Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஜினிகாந்தின் திரைப்படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்தின் திரைப்படங்கள்

Rajnikanth.jpg

ஏழாவது மனிதன் படத்தை இயக்கிய கே.ஹரிஹரன் ரஜினிகாந்த் பற்றி கட்டுரைகள் எழுதினாலும் தொலைக்காட்சியில் பேசினாலும் ஒரு விஷயத்தை முக்கியமாக வலியுறுத்துகிறார்.ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் காரணம் அந்தக் காலகட்டம்தான் என்கிறார்.1975யில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மிகச் சிறிய வேடத்தில் ரஜினிகாந்த் அறிமுகமாகிறார்.அந்தக் காலகட்டத்தில் லட்சியவாதத்தின் மீது இளைஞர்களுக்கு உருவான நம்பிக்கையின்மையும் விரக்தியுமே ரஜினிகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்கிறார் ஹரிஹரன்.இதில் ஒரளவு உண்மை இருக்கிறது.என் தந்தை பழைய காங்கிரஸில் இருந்தார்.காமராஜரின் பக்தர்.எழுபதுகளில் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்று உடைகிறது.இந்திரா காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றதில் உள்ள முக்கிய காரணம் காங்கிரஸ் அதுவரை உபயோகப்படுத்தி வந்த காளை சின்னத்தை பழைய காங்கிரஸால் தக்கவைத்துக்கொள்ள முடியாததுதான் என்று ஜெயகாந்தன் தன் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவ கட்டுரைகள் நூலில் எழுதுகிறார்.

பழைய காங்கிரஸ் கட்சியால் எந்த வகையிலும் மறுபடியும் எழுச்சி பெற முடியவில்லை.1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைகிறார்.என் தந்தை அடுத்த சில ஆண்டுகளில் ஜனதா கட்சியின் உறுப்பினரானார்.ஆனால் அதில் அவருக்கு பெரிய ஆர்வமோ ஈடுபாடோ இருந்ததாக தெரியவில்லை. விழுப்புரத்தில் ஜூனியர் வழக்கறிஞராக வேலை செய்துகொண்டிருந்தபோது அவருடைய சீனியர் வழக்கறிஞர் அவரை அழைத்து பத்து ரூபாய் கொடுத்து நான் வாழவைப்பேன் என்ற திரைப்படம் வந்திருக்கிறது, அதில் ஒருவன் நன்றாக நடித்திருக்கிறான் போய் பார் என்று சொல்லியிருக்கிறார்.அதில் ரஜினிகாந்த் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சிவாஜிதான் ஹிரோ.காமராஜர் பக்தராக இருந்த என் தந்தை அப்படியாக ரஜினி ரசிகராக மாறுகிறார்.1980யில் என் தந்தைக்கு திருமணம்.அதுவரை இருந்த சிறிய அளவிலான அரசியல் ஈடுபாடும் அதன் பின் இல்லாமலானது.எனக்கு நினைவு தெரிந்து விழுப்புரம் , விருத்தாசலம், கடலூர் , சிதம்பரம் என்ற பல ஊர்களுக்கு ரஜினி திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் அல்லது இரண்டாவது காட்சிக்கு நாங்கள் சென்றிருக்கிறோம்.தொண்ணூறுகளுக்கு பிறகு சிறிது சிறிதாக அது குறைந்தது.ஆனால் பாபா படம் வரை என் தந்தையும் திரைப்படங்களை பார்த்தார்.அதன்பின் அவர் திரையரங்களுக்கு செல்வதில்லை.இப்போது அவர் ரஜினி ரசிகராகவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.அந்த வகையில் கே.ஹரிஹரன் சொல்வதை ஒரளவு ஏற்க முடிகிறது.

ஒரு முறை ஆம்பூரில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.என் நண்பனின் பெரியப்பா காவி வேஷ்டி கட்டி பெரிய ருத்திராட்ச மாலை அணிந்துகொண்டு சாய்வு நாற்காலியில் செளகரியமாக அமர்ந்து முள்ளும் மலரும் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.அவருடைய நண்பர் அவரை பார்க்க வந்திருந்தார்.இருவரும் முள்ளும் மலரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.நானும் பார்த்தேன்.அப்போது அந்த நண்பர் அந்த வயோதிகரிடம் இந்த மாதிரி திரைப்படங்களில் நடித்ததால்தான் இவரை மக்கள் ஏற்றார்கள் என்றார்.இதுவும் முக்கியமான தரப்புதான்.

