Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்கு எதிரான வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு

Featured Replies

நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்கு எதிரான   வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு – எதிர்வரும் 30-04-2015, வியாழன் மதியம் 13.30 மணிக்கு.

நெதர்லாந்தில் முக்கிய ஐந்து தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களிற்கு எதிரான வழக்கானது 'டென் காக்'  உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்ததே. இவ்வழக்கில், நெதர்லாந்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர், தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் நெதர்லாந்துக் கிளைப்பொறுப்பாளர் என்பதை தெரிவித்திருந்தார். மேலும்,
 

  •   ஈழத்தில் தமீழீழவிடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்டது பயங்கரவாதம் இல்லை,  

  •   அது சிங்களஅரசின் அடக்குமுறைக்குள்ளும் இனஅழிப்புக்குள்ளும் வாழ்ந்த ஈழத்தமிழர்களின்  சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப்போராட்டம்,

  •    தமிழீழவிடுதலைப்புலிகள் விடுதலைப்போராளிகள்,

  •  விடுதலைப்புலிகளை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத தடைப்பட்டியலில் இட்டது தவறு,

  •   நெதர்லாந்தில் தமிழ்மக்களிடத்தில் சேர்க்கப்பட்ட நிதியின் பெரும்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கே சேர்க்கப்பட்டது,

என்று மக்கள் முன்னிலையில் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடந்த தனது விசாரணையில் முக்கியமாக தெரிவித்து பல ஆதாரங்களையும் நீதிமன்றில் கொடுத்திருந்தார்.. அத்துடன், சிறுவர் போராளிகள் விடயமாக விடுதலைப்புலிகள் அமைப்பானது யுனிசெப்புடன் இணைந்து முழுஒத்துழைப்பும் செய்திருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் செய்திகளையும் மேலும், அண்மையில் வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட  இனஅழிப்பு தீர்மானத்தையும் இந்நீதிபதிகளிடம் 16.04.2015 அன்று நடந்த இறுதிஅமர்வில் கொடுத்திருந்தார்.

இதனால், இந்நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன நடைபெறப்போகிறது என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், சர்வதேச குற்றவியல் நீதிபதிகள் என்பதால், இத்தீர்ப்பானது, தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிராக சர்வதேச நாடுகளில் இனிமேல் நடைபெறப்போகும் வழக்குகளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பானது எதிர்வரும் 30-04-2015, வியாழன் மதியம் 13.30 மணிக்கு 'டென் காக்'  உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது மக்கள் மற்றும் செய்தியாளர்கள் சமுகமளிக்கலாம்.


நீதிமன்றின் முகவரி:

Prins Clauslaan 60,              
2595 AJ    Den Haag. (The hague)

 

http://www.pathivu.com/news/39568/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.