Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பஞ்சாப் அணி 'சூப்பர்' வெற்றி


'சூப்பர் ஓவரில்' பஞ்சாப் அணி வெற்றி ஏப்ரல் 21,2015

 

'சூப்பர் ஓவரில்' பஞ்சாப் அணி வெற்றி

 

ஆமதாபாத்: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி சமன் ஆனது. கடைசியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ரகானே (74) கைகொடுத்தார். 20 ஓவரில் இந்த அணி 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணியின் சேவக் (1), முரளி விஜய் (21), மேக்ஸ்வெல் (1) ஏமாற்றினர். ஷான் மார்ஷ் 65 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இது வெற்றிக்கு உதவவில்லை.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன் தேவை என்ற நிலையில், 13 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்த போட்டி சமன் ஆனது. இதையடுத்து முடிவை நிர்ணயிக்க, போட்டி 'சூப்பர் ஓவருக்கு' சென்றது. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1235603

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘சூப்பர் ஓவரில்’ பஞ்சாப் வெற்றி! *ராஜஸ்தான் அணி பரிதாபம்

 

 

ஆமதாபாத்: பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியின் போராட்டம் வீணானது.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சேவக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ரகானே அபாரம்:

ராஜஸ்தான் அணிக்கு ரகானே, கேப்டன் வாட்சன் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஜான்சன் ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார் ரகானே. மறுபக்கம் வாட்சன் தன்பங்கிற்கு சிவராம் சர்மா ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த நிலையில், அக்சர் படேல் ‘சுழலில்’ வாட்சன்(45) வீழ்ந்தார். தீபக் ஹூடா, 19 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித்(0) ஏமாற்றினார். அரைசதம் கடந்த ரகானே(74), ஜான்சன் பந்தில் அவுட்டானார். பால்க்னர்(1) சோபிக்கவில்லை. கடைசி கட்டத்தில் கருண் நாயர்(25), ஸ்டூவர்ட் பின்னி(12), சாம்சன்(5) அதிரடியாக ரன் சேர்க்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் சேவக்(1) ரன் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். முரளி விஜய்யும்(21) ரன் அவுட்டானார். மேக்ஸ்வெல்லும்(1) சோபிக்க தவற, 8.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து தவித்தது.

 

பின் ஷான் மார்ஷ், டேவிட் மில்லர் சேர்ந்து விவேகமாக ஆடினர். இருவரும் சிக்சர்களாக விளாச, போட்டியில் சூடு பிடித்தது. அரைசதம் கடந்த மார்ஷ்(65), டாம்பே ‘சுழலில்’ அவுட்டானார். அடுத்து வந்த சகா 19 ரன்கள் எடுத்தார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த மில்லர்(54) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.

 

 

போட்டி ‘டை’:

கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. பால்க்னர் பந்துவீசினார். முதல் பந்தில் ஜான்சன் 2 ரன்கள் எடுத்தார். 2வது பந்திலும் 2 ரன் கிடைத்தது. 3வது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் அக்சர் படேல் 2 ரன் எடுத்தார். 5வது பந்திலும் 2 ரன். 6வது பந்தில் அக்சர் படேல் ஒரு பவுண்டரி அடிக்க, பஞ்சாப் அணியும் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் ஒரு ஸ்கோர் எடுத்ததால், போட்டி ‘டை’ ஆனது. படேல்(12), ஜான்சன்(13) அவுட்டாகமல் இருந்தனர்.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது. இதில், இரு அணிகளுக்கு தலா ஒரு ஓவர் வழங்கப்படும். 3 பேட்ஸ்மேன்கள் விளையாடலாம். ஒரு அணி 2 விக்கெட்டை இழந்தால், அந்த அணியின் இன்னிங்ஸ் முடிந்து விடும்.

 

முதலில் பஞ்சாப் அணி பேட் செய்தது. கிறிஸ் மோரிஸ் வீசிய முதல் பந்தில் டேவிட் மில்லர்(0) எல்.பி.டபிள்யூ., ஆனார்.  2வது பந்தில் மேக்ஸ்வெல் ஒரு ரன் எடுத்தார்.

‘நோ–பாலாக’(இடுப்புக்கு மேலே) வீசப்பட்ட 3வது பந்தில் மார்ஷ் பவுண்டரி அடித்தார். அடுத்த இரு பந்துகளில் இவர் வரிசையாக இரு பவுண்டரி அடித்தார். இதற்கு அடுத்த பந்தில் ரன் இல்லை. கடைசி பந்தில் மார்ஷ்(12) ரன் அவுட்டான போதும், ஒரு ரன் ‘லெக் பையாக’ கிடைத்தது. பஞ்சாப் அணி ஒரு ஓவரில் 2 விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்தது.

பின் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என ராஜஸ்தான் களமிறங்கியது. இதில், எல்லாம் ஆஸ்திரேலிய வீரர்களாக இருந்தனர். பஞ்சாப் சார்பில் ஜான்சன் பந்துவீசினார். முதல் பந்தில் விலகி அடிக்க முற்பட்ட வாட்சன்(0) போல்டானார். அடுத்து வீசிய நோ–பாலில்(இடுப்புக்கு மேலே) ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் ஒரு ரன். அடுத்த பந்தில் பால்க்னர் ரன் அவுட்டானார். ராஜஸ்தான் 2 விக்கெட் இழந்ததால் விதிமுறைப்படி இன்னிங்ஸ் முடிந்தது. 2 விக்கெட்டுக்கு 6 ரன்கள் மட்டும் எடுத்த ராஜஸ்தான் அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

 

 

இந்தியர்கள் மீது நம்பிக்கை இல்லையா

இந்தியன் பிரிமியர் லீக் என்பது பெயர் அளவுக்கு தான் கூறுகின்றனர். உண்மையில் இந்திய வீரர்கள் மீது ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை இல்லை. நேற்றைய ‘சூப்பர் ஓவரில்’ வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், பால்க்னர் என அனைவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். இப்போட்டியில் 74 ரன்கள் விளாசிய இந்தியாவின் ரகானேவை களமிறக்காமல் அதிர்ச்சி தந்தனர். இந்த தவறு காரணமாக ராஜஸ்தான் அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

இதே போல பஞ்சாப் அணியும் ‘சூப்பர் ஓவரில்’ மில்லர், மார்ஷ், மேக்ஸ்வெல்லை களமிறக்கியது. பந்துவீசியது கிறிஸ் மோரிஸ்(தென் ஆப்ரிக்கா, ராஜஸ்தான்), ஜான்சன்(பஞ்சாப், ஆஸ்திரேலியா) என அனைவரும் வெளிநாட்டு வீரர்கள் தான்.

