Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

Mumbai Indians have won the toss and they will bat.

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நிலநடுக்க கவலையின்றி, தொடங்கியது மும்பை- ஹைதராபாத் ஐபிஎல் ஆட்டம்!

 

மும்பை: நிலநடுக்க பீதிக்கு நடுவேயும், ஐபிஎல் போட்டி மாற்றமின்றி நடந்து வருகிறது. நேபாளத்தை மையம் கொண்டு தாக்கிய பயங்கல நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மாலை 3.30 மணியளவில் இந்தியாவில் 17 பேர் நில நடுக்கத்தால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. நிலநடுக்க கவலையின்றி, தொடங்கியது மும்பை- ஹைதராபாத் ஐபிஎல் ஆட்டம்!

 

ஆனால் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு, ஹைதராபாத்-மும்பை அணிகளுக்கு நடுவேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது. நிலநடுக்கத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பலரும் அனுபவித்து பீதியில் உள்ளனர். இந்நிலையிலும், போட்டிகள் ஒருநாள் கூட நிறுத்தப்படாமல் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களும், திரளாக மைதானத்திற்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-even-though-earthquake-hitted-many-part-india-the-ipl-matche-225478.html


இந்த போட்டியை பார்வையிட 22,000 பாடசாலை சிறுவர்கள் வந்திருந்தார்கள்.

  • தொடங்கியவர்

மும்பை அணி 157 ரன்கள்

 

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்.,லீக் போட்டியில் மும்பை அணி 157 ரன்கள் எடுத்தது. இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று மும்பையில் நடக்கும் லீக் போட்டியில், மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

 

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல் (17) ஏமாற்றினார். பின் வந்த உன்முக்த் 5 ரன்களில் திரும்பினார். சிறப்பாக செயல்பட்ட சிம்மன்ஸ் (51) அரை சதம் விளாசினார். ரோகித் (24), போலார்டு (33) ஓரளவு கைகொடுத்தனர். பின் வந்தவர்கள் விரைவில் வெளியேற, மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. சுச்சித் (9), மெக்லினகன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1237941

  • தொடங்கியவர்

மும்பை வெற்றி

  • தொடங்கியவர்

Chennai Super Kings 192/3 (20/20 ov)

  • தொடங்கியவர்

மெக்கல்லம், டோணி அதிரடி..பஞ்சாப்புக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை!

 

சென்னை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 192 ரன்கள் குவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. மெக்கல்லம், டோணி அதிரடி..பஞ்சாப்புக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை!

 

டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து ட்வைன் ஸ்மித் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ட்வைன் ஸ்மித் 26 ரன்களில் அனுரீத் சிங் பந்து வீச்சில் பவுல்ட் ஆனார். அதேநேரம், பிரெண்டன் மெக்கல்லம் 44 பந்துகளில் அதிரடியாக 66 ரன்களை குவித்தார். இதன்பிறகு எதிர்பாராதவிதமாக 29 ரன்கள் எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா ரன் அவுட் ஆனார்.

 

20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் டோணி, 21 பந்துகளில் 41 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 18 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 193 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் பேட்டிங் செய்ய உள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-have-elected-bat-225491.html

  • தொடங்கியவர்

Chennai Super Kings 192/3 (20/20 ov)
Kings XI Punjab 72/7 (13/20 ov)
Kings XI Punjab require another 121 runs with 3 wickets and 42 balls remaining

  • தொடங்கியவர்

Chennai Super Kings 192/3 (20/20 ov)
Kings XI Punjab 95/9 (20/20 ov)
Chennai Super Kings won by 97 runs

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்:சென்னை அணி சூப்பர் வெற்றி

 

சென்னை: பிரிமியர் லீக் தொடரின், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, 24வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

 

தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் மெக்கல்லம் 66 ரன்களும், தோனி 44 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 193 ரன் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.இந்நிலையில் சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1238872

  • தொடங்கியவர்

மலிங்கா, மெக்லினாகன் அபாரம்: ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் 2-வது வெற்றி
 

 

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மும்பை இண்டியன்ஸ். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 

முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அதிரடி தொடக்கம் கண்டும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

 

மும்பையில் சனிக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மும்பை அணியில் ஹார்டிக் பாந்த்யா, பூம்ரா ஆகியோருக்குப் பதிலாக சுசித், வினய் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைஸர்ஸ் அணியில் ஹென்ரிக்ஸ், பிபுல் சர்மா ஆகியோருக்குப் பதிலாக டிரென்ட் போல்ட், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம்பெற்றனர்.

