும்பை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மும்பை அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளையும் பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1244472

  • தொடங்கியவர்

மும்பை ஹாட்ரிக் வெற்றி: பஞ்சாப் மீண்டும் ஏமாற்றம்
 

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மொகாலியில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

அதிரடி துவக்கம்: மும்பை அணிக்கு சிம்மன்ஸ், பார்த்திவ் படேல் ஜோடி அசத்தல் துவக்கம் தந்தது. ஜான்சன் வீசிய 5வது ஓவரில் பார்த்திவ் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். இருவரும் அரை சதம் எட்டினர். கரண்வீர் சிங் 'சுழலில்' பார்த்திவ் (59) அவுட்டானார்.

 

சிம்மன்ஸ் அதிரடி: தொடர்ந்து அதிரடி காட்டிய சிம்மன்ஸ் அக்சர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஜான்சன் பந்தில் ரோகித் (26) ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் 71 ரன்கள் (9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. போலார்டு (7), ராயுடு (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

மில்லர் ஆறுதல்: கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு சேவக் (2) அதிர்ச்சி தந்தார். மெக்லினகன் பந்துவீச்சில் முரளி விஜய் இரண்டு பவுண்டரி அடித்தார். வினய் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மேக்ஸ்வெல் 12 ரன்களில் அவுட்டானார்.

 

 

சுசித் பந்தை மில்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். முரளி விஜய் 39 ரன்களில் 'பெவிலியன்' திரும்பினார். மலிங்கா பந்தில் மில்லர் (43) சிக்கினார். பெய்லி (21) ரன்-அவுட்டாக, தோல்வி உறுதியானது. சகா (12) வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை மும்பை வீரர் சிம்மன்ஸ் கைப்பற்றினார்.

ஏற்கனவே ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை வென்ற மும்பை அணி நேற்று 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

 

'லக்கி' பார்த்திவ்
அக்சர் வீசிய போட்டியின் 6வது ஓவரின் முதல் பந்தை மும்பை அணி வீரர் பார்த்திவ் எதிர் கொண்டார். ரன் எடுக்க ஓடிய பார்த்திவ், பாதியில் மீண்டும் ஓடி வந்தார். பந்தை பிடித்த மேக்ஸ்வெல் 'ஸ்டம்ப்சை' நோக்கி தவறாக 'த்ரோ' செய்தார். பந்தை எடுத்த விக்கெட்கீப்பர் சகாவும் இத்தவறை செய்ய, பார்த்திவ் கண்டம் தப்பினார். அப்போது 22 ரன்கள் எடுத்திருந்த பார்த்திவ், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரை சதம் விளாசி வெற்றிக்கும் வித்திட்டார்.

 

சேவக் '5'
இத்தொடரில் நேற்றைய போட்டியையும் சேர்த்து, கடந்த 4 இன்னிங்சில் பஞ்சாப் அணியின் சேவக் மொத்தமே 5 (1,1,1,2) ரன்கள்தான் எடுத்துள்ளார்.

 

* ஐ.பி.எல்., போட்டிகளின் முதல் ஓவரில் அதிக முறை(13) ஆட்டமிழந்தவர் என்ற மோசமான சாதனையை சேவக் நேற்று படைத்தார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1244007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.