Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனங்களை வெல்லவேண்டும்!
[ வெள்ளிக்கிழமை, 15 மே 2015, 01:28.21 AM GMT ]
tamilnadu-refugees.jpg
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி சொந்த நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயாராக இருந்த போதிலும், அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை.

கொடூர யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கைத் தமிழ் அகதிகள் நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து தமிழ் அகதிகளை விருப்பத்தின் பேரில் திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1983ம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்திற்குப் பின்னர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக செல்ல ஆரம்பித்தனர்.

யுத்தம் தீவிரமடைந்த நிலையில் படகுகள் மூலமாக பெருமளவான தமிழ் மக்கள் தமிழகத்திற்கு சென்று அங்கு அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.

தற்போதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு தசாப்தகாலமாக இந்த மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

சொந்த நாட்டைப் பிரிந்து இந்த மக்கள் அந்நிய தேசத்தில் பெரும் கவலைகள் கஷ்டங்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் யுத்தம் தொடர்ந்து இடம்பெற்று வந்தமையினால் இலங்கைக்கு மீளத்திரும்புவதற்கு இவர்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து புதிய அரசாங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பதவியேற்றிருந்தது.

புதிய அரசாங்கத்தில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு, இந்து கலாசார அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் பதவியேற்றிருந்தார். இதன் பின்னர் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை மீளவும் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன.

இதனையடுத்து தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் விரும்பினால் நாடு திரும்பலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் இலங்கை அகதிகளை நாட்டுக்கு திருப்பும் விடயத்தில் தமிழகத்திலுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பினையே தெரிவித்து வருகின்றன.

இலங்கையில் இன்னமும் சுமுகநிலை ஏற்படவில்லை என்றும் இதனால் தமிழ் அகதிகளை தற்போதைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்றும் தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியே வருகின்றனர்.

நேற்று முன்தினம் நாடு திரும்பியிருந்த 65 தமிழ் அகதிகளையும் விமான நிலையத்தில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வரவேற்றிருந்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளில் 65 பேர் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இதேபோல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அனைத்து இலங்கையர்களும் மீளவும் நாடு திரும்பவேண்டும்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அனைவரினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ளும், வீடற்றவர்களுக்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா செலவில் வீடுகளை அமைப்பதற்கும் உதவி செய்யப்படும். இதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகம் உதவவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் அனைவரும் மீளவும் நாடு திரும்பவேண்டும். இங்கே தற்போது எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. நாடு திரும்புபவர்களுக்கு எமது அரசாங்கத்தால் முடியுமான அனைத்தையும் செய்து கொடுப்போம்.

இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் என்றும் துணையாக இருப்பார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கைக்கு மீளவும் திரும்பிய தமிழ் அகதிகளும் தாம் நாடு திரும்பியமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். யுத்தகாலத்தில் இந்தியாவிற்கு சென்ற நாங்கள் 25 வருடங்களுக்குப் பிறகு எமது சொந்த மண்ணை வந்தடைந்து விட்டோம்.

இறுதித் தருணத்திலாவது சொந்த மண்ணுக்கு வந்தமையை நினைத்து மகிழ்ச்சியடைகின்றோம். தாய் நாட்டில் வாழாமல் வேறு எங்குபோய் நாம் வாழ்வது என்று நாடு திரும்பிய அகதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியாவில் எமக்கு உரிய வசதிகளை தந்தார்கள். சம்பளம், அரிசி, சீனி உட்பட சகல பொருட்களும் எமக்கு தந்தார்கள். அவற்றை விட்டு எமது உறவுகளை காணவே சொந்த மண்ணுக்கு வந்துள்ளோம். புதிய அரசாங்கத்தை நம்பியே நாம் நாடுதிரும்பியுள்ளோம்.

எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றும் அகதிகளில் சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

யுத்தத்தினால் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் கடந்த மூன்று தசாப்த காலமாகவே பெரும் துன்ப, துயரங்களை அனுபவித்து வந்தனர். யுத்தத்தின் கொடூரம் காரணமாகவே உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல லட்சம் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர்.