 

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்ய, லென்ட் சிம்மன்ஸும், பார்திவ் படேலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சிம்மன்ஸ் இரு பவுண்டரிகளை விளாசினார். மறுமுனையில் வேகமாக ஆட முயன்ற பார்திவ் படேல் 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

 

சிம்மன்ஸ் அரை சதம்

பின்னர் வந்த உன்முக்த் சந்த் 5 ரன்களில் நடையைக் கட்ட, சிம்மன்ஸுடன் இணைந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த ஜோடி அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் 72 ரன்களை எட்டியது மும்பை. ஸ்டெயின் வீசிய 13-வது ஓவரின் முதல் இரு பந்துகளில் பவுண்டரிகளை விரட்டி 41 பந்துகளில் அரைசதம் கண்ட சிம்மன்ஸ், அடுத்த பந்தில் போல்டு ஆனார். அவர் 42 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார்.

 

பின்னர் வந்த போலார்ட் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க, கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்த அம்பட்டி ராயுடு 7 ரன்களிலும், ஹர்பஜன் சிங் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்தார் போலார்ட், புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் போல்டு ஆனார். அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது மும்பை.

சன்ரைஸர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

ஷிகர் தவன் அதிரடி

பின்னர் ஆடிய சன்ரைஸர்ஸ் அணிக்கு ஷிகர் தவன்-டேவிட் வார்னர் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 4-வது ஓவரை எதிர்கொண்ட ஷிகர் தவன், அதில் 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தன. ஆனால் 5-வது ஓவரை வீசிய மலிங்கா, வார்னரை வீழ்த்தினார். 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த வார்னர், அம்பட்டி ராயுடுவிடம் கேட்ச் ஆனார்.

 

மெக்லினாகன் வீசிய அடுத்த ஓவரில் ஷிகர் தவன் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நமன் ஓஜா 9 ரன்களில் நடையைக் கட்ட, 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது சன்ரைஸர்ஸ்.

இதன்பிறகு லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் ரவி போபாரா. பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 104 ரன்களை எட்டியபோது ராகுல் 25 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழந்தார்.

 

இதன்பிறகு போபாராவுடன் இணைந்தார் ஹனுமா விஹாரி. அப்போது சன்ரைஸர்ஸ் வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 54 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. வினய் குமார் 16-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும், மலிங்கா வீசிய 17-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் ஹனுமா விஹாரி விளாச, அந்த ஓவர்களின் மூலம் 20 ரன்கள் கிடைத்தன.

மெக்லினாகன் திருப்புமுனையும் மலிங்காவின் ஒரே ஓவர் 3 விக்கெட்டுகளும்

 

இதனால் கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மெக்லீனா கான் வீசிய 18-வது ஓவரில் போபாரா 23 ரன்களில் (27 பந்துகளில்) ஆட்டமிழந்தார். இதையடுத்து கரண் சர்மா களம் கண்டார். அதேநேரத்தில் மெக்லினாகன் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இந்த ஓவர்தான் திருப்புமுனையாக அமைந்தது.

