Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது நீர் வளத்தைப் பாதுகாப்போம் - சாந்தி சச்சிதானந்தம்

Featured Replies

save%20water_CI.jpg

சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிட்ட  நேரத்தில் தண்ணீர் மாசுபடும் விடயம் பற்றி எமது கவனங்கள் திரும்பியிருக்கின்றன. அதுவும் நல்லதே. 2025ம் ஆண்டில் இலங்கையில் சகலருக்குமான குடிநீர் தட்டுப்பாடு வரப்போகின்றது என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பரவலாக சிறுநீரக நோய் பீடிக்கப்பட்டு இறப்புக்கள் ஏற்படுவதும் நீர் மாசுபடுவதலேயே என பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கின்றன. 

எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும் குடிநீர் மாசடையும் பிரச்சினை மறுபுறமுமாக நாம் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். வுட மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் 2.5 மில்லியன் மக்கள் மத்தியில் 30க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதில் உள்ள விவசாயத்தில் ஈடுபடும் ஆண்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவதாகக் காணப்படுகின்றனர். அங்குள்ள வைத்தியசாலைகளில் 40வீதமான நோயாளர்கள் சிறுநீரகப் பாதிப்புள்ள நோயாளர்களாகும் .இவர்கள் நோய் கண்ட இருவருடங்களுக்குள் சிறுநீரகம் செயலிழப்பதனால் இறக்கக் காணப்படுகின்றனர். 2005ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி அந்த வருடம் எமது நாட்டின் வைத்திய செலவுகளில் கிட்டத்தட்ட 350 மில்லியன் ரூபா சிறுநீரக நோய் சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்டதாம். 

இப்nபொழுதெல்லாம் சிங்கள சமூகத்தில் திருமணப் பேச்சுக்களின்போது மதவாச்சி, மெதிரிகிரிய, பதவிய போன்ற இடங்களிலிருந்து மாப்பிள்ளை வரன்களை வேண்டாம் என்கிறார்களாம் பெண் வீட்டார். ஏனெனில், அவர்கள் சிறுநீரக நொயால் பீடிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதனால். அப்பிரதேசங்களிலிருந்து படிப்படியாக இளைஞர்கள் வெளியேறி வேறு ஊர்களில் தொழில்களுடன் குடியமருகின்றனர். அப்பப்பா, எவ்வாறானதொரு சமூகப் பிரச்சினையாக இது மாறிவிட்டது பாருங்கள்!

கடந்த பத்து வருடங்களாக சிறுநீரக நோய்களைப் பற்றிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. ஏனைய பிரதேசங்களில் இல்லாத என்ன காரணி இங்கு இந்நோயை ஏற்படுத்தகின்றதென்பதை அச்சொட்டா இவற்றினால் கணிக்க முடியாமல் இருக்கின்றது. கட்மியம், ஆசினிக், யுரேனியம், புளோரைட் போன்ற இரசாயனப்பதார்த்தங்கள் நீரில் கலந்துள்ளதனால் இந்நோய் ஏற்படுகின்றது என வாதிடுவோர் சிலர். இவையெல்லாம் பூச்சிகொல்லிகளிலிருந்தே பெறபப்படுகின்றன. ஆனால், இதே மாசுக்கள் ஏனைய விவசாயப் பிரதேசங்களிலும் காணப்படக்கூடியதாயிருக்கும் வேளையில் வட மத்திய மாகாணத்தில் மட்டும் ஏன் என்கின்ற கேள்வி குடைந்த வண்ணமே இருக்கின்றது. 

அது ஓர் உலர் வலயமாக இருப்பதும், அங்கு நீரில் கூடியளவு கல்சியம் காணப்படுவதும், அங்குள்ள மக்கள் குறைந்த அளவு நீரையே தினமும் பருகும் வழக்கமுடையவர்களாயிருப்பதும் ஒருவித அமிலம் கலந்த ஆயுர்வேத மருந்துகளை அவர்கள் அதிகம் உபயோகிப்பதும் இதற்கு துணை போகும் காரணிகளாகக் கருதுகின்றனர். தண்ணீரில் உள்ள கல்சியம் ஆசீனிக்குடன் சேருவதனால் ஏற்படும் நஞ:சு சிறுநீரகங்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றனவாம். எமது உடலில் சேரும் அழுக்குகளை வெளியேற்றும் முக்கிய கடமை சிறுநீரகங்களுக்கல்லவா உண்டு? அதனால்தான் சூழல் மாசுக்கள் சிறுநீரகங்களையோ பாதிப்பதைக் காணலாம். எப்படியிருப்பினும், தண்ணீரிலிருந்துதான் இது ஏற்படுகின்றது என்பதும், பாதிக்கப்ட்டவர்களின் சிறுநீரகங்களில் உயர்ந்த அளவு ஆசீனிக் மற்றும் புளோரைட் பதார்த்தங்கள் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நிலத்து நீர் மாசடைவதற்கான ஒரேயொரு காரணம் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் உபயோகிக்கும் விவசாய முறை என்பதும், அடுத்து, உற்பத்தித் தொழிற்சாலைகள் கழிவாக வெளியேற்றும் இரசாயனங்கள் என்பதும் தெளிவு.

