Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

அப்பா அன்றெனக்கு

நீ செய்த கடமைகளை

இன்றெண்ணி பார்கையிலே

என் விழிகள்

மழைதனையே பொழிந்து விடும்...

உறக்கத்தில்கிடைக்கையிலே

ஊந்து வந்து பார்திடுவாய்

காணமால் போன தலையனையை

தலைக்கிதமாய் வைத்திடுவாய்...

வயது வந்த வேளையிலும்

வாடமால் வந்தருகே

போர்வை தனை நீ எடுத்து

போர்த்த்pயே போயிடுவாய்...

என் கால் வலிக்குமென்று

ஏற்றி வந்து விட்டிடுவாய்

உன் கடன் நீ மறந்து

என் கடன் நீ செய்வாய்...

காசு தந்தெனக்கு

கல்விசாலை அனுப்பி வைப்பாய்

காலை இடைவேளையில்

வேண்டியேதும் உன் எண்பாய்...

ஆசைப் பட்டதெல்லாம்

அப்பா நீ வேண்டி தந்தாய்

யுத்தம் எமை விரட்ட

உனைவிட்டு இங்கு வந்தேன்..

காலம் கடந்திருச்சு

வயசும் உனக்காச்சு

தனிமையில் நீ அங்கே

தவிக்கின்றாய் நீ அப்பா...

உன்னருகில் இருந்தெனக்கு

உதவிடத்தான் முடியலயே

இறுதி வரை உன்னோடு

இருக்க என்னால் முடியலயே.....

எழும்பி நடக்கவும்

இயலாதாம் உனக்கின்று

படுக்கையில் நீ இன்று

முடியலயே என்னால் இன்று

வந்துனக்கு உதவிட....

வதிவிடம் இல்லாமால்

வதைபடும் எனக்கு

தந்தை உனை பார்க்க

தனையன் என்னால் முடியலயே....

உந்தன கடன் செய்ய

என்னால் இன்று முடியலயே

அழுவதை தவிர

வேறென்ன நான் செய்வேன்...???

என்ன செய்வேன் நான்

ஏன் இறைவா எனக்குமட்டும்

இந்த அவலம்....???

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

(அருமையான உணர்வுகள் வாழ்த்துகள்)

அவலம்

நீந்திவிளையாடும்..

மீனின் வாயில்

கொழுக்கியேத்தி

இழுத்தெடுத்து

பெரிதாய்ச்சிரித்து..

மீண்டும் மீனை

ஏரிக்குள் எறியும்..

பணக்கார விளையாட்டில்

சிறு மீன் படும்

அவலம் போல்

நாமும் நம் வாழ்வும்..

நாமும் நம் வாழ்வும்

நாளும் இடம் பெயரும்

நாளாந்தம் புதிதாய்

ஒவ்வொரு முகவரி தரும்...

புதிதாய் உறவுகள்

புதிதாய் கூடும்

அறியாத ஊரெல்லாம் -எமக்கு

அறிமுகமாகும்....

இதய நாட்குறிப்பில்

இடங்கள் போதவில்லை

சேர்த்த உறவுகளின்

பெயரை எழுதுவதற்கு....

புலம் பெயர் என்றாலே

எமக்கு புளுகுதான்

ஏன்....???

நாங்கள் ஊர்களை

சுற்றி பார்க்கும்

உல்லாச பயணிகள்...!!!

உல்லாசப்பயணிகள்..

உலகமெல்லாம் சுற்றுகின்ற

உல்லாசப்பறவைகள்..

சிங்கப்பூரில்..நாசிக்கொரியான

உல்லாச பயணிகள்

உலா போகும் தேசம்

செல்வ கொழிப்பில்

செழிந்தே போகுமாம்...

அந்நியன் ஒருவன்

அறிந்தே வந்து - செய்யும்

அக்கிரம் எத்தனை கேளாய்...

பணத்தை வீசி

பாவையை வேண்டி

பாலியல் ஆடும்

பாவிகள் கூட்டம்...

உள்ளே புகுந்து

உழவு பார்க்கும்

அந்நிய பேய்களில்

அதிலொரு கூட்டம்...

