Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா

Featured Replies

சீன மீன்பிடிக் கப்பல்களுக்கான அனுமதியை மீளப்பெற்றது சிறிலங்கா MAR 01, 2015 | 0:41by கார்வண்ணன்in செய்திகள்

Chinese-fishing-vessel-300x200.jpgசிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு எட்டு சீன நிறுவனங்களின் கப்பல்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாட்டை மீறி செயற்பட்டதற்காகவே, சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடி  அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, சீன நிறுவனங்கள் தாம் பிடிக்கும் மீன்களின் அளவு, மீன்பிடிப்பதற்கு தாம் கையாளும் பொறிமுறைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, சட்டவிரோத மீன்பிடிகளைக் கட்டுப்படுத்த தவறியதற்காக, சிறிலங்காவின் மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை நீக்குவதற்காக- ஐரோப்பிய ஒன்றியத்தை திருப்பதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா கொடியுடன் சட்டவிரோத மீன்பிடிமுறைகளைப் பயன்படுத்தி அனைத்துலக கடற்பரப்பில் மீன்கள் பிடிக்கப்படுவதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியிருந்தது.

அதேவேளை, சிறிலங்கா கொடியுடன் அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன கப்பல்கள், விதிமுறைகளை மீறி சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், குறைந்தளவு மீன்களுடனோ, வெறும்கையுடனோ திரும்புவதாகவும் அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இதனால், சீன மீன்பிடிக் கப்பல்கள், ஆழ்கடலில், சட்டவிரோத தொழில்களில் ஈடுபடலாம் என்ற சந்தேகமும் எழுந்திருந்தது.

இந்தநிலையிலேயே, 45 மீற்றர் நீளம் கொண்ட- ஒரு தடவையில் 300 மெட்ரிக் தொன் மீன்களைப் பிடித்து வரக் கூடிய எட்டு சீன மீன்பிடிக்கப்பல்களுக்குமான அனுமதிகளை சிறிலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/03/01/news/4031

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சிங்களத்தின் வீரம் GSB க்கு இவ்வளவு கீழிறங்கி இறங்கி சர்வதேச நாடுகளிடம் மண்டிஇடும் சிங்களம் தமிழர்களுக்கு சில விட்டுகொடுப்புகளுக்கு முன் வந்திருந்தால் எல்லாம் சுமூகமாக முடிந்து இருக்கும். 

கடலையே தங்கள் வாழ்வாதரமா கொண்ட வடகிழக்கின் கரையோர பகுதி மக்களுக்கு ஒரு

நல்ல செய்தி இது .

1-1983 இகு பிறகு வடகிழக்கு கடல் பிராந்தியம் கடல் வலய தடை சட்டத்தால் . உயிர் இழப்பு உடமை இழப்பு , வாழ்வாதார இழப்பு. குடும்ப தலைவனை இழந்ததால் வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பம்கள் என வலிகள் அதிகம்

இப்போது மீன் பிடிக்க அனுமதி இருக்குறது . இவ்வளவு காலமும் நலிந்த மக்களால் முதலீடு பெரிதாக செய்ய முடியாத நிலை .

அப்படி முதலீடு செய்தாலும் .சிங்கள மீனவர் களின் சட்டவிரோத மீன் பிடி முறைகள் ( டைனமைட் , சங்கு , கடலட்டை பிடித்தல் )

இந்திய மீனவரின் சட்டவிரோதமாக உள்வருகை , சீனா நாட்டின் கப்பல் களின் மீன் பிடி முறை போன்றன பாரிய பாதிப்புகள் .

எமது பிரதேச மீன் வளம் மிகவும் குன்றுகிறது காரணம் சட்ட விரோத மீன் பிடி முறைகள் .

உள்ளிணைப்பு (ரோலர் ) கள் மூலம் மீன்புடித்தல் . மிகவும் சிறிய கண் உள்ள வலைகள் மூலம் எல்லாம் மீன் , மீன் குஞ்சுகள் வாரி எடுத்தலால் . மீன்கள் பெருகும் அளவு குறைந்து மீன் வளம் குறைகிறது .எம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த கடல் வள மீன் பிடி அமைச்சர் எல்லா வளங்களையும் வினைத்திறனாக பயன்படுத்தி ஏற்றுமதி செய்யகூடிய அளவுக்கு கடல் தொழில் நடைபெற வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.