Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கஜன்-சுமந்திரன் ஆரோக்கியமான அரசியல் விவாதம்

Featured Replies

Old-Jaffna-300x168.jpg
 
இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இடம்பெறலாம் என்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழர்களின் அரசியல் பயணம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்திற்கும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் இடையில் பகிரங்க விவாதம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த ஆரோக்கியமான அரசியல் விவாதமேடையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், கட்சிகளின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கியதற்கான அரசியற் காரணங்களையும், அதற்கான புறச்சூழலையும் அதன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விலாவாரியாக விளக்கினார்.
 
அத்துடன் தேர்தலின் பின்னர் கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும், எதிர்வரும் தேர்தலில் அது எடுக்கவுள்ள நிலைப்பாடு குறித்தும், சர்வதேச அரங்கில் தமிழர்கள் குறித்த முன்னெடுப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சியின் சார்புக் கருத்துக்களைக் காரசாரமாக வெளியிட்டார்.
 
ஆனால், தேர்தலுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுமுறைகளைக் கடுமையாகச் சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சி தனது அரசியல் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தக் கட்சியின் தலைமை தவறியிருக்கிறது என்று சான்றுகளுடன் சுட்டிக்காட்டியதோடு, “ஒரு நாடு – இரு தேசம்” என்ற அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.
 
அத்துடன் இந்த விடயத்தில் உள்ளூரிலோ அல்லது சர்வதேச மட்டத்திலோ விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
 
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரே குறிக்கோளுடனேயே பயணிக்கின்ற போதிலும் அவற்றின் அணுகுமுறைகளில் பாரிய இடைவெளியும், கருத்துமோதல்களும் இருப்பதனை அவதானிக்ககூடியதாக இருந்ததாக இந்தக் கருத்தரங்கின் பின்னர் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கொழும்பு மிரரிடம் தெரிவித்தார்.
 
இந்தக் அரசியல் விவாதத்தின் முழுமையான காணொளியைக் காண  இதனைக் கிளிக் செய்க.
 
 
 

கள உறவுகள் யாராவது இந்த videoவை நேரடியாக களத்தில் இணைத்துவிடுவீர்களா

  • தொடங்கியவர்

591_content_sumanthiran_h1.jpg                                     592_content_kajenthirakumar_h1.jpg

  • தொடங்கியவர்

மைத்திரி அரசுடனான எமது எழுதப்படாத ஒப்பந்தம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் - சுமந்திரன்

 

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் எழுதப்படாத உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். பொதுத் தேர்தலுக்கு முன் அந்த உடன்படிக்கை என்ன என்பதை பகிரங்கப்படுத்துவோம் என தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

 

யாழ்ப்பாணம்  யுரோவில் மாநாட்டு மண்டபத்தில்"தமிழ் மக்களின் தீர்வுக்கான பாதை'  என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகிரங்கக் கலந்துரையாடலில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

 

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உட்பட  யாழ்ப்பாண சிவில் சமூகத்தினர், சமூக, சமயத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

 

இங்கு  சுமந்திரன் மேலும் கூறுகையில்;

 

ஐ.தே.க.,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் எதுவும் தமிழ் மக்கள் நம்பும் வகையில் இல்லை. இரண்டும் எம்மை  குழிதோண்டி புதைக்கும் அபாயம் உள்ளது. ஆனாலும் தீர்வுக்காக அவர்களுடன் நாம் பேசித்தான் ஆகவேண்டியுள்ளது. நாங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக சிக்கிக்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளிவருவது, விடுபடுவது எவ்வாறு என்பதனை ஆராய வேண்டும். மாறாக கடந்து வந்த பாதைகளை விமர்சித்து எமது சரித்திரத்தில் பிழை கண்டு பிடித்து காலத்தை வீணாகக் கழித்துக்கொண்டிருப்பது முறையற்றது. 

 

2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எமது அரசியல் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. ஏனைய நாடுகளில் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது இராஜதந்திர ரீதியிலான அரசியல் போராட்டமும் ஆயுதப் போராட்டத்துடன் சம நிலையாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆயுத ரீதியிலான எமது விடுதலைப் போராட்டத்தில் அவ்வாறான நிலை இல்லை. 

 

அரசியல் கட்சிகள் இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பணியை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது. ஆயுத ரீதியிலான எமது போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் முறியடித்தமை வெறுமனே ஆயுதப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டுமென்ற   நோக்கத்திற்காக மட்டுமல்ல, மாறாக தமிழ் மக்கள் இனி மேல் தமது உரிமைகளை எக்காலமும் கேட்டுவிடக்கூடாது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. 

 

இதில் விடுதலைப்புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்துமே தோற்கடிக்கப்பட்டுள்ளன. வென்றோர் வெற்றியை தாம் நினைத்தபடி கொண்டாடினர். போரின் பின்னர் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டும் படிப்படியாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்தும் வைத்துள்ளனர். ஆனாலும் எமது மக்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்தும் போராடி வந்தனர்.