 

19-வது ஓவரை வீசிய மலிங்கா முதல் பந்தில் ஹனுமா விஹாரியையும் (10 பந்துகளில் 16 ரன்கள்), 3-வது பந்தில் பிரவீண் குமாரையும் (0), 4-வது பந்தில் ஸ்டெயினையும் (0) வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது சன்ரைஸர்ஸ். கரண் சர்மா 2, புவனேஸ்வர் குமார் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

மும்பை தரப்பில் மலிங்கா 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மெக்லீனாகான் 4 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7141486.ece

  • தொடங்கியவர்

பஞ்சாப்பை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

 

சென்னை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 192 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சென்னையின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

பஞ்சாப்பை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து ட்வைன் ஸ்மித் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ட்வைன் ஸ்மித் 26 ரன்களில் அனுரீத் சிங் பந்து வீச்சில் பவுல்ட் ஆனார்.

 

அதேநேரம், பிரெண்டன் மெக்கல்லம் 44 பந்துகளில் அதிரடியாக 66 ரன்களை குவித்தார். இதன்பிறகு 29 ரன்கள் எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா, எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் டோணி, 21 பந்துகளில் 41 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 18 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 193 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், முதல் ஓவரின் 5வது பந்திலேயே பஞ்சாப்புக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவக் 1 ரன்னில், ஈஸ்வர் பாண்டே பந்தில் டுப்ளசிஸ் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

அப்போது அணியின் ஸ்கோர் 4. இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷ் 10 ரன்களில் நெஹ்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 5.1 ஓவர்களில் 35 ரன்களாக இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கேப்டன், ஜார்ஜ் பெய்லி, ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்தில், டோணியிடம் கேட்ச் கொடுத்து ஒரே ரன்னில் வெளியேறினார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரையும் ஜடேஜா மூன்றே ரன்களில் வெளியேற்றினார். விருதிமான்சாஹா, 15 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள் எடுத்து முறையே, நெஹ்ரா மற்றும் அஸ்வின் பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

 

மிட்சேல் ஜான்சனை 1 ரன்னில், ஜடேஜா வீழ்த்தினார். பஞ்சாப் அணியை பொறுத்தளவில் தொடக்க வீரர் முரளி விஜய் மட்டுமே கலக்கலாக ஆடினார். அவர் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் ட்வைன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பஞ்சாப்புக்காக ஆடினாலும், விஜய் சென்னையை சேர்ந்தவர் என்பதால் அவரது ஷாட்டுகளுக்கு சென்னை ரசிகர்கள் கரகோசம் எழுப்பி வாழ்த்து தெரிவித்து ஆதரவு கொடுத்ததை பார்க்க முடிந்தது. சென்னைக்காக விளையாடி வந்த முரளி விஜய் இம்முறை பஞ்சாப்பால் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 95 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே, பஞ்சாப்பை முற்றிலுமாக பந்தாடிவிட்டது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி, சென்னை புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. போட்டி தொடங்கும் முன்பாக, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு, இரு அணி வீரர்களும் மவுன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-have-elected-bat-225491.html

  • தொடங்கியவர்

ஐபிஎல்: ஐந்தாவது வெற்றியுடன் முதலிடத்தைப் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 5 வெற்றிகளுடன் ஐபிஎல் புள்ளி பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 4 தோல்விகளோடு பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

 

சென்னை நிர்ணயித்த 193 ரன்களை விரட்டிய பஞ்சாப் அணி முதல் ஓவரிலேயே சேவாக் விக்கெட்டை இழந்தது. மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் சிறிது நம்பிக்கயளித்தாலும், அடுத்தடுத்து, மார்ஷ், பெய்லி, மில்லர் என ஆட்டமிழக்க 9 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே பஞ்சாப் சேர்த்தது.

சிறப்பாக ஆடிவந்த விஜய் 10-வது ஓவரில் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் மொத்தமாக சென்னையின் பிடிக்கு வந்தது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 95 ரன்களை மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. ரவீந்த்ர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் நேரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல, ஸ்மித், மெக்கல்லம் ஜோடி, அதிரடியான துவக்கத்தைத் தந்தனர். ஸ்மித் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் மெக்கல்லம் தனது விளாசலை நிறுத்தவில்லை. ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்து 66 ரன்களை அவர் குவித்தார். 32 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் மெக்கல்லம் அரை சதம் தொட்டார்.

