Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்த வரவேற்புடன் கனடாவில் மோடி.

Featured Replies

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று மாலை கனடா ஒடாவா வந்தடைந்தார்.கடந்த 42 வருடங்களின் பின்னர் இந்திய பிரதம மந்திரி ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரு தரப்புப் பயணம் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியப் பிரதம மந்திரியின் பயணத்தின்போது, பாதுகாப்பு, வணிகம், சுற்றுச் சூழல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி ஒடாவா விமான நிலையத்தில் வரவேற்றார். நாளைய தினம் அவர் பிரதம மந்திரி ஹாப்பரைச் சந்திக்கவுள்ளர்.

ரொறன்றோ, வன்கூவர் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்யும் மோடி கனடாவில் உள்ள 1.2 மில்லியன் இந்திய வம்சாவளியினரில் சிலரையும் சந்திப்பார். அதேவேளை, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இதேவேளை, நரேந்திர மோடியை ஏற்றிச் சென்ற எயார் இந்தியா விமானத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், ஜேர்மனியில் இருந்து அவரைக் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு, இந்தியாவில் இருந்து மற்றொரு எயார் இந்தியா விமானம் அனுப்பப்பட்டதென இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

modi-in-ottawa-600x337.jpg

modi-in-ottawa2-600x338.jpg

modi-in-ottawa3-600x338.jpgmodi-in-ottawa-1.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41065.html#sthash.iHDcBB77.dpuf

  • தொடங்கியவர்

11148766_1120360284656145_26247985151000
11083857_1120360397989467_14300458323848
11150220_1120360311322809_22989515211170
11150616_1120360374656136_32628724882635
11058693_1120360411322799_55281422150800
 

இந்தியப் பிரதமரின் கனடிய விஜயத்தால் விசா வழங்கல் முறையில் மாற்றம் :

Thursday 16th of April 2015 10:00:44 PM

இந்தியப் பிரதமர் கௌரவ நரேந்திர மோடி டொரோண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். வழமையாக டெர்மினல் களுக்குச் சென்று வி.ஐ.பி.களை அழைப்பதுண்டு. ஆனால் இம்முறை விமான ஓடு பாதையில் பிரத்தியேக இந்திய விமானத்தில் வந்திறங்கிய இந்திய பிரதமரை வரவேற்றது வித்தியாசமாக இருந்தது.

7 நிமிடத்தில் 100க்கு அதிகமான வர்த்தகப் பிரமுகர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் இந்தியப் பிரதமர் கை கொடுத்தார். அப்பாடா ! எதிர்பார்க்கவில்லை , என் கைகூட இந்த 100 க்குள் அடக்கம்.

றிக்கோ கொலுஸியத்தில் " கனடாவில் இருக்கும் இந்தியர்கள் கனடாவிற்கு உண்மையாக இருங்கள். அப்போதுதான் இந்தியாவிற்கு பெருமை ." எனப் பேசத்தொடங்கியவர் ஒரு மணி நேரம் எந்தக் குறிப்பும் பாராமல் தொடர்ந்து பேசினார். சுழல் மேடையாக இருந்ததால் நான்கு புறம் இருப்பவர்களும் பேச்சை ரசிக்கக் கூடியதாக இருந்தது.இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம் , அவருடைய முழு உரையும் ஹிந்தியில் இடம் பெற்றது.

இறுதியாக உரையில், கனடா நாட்டவர்களுக்காக, தாராளமான விசா கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். “இந்த புதிய விசாக் கொள்கை மூலம் இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள் மேம்படும்’ என அவர் தெரிவித்தார்.

அதே மேடையில் பேசிய கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு கனடா யுரேனியம் சப்ளை செய்யும்’ என்றார்.

ரசிகனுக்காக தமிழன் வழிகாட்டி செந்தி ...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.