Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
f5089668cd5a4c33fc0a3319f2d8cfec.jpg
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அரச நியமனத்தில் தொண்டராசிரியர் நியமனத்துக்கான இழுத்தடிப்பு எதற்கு?,பத்து வருடங்களுக்கு மேலாக ஊதியம் எதுவுமின்றி சேவை வழங்கி வரும் எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும்,வேண்டும் வேண்டும் எமக்கான நிரந்தர நியமனம் மிக விரைவில் வேண்டும் ஆகிய பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 
 
தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுவதுடன், மிகுதிப் பேர், 5 தொடக்கம் 10 வருடங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர்.
 
கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தங்களை நியமனம் செய்யுமாறு கோரி அவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 
 
மேலும் மாகாண அமைச்சு தமது கோரிக்கைகளை மத்திய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு வார காலத்திற்குள் தமக்கான தீர்வினை பெற்று தருவதாக வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் உறுதியளித்ததன் காரணமாக தமது போராட்டத்தை கைவிட்டதாக கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தெரிவித்தார்.
 
இன்றைய போராட்டத்தில் உரிய அதிகாரிகள் தமக்கு சுமூகமான தீர்வினை வழங்காவிடின் தாம் தமது ஆசிரிய பணியை தற்காலிகமாக கைவிட போவதாக கிளிநொச்சி மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
 
 
image-343a48d5101994bdda5d410ec51c3e18af
 
image-763455e1af3a56e9bd70d43ca42a1809e0
 
image-5209f2e1b9a710448241954afb222583e1
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=696054030813471496#sthash.PsE6HLv7.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.