கலரை காட்டி

கலப்பு திருமணம்

கட்டியே போகும்

இதிலொரு கூட்டம்...

இங்கே வந்து

யாவையும் கழித்து

இது என்ன நாடா -என்று

இழிக்கிறதொரு கூட்டம்....

இப்படி இப்படி

எத்தனை கூட்டம்

வரவும் செலவுமாய்

வந்தே போகுது...

போகிறதே பூந்தோட்டம்

புடவை கட்டியே -பட்டுப்

புடவை கட்டியே..

பூமுடித்த பூவையொன்று..

குலுங்கிச் சிரிக்குதே..-கெர்ததாய்

குலுங்கிச்சிரிக்குதே..

சாலையோர மரங்கள் வளைந்து

பூக்கள் தூவுதே..-அவளுக்கு

பூக்கள் தூவுதே..

தங்கப்பாதம் நோகுமென்றோ

கம்பளம் விரிக்குதே..-பூக்களால்

கம்பளம் விரிக்குதே

கையிலாடும் வளைகள் கூட

சுகமாய் கலகலங்குதே..-அடடா

சுகமாய்க் கலகலங்குதே..

கொலுசு ரெண்டும் குறைவா என்று

தாளம் போடுதே..-அழகாய்த்

தாளம் போடுதே..

முன்னே ஒன்று பின்னே ஒன்று

பின்னல் துள்ளுதே..-கூந்தல்ப்

பின்னல் துள்ளுதே..

அழகைப் பார்த்து அசடு ஒன்று

பின்னே போனதே-அவளின்

பின்னே போனதே..

திரும்பிப் பார்த்த அவளைப் பார்த்து

கண்ணடித்ததே..-அசடு

கண்ணடித்ததே..

திரும்பி நின்ற பச்சைக்கிளி

கழட்டி அடித்ததே-செருப்பைக்

கழட்டி அடித்ததே..

அடியைப் பார்த்த விகடகவிக்கு

அறிவு வந்ததே..-அப்பதான்

அறிவு வந்ததே.. :(:lol::D

(யோவ் எனக்கு சொல்லவே இல்லை....))

அறிவு வந்ததா

நண்பா

அறிவு வந்ததா...???

உன் பட்டறிவில்

பாவையவள்

பாதணிகள்

பட்டுனக்கு

அறிவு வந்ததா...??

ஊத்தி வீணி

வடிந்து போனாய்

ஊத்தை செருப்பால்

அடித்து விட்டாள்..

அண்ணன் போல

வந்துனக்கு

அறிவுரைகள்

சொன்னேன் அன்று...

பைத்தியமே

எனக்கு என்று

பாவி மகனே

திட்டினாயே....

ஏண்டா நண்பா

உன்னையவள்

ஏளனமாய்

இன்று நினைத்தள்...???

உந்தன் நெஞ்சு

கொதிக்கையிலே

எந்தன் விழி

அழுகுதடா...

ஏழையாகி

போனதாலோ

உனை

எறிந்துயவள் போனளடா...???

வேண்டாம்

நண்பா

உந்தனுக்கு -இனி

பெண்ணவளின் சகவாசம்.....!!

பெண்ணவளின் சகவாசம்..

என்னிளமைக்கு சந்தோசம்..

மன ஏற்றமும் இறக்கமும்

தினம்தினம் போதிக்கிறாள்..

ஜீவராகத்தின் சுரத்தினை

அவள் என்னுயுருக்குள் மீட்டுகிறாள்..

தவமின்றி வரங்களை அள்ளித்தருகிறாள்..

சுவரில்லாச் சித்திரங்கள் விழியால் வரைகிறாள்..

தொய்கின்ற போது தோள்தரும் தோழி

துடிக்கின்றபோது மடி தரும் தாய் நீ

வியாதிகள் போக்கிட அவளேதான் தாதி

அறிவுரை வழங்குவாள் ஆசானுமாகி..

கண்ணைப்பார்த்து முகவுரை சொல்வாள்..