 

போரில் வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலுமே எம்மை ஆள்வதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் எனக் கூறும் விதத்தில் அவரை எமது மக்கள் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தனர். இதன் மூலம் தமிழ் மக்களை ஆள்வதற்கு ராஜபக்ஷ ஏற்றவர் அல்ல என்பதனையும் சர்வதேசம் ஏற்றுக்கொண்டது. சிங்கள அரசிற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்மை அடித்த ராஜபக்ஷ பின்னர் முஸ்லிம் மக்களையும் அடித்தார். இறுதியில் தனது மக்களையும் அடித்தார். இந்த நிலையிலேயே ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க முடிந்தது.  

 

நாம் சந்தர்ப்பங்களை நழுவவிட முடியாது. ஏதாவது கதவு திறந்திருந்தால் அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதிய அரசின் காலத்தில் அந்தக் கதவு திறந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்த முயல்கின்றோம். ராஜபக்ஷவின் ஆட்சி தொடருமாக இருந்தால் இங்கு தமிழ் மக்கள் இருந்திருக்க முடியுமா? அரசியல் விடுதலை கிடைக்குமா? இங்கே உள்ள இராணுவம் எமது மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரித்து நாம் கூறிவரும் தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்திருப்பார்கள். இந்த நிலையை அவசரமாக மாற்ற வேண்டிய நிலை காணப்பட்டிருந்தது. இதற்காக எமக்கு அவசர எதிரி மாற்றம் ஒன்றும் தேவைப்பட்டது. இதனையே நாமும் மேற்கொண்டிருந்தோம். எமது மக்களும் வடமாகாண சபை தேர்தலில் வாக்களித்ததைவிட ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாகவே வாக்களித்திருந்தனர். 

 

வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது தப்பி ஓடும் அவசர வேலை ஒன்றினையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மேற்கொண்டிருந்தோம். இத்தப்பித்தலின் பின்னர் எமக்கு தீர்வைப் பெற  படகொன்று கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி கிடைத்தது. அந்தப் படகில் ஏறியுள்ளோம். அந்தப் படகு மறு கரைக்கு போய்ச்சேர வேண்டுமாகவிருந்தால் கூத்தாடி, கும்மியடித்து துள்ளிக் குதித்துப் படகைக் கவிழ்த்துவிடக்கூடாது. அதற்காக விமர்சிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. தவறுகள் விடப்படும்போது சுட்டிக்காட்டப்படல் வேண்டும். இதனையே புதிய அரசின் காலத்திலும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். 

 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இல்லை. ஆனாலும் இழந்தவற்றில் சிலவற்றை பெறமுடியும் என்ற ஒரே நோக்கத்திலேயே நாம் செயற்படுகின்றோம். தமிழ் மக்களின் காணிகளில் சிலவற்றை மீள பெற்றுள்ளதோடு அரசியல் கைதிகளின் விடுதலையும் சாத்தியமாகவுள்ளது.

 

மேலும் ஆயிரம் ஏக்கர் பொதுத் தேர்தலின் பின்னர் விடுவிக்கப்படலாம். அரசியல் தீர்வினைப் பொறுத்தவரையில் எந்த நிலைப்பாட்டில் நாம் உள்ளோமோ அந்த அரசியல் தீர்வினைத் தருவதாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறையை அகற்ற முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நாம் எதிர்த்த பின்னர் அதனை நீக்கிவிட்டனர். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் சுதந்திர தினத்தில் ஆற்றிய உரையும் எமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் புதிய அரசை முழுமையாக நாம் நம்புமாறு கூறவில்லை. ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன  எம்மை குழிதோண்டி புதைக்கும் அபாயமும் உள்ளது. ஆனாலும் அவ்வாறு செய்யமுடியாத நிலை உள்ளது. சர்வதேசம் முன்பு போல் இல்லாமல் அவதானிப்புடன் உள்ளது. இத்தனை காலமும் காத்திருந்து எமது மக்களின் அபிலாசைகளைப் பெறக்கூடியதற்கான கதவு ஒன்று திறந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்த வேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். எமது இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையிலும் வித்தியாசம் இல்லை. அணுகுமுறையில்தான் வித்தியாசம் உள்ளது.   உணர்வுகளை வைத்துக்கொண்டு நிரந்தரத் தீர்வைப் பெற வேண்டும் என்றார். 

 

 

http://www.thinakkural.lk/article.php?article/okxzihbgef64591ce83e5d4113509xtmif35b07c0b82afffbe2b34368kihz#sthash.MS28DKgu.dpuf

 

 

மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு சமஷ்டி கிடைத்திருக்கும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் புதிய அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ள நம்பிக்கை அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம்பிக்கையற்றவை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

கடந்த காலங்களில் எழுத்து மூலமாக சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களுக்கு என்ன நடந்தன என்ற வரலாறு எமக்குத் தெரியும். இந்த நிலையில் எழுதப்படாத ஒப்பந்தங்களை தமிழ்க் கூட்டமைப்பு நம்புவதில் பயனில்லை எனவும் அவர் கூறினார்.

