Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைப்போம் விளக்கினை ஏற்றி

வைத்திடுவோம்

தமிழரின் குரலாய்

தேசத்தின் குரலாய்

தலைவனின் வலதுகையாய்

விளங்கிய பாலா அண்ணாவுக்கு

வண்ண மலர்கள் தூவி

விழிமூடிய பொழுதுகளில்

வரம்பு மீறி வடிகின்ற

விழிநீர் பூக்கும்

அஞ்சலிகள் கண்ணீராக

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

கண்ணீராக.... எமது

காலங்கள் கரையலாமோ..?

காத்திருந்து... காத்திருந்து...

காலங்கள் தொலையலாமோ...?

பூ த்திருக்கும் பெண்ணே ''கறுப்பி''

புது வேகம் கொள் !

போர்தொடுக்கும் பகையை

வேரோடு கொல்..!

கொல் என்று சொல்லிச் சொல்லி கயவன்

போதையை உனக்கேற்றியதால்

போதையை ஏற்றி ஏற்றி பகைவன்

தமிழனைக் கொல் என்று சொல்லியதால்

சகோதரனையும்..சகோதரியையும்

தெருவில் இழுத்துச்சுடும்..ஈனப்பிறவியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவருக்கும் மனதார உரைத்திடுவோம்

நோயினைக் கண்டு நொந்து போனவேளையில்

தாயகக் கனவை தாங்கிய மனதுடன்

வாழ்ந்திட்ட பாலா அண்ணாவின்

மறைவின் இறுதி விடைகொடு நிகழ்வில்

மலருடன் வந்து எரிகின்ற தீபஒளியில்

அஞ்சலிக்க வாருங்கள்

வாருங்கள் என வாயார

அழைத்த என் சுயம்வரத்திற்கு

தனியாக வந்தவளே..

என் தோட்டத்துப் பூக்களுக்காக

ஒரு சின்ன வேண்டுகோள்...

பூக்களைத்தொட்டுப்பார்

முகர்ந்து பார்

எட்டி நின்று அழகைப்பார்..

பறித்து மட்டும் பார்க்காதே..

பறிக்கப்பட்ட பூக்களெல்லாம்

பெண்ணின் சிகைச்

சிக்கலில் சின்னபின்னப்

படுவதாகவே எனக்குத்

தோணுகிறது....

பூவை பூவாக விட்டு விட்டு

பூவைவிட மென்மையான

என் மனதை வேண்டுமானால்

பறித்து

எடுத்துக்கொள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளு தினம்

உண்டு வாழ்ந்தால்

கொடி போன்ற

இடை கிடைக்குமாமே

மடை திறந்த ஆசை

அணை போடமுடியாமல்

உண்டேன் கொள்ளை

வடையாக பச்சடியாக

அடையாக ரசமாக

வரும் இடையது

தரும் கொடியிடை

எடையது குறையும்

உடையது தேடி

கடை எங்கனும்

நடை போடுமே

நடை போடும் தையல்..அழகே..-அவள்

இடை முடும் சேலை தனியே..-பின்னல்

ஜடையோடு ஆடும் மனமே..அந்தக்

குடைகொண்ட வெண்டை எனதே..எனதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனதே என்றான பின்னே

ஏனடா கண்ணா இந்தா சிலுமிஷங்கள்

ஊடல் என்றும் கூடல் என்றும் கூறியே

மடல் போன்ற மென்மெல்லியலாளை

படுத்தும் பாடோ இம்சைதான்

இம்சைதான்..

இரவுக்கு பாய் கொடுத்தும்

தூங்கவிடாமல்

பகலுக்கு வெள்ளையடித்தும்

தூய்மை தராமல்

நிலவுக்கு மொட்டை அடித்தும்

கை தடவவிடாமல்

இயற்கை எனக்கும்..

உனக்கும் தருவது இம்சைதான்..

இம்சைதான்

எதையெதைக் கவிதை என்றும்

எதையெதைக் கிறுக்கலென்றும்

எதையெதைக் கட்டுரையென்றும்

பகுத்தறிய ஓடியோடி

கிடைத்ததென்னவோ

இம்சைதான்!!

இம்சைதான்

எதையெதைக் கவிதை என்றும்

எதையெதைக் கிறுக்கலென்றும்

எதையெதைக் கட்டுரையென்றும்

பகுத்தறிய ?#8220;டியோடி

கிடைத்ததென்னவோ

இம்சைதான்!!

இம்சைதான்............

நீரோட்டம் உள்ளதெல்லாம் .....

ஆறாகி போனதில்லை............

ஆறாகி இருந்தீர்களா!?

வேராய் இருந்தோமா?

கிளையாகி ஆகியே -

இலைகளை சுமந்தோமா?

கரைகளை செல்லரித்து ...

மரம் சாய்ந்தால்..............

இலைகளை குற்றம் சொல்தல் -இலகாம்.....

எமக்கு.. !

வேரை நினைத்து ............