கலங்கப்பார்த்து கண்ணீர் மறைப்பாள்..

கல்வி புகுத்த அவள் கண்விழிப்பாள்..

காளை நான் வெல்ல விரதங்கள் இருப்பாள்..

அவள் இல்லாத ஓர் உலகம்

அந்த ஊரின் பெயர் நரகம்..

அவள் இல்லாமல் இங்கு நான்

ஆவி இல்லாத ஓர் ஜடம்.

நரகம் போலாட்சி

நாற்றம் எடுக்கிறது

துப்பரவு செய்திடவே

துணிவில்லை யாருக்கும்...

எப்படித்தான்

அந்த சாக்கடைக்குள்

இன்னும்

நாற்காலி இட்டு இருக்கிறார்களோ...??

சுகாதார திணைக்களம்

ஏன் இன்னும்

சுத்தம் செய்ய

முணையவில்லை...???

நிறைவேற்று அதிகாரம்

இன்னும் நிலுவையில்

இருக்கிறது போல்...

வரம்பு மீறிய வன்முறைகள்

வாய்க்காலில் ஓடுகிறது குருதி

கண்முன்னே குத்து வெட்டு -உயிர்

காவு எடுக்கிறது

சட்டத்துறை ஏன் பதுங்கிகிடக்கிறது...??

அது தானே செத்து போயிற்று...

எங்குமே யுத்தம்

எங்கினும் அழுகுரல்

நாடே பதற்றத்தில்

எங்கே ஜெனநாயகம்

அது பயந்தோடி விட்டது...

இதுவா சுந்திர நாடு...??

இது தான்

இன்றைய இலங்கை....!!!

அப்பா :

"இலங்கை என்று ஒரே

நாடாய்...இருந்தது..

சிங்கள இனவெறியால்..

தமிழர் நாங்கள்

பொங்கி எழுந்து

போராடி..ஈழ

மண்ணை வென்றோம்."

பிள்ளை :

"நீயும் போருக்கு

போனாயா அப்பா"

அப்பா :

"இதுவென்ன கேள்வி..

புகைப்படம் பார்நீ

ஒரு தோட்டாவில்

இரண்டு சிங்களவன்

கொன்றேன் நான்

தெரியுமா.."

பிள்ளை :

"ஐய்ய் அப்பா

சுட்டு ஆமி செத்துப்

போச்சே.."

அம்மா :

"பொய் சொல்லக்கூடாது அப்பா

பிள்ளைக்கு பொய் சொல்லக்கூடாது அப்பா"

பிள்ளை :

"அப்பா பொய் சொன்னாரா அம்மா.."

அம்மா :

"உன்னப்பா போராடவில்லை..

அவர் போராட்ட காலத்தில் ஈழத்தில் இல்லை

விடுதலை பெற்றவர் வீரர்

உன் அப்பா வெறுமனே..

மார் தட்டிக் கொள்கிற வீரர்"

பிள்ளை :

"அப்பா நீ போராடவில்லை..

உன்னால் எனக்கும் சுதந்திரத்தில் பங்கு இல்லை "(அழுகையுடன்)

பிள்ளை :

"அப்பா நீ போராடவில்லை..

உன்னால் எனக்கும் சுதந்திரத்தில் பங்கு இல்லை "(அழுகையுடன்)

அப்படிப் போடப்பா அரிவாளை!

:(:lol::lol::D

அரிவாளை எடுத்து தலையை

அறுத்து எறியடா

ஆதி வாலை ஒட்ட

நீயும் நறுக்கி வைய்யடா...

காட்டுக்குள் இவனால

தொல்லை பாரடா

அட நாட்டுக்குள்ள வந்தும்

இவன் நரக வேலைடா...

இனியும் இவனை

விட்டு வைத்தால்

நமக்கு கேடடா...

துண்டங்களாய் அறுத்தவனை

குளியில் போடடா...!!11111

Edited by vanni mainthan

:(:lol::lol::D

அரிவாளை எடுத்து தலையை

அறுத்து எறியடா

ஆதி வாலை ஒட்ட

நீயும் நறுக்கி வைய்யடா...