 

 

முதல் தோல்வி

ஐ.பி.எல்., அரங்கில் ராஜஸ்தான் அணி பங்கேற்ற  போட்டிகள் ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது மூன்றாவது முறையாக நடந்தது. இதில் 2009 (எதிர்–கோல்கட்டா), 2014 ல் (கோல்கட்டா)  வென்ற ராஜஸ்தான் அணி, நேற்று முதன் முறையாக வீழ்ந்தது.

* கடந்த 2010 (எதிர்–சென்னை) மற்றும் தற்போது என, இரு முறை சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

* ஒட்டுமொத்த ஐ.பி.எல்., அரங்கில் 6 வது முறையாக, போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

 

http://sports.dinamalar.com/2015/04/1429548652/KingsPunjabseekrevivalagainstruthlessRoyals.html

  • தொடங்கியவர்

சூப்பர் ஓவரை வீச ஜான்சன் முன்வந்தார்: சேவாக் புகழாரம்

 

 

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பர் ஓவரில் முற்றுப்புள்ளி வைத்தது.

ஜார்ஜ் பெய்லி இல்லாததால் கேப்டன் பொறுப்பை விரேந்திர சேவாக் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அஜிங்கியா ரஹானேயின் அற்புதமான 74 (54 பந்துகள் 6 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஷான் மார்ஷ் (65), டேவிட் மில்லர் (54) பிறகு சஹா (19), அக்சர் படேல் (12), ஜான்சன் (13) ஆகியோரின் பங்களிப்பினால் 191 ரன்களை எடுக்க ஆட்டம் டை ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

 

சூப்பர் ஓவரில் முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட் செய்தது. மில்லர் முதல் பந்திலேயே மோரிஸிடம் அவுட் ஆக, ஷான் மார்ஷ் களமிறங்கி 3 பவுண்டரிகளை விளாசினார். மொத்தம் 15 ரன்களை எடுத்தனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வாட்சன், ஸ்மித் களமிறங்கினர். ஜான்சன் வீசிய முதல் பந்து அதிவேக யார்க்கராக அமைய, ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்ற வாட்சனின் மட்டையில் பந்து சிக்கவில்லை.ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

 

ஸ்மித் அடுத்ததாக ஜான்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தில் ஜேம்ஸ் பாக்னர் பேட்டிங் முனைக்கு வர ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஸ்லோ பந்தாக வீசப்பட்டது. பாக்னர் மட்டையை ஒரு சுழற்று சுழற்றினார், பந்து சிக்கவில்லை. ஆனால் தேவையில்லாமல் ‘பை’ மூலம் ஒரு ரன் எடுக்க கிரீஸை தாண்டினார். ஸ்மித் அதில் ஆர்வம் காட்டவில்லை. சஹா நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். 2 விக்கெட்டுகளை இழந்து 6 ரன்களை மட்டுமே சூப்பர் ஓவரில் எடுத்த ராயல்ஸ் முதல் தோல்வியைத் தழுவியது.

ஜான்சனின் அபாரமான பந்து வீச்சினால் 3 ஆஸ்திரேலிய வீரர்களாலுமே அடிக்க முடியவில்லை.

 

ரஹானே, ஜான்சனை அற்புதமாக விளையாடினார். அவரையே சூப்பர் ஓவரில் களமிறக்கியிருக்கலாம். இங்குதான் வாட்சன் போன்றவர்கள் தவறு செய்து விடுகின்றனர். ஆனால் இது வாட்சன் மட்டுமே எடுத்த முடிவாக இருக்கவும் வாய்ப்பில்லை.

 

சூப்பர் ஓவரை ஜான்சன் தானே வீசுவதாக கேட்டு வாங்கி கொண்டார். ஆட்டம் முடிந்தவுடன் இதனைப் பாராட்டிப் பேசிய (பொறுப்பு) கேப்டன் சேவாக், “மிட்செல் ஜான்சனே சூப்பர் ஓவரை வீசும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சூப்பர் ஓவரை நான் வீசுகிறேன் என்று அவரே முன்வந்தார். இது அபாரமான ஆட்டம். ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்றே நினைத்தேன்.

 

ஆனால் பவுலர்கள் அவர்களை மட்டுப்படுத்தினர். பேட்டிங்கில் ஷான் மார்ஷ், டேவிட் மில்லர், பிறகு அக்சர் படேல், மிட்செல் ஜான்சன் ஆகியோர் பொறுப்புடன் ஆடி போட்டியை டை செய்தனர்.

 

முன்னதாக 192 ரன்கள் இலக்கைத் துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கடைசி 8 ஓவர்களில் ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது. அப்போது மார்ஷ் 56 ரன்களிலும், மில்லர் 5 ரன்களிலும் இருந்தனர். மார்ஷ் 15-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 65 ரன்களில் வெளியேறினார். அவரது விக்கெட்டை அனுபவசாலி ஸ்பின்னர் பிரவீண் தாம்பே வீழ்த்தினார். 15-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 120/4 என்று இருந்தது. அதன் பிறகு 16-வது ஓவரில் மில்லர், பாக்னர் ஓவரில் 2 சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார்.

 

17-வது ஓவரில் சஹா 3 பவுண்டரிகள் அடித்தார். அதே ஓவரில் 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த சஹா, மோரிஸிடம் வீழ்ந்தார்.

18-வது ஓவரை ஆஃப் ஸ்பின்னர் ஹூடாவிடம் கொடுத்து தவறு செய்தார் கேப்டன் வாட்சன். அதில் 2 சிக்சர்களை விளாசிய மில்லர் 29 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 54 ரன்களை எட்டி, அதே ஓவர்ல் ஆட்டமிழந்தார்.