ரஜினிகாந்த் 1975யில் பாலசந்தர் மூலமாக அறிமுகமாகிறார்.அவர் திரைப்படக்கல்லூரியில் நடிப்புத்துறையில் பயிற்சி பெற்றவர்.தொடர்ந்து அவர்கள், மூன்று முடிச்சு என்று பாலசந்தர் படங்களில் ஒப்பந்தமாகிறார்.பூவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் கதாநாயகனாகிறார். இந்த காலத்தில் அவருக்கு பல்வேறு அகச்சிக்கல்கள் ஏற்படுகிறது.சட்டென்று நிறைய பணம் , ஒரே நேரத்தில் ஏகப்பட்ட படங்கள், அலைச்சல், தனிமை என்று அவர் சிதறுகிறார்.சில காலம் சிகிச்சையும் பெறுகிறார்.அபிலாஷ் புருஸ் லீ பற்றி எழுதிய புத்தகத்தில் லீ எப்படி தன் வெற்றியால் முற்றிலுமாக சிதறுகிறார் என்று எழுதுகிறார்.கிட்டத்தட்ட அதனோடு ரஜினிகாந்தையும் ஒப்பிடலாம்.ஆனால் ரஜினி மீள்கிறார்.ஒரு பத்திரிக்கையாளர் ரஜினி பற்றி சமீபத்தில் எழுதியிருந்தார்.1980களில் அவருடைய திருமணத்திற்கு முன்பே அவர் ஒரளவு நிலையானவராக மாறியிருந்தார் என்கிறார்.பேச்சில் எப்போதும் ரமணரை பற்றி குறிப்பிட்டுயிருக்கிறார்.நாம் அதைப்பற்றி பேசுவோமே என்று பத்திரிக்கையாளரிடம் சொல்கிறார்.அதற்கு அவர் அதையெல்லாம் பிரசுரித்தால் யாரும் வாசிக்கமாட்டார்கள் என்கிறார்.

தர்மயுத்தம் அவர் கதாநாயகனாக நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படம்.1979ஆம் ஆண்டு முள்ளும் மலரும் வெளியானது.ஒரு நல்ல நடிகர் என்ற எண்ணத்தை அவர் பெறுகிறார்.1980யில் ஜானி,முரட்டுகாளை, பில்லா போன்ற படங்களில் நடிக்கிறார்.அவர் சூப்பர் ஸ்டாராக ஆகிறார்.1975யிலிருந்து 85வரையான பத்துவருடங்களுக்குள் அவர் நூறு படங்கள் நடித்திருக்கிறார்.அதன்பின் இந்த முப்பது வருடங்களில் அவர் ஐம்பது படங்கள்தான் நடித்திருக்கிறார்.அவர் என்பதுகளிலிருந்து தொண்ணூறுகள்வரையான காலத்தில் நடித்த பல வெற்றி படங்கள் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தவை.பில்லா, தீ, மிஸ்டர் பாரத் போன்ற படங்கள் எல்லாமே இந்தியில் வெற்றி பெற்று பின்னர் தமிழில் வந்தவை.அவருடைய கதைப்படங்கள் பெரும்பாலும் இந்த காலத்தில் வந்தவைதான்.முள்ளும் மலரும்,ஜானி,கை கொடுத்த கை, ஆறிலிருந்து அறுபது வரை, தம்பிக்கு எந்த ஊரு, தில்லுமுல்லு, குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன் எல்லாமே கதைப் படங்கள்.இதில் அவர் கதையை தீர்மானிப்பவராக இல்லை.இந்த படங்களில் பொது சரடாகவும் எதுவும் பெரிதாக இல்லை.ஒரே பொது சரடு என்றால் அது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது தட்டிக்கேட்பவர்,பெண்கள் பின்னால் சுற்றாதவர், எளிய குடும்பத்தில் பிறந்தவர் போன்றவை.இவற்றை ஒரளவு விஜயகாந்தும் பிற்காலத்தில் செய்தார்.ஆக, ரஜினி இந்த காலத்தில் நடித்தவை முழுக்க வெகுஜன படங்கள் அல்லது கதைப்படங்கள் என்ற அளவிலேயே இருந்தன.