காட்டுக்குள் இவனால

தொல்லை பாரடா

அட நாட்டுக்குள்ள வந்தும்

இவன் நரக வேலைடா...

இனியும் இவனை

விட்டு வைத்தால்

நமக்கு கேடடா...

துண்டங்களாய் அறுத்தவனை

குளியில் போடடா...!!11111

போடடா நீயும் அரிவாளை கீழே

அரிவாளும் அறியுமோ அமைதியின் உயர்வே

ஈழம் பெற ஆயிரம் வழியுண்டடா

அனைவரும் கொன்ற பின் ஈழம் பெற்றே

வெறும் மண்ணை வைத்துக்கொண்டு அழுவது ஏனடா

அழுகை ஏனடா

நண்பா உனக்கடா...??

அவளே வந்தால்

அவளே போனால்

அதற்காய் ஏனடா

அழுகிறாய் நீயடா...???

ஏனடா ஏனடா என்று

இயம்பிடும் உலகே..

ஒருதரம் பாரடா

வந்து மண்ணில்

சிங்களம் ஆடிடும்

கோரத் தாண்டவத்தை

குழந்தைகள் குட்டிப்புலிகள்..

வயோதிபர் கிழட்டுப்புலிகள்..

மக்களெல்லாம் புலிகள்..

அவன் குண்டுபோட்டு கொல்வதுவும்

பட்டினி போட்டு கொல்வதும்..

கண்ணுக்கு தெரியவில்லையா..

பேச்சுக்குப் போ..

பேச்சுக்குப் போ..என்று

மூச்சுக்கு நூறுதரம்

சொல்லும் உலகமே..

அரச அட்டூழியங்கள்

அறிந்தும் மூச்சு

விட்டாயா..

அதுபற்றி

தமிழன் என்றால்

இழக்காரமா..

தமிழன் உயிர் விளையாட்டா..

காசக்காக

புதுசு புதுசா

போர்க்கப்பலையும்..

ஏவுகணைகளையும்..

கண்டுபிடித்து

மனித அழிவுகளில்

சுகம் காணும்

நான்கு நாடு சேர்ந்து

சர்வதேசமா..

நீங்கள் சொல்வது

உலகிற்கு வேதவாக்கா.

வேடதாரிகளே..

என் தேசத்தில்

உதிர்கின்ற ஒவ்வொரு

பூக்களுக்கும்..

பதில் வேண்டும்..

யாரடா கேட்டார்

நாட்டாமை..

மனிதநேயம் தெரியாத.

மக்கள் தேவை அறியாத..

சொகுசாய் வாழும்

நாய்களடா நீங்கள்..

வாழவும் விடாமல்..

வெல்லவும் விடாமல்..

கொல்வதேனடா.

ஏய் சர்வதேசமே..

வேடதாரிகளின்..

கேளிக்கை கூடாரமே..

சிங்களம் ஆடவென்று..

பின்னிருந்த தாளமா

போடுகிநாய்..

உன் தாளத்தோடு.

என் தேசப்பூக்களின்

ஐயோ என்ற

அழுகுரலையா மறைக்கிறாய்..

என்னை அழவைத்த

காரணிகள்..

யாவும் அழியுமடா

சீக்கிரம. :(:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரமாய் சொல்லிவிடு

சிந்தை கலங்கிடும் முன்னே

சம்பிரதாயங்கள் தேவையில்லை

சட்டபூர்வமாய் இணைவதற்கு

சத்தியம் என்ற வார்த்தையோடு

சம்மதம் என்று சொல்லி வாழ்வில்

சங்கமித்து விடு

சீக்கீரமா விட்டு ஓடுங்கடா

சிறுத்தை

சீறப்போகுது விட்டு ஓடுங்கடா...

கார்த்pகை இருபத்தேழு ஆச்சுதடா

காவு எடுக்கும்

கார்திகை உயிர் ஓடுங்கடா...

இத்தனை நாட்கள்

இருந்தது போதுமடா

இனியும் வேண்டாம்

விட்டு ஓடுங்கடா....

