Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் கவி இது கண்டுபிடி சபேசன்....!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சுக்குள் அலையேற்றிய

மாயக் கனவுகள் வெளியேற

நிஜ மனிதர்களாக நிற்கிறோம் இப்போது.

மினுங்கிய மின்சாரமற்று

தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று

செப்பனிடப்பட்ட தெருவற்று

மாவற்று சீனியற்று மருந்தற்று

ஏனென்று கேட்க எவருமற்று

கற்காலத்துக்கு திரும்புகிறோம் மீண்டும்.

கணகிகளையும் காஸ் சிலின்டர்களையும்

வீட்டு மூலையில் வீசி விட்டு

மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்

விறாந்தையின் தரை விரிப்புக்களையும்

மாடியிற் புட்டிய அன்ரனாக்களையும்

அசுமாத்தம் இன்றி அகற்றிவிட்டு

பதுங்கு குழிகளுக்கு பால் காய்ச்சி விட்டோம்..

என்கிற வரிகளை வாசிக்கிற போது ஏறபடுகிற வலி.. நம்பிக்கைகள் தகர்நத வாழ்வின் நிலை.. இதனைப் படித்து முடித்த பின்னரும் எஞ்சுகின்ற மனநிலை..

ஏதாவதொன்று வன்னி மைந்தனின் எழுத்தக்களில் இல்

  • Replies 78
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள் அலையேற்றிய

மாயக் கனவுகள் வெளியேற

நிஜ மனிதர்களாக நிற்கிறோம் இப்போது.

மினுங்கிய மின்சாரமற்று

தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று

செப்பனிடப்பட்ட தெருவற்று

மாவற்று சீனியற்று மருந்தற்று

ஏனென்று கேட்க எவருமற்று

கற்காலத்துக்கு திரும்புகிறோம் மீண்டும்.

கணகிகளையும் காஸ் சிலின்டர்களையும்

வீட்டு மூலையில் வீசி விட்டு

மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்

விறாந்தையின் தரை விரிப்புக்களையும்

மாடியிற் புட்டிய அன்ரனாக்களையும்

அசுமாத்தம் இன்றி அகற்றிவிட்டு

பதுங்கு குழிகளுக்கு பால் காய்ச்சி விட்டோம்..

என்கிற வரிகளை வாசிக்கிற போது ஏறபடுகிற வலி.. நம்பிக்கைகள் தகர்நத வாழ்வின் நிலை.. இதனைப் படித்து முடித்த பின்னரும் எஞ்சுகின்ற மனநிலை..

ஏதாவதொன்று வன்னி மைந்தனின் எழுத்தக்களில் இல்

அவருடைய அனுபவத்துக்கு அது போதும். அவர் வைரமுத்துவாகவோ இல்ல பா விஜயாகவோ வர வேணும் என்றால் அதற்கு இன்னும் பல படிநிலைகள் தாண்ட வேணும். அது வேறுவிடயம்.

ஒரு சிறுவன் கவிதை எழுதினால் இதென்ன கவிதை பார் வைரமுத்திட கவிதையை அதன் தாக்கத்தை என்று ஒப்பிடுவீர்கள் போல் உள்ளதே. கவிதை எழுதுபவர்களின் அனுபவங்களுக்கு ஏற்ப அவற்றின் நடையில் மாறுதல்கள் ஏற்படும். அதற்கு வளமான விமர்சனங்களைச் செய்யுங்கள். விசமத்தனமான கருத்துக்களால் அவர்களின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய நிற்காதீர்கள்.

அடுத்தவர்களின் வரியைப் போடாமல்..களத்திற்கு தேவையற்ற அடைமொழிகளோடு உலாவும் நீங்களே ஒரு கவிதையை எழுதி உங்கள் கவிப்புலமையையும் கவி நடையின் பாங்குகளையும் குறித்துக்காட்டி வன்னி மைந்தனுக்கு வழிகாட்டலாமே. அவரின் தற்போதைய வடிவம் அவரது முயற்சிகள் அளவில் வரவேற்கக் கூடியது, நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு பாதகமானதல்ல. அவர் விடயங்களை அதிக கற்பனைகள் இல்லாத உரைநடைக் கவிதைப் பாணியில் தர விளைகின்றார். அதில் தவறில்லை. இதுதான் நாளை அவரை புடமிடப்போகும் முதற்படிகள். தொடரட்டும் அவர். நீங்கள் குறுக்கே தடை போடாமல் வழியைத் திறந்து இப்படிப் போ நல்ல பெறுபேறு கிட்டும் என்று காட்டுங்கள். அது போதும்.

