Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா

Featured Replies

11120513_705616909549800_230110731844387
 
ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா

ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா

கனடியத் தமிழர் மற்றும் ஐரோப்பியத் தமிழர் திரைப்படங்கள் பங்குகொள்ளும் திரைப்பட விழாவொன்றை கனடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு அமையம் மற்றும் சுயாதீன கலை, திரைப்படக் குழுமம் இணைந்து ஒழுங்குசெய்துள்ளது. இவ்விழா கனடியத் தமிழர் திரைப்படங்களுக்குள் போட்டி இடம்பெற்று சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணைநடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த இசையமைப்பாளர் என பதினெட்டு பிரிவுகளுக்கான விருது இவ்வமைப்புகளால் மே மதம் 2-ம் திகதி பிற்பகல் 6 மணிமுதல் இரவு 11.30வரை நடத்தப்படும் சர்வதேசத் திரைப்பட விருது விழாவில் வழங்கப்படவுமுள்ளது. இத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள ஐரோப்பியத் தமிழ்த் திரைப்படங்கள் பார்வைக்காகவும் இவை எல்லாவற்றுக்கும் இடையிலான போட்டியாக அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த படத்திற்கு பார்வையாளர் விருப்பு விருதும், சான்றிதழும் இவ்விழாவில் வழங்கப்படவுள்ளது. இத்திரைப்பட விழா வருகின்ற இரு வார சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெறும். வருகின்ற 2015 ஏப்பிரல் 11 சனி பிற்பகல் 3 மணிக்கு திவ்ஜராஜனின் “உறவு” திரைப்படமும் பிற்பகல் 6 மணிக்கு மொன்றியல் கஜனின் “சில்லு” திரைப்படமும் 12-ந் திகதி ஞாயிற்றுக்கிழமை பற்பகல் 3 மணிக்கு ஜனாவின் “சகாராப் பூக்கள்” திரைப்படமும், கதி. செல்வகுமார்-ரைடன் பாலசிங்கம் ஆகியோரின் “ஸ்ரார் 67” திரைப்படங்களும், ஏப்பிரல் 18 சனி பிற்பகல் 3 மணிக்கு விஷ்ணு முரளியின் “ஏ ஃகண் அன்ட் றிங்” திரைப்படமும் பிற்பகல் 6 மணிக்கு ஜனா- ராஜ்குமார் ஆகியயோரின் “கோண்” திரைப்படமும் ஏப்பிரல் 19-ந் திகதி ஞாயிற்குக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிரான்ஸ் பாஸ்கியின் “தீரா நதி”;, பிற்பகல் 6 மணிக்கு சுவிஸ் ரமணனின் “மாறுதடம்", இரவு 9 மணிக்கு டென்மார்க் துரையின் “உயிர்வரை இனித்தாய்” ஆகிய திரைப்படங்களும் றிச்மணட்ஹில் ஜோக் சினிமாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இத்திரைப்படங்களுக்கான கட்டணங்களாக ஒரு படக்காட்சி பார்ப்பதாயின் ஒருவருக்கு ஐந்து டொலர்களும், 6 படக்காட்சிகள் பார்ப்பதாயின் இருபது டொலர்களும், 9 படக்காட்சிகள் பார்ப்பதாயின் இருபத்தைந்து டொலர்களும் அறவிடப்படவுள்ளதுடன், பதின்மூன்று வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசமாகும்.

இதுடுமல்லாது, கனடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு அமையமும், சுயாதீன கலை, திரைப்பட குழுமமும் ஒழுங்குசெய்துள்ள குறுந் திரைப்பட விழா மே-மாதம் இரண்டந் திகதி பகல் 11 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையும் இடம்பெறவுள்ளது. இக்குறும்பட விழாவும் போட்டிக்கான விழாவாகவே இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் உங்கள் குறும்படமும் இடம்பெறவேண்டுமென்றால் 30 நிமிடங்களுக்குள்ளான குறும்படங்களை ஏப்பிரல் 14-ந் திகதிக்கு முன் 416-450-6833 என்ற இலக்கத்தில் ரதனைத் தொடர்புகொண்டு சமர்ப்பிக்கலாம் என்பதையும் அறித்தருகின்றோம்.

இது எமக்கான திரையுலகம். உங்கள் கலைஞர்கள் நாம் எம்மை ஆதரிக்குமாறு உங்கன் முன்னால் வருகின்றோம். அதற்காக சலுகைகளுடன் அனுமதிச்சீட்டு கட்டணங்களையும் அறிவித்துள்ளோம். முதன்முதலாக புலம்பெயர் திரைப்பட விழாவொன்று இடம்பெறுகின்றது. திரண்டுவந்து எமது கலைஞர்களுக்கு ஆதரவளித்து இத்திரை விழாவை பெரு வெற்றி விழாவாக மாற்றிடுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

.
 
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

வாழ்த்துக்கள்

11102646_705968166181341_875867210648786

பட விழா இந்த சனி ,ஞாயிறு இரண்டு நாட்களும் இருக்கு .எம்மவர் படைப்புகளை பார்க்க விரும்புவர்கள் தவறவிடவேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.