Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு ஒரு நினைவுத்தூபியை கட்டியெழுப்புங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு ஒரு நினைவுத்தூபியை கட்டியெழுப்புங்கள்!

[Thursday 2015-05-07 19:00]
mullivaikkal-memorial-070515-380-seithy.

நல்லிணக்கம் பற்றி பேசும் சிங்கள அரசிடம் நல்லிணக்கத்தின் பேரால் மக்களின் மன ஆறுதலுக்காக கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்பி நல்லிணக்கத்தை அங்கிருந்து கட்டியெழுப்ப தொடங்குங்கள்.

 

கி.மு.480ஆம் ஆண்டு பாரசீக படையெடுப்புக்கு எதிராக ஸ்பார்ட்டா மன்னன் லியோனிடாஸ் (Leonidas) தலைமையில் பல்லாயிரக்கணக்கான பாரசீக படையினரை எதிர்த்து 300 கிரேக்க வீரர்கள் Thermopylae என்ற இடத்தில் போரிட்டு அனைவரும் மாண்டனரே ஆயினும் அதன் விளைவாக கிரேக்கர்கள் ஒன்றுதிரண்டு பெரும் பாரசீகப் படையை இறுதியில் தோற்கடித்தனர். அந்த 300 வீரர்களும் மாண்ட இடத்தில் வரலாற்று பிரசித்திபெற்ற நினைவுச் சின்னம் மார்பில் கல்லில் எழுப்பப்பட்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு பின்பும் வரலாறு அந்த நினைவுச் சின்னத்தினால் நினைவுகூறப்படுகிறது.

  

 

1919ஆம் ஆண்டு இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன்வாலாபாக் என்னும் இடத்தில் நிகழ்ந்த படுகொலையின் பேரலால் அப்படுகொலைக்கு உள்ளான களம் இன்றுவரை இந்திய அரசால் நினைவுச் சின்னப் பகுதியாக பேணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானியப் பிரதமர் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படை கொடூரமான மனிதவர்க்கப் படுகொலைகளை புரிந்தமைக்காக வருத்தம் தெரிவித்து அமெரிக்க காங்கிரஸ் அவையில் உரையாற்றியுள்ளார்.

 

1915ஆம் ஆண்டு ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமையை ஒரு நூற்றாண்டுக்குப் பின் பரிசுத்த பாப் அரசர் கண்டனம் தெரிவித்து உரை நிகழ்த்தியதுடன் அதற்காக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பூசைகளும், பிரார்த்தனைகளும் இடம்பெறச் செய்துள்ளார்.

 

ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன் 2009ஆம் ஆண்டு எம் கண் முன்னால் எம் இனிய உறவினர்களும், நண்பர்களும், அயலவர்களும், ஆண் - பெண், சிறுவர்-முதியோர், கர்ப்பிணித் தாய்மார், நோயுற்றோர் என்ற எவ்வித வேறுபாடின்றி சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நினைவு கூறவும் இவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய அவர்களுக்காக பிரார்த்திக்கவும் நாம் மன ஆறுதல் அடையவும் எமக்கு ஒரு நினைவுத்தூபி அமைக்கப்படுதல் அவசியமாகும்,

 

எனவே இந்த வருடத்திலாவது வரும் 18ஆம் திகதி இதற்கான அடிக்கல் நாட்டப்படுதல் அவசியம் என நினைக்கின்றேன். இதற்கு ஏற்ற இடத்தை தெரிவு செய்து ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்ப வேண்டியது எமது உரிமையின் பேராலும், பொறுப்பின் பேராலும் மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கடமையாகும், எனவே இவற்றை கவனதில் எடுத்து உடனடியாக ஆவண செய்து வரும் 18ஆம் தேதி இதற்கான வைபவத்தை அடிக்கல் நாட்டி வைத்தல் வேண்டும்,

A.Majuran

Freelance Journalist

http://www.seithy.com/breifNews.php?newsID=131673&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.