இந்த அப்துல்ரகுமானின் கவிதையைப் படியுங்கள்..எளிமையாக..ஆனால் ஆழமாகச் சொல்கிறார்..நாளை வன்னி மைந்தனும் ஒரு அப்துல் ஆகலாம்...

கதவு

பித்தன்

கதவை

மூடிக்கொண்டும்

திறந்துகொண்டும்

இருந்தான்

ஏன் இப்படிச்

செய்கிறாய்?

என்று கேட்டேன்

கதவு

திறப்பதற்கா?

மூடுவதற்கா? என்று

அவன் கேட்டான்

அவன் மேலும் சொன்னான்

கதவுகள்

சில நேரம்

இமைகளாகத்

தெரிகின்றன

சில நேரம்

பூ விதழ்களாக

மலர்கின்றன

சில நேரம்

உதடுகளாகின்றன

பயணம் முடிந்து

வீடு திரும்புகிறவனுக்கும்

சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது

ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்

சிறகுகளுக்கும்

ஏதோ இனம் புரியாத

சம்பந்தம் இருக்கிறது

கதவின்

திறப்பிலும்

மூடலிலும்

கேள்வியும் பதிலும்

இருக்கிறது

கதவுகளில்

சந்திப்பும் இருக்கிறது

பிரிவும் இருக்கிறது

நாம்

உள்ளே இருக்கிறோமா?

வெளியே இருக்கிறோமா?

என்பதைக்

கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்

கதவு எண்களில்

வசிக்கிறோம்

மூடிய கதவு

உள்ளே இருப்பவற்றின்

மதிப்பை

கூட்டுகிறது

நம்

வீட்டுக்கு மட்டுமல்ல

நமக்கும்

கதவுகள் உண்டு

நாம்

நமக்குள்ளேயே செல்லவும்

நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்

ஒருகதவு

திறக்கிறது

மரணத்தில்

ஒரு கதவு

திறக்கிறது

இரண்டிலும் நாம்

பிரவேசிக்கிறோமா

வெளியேறுகிறோமா

கதவுதட்டும்

ஓசை கேட்டால்

"யார்" என்று

கேட்காதே

ஒரு வேளை அது

நீயாக இருக்கலாம்

கவிதை எடுத்த இடம் ஒரு அன்பரின் இணையத்தளம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளைப் பற்றிய விவாதங்கள் இன்னும் நீளலாம். ஆனால் தொடர்ந்து விவாதிக்க நமக்கு நேரம் இல்லை. எனினும் இறுதியாக சொல்ல விரும்புவது:

1. வன்னி மைந்தன் தனது பாணியிலேயே தொடர வாழ்த்துக்கள். புதிதாக கவிதை எழுதுபவர்களை மட்டம் தட்டி அவர்களை வளரவிடாமல் செய்வது நமது நோக்கமல்ல. கவிஞர்கள் ஆக விரும்புபர்கள், மற்றையோரின் கவிதைகளைப் படித்து, புரிந்து கொள்ள முயலவேண்டும். அதன்மூலம் தங்கள் கவிதைகளை இன்னும் மெருகேற்றலாம்.

