Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு உதவுவதுடன் எமது கரங்களை பலப்படுத்தவேண்டும் : மங்கள சமரவீர

Featured Replies

mangala-samaraweera_10.jpg
 
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை அமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். எனவே சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகமும் புலம்பெயர் அமைப்புக்களும் எம்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எங்களுக்கு உதவுவதுடன் எமது கரங்களை பலப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
 
உள்ளக விசாரணை பொறிமுறையை அமைப்பது தொடர்பில் தென்னாபிரிக்காவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அனுபவங்களை பெற்றுவருகின்றோம். ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் தற்போது மனித உரிமைகளை பாதுகாக்கவும் நல்லிணக்கத்தை அடையவும் பாரிய சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிப்பதுடன் இந்த விவகாரங்களை அக்கறையுடன் கையாள அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை பேரவையின் 28 ஆவது கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
 
மைத்திரிக்கு பாரிய ஆதரவு
 
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 81.52 வீதமானவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தியிருந்தார்கள். நாட்டின் வரலாற்றில் இது பாரிய வாக்களிப்பு வீதமாகும். தேர்தலை புறக்கணிக்குமாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் மக்கள் தமது வாக்கு உரிமையை பயன்படுத்தினர்.
 
முழு நாட்டிலிருந்தும் வந்த தலைவர்
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 74.42 வீதமான மக்கள் மைததிரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தனர். வன்னி மாவட்டததில் 78.47 வீதமான வாக்காளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். கிழக்கு மாகாணத்தில் 71.84 வீதமான வாக்காளர்கள் வாக்களித்தனர். மக்கள் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். இம்முறைதான் முழு நாட்டிலிருந்து மக்களினால் தெரிவு செய்யப்பட்ட உண்மையான தலைவர் ஒருவர் நாட்டுக்கு கிடைத்துள்ளார். மைததிரிபால சிறிசேனவை தெரிவு செய்வதில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்துள்ளன. தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்தல் கருத்து சுதந்திரம் சுயாதீன ஜனநாயக நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சிபடுத்தல் நல்லாட்சி மனித உரிமையை பாதுகாத்தல் என்பனவற்றுக்காக மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்துள்ளனர்.
 
முழு உலகத்துக்கும் கெளரவம்
 
இலங்கையில் இடம்பெற்ற இந்த அமைதியான ஆட்சிமாற்றம் இலங்கையின் மட்டுமல்ல முழு உலகினதும் ஜனநாயகத்துக்கு கிடைத்த கெளரவமாகும். அது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமையை பேரவை ஆகியவற்றின் விழுமியங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
 
வெற்றியின் பின்னர் அரசாங்கம் ஊடக சுதந்திரம் இணையதளங்களை முடக்குவதை தடுத்தல் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தல் நாட்டின் எப்பகுதிக்கும் ஊடகவியலாளர்களை செல்வதற்கான சுதந்திரம் மற்றும் நாட்டைவிட்டு சென்ற ஊடகவியலாளர்கள் அழைக்கப்படல் ஆகியவற்றில் வேலை செய்துவருகின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மீண்டும் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை அச்சுறுத்தல் இன்றி முன்னெடுக்க முடியும்.
 
ஆளுநர் மாற்றம்
 
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தால் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் தற்போது திட்டமிடல் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த அமைப்புக்களுடன் இணைந்து வேலை செய்யும். அரசா்ங்கம் பதவிக்கு வந்து சில நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாகாணங்களுக்கு சிவில் ஆளுநர்களை நியமித்தோம்.
 
காணிகள் விடுவிக்கப்படும்
 
நிர்வாக செயற்பாடுகளின் இராணுவத்தினரின் ஈடுபாட்டை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. மக்களின் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சுடன் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் உத்தியோகத்தர்கள் இணைந்து பணியாறறிவருகின்றனர்.
 