என்னுடைய நண்பரொருவர் மட்டக்களப்பில் விவசாயம் செய்பவர். ஒருமுறை தனது அறுவடையில் ஒரு மூட்டை  அரிசியினை எனக்கு கொடுத்தார். கொடுக்கும்போதே “இது எங்கள் குடும்பத்திறகென்றே மருந்து ஒன்றும் போடாமல் வேறாக வயலில் விளைந்த அரிசி” என்றார். அப்போ, குடும்பத்துக்கு மட்டும் மருந்து போடாத நல்ல அரிசி, காசுக்கு வாங்குபவனுக்கு மருந்து போட்ட அரிசியா? கேட்டேன். ஒரு விவசாயி தனது விளைச்சலை வாங்கும் தனது வாடிக்கையாளனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? அந்த வாடிக்கையாளர்கள் நோய் வந்து இறந்து விட்டால் இவர்கள் உற்பத்தி செய்வதை வாங்குவதற்கே ஆட்கள் இருக்க மாட்டார்களே. ஒரு கற்பனைக் கேள்விதான், கேட்டு விட்டேன். தமக்கு நன்மை கொடுக்கும் தமது வாடிக்கையாளர்களின் நலன்களைப் பேணும் அந்த பண்பு எமது சமூகத்தின் பாரம்பரியம் அல்ல என்பதை இந்தக் கதையை வைத்துக்கொண்டே உணர்;ந்து கொள்ளலாம். இதுவரை தாம் மட்டும் மருந்து போடாத உணவை உண்டு பாதுகாப்பாக வாழலாம் என்று இருந்த நம்பிக்கை இன்று அம்மருந்துகள் தண்ணீர்pல் கலந்து  தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் எமனாக வரலாம் என்கின்ற உண்மையுடன் பொடிப்பொடியாகி விட்டன. ஆம், இப்பொழுது பாவனையாளர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகளுக்கே இது மிகுந்த ஆபத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. 

இதுவரைகாலமும் இலாப நோக்குடன் மருந்தடித்து வந்தவர்கள் உ~hராக விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. முன்பெல்லாம் ஏதாவதொரு நிறுவனம் வந்து இயற்சை விவசாயத்தைப் பற்றிய பயிற்சியை வழங்கி, அம்முறைகளை உபயோகிக்கும்படி ஊக்கப்படுத்தி, அதிலிருந்து இலாபம் பெறலாம் என நிறுவிய பின்னரே ஒரு சில விவசாயிகள் அதனைப் பின்பற்றுவது  வழக்கமாக இருந்தது. இனியும் விவசாயிகள் இவ்வாறு குழந்தைப்பிள்ளை விளையாட்டு விளையாட முடியாது. தத்தமது விவசாய சங்கங்களின் மூலம் சகல உறுப்பினர்களும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரசாயனங்களின் தீமைகளைப் பற்றியும், அதனை அடுத்தவர்களுக்க மட்டும் ஏற்படும் தீமைகளாக மட்டுப்படுத்த முடியாத தன்மை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாழைப்பழம் பழுக்கவும், மாமரம் காய்க்கவும் இரசாயனப் பதார்த்தங்களை உபயோகிப்பது கடைசியில் எங்களெல்லாருக்குமே யமனாக வந்து முடியும்’ என்பது காட்டப்பட வேண்டும். எங்கு மருந்து போட்டாலும் அது ஒன்றில் மண்ணுடன் கலக்கின்றது, அல்லது தண்ணீரில் கலக்கின்றது, அல்லது காற்றுடன் கலக்கின்றது. எதில் கலந்தாலும் எல்லோருக்கும் ஆபத்துத்தான்.

