Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாளை காலை துவங்கும் பேரணி! - ஒழுங்குகள் அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாளை காலை துவங்கும் பேரணி! - ஒழுங்குகள் அறிவிப்பு.

[Monday 2015-02-23 19:00]
jaffna-university-350-news.jpg

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிட வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள பேரணிக்கான ஒழுங்குகள் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

  

1. இப்பேரணி காலை 10:00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இருந்து ஆரம்பமாகும்.

2.சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை இவ்வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் காலை 08:30 மணி முதல் வைக்கப்பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு பொது அமைப்பின் சார்பாகவும் ஒவ்வொருவர் ஒப்பமிடலாம். உங்களிடம் இறப்பர் முத்திரை இருந்தால் கொண்டு வருதல் நல்லது.

3. முதலில் பரமேஸ்வரன் கோவிலுக்கு முன்னாலுள்ள வெளியில் ஒன்றுகூடுவோம்.

4. மதத்தலைவர்கள் பேரணியினை வழிநடத்தித் செல்வார்கள்.

5. அவர்களின் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பொதுஅமைப்புக்கள் என்ற ஒழுங்கில் இருவர் இருவராகச் செல்வோம்.

6. இப்பேரணியின் தொடக்கத்தில் மட்டும் ஒரேயொரு பனர் மட்டும் கொண்டு செல்லப்படும். தொடக்கத்திலோ அன்றி இடையிலோ வேறெந்த பனரும் அனுமதிக்கப்படமாட்டாது.

7.சுலோக அட்டைகள் ஒருங்கமைப்பாளர்களால் எழுதப்பட்டவை மட்டுமே கொண்டு செல்லப்படும். வேறெந்த சுலோக அட்டைகளும் அனுமதிக்கப்படமாட்டாது.

8. பேரணியின் போது துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதற்கு எவருக்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.

9. கட்சிக்கொடிகள், பொதுஅமைப்புக்களின் பதாகைகள், அடையாளங்கள் போன்றவை அனுமதிக்கப்படமாட்டா.

10.பேரணி இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை அடைந்து கந்தர்மடம் சந்தியில் திரும்பி நல்லூர் கோவிலின் வடக்கு வீதியை அடையும்.

11.அங்கு அமைப்புக் குழுவின் தலைவர் மட்டும் சிறு உரை ஆற்றிய பின்னர் மகஜர் கையளிக்கப்படும்.

12.பின்னர் அனைத்து அன்புள்ளம் கொண்ட மனிதஉரிமை ஆர்வலர்களும் அமைதியாகக் கலைந்து செல்வோம்.

எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி கோருவோம். அணிஅணியாய் ஒன்றுதிரள்வோம். ஈழத்தமிழினம் உணர்வுகளை இழக்கவில்லை என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். காப்போம் தமிழ்த் தேசியம். ஈழத்தமிழ் உறவுகளின் ஆதரவை நாடிநிற்கிறோம்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகச்சமூகம்.

தொடர்புகளிற்கு: கலாநிதி எஸ்.சந்திரசேகரம் 0779676783

அ. இராசகுமாரன் 0777062493

http://www.seithy.com/breifNews.php?newsID=127130&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.