Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

யானைகள் அட்டகாசம்’ – நம்மூரிலும் இம்முறையை நாம் முயற்சித்துப் பார்க்கலாமே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நம்மூர் யானைகளுக்கு கரும்பு என்றால் உயிர். கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தால் செமை கட்டு கட்டிவிடும். போலவே கென்ய நாட்டு யானைகளுக்கு அக்கேசியா என்கிற மரத்தின் மீது தீராப்பசி. எங்காவது அம்மரத்தைக் கண்டால் வளைத்து அப்படியே சாப்பிடும்.

பெண் ஆராய்ச்சியாளரான லூசிகிங்குக்கு ஒரு நாள் ஆச்சரியமான காட்சி ஒன்று காணக்கிடைத்தது. ஓங்குதாங்காக வளர்ந்திருந்த ஓர் அக்கேசியா மரத்தைக் கண்டும், நாலு நாட்கள் பட்டினியில் கிடந்த யானைக்கூட்டம் ஒன்று சட்டை செய்யாமல் விலகி நடந்ததைக் கண்டார். அந்த மரத்தில் ஏதோ மாயாஜாலம் நடக்கிறது என்பதை உணர்ந்தார். அருகில் சென்று மரத்தை ஆராய்ந்தார். மாயமும் இல்லை. மந்திரமும் இல்லை. அம்மரத்தில் ஏராளமான தேன்கூடுகள் இருந்தன. தேனீயைக் கண்டாலே யானைக்கு அலர்ஜி. ‘ங்கொய்’ என்று காதில் புகுந்து ரீங்காரமிடும் தேனீயின் ஓலம்தான் யானைக்கு சகிக்க முடியாத தொந்தரவு. லூசிகிங்கின் மூளையில் சட்டென்று பல்ப் எரிந்தது. வயல்களில் புகுந்து நாசம் செய்யும் யானைக் கூட்டங்களைத் துரத்த தேனீச் சுவர் அமைத்தால் என்ன?

அங்கிருந்த விவசாயி ஒருவருக்கு பயங்கர யானைத் தொல்லை. அவரிடம் போய் பேசினார். ‘உங்கள் வயலைச் சுற்றி நான் ஓர் ஏற்பாடு செய்கிறேன். யானைகள் கிட்டவே நெருங்காது. டீலா நோ டீலா?’ விவசாயி மகிழ்ச்சியோடு டீலுக்கு ஒப்புக்கொண்டார். உருவானது யானையை விரட்டும் தேனீச் சுவர். பத்து மீட்டர் இடைவெளியில் இரண்டு மரக்கம்பங்கள். அவற்றை மெல்லிய இரும்புக் கம்பி ஒன்றின் மூலம் (நாம் துணி காய வைக்க மாடியில் அமைக்கும் அமைப்பு மாதிரி) இணைத்தார். தேனீ வளர்ப்புக்கு உதவும் இரண்டு மரப்பெட்டிகளை அந்தக் கம்பியில் தொங்கவிட்டார். யானைகளின் கண்களுக்கு பளிச்சென்று தெரியும் உயரத்தில் அந்த மரப்பெட்டிகள் மாட்டப்பட்டன. அதேநேரம் தேனை சேகரிக்க வசதியான உயரமாகவும் அது அமைந்தது. இதே மாதிரி அமைப்பை நிலத்தைச் சுற்றிலுமாக உருவாக்கினார்.

வெயிலும், மழையும் தேனீக்கு ஆகாது. எனவே அவற்றைக் காக்க வைக்கோலால் ஆன மினியேச்சர் குடிசைகள் ஒவ்வொரு பெட்டிக்கும் மேலாக உருவாக்கப்பட்டன. இப்பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் பயங்கரப் பிளிறலுடன் யானைக் கூட்டம் ஒன்று பூமியதிர அந்த நிலத்தை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தது. பார்த்துக் கொண்டிருந்த விவசாயிக்கு பக்கென்று ஆனது. இந்த களேபரமெல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். யானைகள் கம்பியைத் தொட்டதுமே, அந்த அதிர்வில் மரப்பெட்டிகள் பயங்கரமாக ஆட, உள்ளே உல்லாசமாக தேன் சேகரித்துக்கொண்டிருந்த தேனீக்களுக்கு வந்ததே கோபம். ஒட்டுமொத்தமாகப் படையெடுத்து, ஒவ்வொரு யானையையும் அவற்றுக்கேயுரிய தனித்தன்மையான ரீங்காரத்தால் புரட்டியெடுத்தது. டொக் டொக்கென்று தங்கள் கொடுக்கால், ஒவ்வொரு யானையையும் நாலு போடு போடவும் தேனீக்கள் தயங்கவில்லை. இதென்ன புதுத்தொல்லை என்று யோசித்த யானைகள் வந்த வழியே பின்னங்கால் பிடறியிலடிக்க புறமுதுகு காட்டி ஓடின.

