Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலாய் லாமாவுக்கு இலங்கை விசா வழங்குமா?

Featured Replies

150403145440_dalai_lama_512x288_afp_nocr

 

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
 
கடந்த 1950ஆம் ஆண்டு முதல் இலங்கை செல்ல தலாய் லாமா முயற்சி
அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
 
"கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பம்"
 
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக்கு வர வேண்டும் என்பது பௌத்தர்களின் விருப்பமாக உள்ளது என்று உபதிஸ்ஸ தேரர் கூறுகிறார்.
 
150403165258_mahabodi_tree_anuradhapura_
பௌத்தர்களுக்கு புனிதமானதாக் கருதப்படும் அனுராதபுரத்திலுள்ள அரச மரம்
 
கடந்த 1950ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வரவேண்டும் எனும் ஆர்வம் தலாய் லாமாவிடம் இருந்தாலும், அதை நிறைவேற்ற அவர் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை எனவும் உபதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் அனுராதபுரத்திலுள்ள புனிதமான அரச மரத்தை வழிபட வேண்டும் எனும் தனது ஆவலை தங்களிடம் தலாய் லாமா வெளிப்படுத்தியாக அவர் கூறுகிறார்.
 
அவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என தாங்கள் அரசிடம் கோரவுள்ளதாகவும், பௌத்த மதத் தலைவர்களுடனும் இது குறித்து பேசி வருவதாகவும் இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் கூறுகிறார்.
 
'விண்ணப்பித்தால் பரிசீலனை'
 
ஆனால் இலங்கைக்கான பயணம் குறித்து தலாய்லாமாவோ அல்லது அவரது சார்பாக வேறு யாருமோ இதுவரை அரசைத் தொடர்பு கொள்ளவோ விசா கோரியோ விண்ணப்பம் ஏதுமோ செய்யவில்லை, அவ்வாறு விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற பின்னர் அது குறித்து இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் அஜித் பெரேரா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இப்படியான சூழலில் முதல் முறையாக இலங்கை செல்ல ஆர்வம் வெளியிட்டுள்ள தலாய் லாமாவின் பயணம் யதார்த்த ரீதியில் இடம்பெறுமா என்பது இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகளைப் பொருத்தே அமையும் என்று கருதப்படுகிறது.
 
  • தொடங்கியவர்

தலாய் லாமாவிற்கு நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அனுமதி வழங்காமைக்கு சீனா பாராட்டு

 

Thalailama_CI.jpg

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு நாட்டுக்குள் பிரவேசிக்க, இலங்கை அனுமதி வழங்காமை பாராட்டுக்குரியது என சீனா தெரிவித்துள்ளது.


தலாய் லாமாவின் விஜயத்தை எந்தவொரு நாடும் அனுமதிக்கக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையுடன் சிறந்த உறவுகளைப் பேணிக்கொள்ளவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


மஹாபோதி அமைப்பின் தலைவர், தலாய் லாமாவிற்கு இலங்கை விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் அனுமதிக்காது என தெரிவிக்கப்படுகிறது.


அவ்வாறு அனுமதியளித்தால் அது சீனாவுடனான உறவுகளை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118296/language/ta-IN/article.aspx

 

 
  • கருத்துக்கள உறவுகள்

ஹெல உறுமையாவிடம் விண்ணப்பித்தால் விசா இலகுவாக கிடைத்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை சிக்கலுக்குள் மாட்ட இந்தியா தூண்டிய செயலாக இருக்கலாம். :unsure: எதுக்கும் அழைப்புவிடுத்த தேரரை ரெண்டு தட்டு தட்டுனால் விசயம் தெரிந்துவிடும்.. :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு சிறீலங்கா முட்டாள் கிடையாது

படுக்கையை வேண்டுமானால் பகிரத்தயாரே தவிர

பணத்தில் குறி தான்... :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.