ஆனால் தொண்ணூருகளுக்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை பார்க்க முடியும்.அவர் ஏழையாக பிறப்பார்.அவர் தன் பிறப்பின் மூலமாகவோ உழைப்பின் மூலமாகவோ மந்திரத்தின் மூலமாகவோ மிகப்பெரிய பணக்காரராக , அதிகாரம் கொண்டவராக மாறுவார்.ஆனால் இறுதியில் அந்த பணத்தை, அதிகாரத்தை விட்டுவிட்டு எளிய மனிதராக பற்றற்ற நிலையில் வாழவிரும்புவார்.தாய், நண்பன் தவிர்த்த பிற உறவுகள் மீது ஒரு பற்றற்ற மனநிலை அவருக்குள் இருக்கும்.பணக்காரன், உழைப்பாளி, முத்து, வீரா, பாட்ஷா, பாபா, லிங்கா என்று எந்த திரைப்படத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த சட்டகம் அதிலிருக்கும்.

எஜமான் திரைப்படம் முடிந்து வள்ளி படத்தின் திரைக்கதையை இளையராஜாவிடம் சொன்ன போது , இளையராஜா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஒரு இயக்குனர் போல கதை சொன்னதை கேட்டு வியந்ததாக அவரே ஒரு மேடையில் சொன்னார்.அப்போது அவர் ரஜினியிடம் இனி உங்கள் திரைப்படங்களில் கதையை நீங்களே தீர்மானியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இளையராஜா சொன்னதால் ரஜினிகாந்த் அப்படி செய்தார் என்று சொல்ல முடியாது, ஆனால் தொண்ணூறுகளுக்கு பிறகு அநேகமாக எல்லா திரைப்படங்களிலும் கதையை அவரை முடிவு செய்திருக்கிறார்.யார் இயக்க வேண்டும் யார் தயாரிக்க வேண்டும் என்ற விஷயங்களை முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவராக மாறியிருக்கிறார்.இதன் மூலமாக கதையில் தான் விரும்பக்கூடிய ஒரு சட்டகம் இருப்பதாக பார்த்துக்கொண்டார்.இந்த சட்டகம் கிட்டத்தட்ட ரஜினிகாந்த் தன் வாழ்க்கையை பற்றி தானே விரும்பும் ஒரு பார்வைதான்.அவர் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்.அவருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கிறது, பெரிய நடிகராகிறார், ஆனால் அதன் மீது அவருக்கு பற்றோ, மகிழ்ச்சியோ இல்லை.திரையில் ஒடும் பிம்பங்களுக்கும் தொலைக்காட்சிக்கும் சம்மந்தமில்லை என்பதுபோல தன் வாழ்வில் தான் பற்றற்று இருக்கிறேன் என்பது போன்ற ஒரு சித்திரத்தை அவர் உண்மையிலேயே நம்புகிறார்.இதில் உண்மையில்லாமல் இல்லை.சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தன் பால்ய கால நண்பர்களை பார்க்க வந்திருக்கிறார் ரஜினிகாந்த்.அப்போது அவர் வந்திருந்ததை அறிந்து அவரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.செய்திதாளில் அடுத்தநாள் செய்தியும் வந்தது.இதில் உள்ள விஷயம் தன்னை ரஜினிகாந்தாக அல்லாமல் சிவாஜிராவாக மட்டுமே அறிந்த தன் பால்ய கால நண்பர்களோடு .நேரம் செலவழிக்க அவர் விரும்புகிறார்.ஏதோ ஒரு வகையில் அவர் இந்த நடிகர் என்ற வளையத்திலிருந்து தப்பித்து வெளியே சென்று சில காலம் இருக்க விரும்புகிறார்.அவருடைய இமயமலை பயணம் போன்ற விஷயங்களுக்கு பின்னால் ஆன்மிகம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த ரஜினிகாந்திலிருந்து தப்பித்து போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் தான் தன் திரைத்துறையில் அடைந்த இடத்தை விடவும் அவருக்கு மனமில்லை.லிங்கா வெற்றி படம் என்றோ தோல்வி படம் என்றோ சொல்ல முடியாது.ஆனால் பெரிய வெற்றி இல்லை.இப்போது அவர் நிச்சயம் அடுத்த படம் செய்வார்.ஏனேனில் ஒரு வெற்றிப்படம்தான் தன் அதுவரையான படங்களின் கடைசிப்படமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.அதன்மூலமாக திரைத்துறையில் தன் இடத்தை அவர் பற்றிக்கொள்ள விரும்புகிறார்.

