Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி அவர்களே பிரதமரே காணாமல் போன மகனைத் தேடி அலைந்த தாயின் சோகத்தை அனுரகுமாரவிடம் கேளுங்கள்

Featured Replies

நடராஜா குருபரன்..

MY3%20CBK%20RWS_CI.jpg

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களே, பிரதம மந்திரி றனில் விக்கிரமசிங்க அவர்களே, நல்லிணக்க அரசாங்கத்தினரே!

”மாற்றங்கள்”  நிகழ்ந்து 100 நாட்களின் பின் இப்படி ஒருகடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 

மக்களிடமிருந்து உங்களுக்கு ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வரும்கடிதங்களை நீங்களோ உங்களது உதவியாளர்களோ படித்து பார்ப்பீர்களோ தெரியாது?

தமிழில் யாராவது கடிதம் உங்களுக்கு எழுதுவார்களோ தெரியாது அவ்வாறு எழுதினாலும் அதை வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆதலினால் இக்கடிதத்தை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிடுகிறேன்.

இலங்கையில் ராஜபக்ஸ குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என பலர் பல காரணங்களுக்காக விரும்பினர். அவ்வாறு விரும்பியவர்களுள்  நானும் ஒருவன். தமிழ் மக்கள் கொதிக்கும் எண்ணைச் சட்டிக்குள்  இருந்து வெளிவர வேண்டும் என விரும்பினேன். மக்களின் நலனை மேம்படுத்தக்கூடிய   'மாற்றம்' ஒன்று அவசியம் என நான் எடுத்த முடிவின் அடிப்படையிலேயே தேர்தல் காலத்தில்  எனது ஊடகம் செயற்பட்டது

படையினர் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் 1000 ஏக்கர் நிலமாவது மக்களிடம் திரும்பியிருக்கிறது. மறைமுகமான கண்காணிப்புகள் இருந்த போதும் மக்கள் வீதியில் இறங்கி தமது கோரிக்கைகளுக்காக மக்கள் போராடத் துணிகிறார்கள். அரச ஊடகங்களும் “சிவராமின் நினைவேந்தல்” எனத் தலைப்பிட்டுச் செய்தி வெளியிடுகின்றன. இனப்படுகொலை – ஈழப் போராட்டம் போன்ற சொல்லாடல்களைத் தென்னிலங்கை ஊடகங்களும் பயன்படுத்துகின்றன. வட மாகாண சபையை ஒரு பயங்கரவாத அமைப்பு எனக் கருதிக் கையாண்ட மகிந்த அரசாங்கத்தைப் போலல்லாது. இந்த அரசாட்சியில் மாகாண சபையுடன் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சிறுபான்மையினரின் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன அல்லது தாக்க முற்படுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறன்றன. ஊடகங்கள் மீதான தடைகள் முற்றாக நீக்கப்பட்டு உள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான தடைகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. 

மொத்தத்தில் ராஜபக்ஸக்களின் காட்டுதர்பாரில் இருந்து மக்கள் மூச்சு விடுவதற்கான ஒரு அரசியல் இடைவெளி ஏற்பட்டு உள்ளது. ஆனால் இதனை மட்டுமா எதிர்பார்த்துத் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்தார்கள்? 

இல்லை. தமிழ் மக்கள் தமது தாயகத்தில் நியாயமான தீர்வொன்றால் ஏற்படக்கூடிய அரசியல் சமூக பொருளாதார வாழ்வை வேண்டி நிற்கிறார்கள்.

நீங்கள் 19ஐ கொண்டுவந்தால்என்ன 20ஐ கொண்டு வந்தால் என்ன, 18ஐ துக்கி எறிந்தால் என்ன இவற்றினால் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன? கடந்த 30 வருட காலத்தில் விடுதலைக்காக போராடிய இனம் சந்தித்த உயிர் பொருள் (ஒட்டுமொத்தவாழ்வியல்) இழப்புகளின் பின்னும் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் உங்களிடம் பெற்றுக் கொண்டது என்ன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்?

காணாமல் போனவர்களின்  உறவினர்கள் இன்றும் தமது பிள்ளையை, கணவனை, மனைவியை, தாயை, தந்தையை, சகோதரனை, சகோதரியை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளை தொலைத்து அவர்களுக்காக காத்திருந்து  நித்தமும் செத்துக் கொண்டிருப்பவர்களின் துயரத்தை, உங்க்ள் தேசிய நிறைவேற்றுச் சபையில் உள்ள, அனுரகுமார திஸநாயக்கா நன்கு அறிவார்.. அவரின் தாயார் ஜேவீபி கிளர்ச்சியில் காணாமல் போன தன் இளை மகனை தேடிக் காத்திருந்த சோகத்தை சொல்லுவார் கேட்டுப் பாருங்கள்....

