Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண் மணக்குதுகா....!

Featured Replies

10983825_1383298101990158_82095990182260

 

 

மண் மணக்குதுகா....!
----------------------------------
சுத்திவர வேலி
வேலி நிறையக் கள்ளி கரு நொச்சி
சப்பாத்தி முள்ளு கிடசரியா 
ஆடாதோடை விண்ணாங்கு 
வேலிப் பருத்தி விஷ முருங்கை 
இடையிடையே இப்பிலி 
 
இன்னும் சொன்னால் இலவ மரம்
மஞ்சோணா பூவரசு 
சுண்ணக்கொடி கோமரச 
மோதிரக்கண்ணி பேய்ப்பாவை 
குரங்கு வெற்றிலை கிளாக் கன்று 
எருக்கலை பூமுத்தை காசான்செடி 
பொண்டாட்டி மரம் முள் முருங்கை 
இப்படி இருந்த வேலிகள் எங்கே....?
 
தோளில் துண்டு இடுப்பில் சிறுவால் 
பேருக்குச் சாரன் கொழுவிய சட்டை 
கூன் இல்லா முதுகு நேரான நடை 
ஊருக்கு உழைத்து யாருக்கும் அஞ்சா 
பேரோடு வாழ்ந்த பெருமக்கள் எங்கே....?
 
குனிந்த தலை நிமிராத
களவெட்டிக்குப் போனாலும் 
களையெடுக்கப் போனாலும் 
காட்டுக்கு விறகெடுக்க
காவலின்றிப் போனாலும் 
கற்புக்குப் பங்கம் கடுகளவும் இல்லாம
கரை சேர்ந்த கன்னிகளும்
வீடு சேர்ந்த தாய் மாரும் எங்கே...?
 
இலுப்பை முதிரை இனிய பூவரசு
விண்ணாங்கு வீரை விளினை முளிலை
நெருப்பு வாகை கருங்காலி 
துவரை உலுமுத்தை காட்டு நெல்லி காசான்
பாலை ரானை இப்படி பரந்து
பலன் தந்து நின்ற காட்டு மரங்கள் எங்கே...?
 
நெல் காத்து நின்ற பட்டறை
அரிசாக்கி மாவிடித்த உரல்கள்
நெல் குற்றிய உலக்கைகள்
வண்டிலிளுத்த எருதுகள் 
அவை உறங்கிய மாட்டுக் குடில்கள்
ஆடு உறங்கும் மலைக் குன்றுகள்
உருண்டு திரியும் அவைதம் பிளுக்கைகள் 
நாய் உறங்கும் வைக்கோல் போர்கள்
கோழி படுக்கும் கைப் பெட்டிகள்
முட்டை பொறுக்கும் வைக்கோல் கொட்டுக்கள் 
காற்றுவாங்கும் பரனும் படுக்கையும்
மடித்துப் பின் விரிக்கும் சாக்குக் கட்டில்கள்,
 
கோழி விரட்டும் கம்பு 
தூங்க விரிக்கும் கற்பன் பாய்
நெல் உலர்த்தும் பன் படங்கு 
நெல் அவிக்கும் முடா
அரிசரிக்கும் அரிக்கிமிலா
மூத்தம்மா சோறுண்ணும் அத்துமிலா
அடிக்கடி தொலையும் பிசாக் கத்தி 
தண்ணி அள்ளும் பூவல் 
அதனோடிணைந்த வாளிப் பட்டை 
வேலியில் அடையும் கோழி
மாலையில் கத்தும் சில்லூரி 
முன்னிருட்டில் பறக்கும் மின்மினி
மாரியில் கத்தும் மோக்கை 
தத்தித்திரியும் களுகுளுப்பை
வேலியில் திரியும் ஓணான் 
கண்டால் கூசும் அரணை
வீட்டுக்குள் உறங்கும் சாரை 
எழுந்து நின்று பார்க்கும் கீரிப்ப்பிள்ளை
கூரையில் தொங்கிய தேன்கூடு 
பூக்கல்லுக்குள் குடியிருந்த குருவி 
அணையில் தெறிக்கும் மீன்
மழைத்துளியில் மணக்கும் புழுதி
நெல்லுத் தூத்திய அவரி 
கூழன் அகற்றிய கட்டைமிலாறு 
நெல் மரம் வீழ்த்திய தாக் கத்தி 
பொலி அளந்த மரைக்கால்
சூடுமிதித்த எருமைகள்
வைக்கோல் வாட்டிய வேலைக்காரன் கம்பு 
நெல்லுக் கட்டிய சாக்கு 
சாக்குப் புரைந்த கோணி ஊசியும் சணலும் 
மூடை தூக்கிய விவசாயி
வேலி கட்டிய கிடுகும் ஊசி மூக்கும் 
விசேஷம் கண்ட பந்தலும் பாளையும்
பிள்ளையைத் தண்டிக்கும் பிரம்பு 
மாட்டுக்கு குறிவைக்கும் சூட்டுக் கோல் 
உறியில் தொங்கும் தயிர்ப் பானை 
மூலையில் தொங்கும் பாய் அசவு
ஓரத்தில் கிடக்கும் பெட்டகம் 
அடுக்களையில் கிடக்கும் அம்மிக் குழவி
பருவத்தில் பறக்கும் வண்ணாத்திக் கூட்டம் 
எப்போதும் பறக்கும் தும்பி
சுரைக் கொடியில் மொய்க்கும் சுரை வண்டு 
வேரில் பழுக்கும் பலா
தேடுவாரற்ற மாமரம்
மாக்கத்தான் பறித்துப் போட்ட நாவற்பழம் 
உதயத்தில் போகும் திண்ணைப்பள்ளி 
ஒடுக்கத்துப் புதன் மீலாதுன்னபிப் பவனி 
இப்படி நாம் சுகித்த திரவியங்கள் எங்கே.....?
 
உயிர் காத்த தோழன்
உலகமான மனைவி 
உண்மையான உற்றார் உறவினர் 
உணவு தந்த அயல்வீட்டான்
நாணயமான வியாபாரி
நம்பிக்கையான உழைப்பாளி 
நம் நிலத்தின் நாகரீகம்
காலத்தில் புதைந்து 
பொக்கிஷமாய் ஆனதுவோ....?
 
Thanks:Muhammath Ranoos
 
 
FB மட்டு மண்

11060330_1556058307999941_13396442211065

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தூய சிந்தனையும் மன அழுத்தமில்லாத  சொர்க்கலோக வாழ்க்கையென்றால் இதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் மணக்கும் கவிதையில் இழந்த வாழ்க்கை இழையோடுகிறது கனவாய்.  நல்ல கவிதைப் பதிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.