ரஜினிகாந்தின் பிற்கால திரைப்படங்களான சிவாஜியில் கூட இந்த சட்டகம் ஒரளவு இருக்கிறது.பாபா திரைப்படம் அநேகமாக ரஜினிகாந்த் பார்வையில் அவருடைய சுயசரிதை.அவர் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொள்கிறார் என்று தோன்றுகிறது.அவர் தெய்வீக அம்சங்கள் கொண்ட பிறவி.தன் சூழலில் கெட்ட நண்பர்களோடு ஏற்படும் தோழமையால் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்.பின்னர் அவருக்கு மந்திரங்கள் கற்றுத்தரப்படுகின்றன.அவர் அதிகாரத்தின் அருகில் செல்கிறார்.அந்த அதிகாரத்தை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் மக்களுக்காக பயன்படுத்த விரும்புகிறார்.தான் நேரடியாக அதிகாரத்திற்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை.ஒரு நல்ல மனிதரை அதிகாரத்திற்கு கொண்டுவருவதாலும் அதை செய்ய முடியும் என்று நினைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மந்திரம் என்பதற்கு பதிலாக சினிமா என்று மாற்றினால் அது அநேகமாக ரஜினியின் கதை.ஆனால் ரஜினிகாந்த் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வில்லை.யாரும் யாருக்கும் தீய பழக்கங்களையோ நல்ல பழக்கங்களையோ கற்றுத்தர முடியாது.ஒரளவுக்கு வற்புறுத்தலாம்.ஆனால் அதை பழக்கமாக மாற்றிக்கொள்வது அந்த தனிப்பட்ட மனிதரை பொறுத்த விஷயம்.நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.

சமீபத்தில் சாபு சிரிலின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன்.அப்போது பேட்டி எடுத்தவர் சாபு சிரிலிடம் ரஜினிகாந்த் பற்றி ஏதாவது சொல்லச்சொன்னார்.அதற்கு சிரில் ரஜினிகாந்தை பொறுத்தவரை இந்த பிரபஞ்சமே அவரது வெற்றிக்காக பாடுபடுகிறது என்றுதான் தோன்றுகிறது என்றார்.

கே.ஹரிஹரன் சொல்வதில் உண்மை இருக்கிறது.அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் மத்தியிலிருந்த ஒரு வித கிளர்ச்சி(Rebel) மனநிலைக்கு ரஜினியின் பிம்பம் பொருத்தமாக இருந்திருக்கலாம்.அவர்கள் ரஜினியோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.அது ஒரு முக்கிய விஷயம்.இரண்டாவது காரணம் அவர் கதைப்படங்களில் நடித்ததும் தன்னை ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்ததும்.மூன்றாவது அவருடைய இயல்பான உடல்மொழி.ஒரு நடிகரின் உடல்மொழிதான் அவரின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.No Man’s Land என்ற திரைப்படத்தில் நடித்த Branko Duric என்ற நடிகரின் நடிப்பை பார்த்த போது சட்டென்று ரஜினியின் ஞாபகம் வந்தது.அந்த நடிகரின் நடிப்பு வசீகரமாக இருந்தது.கமலஹாசனின் உடல்மொழி தமிழ் வெகுமக்களுக்கு முற்றிலும் அந்நியமாக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.Wild strawberries படத்தில் நடித்த இங்கிரட் துலின் என்ற நடிகையின் உடல்மொழி நம்மை அபாராமாக வசீகரிக்கிறது.அப்படியொரு அசாதாதரமாண நடிப்பும் உடல்மொழியும் நம்மை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.இன்றைய நடிகர்களில் தனுஷ் வெற்றி பெறுவதறகு பின்னால் அந்த உடல்மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மேலே சொன்ன மூன்று விஷயங்களிலும் இல்லாத வேறொரு விஷயமும் ரஜினிகாந்த் விஷயத்தில் இருக்கிறது.அதைத்தான் சாபு சிரில் சொல்லியிருக்கிறார்.அதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அதிருஷ்டம்.திருஷ்டம் என்றால் பார்ப்பது, தெரிவது.அதிர்ஷடம் என்றால் தெரியாதது,அறியாதது.அந்த வகையில் ரஜினியின் வெற்றிக்கு பின்னால் இந்த அதிர்ஷடம் என்ற விஷயமும் இருக்கிறது.

ரஜினிகாந்த் கே.பாலசந்தரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் அடுத்த ஐம்பது வருடங்களுக்கு பிறகு தான் நடித்த திரைப்படங்களில் ராகவேந்திரா, பாட்ஷா , எந்திரன் போன்ற படங்கள் பார்க்கப்படும் என்றார்.ஆனால் உண்மையில் அடுத்த ஐம்பது வருடங்கள் கழித்து அவரின் முள்ளும் மலரும், ஜானி , தில்லுமுல்லு போன்ற படங்கள்தான் நிறைய பார்க்கப்படும் என்று தோன்றுகிறது.

http://sarwothaman.blogspot.in/2015/04/blog-post_19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.