 

13-வது ஓவரில் அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் மெக்கல்லம் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து தோனி களமிறங்கி, ரெய்னாவுக்கு ஈடுகொடுத்து ரன் சேர்க்கத் துவங்கினார். துரதிர்ஷ்டவசமாக 16-வது ஓவரில் ரெய்னா 29 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கி கேப்டனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் வேலையைத் தொடர்ந்தார்.

 

மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காத சென்னை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைக் குவித்தது. தோனி 27 பந்துகளில் 41 ரன்களுடனும், ஜடேஜா 11 பந்துகளில் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

பஞ்சாப் 'கை தவறிய' வாய்ப்புகள்

சென்னை ஆடிய போது 5-வது ஓவரில் மெக்கல்லம் தந்த கேட்சை மிட்சல் ஜான்சன் தவறவிட்டார். அப்போது மெக்கல்லம் 23 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து 11-வது ஓவரில், அக்‌ஷர் படேல் வீசிய பந்தை ரெய்னா சிக்ஸருக்கு அடிக்க முயல, பவுண்டரிக்கு அருகில் ஓடி வந்த மிட்சல் ஜான்சன், மீண்டும் ஒரு கேட்ச்சை நழுவவிட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7143336.ece

  • தொடங்கியவர்

ரூ. 26.5 கோடி... 165 ரன்கள்

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் முதல் இரு இடத்தில் உள்ள யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் இருவரும் ரன்கள் சேர்க்க, தொடர்ந்து திணறுகின்றனர்.

 

கடந்த 2011 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் யுவராஜ் சிங், 33. பின் ஏற்பட்ட ‘கேன்சர்’ கட்டியில் இருந்து மீண்டு வந்த இவர், 2012, 2014 உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றார்.

 

பின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட இவரை, 2015 உலக கோப்பை தொடரில் சேர்க்கவில்லை. இவரை, எட்டாவது ஐ.பி.எல்., தொடருக்காக, டில்லி அணி ரூ. 16.5 கோடிக்கு வாங்கியது.

 

அதேபோல, இந்திய ‘டுவென்டி–20’ அணியில் 2010க்குப் பின் பங்கேற்காதவர் தமிழக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், 29. கடைசியாக 2014, மார்ச் 5ல் ஆப்கன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். இவருக்கு பெங்களூரு அணி ரூ. 10.5 கோடி கொடுத்தது

 

இப்படி கொட்டிக் கொடுத்த அணி நிர்வாகத்துக்கு இருவரும் வெறுப்பேற்றுகின்றனர்.

டில்லி அணியில் யுவராஜ் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு அரைசதம் (54) அடித்து, மொத்தம் 122 ரன்கள் தான் எடுத்துள்ளார். இது அணி நிர்வாகத்தை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தினேஷ் கார்த்திக். இதுவரை முதல் 4 போட்டியில்  43 ரன்கள் தான் எடுத்துள்ளார்.

மொத்தம் ரூ. 26.5 கோடிக்கு வாங்கப்பட்ட இவர்கள் சேர்ந்து 165 ரன்கள்(122+43) மட்டுமே எடுத்துள்ளனர். வரும் போட்டிகளிலாவது பிரகாசிப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

http://sports.dinamalar.com/2015/04/1430029645/yuvrajcricket.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்., லீக் போட்டி: மழையால் தாமதம்

 

கோல்கட்டா: ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி மழையால் துவங்க தாமதம் ஆகிறது.

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று கோல்கட்டாவில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, கோல்கட்டாவை எதிர்கொள்கிறது. கனமழை பெய்து கொண்டிருப்பதால், போட்டி துவங்க தாமதம் ஆகிறது.