இந்தியா உட்பட அமெரிக்கா, கனடா, லண்டன், மேற்குலக நாடுகளில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் சூழ்நிலை யுத்தத்தினாலேயே ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு புலம் பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலானோர் எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்று ஏங்கியவண்ணமே வாழ்ந்து வருகின்றனர். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் யுத்தத்திற்கு காரணமான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்னைய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களை சீர்குலைத்து இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு வந்தன. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் சொந்த நாட்டிற்கு திரும்புவது என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு கனவாகவே காணப்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமானது நாட்டிற்கு புலம்பெயர்ந்த மக்கள் மீளத்திரும்பவேண்டுமென்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவவேண்டுமென்றும் கோரிக்கையினை விடுத்திருந்தது. ஆனாலும், புலம்பெயர்ந்த மக்களின் மனங்களை வெல்வதற்கான செயற்பாடுகளை முன்னைய அரசாங்கமானது மேற்கொண்டிருக்கவில்லை.

மாறாக சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு இனவாத செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி சொந்த நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயாராக இருந்தபோதிலும், அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை.

தற்போதைய நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து புலம் பெயர்ந்துள்ள தமிழர்களை மீளவும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான சில செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனாலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை ஏற்படுத்தினால் மட்டுமே அவர்கள் சொந்த நாட்டிற்கு மீளவும் திரும்பக்கூடிய நிலை ஏற்படுவதுடன் சொந்த நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதற்கு அவர்களும் தமது பங்களிப்பை செய்யும் நிலை உருவாகும்.

இவ்வாறான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமானால் நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் சூழல் உருவாகும்.

இவ்வாறான நிலை ஏற்பட்டால் புலம் பெயர்ந்த தமிழ்மக்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப தயாராகவே உள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியதே இன்றைய சூழ்நிலையில் தேவையாக உள்ளது.

tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு புலம் பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலானோர் எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்று ஏங்கியவண்ணமே வாழ்ந்து வருகின்றனர்

சத்தியமா நான் ஏங்கவில்லை நீங்கள் யாராவ்து ஏங்கிறீயளோ ? உங்களுக்கு என்ன சகல பாதுகப்பும் இருக்கு சொல்லிவியள் ....அடுத்த தேர்தலில் மகிந்தா கோஸ்டி வென்றால் அவர்களுடன் கூட்டுசேர்ந்து உங்களின் அரசியலை நடத்துவியள் .....நாங்கள் நடுரோட்டில நிற்கவேணும்,அரசனை நம்பி புருசனை கைவிடதயாரில்லை அமைச்சரே.......

.புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி சொந்த நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு தயாராக இருந்தபோதிலும்,
முதலாளிமாரைத்தான் எதிர் பாக்கினம் எங்களைமாதிரி தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை போல கிடக்கு

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இவ்வாறு புலம் பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலானோர் எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்று ஏங்கியவண்ணமே வாழ்ந்து வருகின்றனர்

பிச்சைக்கார சொறிலங்காவிற்கு மனிசன் போவானா ? ஈழத்தில் அமைதியான தீர்வும் வாழ்க்கையும் கிடைத்தால் நிரந்தராமாய் போய் தங்கலாம் ஆனால் 100 வருடங்கள் போனாலும் அமைதியான தீர்வோ  வாழ்க்கையோ எமக்கு கிடைக்காது கிடைக்கவும் விடாது சிங்கள துவேசிகளும் ,இந்திய டெல்லி  அரசும் அப்பவும் மல்லுகட்டுவார்கள் என்ன ஒன்று இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருப்பார்கள்.

சத்தியமா நான் ஏங்கவில்லை நீங்கள் யாராவ்து ஏங்கிறீயளோ ? உங்களுக்கு என்ன சகல பாதுகப்பும் இருக்கு சொல்லிவியள் ....அடுத்த தேர்தலில் மகிந்தா கோஸ்டி வென்றால் அவர்களுடன் கூட்டுசேர்ந்து உங்களின் அரசியலை நடத்துவியள் .....நாங்கள் நடுரோட்டில நிற்கவேணும்,அரசனை நம்பி புருசனை கைவிடதயாரில்லை அமைச்சரே.......

 

முதலாளிமாரைத்தான் எதிர் பாக்கினம் எங்களைமாதிரி தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை போல கிடக்கு

 

எப்படியாவது காசுதான் அவர்களின் உடனடி தேவை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.