சருகுகள் கொஞ்சம் பேசட்டும்..........

விடுங்கள் !-

உதிர்வின் இழப்பு..............

வேருக்கு மட்டுமே -தெரிந்த வேதனை!

எம்மில் சிலர்க்கு?

கார்மேகம் பொழிந்த மழையில்.....

உயிர் கொண்ட ..........

ஆலமரத்துக்கும் வேர் இருக்கு........

அலரி மரத்தினடியிலும் அது இருக்கு............

இதில் நாம் எதுவாய் -ஆனோம்?

ஊர் கூடி தேர் இழுக்கிறார்......

நீவிர் -வடம் பிடிக்க வேண்டாம்...

கொஞ்சம் - வழிவிடுதாலவது......

செய்தால் தவறோ?

Edited by வர்ணன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறோ கவி வடித்தது தவறோ

தவிக்கும் மனதோடு வடித்த கவியின்

தவறை திருத்தி வடித்திருப்பின்

தரமாய் உயர்ந்து நிற்பீர் இதயமதில்

ஆலயத்து ஆலமரத்து நிழலில் அமர்ந்து

ஆழமாய் சிந்தித்த பொழுதுகளில்

ஆழ்மனதின் வார்த்தைகள் பேசிக்கொண்டன

ஆற்றாத உருவகக் கதையாக

சருகுகள் நீங்கள் மண்ணோடு மண்ணாய்

உருப்பெறாமல் உரமாய் போய் விடுவீர்கள்

வேர்கள் நாங்கள் உறுதியுடன் நிமிர்ந்து

வீறுகொண்ட வரிகள் படைத்திடுவோம்

வைராக்கியம் நெஞ்சமதில் சுமந்தபடி

சுமந்தபடி- மனதில்

ஆசைகள் சுமந்தபடி

இவர் ஓடிடும் பாதங்கள்

என்றும் ஓய்ந்ததில்லை...

துளிர் விடும் மரத்தின்

கிளைகளை முறித்து

இவர் ஒடித்திடும் கரமும்

என்றும் ஓய்ந்ததில்லை...

மறந்திடு மனிதா...

மயானமாகி விட்டது பூமி

மரங்களும் வேர்களும்-இனி

பிணங்கள் எரிப்பதற்கே....!

எரிப்பதற்கே நெருப்பாகி

பிறப்பெடுத்தபின்னே..

தீ சுடும் என்றே

அனல் திராவகத்தில்

குளிக்கும் ஒருசில

அக்கினிக்குஞ்சுகள்தாம்

கொட்டமுடியாத குமுறல்களை

அடக்கமுடியாமல் உள்ளே

எரிமலையாய் வெடித்து

தீக்குழம்பாய் ஓடி

வெந்தபின்னும் விளையாடும்

சுவாலைகள் அசைந்தாட

நெருப்புப்புகை பட்ட

இடமெல்லாம்

வணணம் மிளிர

வந்தவள்தானோ..

நீ...

கறுப்பி

கறுப்பியைத் தேடியதில் கண் களைத்துப் போனதடி

இருளுக்குள் இருள் தேடும் அறிவற்ற ஆதியின்று

பொருளற்ற கவிபடைக்க பொல்லாத விகடம்

வழி சமைத்துப் போனானே.... வாட்டம் கேட்க யாருண்டு?

:lol:

கேட்க யாருண்டு இதைக்

கேட்க யாருண்டு...

பொல்லாத விகடமென

எனைச் சோன்னாரே ஆதி..

இது அறியாத தோழி..

பிறரேனும் அறிவாரோ சேதி..

வல்லாரை நல்லார்

வலிதென்றே சொல்வார்..

பொல்லாரைச் செல்லார்

புலியென்றே சொல்வார்...

யான் பொல்லானும் அல்ல

வல்லானுமல்ல என்றே

வாய் மெய் சொல்ல..வழி

சொல்லுங்கள் மெல்ல

மெல்லத் தழுவியது- என்

உள்ளங் குமுறியது.

எனக்கும் உனக்கும்

இடையில் உலவுகிறது காற்று! :angry:

காற்றில் என் தாலாட்டு

கண்ணே என் கண்மணியே..

அம்மா நான் பாரினில்..

பச்சைப்பிள்ளை நீயோ ஊரினில்..

என் பவளமணிக்கு தங்கத்தொட்டில்

செய்து வரவோ...

என் பொன்னுமணிக்கு..வண்ண

வளையல் வாங்கி வரவோ...

காற்றில் என் தாலாட்டு

கண்ணே என் கண்மணியே..

அம்மா நான் பாரினில்..

பச்சைப்பிள்ளை நீயோ ஊரினில்..

விதிக்கு கண்ணிருந்தால்..

நான் படும் பாட்டை பார்த்திருக்கும்..

செல்லமே சித்திரமே..

விதிக்கு காதிருந்தால்..

அன்னை என் தாலாட்டைக் கேட்டிருக்கும்..

விதியே சதி செய்ய..என்

உயிரே உனக்கெனவே..