 

2 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 26 ரன்கள். 19-வது ஓவரை மோரிஸ் வீச, ஜான்சன் 2-வது பந்தை சுழற்றினார், அது கேட்சாகச் சென்றது ரஹானே அருமையாக முயற்சி செய்து கேட்சையும் பிடித்தார், ஆனால் உடனடியாக அது கையிலிருந்து தவறியது. அந்த ஓவரின் 5-வது பந்தில் ஜான்சன் மிக முக்கியமான லெக் திசை பவுண்டரி ஒன்றை அடித்தார். ஆளில்லா டீப் ஃபைன் லெக் திசையில் பந்தை சாதுரியமாகத் திருப்பி விட்டார்.

 

கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவை 14 ரன்கள். ஃபாக்னர் அந்த ஓவரை வீசினார். ஜான்சன் முதல் 2 பந்துகளில் அருமையாக அக்சர் படேலுடன் ஓடி 2 ரன்களை அடுத்தடுத்து எடுத்தார். 3-வது பந்தில் ஒரு ரன்னை எடுத்து அக்சர் படேலிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார் ஜான்சன். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 மற்றும் 5ம் பந்துகளில் 2 ரன்களை முறையே எடுத்தார் அக்சர் படேல்.

 

கடைசி பந்தில் வெற்றிக்குத் தேவை 5 ரன்கள். அப்போது பாக்னர் ஆஃப் திசையில் புல்டாஸ் வீச அதனை அக்சர் படேல், ஆளில்லா பாயிண்டின் மேல் தூக்கி அடித்தார். பந்து ஒரு பிட்ச் ஆகி பவுண்டரிக்குச் சென்றது. ஆட்டம் டை ஆனது. பாக்னர் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பிறகே ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. அதில் ஷான் மார்ஷ் பேட்டிங்கிலும், ஜான்சன் பவுலிங்கிலும் வெற்றி தேடித் தந்தனர். ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7130011.ece

  • தொடங்கியவர்

கோல்கட்டா இலக்கு 178 ரன்கள்

 

விசாகப்பட்டினம்: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஐதராபாத் அணி 177 ரன்கள் எடுத்தது.

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பவுலிங் தேர்வு செய்தார். ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், தவான் சிறப்பான துவக்கம் தந்தனர். எதிரணி பந்துவீச்சை பதம் பார்த்த வார்னர் அரை சதம் அடித்தார். இவர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

போபரா (2) நிலைக்கவில்லை. தவான் அரை சதம் (54) அடித்தார். நமன் ஓஜா (18), பெரியளவில் சோபிக்கவில்லை. ஐதராபாத் அணி20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரிக்ஸ் (7), லோகேஷ் ராகுல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429635961/Kolkataaimforhattrickofwinstakeon.html

  • தொடங்கியவர்

7.25 pm Revised target for KKR is 118 off 12 overs. Fielding restrictions for four overs. Two bowlers can bowl a maximum of three overs.

  • தொடங்கியவர்

7.30pm Toss: RCB have won the toss and will bowl first.

 

Match delayed by rain

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 176/4 (20/20 ov)
Kolkata Knight Riders 80/3 (8.5/12 ov, target 118)
Kolkata Knight Riders require another 38 runs with 7 wickets and 19 balls remaining

  • தொடங்கியவர்

8வது ஐ.பி.எல்: சென்னை-181 ரன்கள்; போராடி சேஸிங் செய்யும் பெங்களூர்- 5 ஓவர் முடிவில் 34/2

 

பெங்களூரு: 8வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை சேஸிங் செய்ய போராடி வருகிறது பெங்களூர் அணி. 5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களை எடுத்திருக்கிறது பெங்களூர். முன்னதாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களைக் குவித்துள்ளது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 8வது ஐ.பி.எல்: சென்னை-181 ரன்கள்; போராடி சேஸிங் செய்யும் பெங்களூர்- 5 ஓவர் முடிவில் 34/2 அடுத்தடுத்த தோல்விகளால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். பெங்களூர் அணியின் புயலான கெய்ல் உட்பட 3 வீரர்கள் இடம்பெறவில்லை..

 

 

மேலும் மிட்செல் ஸ்டார்க் இன்று தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இன்றைய ஆட்டம் மழை காரணமாக சிறிது தாமதமாக தொடங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் மெக்கல்லமும் களமிறங்கினர். 1.5வது ஓவரில் 6 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 12 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ரெய்னா களமிறங்கினார். 8.2வது ஓவரில் ஸ்மித் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

 

அப்போது சென்னை அணி 70 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் டோணி களமிறங்கினார்.. டோணியுடன் இணைந்திருந்த ரெய்னா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.. அடுத்த சில பந்துகளிலேயே 62 ரன்களை எட்டிய நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் டோணி 12 ரன்களிலும் ஜடேஜா 8 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்.

 

சென்னை அணி 15.2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்களை எடுத்திருந்தது. பின் வரிசை வீரர்களான பிராவோ, அஸ்வின், மொகித் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினர். டூப்ளெஸ்ஸஸ் மட்டும் 33 ரன்கள், நெஹ்ரா ரான் ஏதுவும் எடுக்காமல் அவுட் ஆகாமல் இருந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணி வெல்வதற்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-match-20-rcb-opt-field-against-csk-no-gayle-225288.html

  • தொடங்கியவர்

118 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் கொல்கத்தா தோல்வி: ஐதராபாத் வெற்றி
 

 

விசாகப்பட்டிணத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஐதராபாத், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 91 ரன்கள் விளாச, அவருடன் ஆடிய ஷிகர் தவன் 46 பந்துகளில் 54 ரன்கள் எடுக்க கடைசி 6 ஒவர்களில் கொல்கத்தா கட்டுப்படுத்தியது.

 

இந்த இன்னிங்ஸ் முடிந்தவுடன் கன மழை பெய்யத்தொடங்க கொல்கத்தா இன்னிங்ஸ் தொடங்குவதில் நிறைய நேர விரயம் ஏற்பட்டது. இதனையடுத்து மழை முடிந்து ஆட்டம் தொடங்கிய போது 12 ஓவர்களில் 118 ரன்கள் வெற்றி இலக்கு டக்வொர்த் முறையில் கொல்கத்தாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் 16 ரன்களில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா மழையை முன்னிட்டு முதலில் சன் ரைசர்ஸை களமிறங்கச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் 12 ஓவர்களில் 118 ரன்கள் இலக்கு என்பது இன்றைய டி20 நடைமுறையில் கடினமானதல்ல.