 

http://sports.dinamalar.com/2015/04/1429977782/kolkataiplmatchrajasthancricket.html


1zodbo6.jpg

  • தொடங்கியவர்

மும்பை அணி அபார வெற்றி * மலிங்கா அசத்தல்

285wro.jpg
 

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. மும்பையில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல் (17) நிலைக்கவில்லை. பிரவீண் குமார் 'வேகத்தில்' உன்முக்த் சந்த் (5) வெளியேறினார். கரண் சர்மா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சிம்மன்ஸ் அரை சதம் அடித்தார். ஸ்டைன் பந்தில் சிம்மன்ஸ் (51) ஆட்டமிழந்தார். ரோகித், 24 ரன்களில் கிளம்பினார்.

புவனேஷ்வர் அசத்தல்:
ஹர்பஜன் சிங் டக்-அவுட் ஆனார். ராயுடு (7) சொதப்பினார். கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர், போலார்டு (33), வினய் குமாரை (0) அவுட்டாக்கி இரட்டை 'அடி' கொடுத்தார். அடுத்த பந்தை மெக்லினகன் தடுத்து ஆட, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. சுச்சித் (9), மெக்லினகன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

தவான் அதிரடி:
பின் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர் (9) ஏமாற்றினார். ஹர்பஜன் வீசிய 4வது ஓவரில் அதிரடி காட்டிய தவான் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மெக்லினகன் பந்தில் தவான் (42) வெளியேறினார். நமன் ஓஜா (9) நிலைக்கவில்லை. லோகேஷ் ராகுல் (25), போபரா(23) சிறிது நேரம் போராடினர்.

மலிங்கா மிரட்டல்:
இந்த நேரத்தில் 19வது ஓவரை வீசிய 'யார்க்கர்' மலிங்கா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்தில் விகாரியை (16) அவுட்டாக்கிய இவர், 2வது பந்தில் ரன் எதுவும் தரவில்லை. 3வது மற்றும் 4வது பந்து முறையே பிரவீண் குமார், ஸ்டனை டக்-அவுட்டாக்கி அசத்தினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணி சார்பில் மலிங்கா 4, மெக்லினகன் 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை மலிங்கா வென்றார்.

 

வார்த்தை போர்
* ஐதராபாத் அணியின் ஸ்டைன் வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை உன்முக்த் சந்த் எதிர் கொண்டார். பந்தை அருகிலேயே உன்முக்த் தட்டிவிட்டதால் கோபமடைந்த ஸ்டைன், அவரை நோக்கி ஏதோ கூறினார்.
* மலிங்கா வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் ஐதராபாத் அணியின் வார்னர் அவுட்டானார். இதனால், உற்சாகமடைந்த மலிங்கா, அவரை நோக்கி ஆவேசக் குரல் எழுப்பினார். இதனை கண்ட வார்னர், ஏதோ திட்டிவிட்டு வெளியேறினார்.

 

சிம்மன்ஸ் காயம்
போட்டியின் 14வது ஓவரில் இரண்டாவது பந்தை ஐதராபாத் அணியின் லோகேஷ் ராகுல் பவுண்டரி நோக்கி விரட்ட முற்பட்டார். ஆனால், இதை பவுண்டரி எல்லைக்கோடு முன், சிம்மன்ஸ் அசத்தலாக தடுத்தார். இதனால், காலில் அடிபட்ட இவர் 'பீல்டிங்கில்' பங்கேற்காமல் வெளியேறினார்.

 

பலே பாண்ட்யா
நேற்றைய போட்டியில் மும்பை வீரர் மலிங்கா வீசிய 17வது ஓவரின் 2வது பந்தை போபரா அடித்தார். இதை பவுண்டரி எல்லைக்கோட்டுக்கு முன்பாக ஒற்றை கையால் அற்புதமாக தடுத்து நிறுத்தினார் பாண்ட்யா.

 

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1237941


View My Video

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட் : கோல்கட்டா போட்டி ரத்து

 

கோல்கட்டா: கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதயிருந்த பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதியில் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல்.,) நடக்கிறது.