காற்றில் என் தாலாட்டு

கண்ணே என் கண்மணியே..

Edited by vikadakavi

கண்மணியே.. கலங்காதே..

கறுப்(பி)பு விழியுருட்டி

காலமதைச் சாடாதே...

காட்டுக்குப் போன மச்சான்

மாலையாச்சு... -இன்னும்

வீடு திரும்பலையோ..?

முந்தி நான் போகையிலே

முறைத்தென்னை பார்த்த மந்தி

மன்னர் துணையிருப்பால்-தன்

வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொண்டார்...

(எல்லாள)மன்னர் மறைந்தபின்னால்

துணைக்கு யாருமின்றி....

துணிந்து போன மச்சான்-இன்று

மந்தியிடம் மாட்டிக் கொண்டார்....

தத்தளிக்கும் பேதைப் பெண்ணே...

தேம்பி அழுவாதே...

பொழுது விடியு முன்னே

போனமச்சான் திரும்பிடுவார் !

(ஆ..தி)மந்தியை பயமூட்ட

கவி இருக்கு...இப்போ

விகட கவி இருக்கு...

இல்லாட்டிப் போனா என்ன..?

பூச்சாண்டி காட்ட

ஆவெத்தரில் அவற்ர படமிருக்கு...

கண்மணியே.. கலங்காதே

கறுப்(பி)பு விழியுருட்டி

காலமதைச் சாடாதே...

:P :lol:

Edited by gowrybalan

சாடாதே என்று வந்த மாரிப்பயலே!

அந்தி எப்போ சாய்ந்ததப்பா?

முந்தி நான் முறுவலிட

முறைப்பென்று கணக்கெடுத்தால்

பார்வைக் கோளாறு பாத்துப்பா....பாத்து! :P

கடத்திற்குள் குதிக்கின்ற

விகடத்தால் பயமா?

வாரிக் கிழித்து வகிடெடுத்துப்

பின்னலிட்டால் அகடவிகடம்

தகடாகும் நிலையுண்டு. :D

பூச்சாண்டி பயமெல்லாம்

யம்மு என்னும் யெளவனத்தால்

யாக்கிங் போயாச்சு! :lol:

ஆதியை சீண்டி :angry:

விகடத்தை நோண்டி :lol:

கவிதைக்கு தூண்டிலிடும்

கெளரிபாலா!.... :lol:

கண்மணி கப்பிக்கு

கவி எழுதும் கவி பிடிக்கும். B)

பிடிக்கும் அடி சறுக்கும் -தரை

முன்னடி தவறி வைத்தால்..

கடிக்கும் மானிடருக்கும் கடியிருக்கும்-அவர்

கதைகள் ஊரறிந்தால்..

செல்லாத வார்த்தைகளால் சீர்கெடினும்- நீவீர்

சொல்கின்ற சொல்லெல்லாம் சுகமே..

மெல்லெனச் சேரும் சொந்தமோ நட்போ-இன்று

எல்லாமே எனக்குப் பிடிக்குமய்யா பிடிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிக்கும் தாயின் மடிமீது கண்மூடி துயில பிடிக்கும்

வடிக்கும் கவி வரிகள் தினமும் படிக்க பிடிக்கும்

கடிக்கும் வார்த்தை கல் வீசும் மனதினைக் கடிக்கும்

நொடிக்குள் மறைந்து மடிந்திடும்

மடிந்திடும் மனதில்

வாழ்ந்திடும் ஞாபகம்!

பார்த்திடும் மனிதர்கள் யாரிலும்

வந்து சேர்ந்திடும் நேசம்...!

கேட்டிடும் கானம்...

வடித்திடும் கவிதை.....

காணாமல் போகும்(சில) உள்ளம்...!!!

கரைந்திடும் கண்கள் ...

கலைந்திடும் கனவுகள் ....

தொலைந்திடும் நம் காலம்...!!!

cry1ro3.jpg

காலத்தின் கட்டளை

ஈழத்தின் பிரகடனம்

வாழாதிருந்த காலங்கள் போகட்டும்.

வாள் விட்டு வரி வயங்கள்

வான் கணைகள் ஏந்தட்டும்.

கூன் நிமிர்த்தும் வேளையிது

தேவை....

கோடி மலர் வார்த்தையல்ல

அரவணைக்கும், உரமூட்டும்

அன்னை மண் நேசிக்கும்

புலம்பெயர் புத்திரர்கள்.

புத்திரர்கள் பெற்றனையே ஆறு-உனக்கு

பக்கமென யாருளரோ கூறு...

நித்திரையும் விற்றனையே தாயே..-எனக்கு

ஏக்கம்கூட இலவசமாய் இல்லையே..

சித்திரைக்கு வந்துஎனைப் பார்ப்பான்-என்றே

துக்கங்களை தேக்கி வைக்கிறாயே...

முத்திரையாய்..வந்தமகன் இன்று-தினம்

ஏய்ப்பதறியவில்லையே அம்மா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.