 

 

தவறவிடப்பட்ட கேட்ச்களை பயன்படுத்தாத கொல்கத்தா:

டேல் ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் ராபின் உத்தப்பா கொடுத்த எட்ஜ் கேட்சை ராகுல் தவற விட்டார். 3-வது ஓவரில் இதே ஸ்டெய்ன் பந்தில் கம்பீருக்கு தேர்ட் மேனில் பிரவீண் குமார் ஒரு கேட்சை விட்டார். ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக் உத்தப்பாவுக்கு வர ஸ்டெய்ன் பந்தை அருமையாக ஹை பிளிக் செய்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்தார் உத்தப்பா.

 

அதன் பிறகு உத்தப்பா, பிரவீண் குமார் ஓவரில் மேலேறி வந்து மிட்விக்கெட்டில் மேலும் ஒரு சிக்சரை அடித்து, அடுத்த பந்தை பிளிக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு ஒரு ரன் எடுக்க, கம்பீர், பிரவீணின் நல்ல பந்தை சுழற்றினார் மாட்டவில்லை பவுல்டு ஆகி 4 ரன்களில் வெளியேறினார்.

 

கரண் சர்மா முதல் ஓவரில் 5 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். ஆனால் மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் பந்தில் புதிய வீரர் மணீஷ் பாண்டே சிக்சர் அடித்து உற்சாகத்தை தக்க வைத்தார். இந்த உற்சாகத்துக்கு அல்ப ஆயுசுதான் இருந்தது, ஏனெனில் 21 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்து 34 ரன்களுடன் அபாயமாகத் திகழ்ந்த ராபின் உத்தப்பா நகர்ந்து சென்று பிளிக் செய்ய ஷார்ட் பைன் லெக்கில் ஒரு வழியாக பிரவீண் குமார் கேட்சைப் பிடித்தார்.

 

6 ஓவர்கள் முடிவில் 49/2 என்று இருந்தது கொல்கத்தா, 7-வது ஓவரை ஸ்டெய்ன் வீச பாண்டே 2 பவுண்டரிகளை விளாசினார். மற்றொரு முனையில் அதிரடி வீரர் ஆந்த்ரே ரசல் இறக்கப்பட்டார். இவர் பிபுல் ஷர்மாவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாசினார்.

 

8 ஓவர்கள் முடிவில் 74/2 என்று நல்ல நிலையில்தான் இருந்தது கொல்கத்தா. ஆனால் 9வது ஓவரில் பொபாராவை ஒரு பவுண்டரி அடித்த பிறகு ரசல் 19 ரன்களில் அவரிடமே வீழ்ந்தார்.

 

அதன் பிறகு பாண்டே, யூசுப் பத்தான் இணைந்தனர். ஆனால் 10-வது ஓவரை புவனேஷ் குமார் அற்புதமாக வீசி 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார். அடுத்த பிரவீன் குமார் ஓவரையும் சரியாக அடிக்க முடியவில்லை இதனால் 7 ரன்களே வந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலையில் யூசுப் பதான் 6 ரன்களில் புவனேஷ் வீசிய புல்டாஸை நேராக கவரில் ஷர்மா கையில் அடித்தார். பாண்டேயால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் இறங்க ஓவர் இல்லாமல் போனது பாண்டே 33 ரன்களுடனும், சூரியகுமார் யாதவ் 2 ரன்களிலும் தேங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 101/4 என்று முடிந்தது கொல்கத்தா.

 

வார்னர், தவன் சதக்கூட்டணி:

முன்னதாக கொல்கத்தாவினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான வார்னர், தவன் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்காக 14.2 ஓவர்களில் 130 ரன்களைச் சேர்த்தனர். இந்த 130 ரன்களில் வார்னர் 91 ரன்கள். வார்னரை மோர்கெல் வீழ்த்த, பிறகு ஷிகர் தவனால் ரன் விகிதத்தை உயர்த்த முடியாமல் போனது. பொபாரா 2 ரன்களில் ஆட்டமிழக்க, தவன் 54 ரன்களில் 19-வது ஓவரில் அவுட் ஆனார்.

 

கடைசியில் நமன் ஓஜா இறங்கி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 18 ரன்களையும் ஹென்ரிக்ஸ் 7 ரன்களையும் எடுக்க சன் ரைசர்ஸ் 176 ரன்கள் எடுத்தது. ஸ்கோர் இன்னமும் அதிகமாகியிருக்க வேண்டும். ஏனோ உயர்த்த முடியவில்லை. கொல்கத்தா அணியினரும் வார்னர், தவன் இருவருக்கும் கேட்சைக் கோட்டை விட்டனர். பீல்டிங் தரம் திடீரென பொறிபறந்தாலும் பல வேளைகளில் அடிப்படைகளற்று சீரழிவாகக் காணப்படுகிறது இந்த ஐபிஎல் தொடரில்.

 

கொல்கத்தா தரப்பில் போத்தா 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். மோர்னி மோர்கெல் மீண்டும் அற்புதமாக வீசி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் 16 ரன்களில் டக்வொர்த் முறையில் வெற்றியை ஈட்டியது.
 

 

http://tamil.thehindu.com/sports/118-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7130757.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆரோன் பின்ச், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்!

 

மெல்போர்ன்: மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச், தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான மும்பை அணியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும், டி20 அணி கேப்டனுமான ஆரோன் பின்ச் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலிய அதிரடி வீரர் ஆரோன் பின்ச், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்!

 

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர் சோபிக்கவில்லை. முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய இவர், மொத்தமே 23 ரன்கள்தான் எடுத்தார். முதல் போட்டியில் 5, அடுத்த போட்டியில் 8 மற்றும் மூன்றாவது போட்டியில் 10* ரன்கள் எடுத்திருந்தார். அகமதாபாத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், பேட்டிங்கின் போது இவரது இடது கால் தொடையின் பின்பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது.

 

இதனால் இவர், 'பீல்டிங்' செய்யவரவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்ற இவருக்கு 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் காயத்தின் பாதிப்பு பெரிய அளவில் இருந்ததால் உடனடியாக 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. தவிர இவர் 12 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், 8வது ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகியுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-205-injured-aaron-finch-ruled-of-ipl-8-225249.html

  • தொடங்கியவர்

பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள்

 

  • தொடங்கியவர்

பெங்களூர் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்று 'ஹாட்ரிக்' தோல்வியைத் தழுவியது

 

பெங்களூர் அணியால் 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியைத் தழுவியது!

