Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரினால் அகதிகளாக ஆக்கப்பட்ட நாம் சூழலியல் அகதிகளாகவும் மாறிவிடக் கூடாது; பொ.ஐங்கரநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த காலங்களில் இடம்பெற்ற போரில் இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள்.அவ்வாறு போரினால் அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாக இடம் பெயர கூடாது என வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 
 
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு கடற்கரை சார் சூழலியல் திட்டங்கள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
 
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
5%20%282%29.jpg
 
 
யாழ்ப்பாணத்தின் தரை மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளாலானது. நொய்தலான இந்தச் சுண்ணாம்புத்தரை காரணமாகவே பெய்கின்ற மழைநீர் முற்றாகக் கடலுக்குள் வடிந்தோடிவிடாமல் நிலத்தடி நீராகக் கீழே தேங்குகின்றது. 
 
யாழ்ப்பாணத்தில் எமது இருப்புக்கு, இந்த நிலத்தடி நீர்தான் காரணம். ஆனால், வரப்பிரசாதமாக அமைந்த சுண்ணாம்புப் பாறைகள் அதன் நுண்துளைகளினூடாக மாசுக்களையும் கீழே கசிய விடுகின்றது.
 
நாம் மேற்கொள்ளும் செறிவு வேளாண்மையில் அளவுக்கு அதிகமான இரசாயன உரங்களையும் பீடைகொல்லி நஞ்சுகளையும் பயன்படுத்தி வருகிறோம். இந்த நஞ்சுகள் இறுதியாக நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன.
 
முறையான கழிவகற்று வசதிகள் இல்லாததால் மலக்கிருமிகள் நிலத்தடி நீரில் குடியேறுகின்றன. இவை தவிர தற்போது தண்ணீரில் எண்ணெய் மாசும் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 
 
ஒருபுறம் நிலத்துக்குக் கீழே சூழலியல் அனர்த்தங்கள் நிகழ்ந்தேறும்போது, இன்னொருபுறம் நிலத்துக்கு மேலேயும் பெரும் சூழலியற் படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன. 
 
கரையோரத்தில் பாதுகாப்பு அரண்களாக விளங்கி வந்த மணல் மேடுகளில் பெரும் பங்கு கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. கடற்கோள் தடுப்புச் சுவர்களாக விளங்கும் கண்டல் காடுகளும், சவுக்குக்காடுகளும் விறகுத் தேவைகளுக்காகக் காணாமற் போய்க்கொண்டிருக்கின்றன.
 
போர்க் காலத்தில் இந்த அழிவுகளைத் தடுக்கமுடியாது போயிருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் இவை தொடர்ந்தால் நாம் சூழலியல் அகதிகளாக இடம் பெயர்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
10%2855%29.jpg
 
ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் புள்ளிவிபரங்களின்படி சூழல் அகதிகளாக உலகளாவியரீதியில் தற்போது 10.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
 
2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50 மில்லியன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் ஒருவராக நாம் அடங்கிவிடக் கூடாது.
 
சூழல்நெருக்கடிகள் வரும்போது அதற்குள் சில சமயங்களில் அரசியலும் ஒரு மாசாகக் கலந்துவிடும் அபாயம் உள்ளது. இதற்கும் நாம் இடமளித்துவிடக் கூடாது.சூழலில் அரசியல்மாசு நிலைமைகளை மேலும் விபரீதமாக்கி விடும்.
 
அரசியல் வாதிகள், ஆய்வாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன்மூலமே எமது இயற்கை வளங்களையும், அதன் பாதிப்புகளையும் சரியான முறையில் மதிப்பீடு செய்யமுடியும். இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதன் பயன்களை நுகரமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=419103912511144335#sthash.EdU6piYH.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே, சிறிதாவது விழிப்புணர்வு கூட்டங்களும் அங்கே நடக்கிறதே..! :(:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.