அடுத்து, விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் திறம்படச் செய்யக்கூடிய ஆற்றல்களை  வழங்கும் பயிற்சிகளை விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.  பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் இப்பொழுதெல்லாம் இயற்கை முறை விவசாயம் மிகப் பிரபல்யமாகிக்கொண்டு வருகின்றது. இந்த இயக்கத்தில் இன்றுவரை கிட்டத்தட்ட 9000 விவசாயிகள் இணைந்திருக்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. எமது விவசாயிகள் இத்தகைய இயக்கங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அவர்களின் பயிர்ச்செய்கையினைப் பார்வையிடுவதனால் பல புதிய யுக்திகளைத் தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் இணைந்து சமூக மட்டத்தில் பரவலாக இதனைப் பற்றியவிழிப்புணர்வினைக் கொண்டு வருவதனால், உற்பத்தியுணவுப் பொருட்களை வினியோகிப்பவர்கள் கூட அவை கவர்ச்சியாகவும் பு~;டியாகவும் காணப்படுவதற்கான மருந்துகளை உபயோகிக்காமல் நிறுத்த வேண்டும். 

பாவனையாளர்களுக்கும் தாம் வாங்கும் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். புழுப் பிடித்த கத்தரிக்காய் பளபளவென்று மினுங்கும் பருத்த கத்தரிக்காயை விட ஆரோக்கியமானது  என்பதை அவர்கள் அறிய வேண்டும். கமநலத் திணைக்களம் இயற்கை முறை விவசாயிகளுக்காக மட்டும் சேவைகளும் மானியங்களும் வழங்குவதாகத் தமது கொள்கைத் திட்டங்களில் மாற்றங்களைக்கொண்டு வருதல் வேண்டும். அரசாங்கம் செயற்கை உரங்களையும் பூச்சிகொல்லிகளையும் இறக்குமதி செய்வதை முற்றாகத் தடை செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் விவசாயிகளே முன்னின்று செயற்படுத்தும் திட்டங்களாக அவை பரிணமிக்க வேண்டும்.

கொள்கைத் திட்டங்களில் நீரைப் பரிசோதிக்கும் வசதிகளையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தும அவசியமும் உண்டு. இலங்கையில் இவ்வசதிகள் பரவலாக இல்லாமையும், அவை இருந்தாலும் அசட்டையாக உபயோகிக்கப்படுவதும் அனுபவத்தில் நாம் காணும் விடயங்களாகும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் நீர் மாசடநை;திருக்கின்றது என சந்தேகித்த ஒருவர் அந்நீரின் பல மாதிரிகளை நீர் பரிசொதிக்கும் அரச ஆய்வுகூடத்துக்கு கொடுத்திருக்கின்றார். சகல மாதிரிகளும் சுத்தம் என ஆய்வு அறிக்கைகள் காட்டின. அதனைச் சந்தேகித்து அவர் இன்னொரு மாதிரியில் அந்த இரசாயனப் பதார்த்தினையே கலந்து அய்வுக்குக் கொடுத்தப் பார்த்தார். அதுவும் சுத்தம் என அறிக்கை வந்தது! சுன்னாக தண்ணீரிலும் கிட்டத்தட்ட இதே சந்தேகங்கள் வலுவடைந்திருக்கின்றன. எனவே, தரமுளள்ள ஆய்வுக்கூடங்களை அரசாங்கம் தாபிக்க வேண்டியதும் பாதுகாப்புக்கான இன்னொரு அவசியத் தேவையாகும்.  

இதனைவிட நீPரை சிக்கனமாக உபயோகிப்பதிலும் நம்மவர்களுக்கு பாடம் தேவையாக இருக்கின்றது. வெறுமனே காலால் கழுழுவுவதற்கு ஒரு பெரிய வாளியையே கவிழ்ப்பார்கள். குளிப்பதென்றால் கேட்க வேண்டாம். வாளி வாளியாக  அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தால்தான் குளித்தது போலவே இருக்கும். பொதுக் குழாயகளில் தண்ணீர்  வழிந்தோடினால் அதனைக் கவனிப்பார் இல்லை. மொத்;தத்தில் நீர் பற்றிய புதியய பிரக்ஞை எங்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது. அதில் சகல மக்களுமே இணைந்து செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது. 

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118740/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.