 

8வது ஐ.பி.எல்.: பெங்களூருக்கு அணியை சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி!

  • தொடங்கியவர்

சென்னை அணி அசத்தல் வெற்றி

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ரெய்னா அரை சதம் விளாச சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு செய்தார்.

 

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் 39 ரன்கள் எடுத்தார். பிரண்டன் மெக்கலம் (4), தோனி (13) ஏமாற்றினர். அதிரடியாக விளையாடிய ரெய்னாஅரை சதம்  (62) விளாசினார். ஜடேஜா (8) நிலைக்கவில்லை. பின் வந்தவர்கள் விரைவில் வெளியேற, சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. டுபிளசி (33), நெஹ்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு பிஸ்லா (17), ரூசோவ் (14) நிலைக்கவில்லை. தினேஷ் கார்த்தி்க் 10 ரன்கள் எடுத்தார். டிவிலியர்ஸ் (14) ஏமாற்றினார். கோஹ்லி மட்டும் அரை சதம் அடித்து (51) ஆறுதல் தந்தார். மற்றவர்கள் சொதப்ப, பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஸ்டார்க் (9) அவுட்டாகாமல் இருந்தார்.

 

 

http://sports.dinamalar.com/2015/04/1429636031/BangaloretofaceChennaiSuperKingsinahighvoltage.html

  • தொடங்கியவர்

சுழற்பந்து வீச்சாளர்கள் மீது தோனி அதிருப்தி
 

 

விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதில் வென்றது. ஆனாலும் ஸ்பின் பந்து வீச்சு மீது சென்னை கேப்டன் தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய ஆட்டத்தில் ஒரு ஓவரில் அஸ்வின் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். விராட் கோலி அவரை சாத்தினார். ஜடேஜா 4 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனையடுத்து தோனி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

 

ஆட்டம் முடிந்தவுடன் தோனி கூறியதாவது:

“இன்னும் சிறப்பாகக் கூட ஆடியிருக்க முடியும். ஆட்டத்தின் சில தருணங்களில் அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சில தருணங்களில் ஆட்டம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

 

சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த தொடரில் அவர்கள் சரியாக வீசவில்லை.

 

ஐபிஎல் தொடர் செல்லச் செல்ல பிட்ச்கள் மேலும் மந்தமடையும், எனவே ஸ்பின்னர்கள் தங்கள் பந்து வீச்சை மேம்படுத்துவது அவசியம். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் அபாரம். ஒரு மூத்த வீரராக பவுலர்களிடம் அவர் ஆலோசனை வழங்குவார் என்பதற்காகவே அவரை மிட் ஆஃபில் நிறுத்தியுள்ளோம்.

 

டிவில்லியர்ஸ் ரன் அவுட் குறித்து..

அணியில் விரைவு கதியில் இயங்காத பீல்டர்கள் உள்ளனர். நாங்கள் பீல்டிங்கினால்தான் வளர்ந்து வருகிறோம். டிவில்லியர்ஸ் எங்கு விளையாடினாலும் சிறப்பாக விளையாடுவார். அவரை ரன் அவுட் செய்தால் அவர் விக்கெட் ஒரு எளிதான விக்கெட்” என்றார் தோனி.

 

துல்லியமற்ற த்ரோவை தோனி தனது சாதுரியத்தினால் ரன் அவுட் செய்து டிவில்லியர்ஸை வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article7133959.ece

  • தொடங்கியவர்

ரெய்னா, நெஹ்ரா அபாரம்: பெங்களூருவை நோகடித்த சென்னை
 

 

சுரேஷ் ரெய்னாவின் அபாரமான அதிரடி மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவின் சவாலான பந்துவீச்சு ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸிடம் சரணடைந்தது.

 

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெய்னாவின் சிக்சர் மழை அரைசதத்துடன் 181 ரன்களை குவிக்க, தொடர்ந்து ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஆஷிஷ் நெஹ்ராவின் தொடக்க மற்றும் கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

 

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் விளையாடவில்லை. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

மிட்செல் ஸ்டார்க் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்குத் திரும்பியதால், மீண்டும் ஒரு மெக்கல்லம்/ஸ்டார்க் சவாலை ரசிகர்கள் எதிர்நோக்கினர். ஆனால் இந்த முறை மெக்கல்லம், ஸ்டார்க்கிடம் அவுட் ஆகவில்லை. ஒரு பவுண்டரியை முதல் ஓவரில் அடித்தார். ஆனால் 2-வது ஓவரில் ஹரியானாவைச் சேர்ந்த லெக் பிரேக்/கூக்ளி பவுலரான சாஹலிடம் மெக்கல்லம் ஆட்டமிழந்தார். சாஹல் பந்தை மெக்கல்லம் கட் செய்ய அது நேராக பாயிண்டில் ருசோவிடம் கேட்ச் ஆனது.

 

இறங்கியது முதல் ஆக்ரோஷ அதிரடி காட்டிய ரெய்னா:

3-ம் நிலையில் களமிறங்கிய ரெய்னா முதல் பந்திலேயே தனது அதிரடி நோக்கத்தை வெளிப்படுத்தி மேலேறி வந்து சாஹல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

மறு முனையில் டிவைன் ஸ்மித், சாஹல் வீசிய 4-வது ஓவரில் ஒரு எட்ஜ் பவுண்டரியும் புல் ஷாட் சிக்ஸையும் அடித்தார். ஹர்ஷல் படேல் பந்து வீச வந்தார். அவர் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி ரெய்னா அவரை வரவேற்றார்.

 

டேவிட் வெய்ஸ் பந்து வீச வந்தவுடன் ரெய்னா தனது முதல் சிக்ஸை நேராக அடித்தார். மிகவும் அலட்சியமான சிக்ஸ் அது. வெய்ஸ் மிகவும் காஸ்ட்லியான பவுலர் ஆனார். அவரது அடுத்த ஓவரில் டிவைன் ஸ்மித் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து அடித்தார். பிறகு ஒரு பவுண்டரியையும் அடித்து 8-வது ஓவரில் 17 ரன்கள் சேர்த்தார். 29 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 39 ரன்கள் எடுத்த ஸ்மித் 9-வது ஓவரில் ஹர்ஷல் படேல் பந்தை எட்ஜ் செய்து தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார்.