 

இதில் கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கயிருந்த 25வது லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதயிருந்தது. ஆனால் போட்டி துவங்கும் நேரத்தில் பலத்த மழை பெய்ததால் 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணி 11 புள்ளிளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1239510

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 96 ரன்கள் இலக்கு

 

புதுடில்லி: பிரிமியர் லீக் தொடரில், டில்லியில் நடக்கும் 26வது லீக் போட்டியில் டில்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து களமிறங்கிய டில்லி அணி 18.2 ஓவரில் 95 ரன்களுக்கு 'ஆல் அவுட்டனாது'.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1239511

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Delhi Daredevils 95 (18.2/20 ov)
RCB 99/0 (10.3/20 ov)
Royal Challengers Bangalore won by 10 wickets (with 57 balls remaining)

  • தொடங்கியவர்

மழையால் போட்டி ரத்து: கோல்கட்டா-ராஜஸ்தான் ஏமாற்றம்

 

mcgrxh.jpg

கோல்கட்டா: கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடக்க இருந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோத இருந்தன. ஆனால், நேற்று மதியம் 2 மணி முதலே கனமழை பெய்யத்துவங்கியது.

 

மூன்று மணி நேரம் பெய்த மழையால், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கியது. இதையடுத்து ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ராஜஸ்தானுக்கு பிரச்னை இல்லை.

 

உள்ளூரில் சாதிக்கலாம் என நினைத்த கோல்கட்டாவுக்கு தான் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1238785

  • தொடங்கியவர்

கெய்ல் புயலில் டில்லி காலி: பெங்களூரு சுலப வெற்றி

 

புதுடில்லி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் கெய்ல் 'புயல்' வேகத்தில் அரைசதம் விளாச, பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணி, 95 ரன்களுக்கு சுருண்டு ஏமாற்றம் அளித்தது.

டில்லியில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ஆரோன் அசத்தல்: டில்லி அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 'டக்-அவுட்' ஆனார். கேப்டன் டுமினி (13) நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 7வது ஓவரை வீசிய வருண் ஆரோன், 2வது பந்தில் யுவராஜ் சிங்கை (2) அவுட்டாக்கினார். 3வது பந்தில் மாத்யூசை (0) வெளியேற்றி, இரட்டை 'அடி' கொடுத்தார்.

ஜாதவ் ஆறுதல்: மயங்க் அகர்வால் (27) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கூல்டர்-நைல் (4), அமித் மிஸ்ரா (2) சொற்ப ரன்னில் 'பெவிலியன்' திரும்பினர். கேதர் ஜாதவ் (33) ஆறுதல் தந்தார். டில்லி அணி 18.2 ஓவரில் 95 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூரு அணி சார்பில் ஸ்டார்க் 3, வருண் ஆரோன், டேவிட் வைஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கெய்ல் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. டில்லி அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கெய்ல், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இம்ரான் தாகிர் பந்தை சிகசருக்கு அனுப்பி அரைசதத்தை பதிவு செய்தார். கூல்டர் நைல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணி 10.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கெய்ல் (62 ரன், 40 பந்து, 4 சிக்சர், 6 பவுண்டரி), கோஹ்லி (35 ரன், 23 பந்து, 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

95
நேற்று 95 ரன்களுக்கு சுருண்ட டில்லி அணி, இத்தொடரில் குறைந்த ஸ்கோரை பெற்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை பஞ்சாப் அணியுடன் (95 ரன், எதிர்-சென்னை) பகிர்ந்து கொண்டது.

* ஐ.பி.எல்., அரங்கில் டில்லி அணி 6வது முறையாக 100 ரன்களுக்கும் குறைவாக 'ஆல்-அவுட்' ஆனது.

200
டில்லி அணிக்கு எதிராக களமிறங்கிய பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல், ஒட்டுமொத்தமாக தனது 200வது 'டுவென்டி-20' போட்டியில் விளையாடினார். இந்த இலக்கை எட்டிய 16வது சர்வதேச வீரர், 4வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமை பெற்றார்.