கொடுமைகள்

எத்தனை புரிந்தீங்கடா.-அந்த

கொடுக்கல் வாங்கலை

கொடுக்கும் காலமாசு;சுதடா...

இனியும் வேண்டாம் ஓடுங்கடா

எங்க மண்ணில்

நிற்க வேண்டாம்

தப்பி ஓடுங்கடா....!!!

ஓடுங்கடா..ஓடுங்கடா..

இது ஒத்தைவழிப் பாதை..

இதில் திரும்ப ஏது பாதை

கூட்டம் கூட்டம் ஆகவந்தும்..

ஓண்ணும் நடக்கலே..நீங்க

வெல்ல வழியில்லே

ஆட்லறி போட்டுக் கூட

ஆட்ட முடியலே..உங்க

ஆட்டம் நடக்கலே..

ஓடுங்கடா..ஓடுங்கடா..

இது ஒத்தைவழிப் பாதை..

இதில் திரும்ப ஏது பாதை

உனக்கோ குண்டு போட

நூறு வழி..தம்பி

எங்களுக்கு ஒரே வழி..

வீரர் கரும்புலி..

பார்ததா படை நடுங்கும்..

உங்க தொடை நடுங்கும்..

ஏன்தான் இங்க வந்தீங்க

ஓடுங்கடா..ஓடுங்கடா..

இது ஒத்தைவழிப் பாதை..

இதில் திரும்ப ஏது பாதை

(வன்னிமைந்தன் நீங்க முடிக்கிற சொல்லுல எழுதினா இப்பிடித்தான் எழுதணும்

உங்களை பிரதி பண்ணுற மாதிரி இருந்தா மன்னிச்சுக்குங்க) :(

பாதையிலே போகையிலே

பார்த்து என்னை போனவளே

நாலும் உன்னை தேடிவந்து

நானலைந்தேன் வீதியிலே...

பார்வையாலே பேசி விட்டு

பாவை நீயும் போய் மறைந்தாய்

உன்னை தேடி நானுமின்று

அலைகிறேனே வீதியிலே...

உன்னை வந்து என் மனசு

நித்தம் இன்று தேடுதடி

எங்கிருக்காய் நீ என்று

இன்றுவரை தெரியலயே.....!!!

(அதுதானய்யா சவால்...தாங்கள் எந்தன் பிரதிபோல் புனையவில்லை

அவர் அவர் தனக்கு ஏற்ற பாணியில் வரைவார்கள் அது அவர்களின் சுதந்திரம்

அதை யாராலும் பறிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது...அவ்வளவே

அதற்கெதற்கு மன்னிப்பு...கபடகவி மன்னிக்கவும் விகடகவி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியலையே என்பதுவும்

தெரிந்ததை தெரியாது என்று

நடிக்கவும் எப்போது

கற்றுக் கொண்டாய்

என் அகத்தேயிருந்து

எல்லாம் கற்றுக்கொள்வதற்காகவா

எல்லாம் தெரியாதது போல்

பாசாங்கு செய்கின்றாயா பைங்கிளியே

தெரியலையே என்பதுவும்

தெரிந்ததை தெரியாது என்று

நடிக்கவும் எப்போது

கற்றுக் கொண்டாய்

என் அகத்தேயிருந்து

எல்லாம் கற்றுக்கொள்வதற்காகவா

எல்லாம் தெரியாதது போல்

பாசாங்கு செய்கின்றாயா பைங்கிளியே

பைங்கிளியே கேள் நீ, நானறிவேன் மக்கள் படும் துன்பங்களை

இந்திய தமிழனும் இலங்கை தமிழனும் சகோதரர் அன்றோ

அஹிம்சை வழியால் யாம் பெறும் இன்பங்களை

நீயும் பெற விழைகிறேன் நானும் இல்லை இது நன்றோ

கத்தியின்றி ரத்தம் இன்று யுத்தம் செய்து காப்பாய் நீ பிஞ்சுகளை

அனைத்தையும் அழித்து பிறகு பெற்றதென்ன வென்றோ

சொகுசு வாழ்வில் சொக்கிக்கொண்டு சொல்லவில்லை நானும்

சரித்திரத்தை படித்துப்பார் நண்பா கத்தியெடுத்தவர் செத்ததும் அதனாலன்றோ

அதனாலன்றோ என்று

எதனை நீ காரணம் சொன்னாயோ..