அதன் பிறகு ஆட்டம் ரெய்னாவின் கைக்கு மாறியது. இக்பால் அப்துல்லா பந்தை டீப் மிட்விக்கெட் பவுண்டரியில் ரசிகர்கள் மத்தியில் சிலபல வரிசைகள் தள்ளி போய் விழுமாறு மிகப்பெரிய சிக்சரை விளாசினார் ரெய்னா. தோனி களமிறங்கி 2 பவுண்டரிகளை அடித்தார். மீண்டும் இக்பால் அப்துல்லாவை மேலேறி வந்து ரெய்னா லாங் ஆனில் ஒரு அபாரமான சிக்ஸரை விளாசினார்.

 

இதன் பிறகுதான் சாஹல், ரெய்னாவிடம் சிக்கினார். ஆட்டத்தின் 13-வது ஓவரில் லாங் ஆன் மற்றும் மிட்விக்கெட்டில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்தார். ரெய்னா. 32 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஒரு முடிவுடன் சென்று கொண்டிருந்த ரெய்னா, சாஹல் பந்தை மேலேறி வந்து இன்னொரு சிக்சருக்கு முயன்று லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

13 பந்துகளில் 5 பந்துகளில் லொட்டு வைத்த தோனி 13 ரன்களில் சாஹலின் சாதாரண பந்துக்கு அசாதாரணமாக ஏதோ செய்ய நினைத்து கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தோனி பேட்டிங் வர வர அறுவை என்ற வகைமைக்குச் சென்று கொண்டிருப்பதை காண முடிந்தது, இக்பால் அப்துல்லாவின் ஒரு ஓவரில் 4 பந்துகளை தொடர்ச்சியாக லொட்டு வைத்து ரசிகர்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.

 

அபராஜித், பவன் நேகி போன்ற வீரர்கள் இருந்தும் தொடர்ச்சியாக ஜடேஜாவுக்கு வாய்ப்புகளை எளிதாக வழங்கி வரும் தோனிக்கு ஜடேஜா நேற்றும் நியாயம் செய்யவில்லை 8 ரன்களில் அவுட் ஆனார். கடைசியில் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 33 ரன்கள் எடுத்ததினால் 181ரன்களை எட்ட முடிந்தது. ரெய்னா அவுட் ஆகும் போது 12.5 ஓவர்களில் 124 ரன்கள் என்று இருந்த சென்னை அணி அடுத்த 43 பந்துகளில் 57 ரன்களையே எடுத்தது.

 

அதுவும் டு பிளெஸ்ஸிஸ் இன்னிங்ஸினால். பிராவோ, அஸ்வின் சோபிக்கவில்லை. பிராவோ, அஸ்வினுக்கும் முன்னதாக ஜடேஜாவை களமிறக்க அவர் தகுதியானவர்தானா? அணியில் நீடிக்கவும் ஜடேஜா தகுதியானவர்தானா? போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு தோனி சீரியசாக பதில் கூற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஸ்டார்க் சிறப்பாக வீசி 4 ஓவர் 24 ரன்கள் 1 விக்கெட்டை கைப்பற்றினார். சாஹல் ரன் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்ஷல் படேலும் சிக்கனமாக வீசினார்.

 

நெஹ்ராவின் அபாரப் பந்து வீச்சில் சரணடைந்த பெங்களூரு:

கிறிஸ் கெய்ல் இல்லாததால் பிஸ்லா, ருசோவ் களமிறங்கினர். பிஸ்லா, ஈஷ்வர் பாண்டேயை 2 பவுண்டரிகள் விளாசினார். பிறகு ரூசோவ், பிஸ்லா இணைந்து மோஹித் சர்மாவை பிரித்தெடுத்து 19 ரன்களை விளாசினர்.

 

அப்போதுதான் நெஹ்ரா 4-வது ஓவரில் பிஸ்லா, ருசோவ் இருவரையும் வெளியேற்றினார். அப்போது முதல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு ரன்விகிதம் சரியத் தொடங்கியது.

 

விராட் கோலி தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் ஆடினார். அணியின் நலனை விட தனது சொந்த பார்ம் குறித்த அக்கறை அவரது இன்னிங்ஸில் தெரிந்தது. செட்டில் ஆன பிறகு அஸ்வின் வீசிய 8-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக் கொஞ்சம் நின்று கூட ஆடியிருப்பார். ஆனால் பாண்டே வீசுவதற்கு முன்னால் விராட் கோலி அவரிடம் போய் ஏதோ முணுமுணுக்க தினேஷ் கார்த்திக் பந்தை அடிக்க அது நேராக லாங் ஆனில் பிராவோவிடம் கேட்ச் ஆனது. முன்னால் டைவ் அடித்து பிராவோ அபாரமாக கேட்ச் பிடித்து தனது வழக்கமான கொண்டாட்ட டான்ஸைப் போட்டார்.

 

ஏ.பி.டிவில்லியர்ஸ் 2 சிக்சர்களுடன் 14 ரன்கள் எடுத்து தோனியின் அபார சாதுரியத்தினால் ரன் அவுட் ஆனார். 2-வது ரன்னை எடுக்க டிவில்லியர்ஸ் ஓடி வந்தபோது ஸ்மித்தின் சாதாரண த்ரோவை தோனி ரன் அவுட் ஆக மாற்றினார்.

 

மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார் கோலி. 5 விக்கெட்டுகள் சரிய 6 ஓவர்களில் 83 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த கோலியையும் ஹர்ஷல் படேலையும் மீண்டும் ஆஷிஷ் நெஹ்ரா 17-வது ஓவரில் வீழ்த்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கதை அத்துடன் முடிந்தது. 154/8 என்று 27 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து புள்ளிகள் அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ளது.