2
பெங்களூரு அணி 2வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு முன், 2010ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை படைத்தது.
* ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி கிடைத்தது.
* டெக்கான் (2008), டில்லி (2009), ராஜஸ்தான் (2011), மும்பை (2012), சென்னை (2013) அணிகள் தலா ஒரு முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பெற்றன.

8
ஐ.பி.எல்., அரங்கில் பெங்களூரு அணி தொடர்ச்சியாக 8வது முறையாக டில்லி அணியை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் 14 முறை மோதின. இதில் பெங்களூரு 8, டில்லி 5 போட்டிகளில் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது. பின், 'சூப்பர் ஓவர்' முறையில் பெங்களூரு அணி வென்றது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1238784

  • தொடங்கியவர்

27th match: Kings XI v Sunrisers at Mohali on Apr 27, 2015

(20:00 local | 14:30 GMT)

  • தொடங்கியவர்

கிறிஸ் கெயில் தனக்குத்தானே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்: விராட் கோலி

 

டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கிறிஸ் கெயிலின் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

 

நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் மிட்செல் ஸ்டார்க் (3/20) வருண் ஆரோன் (2/24), வெய்ஸ் (2/18) ஆகியோரது பந்துவீச்சுக்கு திக்கித் திணறி 18.2 ஓவர்களில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 95 ரன்களுக்குச் சுருண்டது. ரூ.16 கோடி கொடுத்து வாங்கப்பட்ட யுவராஜ் சிங் 2 ரன்களில் வருண் ஆரோன் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேதர் ஜாதவ் மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

 

தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணியில் கெயிலும், கேப்டன் கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கி 63 பந்துகளில் 99/0 என்று அபார வெற்றி பெறச் செய்தனர்.

கெயில் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 62 ரன்களை விளாச, விராட் கோலி அவருக்கு பக்கபலமாக 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

 

கெயில் இந்தத் தொடரில் முதன் முறையாக தனது பாணியில் விளையாடினார். இடையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், விராட் கோலி கெயில் பற்றிக் கூறும்போது, “கெயில் மிகவும் சுதந்திரமாக ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் தன் மீதே நிறைய அழுத்தம் கொடுத்துக் கொள்கிறார்.

 

கடந்த ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடினார் கெயில். அவர் ஒவ்வொரு முறையும் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று உணர்கிறார், இதனால் அணியும் அவரிடம் இதனை எதிர்பார்ப்பதாக அழுத்தம் ஏற்படுத்திக் கொள்கிறார். இதனால் அவருக்கு அழுத்தம் கூடுகிறது. இத்தகைய நெருக்கடி எந்த ஒரு வீரருக்கும் நியாயமாகாது” என்றார் விராட் கோலி.

 

விருத்திமான் சஹாவை பாராட்டும் விராட் கோலி...

இந்திய அணிக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் தோனி செய்த பங்களிப்பை நாம் பாராட்ட வேண்டும். அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வது கடினம். ஆனாலும் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், சஹா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் விக்கெட் கீப்பிங் திறமைகள் நம்மிடம் உள்ளன.

விருத்திமான் சஹா இந்திய அணியில் சிலகாலமாக இடம்பெற்று வருகிறார். தோனி இல்லாத போது அவர்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். சஹா ஒரு உலகத் தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர், தனது பேட்டிங்கை மேம்படுத்துவதிலும் கடினமாக உழைத்து வருகிறார். அவருக்கு வயது 30 ஆகிறது. உடற்தகுதியும் கச்சிதமாக உள்ளது. அவர் இந்திய டெஸ்ட் அணியின் கீப்பராக 5-6 ஆண்டுகள் நீடிக்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.” என்றார் விராட் கோலி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article7146728.ece

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு இலக்கு 151 ரன்கள்

 

மொகாலி: பிரிமியர் லீக் தொடரின் 27வது லீக் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1240303

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 150/6 (20/20 ov)
Kings XI Punjab 130/9 (20/20 ov)
Sunrisers Hyderabad won by 20 runs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.