18 நீக்கப்படும்
 
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் 17 ஆவது திருத்தச் சட்டத்தின் படி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கபட்டுவருகின்றது. கடந்த ஐந்து வருடங்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு அமைவாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
 
முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம்
 
2009 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்களினால் யுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும் மனித உரிமை மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியை இலங்கையினால் அடைய முடியாமல் போனது. நல்லி்ணக்கம் மற்றும் மனித உரிமைகள் என்பன கடினமாக்கப்பட்டன. எனவே ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் தற்போது மனித உரிமைகளை பாதுகாக்கவும் நல்லிணக்கத்தை அடையவும் பாரிய சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிப்பதுடன் இந்த விவகாரங்களை அக்கறையுடன் கையாள அர்ப்பணிப்புடன் உள்ளது.
 
நல்லிணத்துக்க செயலணி
 
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான மீளாய்வுகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன. நம்பிக்கையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பி் நல்லிணக்கத்தை அடைய நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். இது ஜனாதிபதியின் கீழ் செயற்படும். பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை இந்த செயலணி முன்னெடுககும்.
 
உள்ளக விசாரணை
 
மனித உரிமை விவகாரம் தொடர்பில் சர்வதேச தரத்தில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை அமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்துவதில் முன்னைய அரசாங்கம் தோல்விகண்டதையும் உணர்ந்து இதனை செய்கின்றோம். இலங்கையின் உள்ளக நீதிக்கட்டமைப்பின் பிரகாரம் செய்யப்படும் விசாரணைகள் விடயத்தில் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை எடுத்து ஆராய்ந்து பார்க்கலாம்.
 
நல்லிணக்கம் பொறுப்புக்கூறல்
 
இலங்கை எப்போதும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. எனினும் கடந்த சில வருடங்களாக இலங்கை இந்த கூட்டுறவு அணுகுமுறையிலிருந்து விலகியிருந்தது. எனவே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன எமது சொந்த செயற்பாட்டின் மூலம் முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கான திறமையும் மனித வளமும் எம்மிடம் உள்ளது. இதற்கு நாங்கள் சர்வதேச அனுபவங்களை பெறுவோம். ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெறுவோம்.
 
ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அழைப்பு
 
இதனடிப்படையிலேயே மிக விரைவாக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளயர் செய்ட் அல் ஹுசேனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். மேலும் எமது கோரிக்கைக்கு செவிசாய்த்தமை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் மற்றும் மனித உரிமை பேரவை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
 
தென்னாபிரிக்காவுடன் பேச்சு
 
உண்மையை கண்டறியும் செயற்பாட்டில் அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தென்னாபிரிக்காவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அனுபவங்களை வருகின்றோம். கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க குழுவினருடன் பேச்சு நடத்தப்பட்டது. அவர்கள் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பல சவால்கள் உள்ளன
 
எமது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 48 நாட்களில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. . குறிப்பாக 48 நாட்களில் பல செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும் இன்னும் பல சவால்கள் எம்முன் உள்ளன. முன்னைய அரசாங்கத்தின் சில தரப்பினர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்ப முயற்சிக்கின்றனர். எமது அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் அதன் விரைவுத்தன்மை என்பன போதுமான திருப்தியை தராமல் இருக்கலாம். ஆனால் அரசியல் எதிர்பார்ப்பு மற்றும் மற்றும் அர்ப்பணிப்பு என்பன எந்தவகையிலும் தவிர்க்கப்படமாட்டாது என்பதனை உறுதிபடுத்துகின்றேன்.
 
எம்மை நம்புங்கள்
 
எனவே சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகமும் புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கை மீது நம்பிக்கை வைக்கவேண்டும். சர்வதேச சமூகம் எங்களுக்கு உதவுவதுடன் எமது கரங்களை பலப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கை மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
எங்களை அவையளை நம்ப சொல்லுறார்.....அடுத்த பிறவியிருந்தால் நம்புறோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.