 

நெஹ்ரா 4 ஓவர்களில் 10 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் ஒரே ஓவரில் கோலியிடம் 17 ரன்கள் வாங்கிக் கட்டிக் கொண்டதோடு பந்து வீச அழைக்கப்படவில்லை. ஜடேஜா தண்டமாக வீசி 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article7133076.ece

  • தொடங்கியவர்

Delhi Daredevils 190/4 (20/20 ov)
Mumbai Indians 153/9 (20/20 ov)
Delhi Daredevils won by 37 runs

  • தொடங்கியவர்

பிரிமியர் லீக் கிரிக்கெட்: டில்லி அணி வெற்றி

 

புதுடில்லி: மும்பை அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டில்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21லீக் போட்டியில் டில்லி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

 

டில்லியில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு்க்கு 153 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1237079

 

  • தொடங்கியவர்

ராஜஸ்தான்- பெங்களூர் இன்று மோதல்
 

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தான், கடந்த ஆட்டத் தில் கடுமையான போராட்டத்துக் குப் பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாபிடம் தோற்றது. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ள ராஜஸ்தான், பெங்களூர் அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆனால் பெங்களூர் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளை யாடி 3-ல் தோல்வி கண்டுள்ளது. தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கோலி தலைமையிலான பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

 

பெங்களூர் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக இருந்தபோதிலும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், விராட் கோலி, ரிலீ ரொசாவ் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. டிவில்லியர்ஸ், கோலி ஓரளவு சிறப்பாக ஆடியபோதும், கெயில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அவர் நீக்கப்பட்டார்.

 

கடந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த ரொசாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோலி, டிவில்லியர்ஸ், டேவிட் வியெஸ் உள்ளிட்டோர் எப்படி ஆடுகி றார்கள் என்பதைப் பொறுத்தே பெங்களூரின் ரன் குவிப்பு அமையும்.

 

இதேபோல் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க் பெங்களூர் அணிக்கு திரும்பிவிட்டபோதிலும், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெங்களூர் பவுலர்களால் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. மில்னிக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த நாத் அரவிந்த் இன்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ராஜஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிக வலுவாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட முன்னணி அணிகளைத் தோற்கடித்துள்ள ராஜஸ்தான் அணிக்கு அஜிங்க்ய ரஹானே, கேப்டன் வாட்சன் ஆகியோர் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித், கருண் நாயர், தீபக் ஹூடா, ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர் கூட்டணி பலம் சேர்க்கிறது.

 

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் தொடர்ந்து கலக்கி வருகிறார். பெங்களூர் பேட்ஸ்மேன் களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. மோரிஸ் தவிர, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி, வாட்சன் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பே, அங்கித் சர்மா, தீபக் ஹூடா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

 

இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 7 முறையும், பெங்களூர் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7137122.ece

  • தொடங்கியவர்

டில்லி அணி அசத்தல்: 2 ஆண்டுக்குப் பின் முதல் வெற்றி

 

புதுடில்லி: டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில், இரு ஆண்டுக்குப் பின் ஐ.பி.எல்., தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து 'கில்லி' ஆனது டில்லி அணி. நேற்று நடந்த லீக் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.

 

 

டுமினி அபாரம்:
டில்லி அணியின் மயங்க் அகர்வால் (1) முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின் இணைந்த கேப்டன் டுமினி, ஸ்ரேயாஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிக்சர் மழை பொழிந்த இருவரும் அரைசதம் எட்டினர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்ரேயாஷ் (83) அவுட்டானார். மாத்யூஸ் (17), யுவராஜ் சிங் (2) ஏமாற்றினர். டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. டுமினி (78), கேதர் ஜாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

எல்லாமே மோசம்:
கடின இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. சிம்மன்ஸ் (15), பார்த்திவ் படேல் (28) அடுத்தடுத்து கிளம்பினர். உன்முக்த் சந்த் (14), போலார்டு (10) இருவரும் அமித் மிஸ்ரா சுழலில் சிக்கினர்.

 

 

ரோகித் சர்மாவை (30) கூல்டர் நைல் வெளியேற்றினார். தனது 3வது ஓவரை வீசிய இம்ரான் தாகிர், பாண்ட்யா (0), அம்பதி ராயுடு (30), மெக்லீனகன் (0) என, மூன்று பேரை அவுட்டாக்கினார். ஹர்பஜன் (9) ஏமாற்றினார்.

 

 

மும்பை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. டில்லி அணி சார்பில் இம்ரான் தாகிர் 3, அமித் மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினர். கடந்த 2013க்குப் பின் இம்மைதானத்தில் டில்லி அணி பெற்ற முதல் வெற்றி இது தான்.

 

 

மும்பையில் துவங்கி...
டில்லி அணியின் சொந்தமண்ணாக டில்லி பெரோஷா கோட்லா மைதானம் உள்ளது. இங்கு கடைசியாக டில்லி அணி (165/1), 2013 லீக் சுற்றில் மும்பையை (161/4) வீழ்த்தியது.
இதன் பின் 2013ல் 2 (பஞ்சாப், பெங்களூரு), 2014ல் 5 (ராஜஸ்தான், சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், பஞ்சாப்), இந்த ஆண்டில் 2 (ராஜஸ்தான், கோல்கட்டா) என, இம்மைதானத்தில் விளையாடிய 9 போட்டிகளிலும் டில்லி அணி தோற்றது.

 

 

ஒரு வழியாக நேற்று சாதித்த டில்லி அணி, மீண்டும் மும்பை அணியை வீழ்த்தி, இம்மைதானத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1236375

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் அணி 130 ரன்கள்


ராஜஸ்தான் அணி 130 ரன்கள்

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சில் மிரட்ட ராஜஸ்தான் அணி 130 ரன்கள் எடுத்தது.இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. ஆமதாபாத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு ரகானே (18), கேப்டன் வாட்சன் (26) வெகு நேரம் நிலைக்கவில்லை. ஸ்டார்க் 'வேகத்தில்' ஸ்டீவ் ஸ்மித் (31), பின்னி (20), குல்கர்னி (1) சிக்கினர். மற்ற வீரர்களும் சொதப்ப, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. கிறிஸ் மோரிஸ் (3), பிரவீண் டாம்பே (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1237181

  • தொடங்கியவர்

Rajasthan Royals 130/9 (20/20 ov)
RCB 134/1 (16.1/20 ov)
Royal Challengers Bangalore won by 9 wickets (with 23 balls remaining)

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டி ஆமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார்.

 

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துது. இதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 16.1 ஓவரில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1238026

  • தொடங்கியவர்

சென்னை மைதானத்தில் சூப்பர் கிங்ஸின் வெற்றி தொடருமா?- பஞ்சாப்புடன் இன்று மோதல்
 

 

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.

சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

 

இரண்டு முறை கோப்பையை வென்ற அணியான சூப்பர் கிங்ஸ், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்துள்ளது. அதிலும் சென்னையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம் பஞ்சாப் அணி புதிய உத்வேகம் பெற்றுள்ளது. ஷான் மார்ஷின் வருகை அந்த அணிக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதால் பஞ்சாப்பும் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

 

சமபலம் கொண்ட சூப்பர் கிங்ஸ்

சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலம் கொண்டதாகத் திகழ்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டுவைன் ஸ்மித் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரென்டன் மெக்கல்லம், சன்ரைஸர்ஸுக்கு எதிராக சதமடித்த பிறகு பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனினும் அவர் களத்தில் நிற்கும் வரையில் எதிரணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

 

மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, டுவைன் பிராவோ, கேப்டன் தோனி ஆகியோர் சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். கடந்த ஆட்டத்தில் 32 பந்துகளில் 62 ரன்கள் குவித்த ரெய்னா, இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ரன் சேர்ப்பார் என நம்பலாம்.

 

வேகப்பந்து வீச்சில் நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும், ஆசிஷ் நெஹ்ரா, ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா கூட்டணி சிறப்பாகவே பந்துவீசி வருகிறது. இவர்களில் குறிப்பாக ஆசிஷ் நெஹ்ரா இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெங்களூருக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நெஹ்ரா, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணி சூப்பர் கிங்ஸின் நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியாக உள்ளது.

 

மிரட்டும் ஷான் மார்ஷ்

பஞ்சாப் அணி, சூப்பர் கிங்ஸை வீழ்த்துவதற்கு அந்த அணியின் தொடக்க வீரர்களான சேவாக்-முரளி விஜய் ஜோடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுப்பது அவசியம். முந்தைய சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவரான முரளி விஜய்க்கு, சென்னை மைதானம் நன்கு பழக்கப்பட்டது என்பதால் அவர் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அந்த அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாததால் அவருக்குப் பதிலாக களமிறங்கிய ஷான் மார்ஷ் 40 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோல் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். எனவே இன்றைய ஆட்டத்தில் பெய்லி களமிறங்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் மேக்ஸ்வெல் நீக்கப்பட வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன், அனுரீத் சிங், சந்தீப் சர்மா கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேலையும் நம்பியுள்ளது பஞ்சாப்.

 

 

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் சூப்பர் கிங்ஸ் 8 முறையும், பஞ்சாப் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது. கடந்த சீசனில் பஞ்சாப்புடன் மோதிய 3 ஆட்டங்களிலும் சூப்பர் கிங்ஸ் தோல்வி கண்டுள்ளது. அந்த 3 ஆட்டங்களிலுமே 200 ரன்களுக்கு மேல் குவித்தது பஞ்சாப்.

 

மும்பை-சன்ரைஸர்ஸ் மோதல்

மும்பையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, அதில் 5-ல் தோல்வி கண்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தனது பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தப் போட்டியில் வெல்வது அவசியம்.

 

டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7140628.ece

  • தொடங்கியவர்

8வது ஐ.பி.எல்: ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!!

 

அகமதாபாத்: 8வது ஐ.பி.எல். போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

 

ரகானே- வாட்சன் ஜோடி தொடக்க வீரர்களாக ரகானே, வாட்சன் களமிறங்கினர். இவர்கள் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். 36 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை பட்டேல் பிரித்தார். அவரது பந்துவீச்சில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே அவுட் ஆனார்.

 

130 ரன்கள் அதன்பின்னர் களமிறங்கிய ஸ்மித் நிதானமாக விளையாட, அதிரடியைத் தொடர்ந்த வாட்சன் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் கருண் நாயர் 16 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். பெங்களூர் பந்துவீச்சை தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த போராடிய ஸ்மித் 31 ரன்களிலும், பின்னி 20 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்வரிசை பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.

 

ஸ்டார்க் அபாரம் பெங்களூர் தரப்பில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளும், பட்டேல், சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

 

கெயில்-கோஹ்லி இதையடுத்து 131 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது. வழக்கம் போல பெங்களூருவின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில், கோஹ்லி கோலி இருவருமே அதிரடியை காட்டினர்.

 

வெளுத்து கட்டிய டிவில்லியர்ஸ்-கோஹ்லி வாட்சன் வீசிய 5 வது ஓவரில் 20 ரன்களுடன் கிறிஸ் கெயில் வெளியேற, அடுத்து வந்த டி வில்லியர்ஸ் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து சரமாரியாக அடித்தார். கோஹ்லியும் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார்.

 

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. இருவரது அதிரடியாலும் 16 வது ஓவரின் முதல் பந்திலேயே 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-kohli-de-villiers-help-bangalore-thrash-rajasthan-by-9-wickets-225451.html

  • தொடங்கியவர்

நில நடுக்கத்தை உணர்ந்த பீதியில் ஐபிஎல் வீரர்கள்.. போட்டிகள் தொடருமா?

 

கொல்கத்தா: நில நடுக்கத்தை உணர்ந்ததாக பீதியுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர் ஐபிஎல் வீரர்கள். இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறுகையில், இன்று நில நடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை முதல் முறையாக உணர்ந்தேன்.

 

புழுக்கமான வானிலையில் இருந்து கொல்கத்தா திடீரென 2 நிமிடங்களுக்கு, குளி்ச்சியாக மாறியதையும் உணர முடிந்தது. உலக வாழ்க்கை மிக குறுகியது. மகிழ்ச்சியோடும், அடுத்தவர்கள் மீது பாசத்தோடும் வாழ்வோமாக. இவ்வாறு ராபின் உத்தப்பா கூறியுள்ளார். மற்றொரு வீரர் குல்திப் யாதவ் கூறுகையில், எனது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தேன்.

 

அது ஒரு பயங்கர அனுபவம். என்னால் நில நடுக்கத்தை உணர முடிந்தது என்றுள்ளார். மற்றொரு வீரர் ஜாதவ் உனட்கட் கூறுகையில், தாய்நிலத்தில் அதிர்வை உணர்ந்தேன். அமைதியாகவும், பூமியோடு இசைந்தும் வாழ வேண்டும் என்பதை கடவுள் உணர்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும், டெல்லியில் நில நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-kkr-players-feel-horrible-earthquake-kolkata-225465.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.