உயர்பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் படையினர் கையகப்படுத்திய லட்சக்கணக்கான மக்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர்கள் இன்னும் விடுவிக்கப்படாமலே இருக்கின்றன. சம்பூர்மக்கள் இன்றும் தமது வாழ்விடங்களுக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். சிறைச்சாலைகளில் சிறு சிறு அரசியற் குற்றங்களைச் செய்தவர்கள் கூட இன்னும் விசாரணைகள் இன்றித் தடுத்தே வைக்கப்பட்டு உள்ளார்கள். புலிகளுக்குத் தேனீர் கொடுத்தவரும், சாப்பாடு கொடுத்தவரும், அருகில் நின்று படம் எடுத்தவர்களும் என சிறு குற்றங்களைச் செய்தவர்கள் எல்லாம் சிறைகளில் இருக்க அவர்களின் தளபதிகள் உங்கள் அரசாங்கத்திலும் சுகவாழ்வுதானே வாழ்கிறார்கள்?

ஜனாதிபதி அவர்களே  உங்கள் பணிப்புரைக்கு அமைய வெசாக் தினத்தையொட்டி பொதுமன்னிப்பின் கீழ், நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றங்கள்புரிந்த 488 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.  தண்டப்பணம் செலுத்த தவறிய கைதிகளில் யாழ்ப்பாணம் சிறைச் சாலையிலிருந்து 8 பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களுடன் அரசியல்கைதிகள் சிலரையாவது விடுவித்திருக்கலாமே? குற்றம் நிரூபிக்கப்படாமல், வழக்கு தொடரப்படாமல், விசாரனைகள் இன்றி 10 வருடங்களுக்கு மேல்சிறையில் வாடும் அரசியற்  கைதிகளும் இருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? 

எங்களுக்கும்  தீபாவளிவருகிறது, தைப் பொங்கல் வருகிறது, வருடப்பிறப்பு வருகிறது இப்படிப் பலநல்ல தினங்கள் வந்து போனாலும் சிறையில் வாடும் எங்கள் பிள்ளைகள் விடுவிக்கப்படுவது இல்லையே?

உங்கள் ஆட்சியில் இருக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்க: “ காணாமல் போனவர்களின் பிரச்சனை ஒரு மனிதாபிமானப் பிரச்சனை. தமது உறவுகளைத் தொலைத்து அவர்கள் வருவார்கள் என்ற ஏக்கத்துடன் நாள் தோறும் செத்து மடியும் துயரம் கொடுமையானது ”என்று சொன்னார். மகிழ்ச்சி. அதற்காக பூசாவிலும், வெலிக்கடையிலும் மக்களுக்கு தமது உறவினரைத் தேட அனுமதிப்பதாகவும் அவர்கூறினார்.. பெரும்பான்மை இனத்தைப் பிரதிபலிக்கும் ஆளும் அரசாங்கம் ஒன்று கடந்த 3 தசாப்தத்தில் முதன் முறையாக கொள்கை அளவில் ஆவது சிறைச்சாலைகளில் தமது உறவினரை தேடலாம் என்று சொல்லி இருக்கிறது. அதுவும் மகிழ்ச்சி.

ஆனால் இரகசிய முகாம்கள் எனச்சகல ஊடகங்களாலும் அம்பலப் படுத்தப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வரவில்லையே?

தோற்றுப் போன ராஜபக்ஸக்கள் மீண்டும் ஆட்சிப்பீடத்தை கைப்பற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு தடுப்பு அரண்களைக் கட்டி எழுப்புவதிலேயே மாற்றத்திற்கான புதிய அரசாங்கத்தின் பெரும் பகுதி முடிந்து போயிற்று. ஆனால் ராஜபக்ஸக்களால் கட்டி எழுப்பப்பட்ட சீனப் பெருமதில்களை உடைத்தெறிய உளி பிடித்த சிறுபான்மைத் தமிழரின் எதிர்பார்ப்புகளும் சோகங்களும் தொடர்ந்து கொண்டு தானே செல்கின்றன?

மோடியினாலும் ஒபாமாவினாலும், பான்கிமூனினாலும் மேற்கத்தேய நாடுகளாலும் அசைக்க முடியாத சீனப் பெருமதிலை தமிழர்கள்தானே தமது வாக்கு பலத்தினால் தகர்த்தெறிந்தார்கள். ராஜபக்ஸக்களின் வலையிற் சிக்கித் தவித்த உங்கள் எல்லோரையும் தமிழர்களின் வாக்குகள்தானே வெளிக் கொணர்ந்தது.

நிலமை இப்படியிருக்க உங்கள் ஆட்சியிலும் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ்ச் செய்ற் பாட்டாளர்களையும் புலனாய்வாரள்கள் தொடர்வதில் என்ன நியாயம் இருக்கிறது? கைதுகளும் மிரட்டல்களும், எதற்காக தொடர்கின்றன? புலம் பெயர்ந்த ஊடகவியலாளர்கள் நாடு திரும்ப இன்னும் அஞ்சிக் கொண்டு தானே இருக்கிறார்கள். ராஜபக்ஸக்கள் அதிகாரத்தில் இல்லை ஆனால் முன்புபோலவே புலனாய்வுக் கட்டமைப்புகளும், படைக் கட்டமைப்புகளும், குண்டர்படைகளும் அவர்களின் பணியை தொடர்கின்றனவே! மாற்றம் என்பதன் அர்த்தம் என்ன? ராஜபக்ஸவுக்கு பதில் மைத்திரியும் டீ.எம்ஜெயரட்ணவுக்கு பதில் றணிலும் வருவதுதான் மாற்றமா?

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119403/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

மனதை தொடும், நியாயமான கடிதம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.