Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமொழுங்கை பேணக்கோரி யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள் பகிஸ்கரிப்பினில் குதிப்பு!

Featured Replies

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தக்கோரியும் காலவரையறையற்ற பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவிப்பு விடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பினில் தெரியவருகையினில் நேற்றுமுன்தினம் மானிப்பாயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட சென்று கொண்டிருந்த ஒன்பது பேர் கொண்ட மாணவர்கள் அணி மீது இனந்தெரியாத சிலர் சுதுமலை சந்தியில் வைத்து வழிமறித்து வாளால் வெட்டியும்; ,போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாறியாக தாக்கியுள்ளனர்.

இதனால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் ஓடத்தொடங்கியிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் துரத்திவந்த சிலர் ஒரு மாணவனுக்கு வெட்டியதில் கை இரண்டானது. வெட்டப்பட்ட கை நிலத்தில் துடித்துக்கொண்டு கிடந்ததாக ஒரு மாணவர் கூறினார்.

மற்றைய ஒரு மாணவனுக்கு உடல் முழுவதும் வாளால் வெட்டியிருக்கின்றனர். இறுதியில் வெட்டு ஓய, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவனை தலைக்கவசத்தை கழற்றுமாறு கூறியிருக்கின்றனர்.அப்போது அவன் கழற்றி காட்டும்போது அவர்கள் தாங்கள் தாக்க வந்தவர்கள் இவர்கள் இல்லை என்பதை உணர்ந்து திரும்பிச்சென்றிருக்கின்றனர்.

இதன்பின்னர் படுகாயமடைந்த மூன்று மாணவர்களையும் துண்ணடான கையையும் எடுத்துக்கொண்டு மானிப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள் .அதன்பின்னர் யாழ்.போதானா வைத்தியாசலைக்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் கைத்துண்டாடப்பட்ட மாணவனை மேலதிக சிகிசிசைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார். கைபொருந்துமா? பொருந்தாதா? என்று யாருக்கும் தெரியாது அங்கிருந்து கிடைக்கும் தகவலின் படி மூன்று நாட்களின் பின்னர்தான் முடிவு தெரியுமாம்.
அதேவேளை யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மாணவர்களில் ஒருவருக்கு உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள்,எழும்பி நடமாட முடியாத நிலையில் இருக்கின்றான். மற்றைய மாணவர் மூச்சு விடுவதில் கஸ்டப்படுகின்றான்.

சுற்றியிருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு சில மாணவர்கள் மட்டும் செல்லுவருகின்றனர். இது வரைக்கும் அந்த மாணவர்களுடைய பெற்றோர் வரவில்லை. காரணம் பாதிக்கப்பட் ட மாணவர்களில் இருவர் வவுனியா மாவட்டமும் மற்றுமொரு மாணவர் முல்லைத்தீவு மாவட்டம், அதேவேளை இதுவரைக்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எவருமே எட்டிக்கூட பார்க்கவில்லையாம்.

தூர இடங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்கள் எத்தனையோ துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்தக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான நிலையில் இப்படியான சம்பவங்கள் மேலும் அவர்களை பாதிப்பிற்குள்ளாக்குகின்றது.இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது.

இந்நிலையினிலேயே சட்டமொழுங்கைப்பேணக்கோரி மாணவர்கள் போராட்டத்தினில் குதித்துள்ளனர்.

 

http://www.pathivu.com/news/39577/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.