Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலப்பயணம்: புனைவா? மறைக்கப்பட்ட உண்மையா? (வீடியோ இணைப்பு)

Featured Replies

காலப்பயணம்: புனைவா? மறைக்கப்பட்ட உண்மையா? (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2015, 06:57.06 மு.ப GMT ]

time_travel_001.jpg

                        அறிவியல் உலகில் பல்லாண்டு காலமாக நீங்காத மர்மங்களில் Time Travel எனப்படும் காலப்பயணமும் முக்கியமான இடத்தினை பிடிக்கிறது.

காலப்பயணம் (Time Travel) என்றால் என்ன?

தற்போது இருக்கும் காலத்தில் இருந்து இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பொருள்களை அனுப்புவதோ, தகவல்கள்/சமிக்ஞைகளை அனுப்புவதோ, அல்லது மனிதர்கள் பயணம் செய்வதையோ காலப்பயணம் என குறிப்பிடுகின்றனர்.

ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட சிறப்பு சார்பியல் மற்றும் பொது சார்பியல் கொள்கைகளே காலப்பயணம் என்ற கருத்தை முதலில் முன்வைத்தது.

மேலும், இவ்வாறான காலப்பயணத்தை அடைய பயன்படும் தொழிநுட்ப சாதனத்தினை கால இயந்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

கடந்த 19ம் நூற்றாண்டில் இருந்து காலப் பயணம் மற்றும் கால இயந்திரம் பற்றி எண்ணற்ற புனைவு கதைகள் வரத் தொடங்கியது.

1895ம் ஆண்டு H. G. Wells என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் எழுதிய கால இயந்திரம் (The Time Machine) என்ற அறிவியல் புனைவு நாவல் மூலம், கால இயந்திரம் என்ற வார்த்தையும், காலப் பயணமும் உலகம் முழுவதும் பிரபலம் அடைய தொடங்கியது.

time_travel_003.jpg

இந்திய புராணமான மகாபாரதத்தில் கூறப்படும் கதையை வைத்து காலப்பயணத்தை இன்னும் எளிதாக விளக்கலாம். ரைவதா (Raivata Kakudmi) அரசன் கதையில் அவர் படைப்புக்கடவுளான பிரம்மாவைக் காண்பதற்கு உலகைவிட்டு சொர்க்கத்திற்கு பயணிக்கிறார்.

பின்னர் பூமிக்கு திரும்ப வந்தவுடன் பல யுகங்கள் கடந்துவிட்டதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சியுறுவதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறு காலப்பயணம் செய்யலாம்?

இயற்பியல் கோட்பாடுகள் மூலம் காலப்பயணம் சாத்தியம் என ஐன்ஸ்டீன் முதல் ஸ்டீபன் ஹாக்கிங் வரை பல அறிவியல் அறிஞர்களால் கூறப்பட்டிருந்தாலும், செயல்முறையில் இதனை இன்னும் சாத்தியப்படுத்தியதாக எந்த பதிவும் இல்லை.

கால வெளியில் பிராயணம் செய்ய வேண்டுமென்றால்:

ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் பிராயணிக்க வேண்டும். அப்படி பிராயணம் செய்ய பயன்படும் அந்த பாதைகளை Worm Holes என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். மனிதனால் போக முடியாதா அளவில் காணப்படும் அந்த துளைகள், இந்த பேரண்டத்தில் பல கோடிக் கணக்கிலிருக்கின்றன.

time_travel_005.jpg

விஞ்ஞானிகள் அந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கி அதனுள் மனிதனை ஒளி வேகத்துக்கு இணையான வேகத்தில் செலுத்தலாம் என்று முயற்சிக்கின்றனர்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளதை போல, ஒளியின் வேகத்தில் பயணித்தால் காலப்பயணம் சாத்தியம் என்றும், அவ்வாறு பயணம் செய்தால், பயணிப்பவர்களுக்கு வயது மிக மிக மெதுவாகவே மாற்றமடையும் என்றும் கூறுகின்றனர்.

வேகம் ஒளியின் வேகத்தை அடைந்தால் நேரம் நீளும், இதனால் தான் விண்வெளி செல்லும் நபர்களுக்கு வயதாகுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் விண்வெளியில் காலம் கிடையாது.

இவ்வாறு பல ஆச்சர்யங்களையும் ,மர்மங்களையும் கொண்டு சுவாரஸ்யமாக விளங்கும் இந்த காலப்பயணம் சாத்தியமா அல்லது சாத்தியம் இல்லையா என்று திட்டவட்டமாக அறுதியிட்டு கூற அறிவியலாளர்களாலேயே இன்னும் முடியவில்லை.

காலப் பயணம் பற்றிய செய்திகள்:

ஆனாலும், பல்லாண்டுகளுக்கு முன்பிருந்து காலப்பயணம் பற்றி எண்ணற்ற செய்திகளும் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

1928ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளினின் ”சர்க்கஸ்” என்ற திரைப்படத்தில், திரையில் கூட்டத்தில் நடந்து செல்லும் பெண் ஒருவர் தனது கையில் கைப்பேசி போன்ற பொருள் ஒன்றை வைத்துள்ளார்.

 

 

இந்த வீடியோ பின்னாளில் வெளியாகி பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சிலர் அவர் கையில் இருக்கும் பொருளை பார்த்துவிட்டு காலப்பயணம் என்று வாதிட்டாலும், சிலர் அது அந்த காலத்தில் ஆராய்ச்சியில் இருந்த தொழிநுட்ப சாதனமாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதேபோல், 1938ம் ஆண்டில் பேக்டரி ஒன்றில் இருந்து வெளிவரும் பெண்கள் கூட்டத்தில், பெண் ஒருவர் கைப்பேசி போன்ற சாதனம் ஒன்றில் பேசுவது போன்று படமாகியுள்ளது.

 

 

மேலும், 1905ல் நடந்த நிகழ்வு ஒன்றில், 1970ம் ஆண்டை சேர்ந்த நபர் ஒருவர், பயணித்ததாக கூறப்படுகிறது. அவர் 1970ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த ஆடை மற்றும் சிகையலங்காரத்தை கொண்டிருந்ததாகவும், அவரது கண்ணாடியும், அவரது கையில் உள்ள கமெராவும் எதிர்காலத்தை சேர்ந்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

time_travel_002.jpg

இந்த செய்திகளின் உண்மை தன்மை பற்றி பல்லாண்டுகளாக தெரியாத நிலையில், இவ்வாறான புகைப்படங்களும், வீடியோக்களும் காலப்பயணம் சாத்தியம் தானோ என நம்மை யோசிக்க வைக்கிறது.

மேலும், ஏற்கனவே எண்ணற்றோர் காலப்பயணம் செய்து இறந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பயணித்திருப்பார்களோ என்ற சந்தேகத்தினை வலுப்படுத்துகிறது.

பல்லாண்டுகளாக கோட்பாடுகளில் மட்டுமே சாத்தியமாகியுள்ள காலப்பயணம், எதிர்காலத்தில் நிஜத்திலும் சாத்தியம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அவ்வாறு சாத்தியமாகி மனிதர்கள் தங்கள் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் பயணித்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனையில் கூட விவரிக்க முடியாது!

time_travel_006.jpg

http://newsonews.com/view.php?22UOllbbcO80044e24MC2022nnB2dddBBnV300MgAAee4K088ccb3lOO23

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.