விஷயம் கேள்விப்பட்ட லூசிகிங் யானை சைஸ் மகிழ்ச்சியை அடைந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் பதினேழு விளைநிலங்களில் இதேமாதிரி தேனீச் சுவர் அமைத்தார். இந்நிலங்களுக்கு யானைக் கூட்டங்கள் தொண்ணூறு முறை வந்திருக்கின்றன. ஆனால் ஆறு முறை மட்டும்தான் (தேனீத் தொல்லையை தாண்டியும் கடும்பசி போலும்) அந்தப் படையெடுப்புகளில் யானைகளால் வெற்றிகொள்ள முடிந்தது.

லூசிகிங்கின் இந்த வெற்றிகரமான யானைத் தடுப்புமுறையை கேள்விப்பட்ட கென்ய விவசாயிகள் பலரும் இப்போது தங்கள் நிலங்களிலும் இதே அமைப்பை நிறுவி, சந்தோஷமாக வேலை பார்க்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். விவசாய வேலையும் தடைபடுவதில்லை. அதே நேரம் தேன் மற்றும் மெழுகு சேகரிப்பு மூலம் பாக்கெட் மணியும் கூடுதலாக கிடைக்கிறது.

பொதுவாக யானைத் தொல்லையை தவிர்க்க விவசாயிகள் மின் அதிர்ச்சி தரும் கம்பிகளைத்தான் உலகெங்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் யானைகள் சில இறக்கின்றன என்பதால் இது சட்டவிரோதமான செயலாக அரசுகளால் தடைசெய்யப்பட்ட முறை. ஆனால் தேனீச் சுவரால் யானைகளுக்கு பெரிய தொல்லை எதுவுமில்லை. மேலும் தேனீக்களின் வருகையால் மகரந்தச் சேர்க்கை அதிகமாகி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மரம், புல், செடி, கொடிகளின் எண்ணிக்கை பெருகி பசுமையும் பரவுகிறது. கால்நடைகளுக்கு உணவு உற்பத்தி கூடுகிறது.

எளிய ஆனால் பெரும்பலன் தரக்கூடிய இந்தக் கண்டுபிடிப்புக்காக லூசிகிங் 2013-ஆம் ஆண்டுக்கான ப்யூச்சர் ஃபார் நேச்சர் விருதை வென்றிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச ஆராய்ச்சிப் பரிசை கொடுத்து இவரை கவுரவித்திருக்கிறது.unnamed8-450x409.jpgunnamedw-450x275.jpg

http://tamil24news.com/news/2015/04/14/யானைகள்-அட்டகாசம்-நம்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல யோசனை.
இயற்கையை  நன்கு அவதானித்தாலே... பல தீங்கு இல்லாத மாற்று வழிகளை, மனிதர் கற்க முடியும். :)

Posted

நல்ல யோசனை.

இயற்கையை  நன்கு அவதானித்தாலே... பல தீங்கு இல்லாத மாற்று வழிகளை, மனிதர் கற்க முடியும். :)

உண்மை.. தேனீக்களை பாவித்தல் இயற்கை வேளாண்மை. :D மின்சார வேலி அமைத்து யானையை கொடுமைப்படுத்துதல் நவீன விவசாயம். :o

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது போன்று தேசிய செயற்பாட்டாளர்கள் அனைவரையும் வியாபார நாய்கள் என்று எழுதும் உம் போன்றோர் தான் பகைமையை மூட்டி தமிழர்களுக்கிடையே ஆன இடைவெளியை விதைத்து இன்றைய தமிழரின் பெரும் பின்டைவுகளுக்கு காரணம். சிங்கள சூ..... நக்கி நாய்களான உங்கள் போன்றவர்களின் இந்த செயல்களுக்காக உங்கள் வம்சமே அழிந்து நாசமாகப் போகும். 
    • ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...
    • ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂
    • ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப்  போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
    • அதுமட்டுமல்லாது...அடுத்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் உங்க்ள் கட்சிக்கு இளைஞர்களை  அடுத்த தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்..அவர்கள் தலமைத்துவத்தை எடுத்து செல்ல வழிவகுக்க வேண்டும்.. தமிழரசுகட்சி புது யாப்பை உருவாக்க வேண்டும் 60 வயதுக்கு பிறகு எம்.பி யாக வருவதற்கு தடை போட் வேணும் ..ஒரு எம்பி மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை அனுமதிக்க கூடாது....இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார் இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார்   அர்ஜுனா ராமநாதன்(சுயேட்சை) தனது பதவிக்காலத்தில் அரைவாசியை தனது கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளருக்கு கொடுப்பதாக் கூறியிருந்தார் ...அந்ததெளிவு கூட உங்கன்ட கட்சிகாரர்களுக்கு இல்லை    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.