Jump to content

போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம்


Recommended Posts

போர் விதவைகள்: சனல்4 ஆவணப் படத்தைபோல் மனதை உலுக்கும் மற்றொரு ஆவணப்படம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 08:30.18 PM GMT ]
war_film.jpg
போரில் வீசப்பட்ட குண்டு மழையால் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பல ஆண்கள் கொல்லப்பட்டு பல பெண்கள் விதவையானார்கள்.

இதுபற்றி பிரபல ஆங்கில  ஊடகம் ஒன்று போர்விதவைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளது.

 

இதில் சிவலிங்கம் மகேஷ்வரி என்ற வட மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை பற்றி கூறியுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டுப்போரில் நடந்த ஷெல் குண்டு தாக்குதலில் தப்பித்த சிலரில் ஒருவர் தான் இந்த மகேஷ்வரி. ஆனால் இவர் தனது கணவரையும், மகனையும் பறிகொடுத்தார். மேலும் தனது வலது கையையும் இதில் இழந்தார்.

பல தசாப்தகாலமாக நடைபெற்ற இந்த போரால் மகேஷ்வரியைப் போல 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவன்மார்களை இழந்து விதவைகளாகி தங்களையும், தன் குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.

இந்த போர்விதவைகளை இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக மறந்துவிட்டது. வாழ்வதாரத்துக்காக தவித்துவரும் இந்த ஆயிரக்கணக்கான விதவைகளுக்கு புதிய அரசாங்கம் என்ன உதவி செய்வார்கள் என்பதே தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது என்று கூறி இந்த ஆவணப்படத்தை முடித்துள்ளனர்.

 
Link to comment
Share on other sites

90,000 பெண்களின் இன்றைய நிலை என்ன? அதிர்ச்சியூட்டும் புதிய ஆவணப்படம்

 

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் நடந்த படுகொலையால் விதவைகளான தமிழ்ப் பெண்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளை பதிவு செய்யும் ஆவணப்படத்தை அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

போரில் கணவரை இழந்த பெண்கள், அன்றாட வாழ்க்கையை கடக்க அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளையும் மனக்குமுறல்களையும் அதிர்ச்சியுடன் இந்த ஆவணப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது ராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்களை பலி கொடுத்த மகேஸ்வரி என்பவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப் படம், இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அவலங்களையும் அம்பலப்படுத்துகிறது Widows of War எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம்.
உறவுகளை இழந்தவர்கள், உயிர்வாழ்வதற்காக எந்த வேலையையும் செய்ய தயாராக உள்ளதாக ஆவணப்படம் தெரிவிக்கிறது. கடற்கரையோரம் வரும் படகுகளில் இருந்து மீனை எடுத்து வியாபாரம் செய்வது, மளிகைகடையில் பணி புரிவது, சமையல் செய்து கொடுப்பது, வீட்டு வேலை செய்வது என பொருளாதார தேவைக்காக வேலை செய்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கையில் தமிழ் பெண்கள் இருப்பது ஆவணப்படத்தில் காட்சிகளாக  பதியப்பட்டுள்ளன.
இதே போல், போரில் கணவர் மற்றும் மகனை இழந்த மகேஸ்வரி, வலது கையையும் இழந்துள்ளார். ஒரு கையினால் வேலை செய்து, தமது பேரக்குழந்தைகளையும் பராமரித்து வருவதாக கூறுகிறார் மகேஸ்வரி.
இலங்கையில், சிறிசேனா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. கணவரை இழந்து வாடும் பெண்களுக்கு, தேவையான வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் மகளிர் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் சந்திராணி பண்டாரா.
இலங்கை அரசு, எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், 90 ஆயிரம் தமிழ் பெண்களையும் சென்று அடையவில்லை என்ற  தகவலடன் ஆவணப்படம் நிறைவடைகிறது. தமிழ் பெண்களின் நிலை எப்போது உயரும் என்றும் அல் ஜசீராவின் ஆவணப்படம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.