2. வன்னி மைந்தனின் கவிதை வெளிப்பாடு இன்னும் மெருகேற வேண்டுமென்றால் அவர் நிறையத் தமிழ்க் கவிதைகளைப் படிக்க வேண்டும். உதாரணமாக புதுவை, காசி ஆனந்தன், கருணாகரமூர்த்தி, சேரன், மஹாகவி, வில்வரத்தினம் போன்ற இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் ஆக்கங்களையாவது படிக்கவேண்டும் (இவர்கள் யாரேன்று கேட்டால் நாம் ஒன்றும் செய்யமுடியாது). http://www.noolaham.net/library/books_subj...கவிதை

3. கவிதைகளை ரசிப்பதற்கு கவிதை எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. சுப்புடு என்பவர் தமிழ் நாட்டில் இசைக் கச்சேரிகளை விமர்சிப்பதில் முன்னணி வகித்தவர். அதற்காக அவரைப் போய் இசைக் கச்சேரியில் பாடினால்தான், அவருக்கு விமர்சிக்க அருகதை உள்ளது என்று கூறமுடியுமா?

4. நெடுக்காலபோனவரே, நீங்களும் உங்கள் பாணியில் கவிதைகளைத் தாருங்கள். கன காலமாக வாசிக்கக் கிடைக்கவில்லை.

முழுமை கவிஞர் என்று -யார்தான் யாரை ஒப்புக்கொண்டாங்க?

கம்பன் கூட வடிதது -கம்பரசம் இல்ல- காமரசம்....

கண்ணதாசன் கூட -கோப்பையிலே என் குடியிருப்பு....பாடினார்

பட்டுக்கோட்டைதான் சிறந்தவர் என்னாங்க.........!!

கண்தெரியாதவன் - அந்தி மழை பொழிகிறது - ஒவ்வொரு துளியிலும் - உன் முகம் தெரிகிறது - என்று எழுதுகிறார்

இது ஒரு கவியா? .. என்று இளையராஜா வைரமுத்து பற்றி விமர்சிக்கிறார்!

அவரே - சுந்தரி கண்ணால் ஒரு சேதி - சொல்லடி - இந் நாள் தேதி...

வரிகளில் பெரிதாய் ஒண்ணுமில்ல!

ஆனால் எந்த இடத்தில் என்ன வரிகள் - என்ன இடதில் என்ன வார்த்தை போடணும் என்னு தெரியணும் எங்கிறார்!

பிறகு அதை செய்ய ஏன் ஒரு கவிஞன் - அவருக்கு?

உங்களுக்கு பிறகு வந்தவர்களே - தேசிய விருது நிறைய பெற்றிட்டாங்க

நீங்க ஏன் இன்னும் - 3 தலைமுறைக்கு பாட்டு எழுதியும் - இன்னும் இல்லை என்றதற்கு - வாலி சொல்கிறார்...

நான் நினைச்சா - எம்-ஜி-ஆர் அ வைத்து எதனையோ எடுதிருப்பன்....விரும்பல!

அவரே(எம் ஜி ஆர்) பதவியில் இருந்தவுடன் சொன்னார்- என்னை ஆட்சியில் அமர்த்தியது -உங்கள் வரிகள் என்றபோது -அவர் வாயை பொத்தினேன் என்று!!

பா.விஜய் - வித்தக கவிஞர் - என்றாங்க ...

பால் போலே 16 இல் -பாடல் விசரமில்லாம பாட்டு எழுதியும் -படம் ஊத்திக்கிச்சு என்னுறாங்க.......

கல்யாணாம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாமா.....

எழுதின சினேகன் பங்களிப்பு படம் -பிச்சுகிட்டு ஓடுதுன்னாங்க..........

மூச்சுவாங்குது...... நீளமா போயிட்டுதோ?

வேறவழி? -இப்போ-முடிவாக

கவிதைகள் உணர்வின் அடிப்படையானவை !

எழுதுப்பிழைகள் - ஏற்கமுடியாதவைதான்- ஆனா எல்லாரும் செய்யும் தவறு!

கவி விடயத்தில் யாரும் - எவரையும்விட கீழும் இல்லை-மேலாயுமில்லை!

தன் உணர்வுகளை கொட்டி தீர்க்க நினைப்பவன் - முயல்கிறான்

அதனை திருத்த நினைப்பவர்கள் மனபூர்வமாய் - செய்ய கூடியது

நண்பர்களாகி - தனிமடலில் விவாதிப்பதே!

இந்த கருத்து -ஒன்றாயாகி - எம் தேசத்தை நேசிப்பவர்களுக்கு மட்டும்!!

Edited by வர்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.