Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு: சந்தேகத்தில் இருவர் கைது

Featured Replies

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் இன்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் இன்றையதினம் (23) அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் பொலிஸார், இச் சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். 
 
மேலும், பாடசாலையில் நஞ்சுத்திரவம் ஊற்றப்பட்டமை தொடர்பில் பிரதேச அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பு உள்ளமை, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கடந்த (19) திகதி, மேற்படி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரிய பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், மற்றும் நலன் விரும்பிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
  • தொடங்கியவர்

பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு: பிரதான சந்தேகநபர் கைது

 

arrest_CI.jpg

 

 
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (24.03.15) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட பாடசாலை காவலாளிகள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், தேவையேற்படின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் கடந்த 18 ஆம் திகதி இரவு நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டது. மறுநாள் அந்நீரைப் பருகிய 26 மாணவர்கள் மயங்கி வீழ்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீர்த்தாங்கியினுள் இருந்து நஞ்சு போத்தல் ஒன்றை மீட்டனர். இதனையடுத்தே, நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தெரியவந்தது. 
 
இதனையடுத்து பாடசாலை காவலாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மயிலங்காடு பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்... இதேவேளை கைதான சந்தேக நபர் ஈபீடீபீ கட்சி உறுப்பினரின் சகோதரர் என தகவல்கள் வெளியாக உள்ள போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை...
 
 

Edited by Athavan CH

இப்படியான செய்யலை செய்பவர்கள் மனித வடிவிலுள்ள ஆபத்தான மிருகங்கள். இவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். ஆனாலும் இலங்கயில் உள்ள சட்டத்தில் நம்பிக்கை இல்லை. போலிசுக்கு ஒரு 1000, 2000 ரூபா குடுத்தால் எல்லாம் தலைகீழ நடக்கும். சும்மா கடைக்கு பாண் வாங்கப்போன வசதி இல்லாத ஒருவரை பிடித்துவைதுகொண்டு , அவற்றை தலையிலி கட்டிபோடுவினம். உண்மையான மைனர் குஞ்சு ஊர் மேஞ்சுகொண்டு திரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.