அதனாலேதானடி

தூக்கம் தொலைந்து...

கனாக்களை மட்டும்

கணக்கின்றி காண்கின்றேன்..

கணக்கின்றி

கணக்கின்றி

நீயெறிந்த

கணைகள்

காவுயெடுக்குதே

எம் தமிழ் உயிர்கள்...

இறந்தவர் புலியென்றேன்

இயலாமல் சொல்கின்றாய்...???

இதுவரை இறந்தவர்

இலட்சங்கள் நீ என்பாய்...

இத்தனையும் கேட்டிட

நாமென்ன மூடரா...???

இனியேனும் சிங்களா -நீ

இனி திருந்தடா...

திருந்தடா என்ற வார்த்தை

பொருந்துமோ இனி உனக்கு

சொல்லடா..மகனே..

ஐந்தில் வளையாதது..

ஐம்பதில் வளையுமோ..

உன் அப்பனைப் போல்

ஆவதென்றால் ஆகிவிடு

அம்மாவை மறந்துவிடு..

குடிப்பதும் புகைப்பதும்.

ஒழுக்கத்திற்கு இழுக்கொன்று

ஆன்றோர்கள் சொன்னார்கள்

அதைவிடு..அன்னை நான்

சொல்கிறேன்..இன்றேவிடு..

தீயதோழமையை...உன்னைத்

தீண்டிய பழக்கங்களை..

சீரியபாதையை

கெடுப்பது போதை..

குறிக்கோள் எல்லாம்..

குட்டிச்சுவராகும்..

சிந்தனை யாவும்

சிதறிப்போகும்..

வாழ்க்கையில் பாதி

வற்றிப்போகும்..

உபதேசமெல்லாம்

உனக்காகடா தம்பி

உனக்காக

பாதை மாறி ஓடிவிட்டால்..

திரும்பமுடிந்ததில்லை..

காலம் கண்டதைய்யா..

உன் கண்ணியம் காத்திடய்யா..

Edited by vikadakavi

திருந்தடா என்ற வார்த்தை

பொருந்துமோ இனி உனக்கு

சொல்லடா..மகனே..

ஐந்தில் வளையாதது..

ஐம்பதில் வளையுமோ..

உன் அப்பனைப் போல்

ஆவதென்றால் ஆகிவிடு

அம்மாவை மறந்துவிடு..

குடிப்பதும் புகைப்பதும்.

ஒழுக்கத்திற்கு இழுக்கொன்று

ஆன்றோர்கள் சொன்னார்கள்

அதைவிடு..அன்னை நான்

சொல்கிறேன்..இன்றேவிடு..

தீயதோழமையை...உன்னைத்

தீண்டிய பழக்கங்களை..

சீரியபாதையை

கெடுப்பது போதை..

குறிக்கோள் எல்லாம்..

குட்டிச்சுவராகும்..

சிந்தனை யாவும்

சிதறிப்போகும்..

வாழ்க்கையில் பாதி

வற்றிப்போகும்..

உபதேசமெல்லாம்

உனக்காகடா தம்பி

உனக்காக

பாதை மாறி ஓடிவிட்டால்..

திரும்பமுடிந்ததில்லை..

காலம் கண்டதைய்யா..

உன் கண்ணியம் காத்திடய்யா..

கண்ணியம் கடமை கட்டுப்பாடு நம் நாட்டில் அரசியாலச்சு

நாம் போட்ட ஓட்டெல்லாம் சில குடும்பங்களில் காசாக ஆச்சு

காசு தொலைகாட்சி பத்திரிக்கை புத்தகங்களா போச்சு

அதை வைத்து மேலும் மேலும் காசு சேர்தாச்சு

ஓட்டாண்டியா நிற்கும் தமிழனின் கோவணமும் கிழிஞ்சிபோச்சு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.