 

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசுடன் கொள்கையளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அரசுக்கு ஆதரவளித்து வருகிறது என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணம் யுரோவில் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சுமந்திரனின் கருத்துக்குப் பதிலளித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,

 

நாம் சுய ஆட்சி கோரி போராடி வருவதால் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மத்தியில் பயம் உண்டு. இந்த பயத்தை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தவில்லை. ஆரம்ப காலம் தொட்டே சிங்கள மக்கள் தமிழர்கள் மீது பயம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். இதனை மகாவம்சமும் சுட்டிக்காட்டுகின்றது.

 

 சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென வேறு ஒரு நாடு இல்லை. ஆனால் தமிழர்கள் அவ்வாறு இல்லை அவர்கள் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளனர். ஆசிய பிராந்தியத்திற்குள் உள்ள மிகச்சிறிய இனமாக உள்ள தம்மை தமிழ் இனம் விழுங்கிவிடும் என்ற பயம் உள்ளது. ஆகையால் தமிழர் தேசம் என்பதனை இல்லாமல் செய்து இலங்கை தீவு முழுவதையும் தம்முடையதாக்க வேண்டும் என்ற ஆசை சிங்களவர்களுக்கு உண்டு.  

 

இந்நிலையிலேயே எமது தேசத்தை அவர்கள் திட்டமிட்டு பலவழிகளில் இல்லாமல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இவ்வாறு எமது தேசத்தை அழிக்கும் முயற்சிக்கு தீர்வாக தமிழர்கள் ஒரு தேசம் ஒன்றினை பெறுவதாகத்தான் இருக்கும். இதனையே வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தந்தை செல்வாவும் தமிழீழ கோட்பாடு ஒன்றினை முன்வைத்து தமிழ்த்தேசத்தை காப்பாற்ற முயன்றார்.

 

 இந்தியா எமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அன்று எமக்கு ஆதரவளித்தாலும் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. திம்பு மாநாட்டிலும் தனிநாட்டு கோரிக்கைக்கு பதிலாக தீர்வு பற்றிய யோசனை ஒன்றை முன்வையுங்கள் என்றே இந்தியாவினால் தமிழ் தரப்பிடம் கூறப்பட்டது.

 

தமிழ் இனத்தின் கடந்தகால சரித்திரங்களை பார்க்கும் போது தேசம் அல்லது தேசியம் அடிப்படையில் தான் தமிழர் அரசியல் வளர்ந்து வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு என இருந்த கட்சி தேசிய கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என பெயர் மாற்றப்பட்டு அதிலேயே தேர்தலிலும் போட்டியிட்டியிருந்தோம். இந்த நிலைப்பாட்டையே தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

 

13 ஆம் திருத்தத்தையே தரமறுக்கும் இந்த அரசு தேசியத்தை தருமா? என கேள்வி எழுப்பமுடியும். தேசியம் என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் கூட்டமொன்று தனித்துவமாக வாழ்வதை அடையாளப்படுத்துவது நாடு என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இலங்கை என்பது பல தேசியங்கள் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். ஆனால் சிங்கள இனம் தாம் இலங்கை முழுவதும் ஒரு தேசம் எனவும் நாங்கள்  தமிழர்கள் சிறுபான்மை என்றே கூறுகின்றது. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கு சர்வதேச பரிமாணமும் ஒன்று உள்ளது. இலங்கையை மையப்படுத்தி கடும் பூகோள அரசியல் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் சீனாவை இலங்கையிலிருந்து  வெளியேற்றவே கொண்டுவரப்பட்டது. இவ் ஒப்பந்தத்திலேயே பதின்மூன்றாம் திருத்தமும் தோன்றியது. இந்த இலங்கை  இந்திய ஒப்பந்தத்தை நாம் நிராகரித்து இருந்தால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்ற நிலை காணப்பட்டது.

 

இவ்வாறான அடுத்தவரின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தையே நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம்.  மூன்றாம் உலக மகாயுத்தம் தோன்றினால் அதில் இலங்கைக்கும் ஒரு பங்கு உண்டு என்ற சூழ்நிலையில் தான் தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 

இந்த போட்டியில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் வெற்றியை இருதரப்புமே கொண்டாடியது. இருதரப்பிலும் என்ன வேறுபாடு? பாமர மக்கள் தம்மை அழித்தவனை பழிவாங்கும் உணர்விலேயே இருப்பர். அதனை அரசியல் தலைவர்கள் தான் தெளிவுபடுத்தி ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொரு ராஜபக்ஷவை கொண்டுவருவதில் அர்த்தமில்லை. என கூறியிருக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கான தீர்வு என்ன? மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகியிருந்தால் பூகோள அரசியல் போட்டி அழுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு சிலவேளை சமஷ்டி கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கலாம்.

 

 ஆனால் வெறும் வாய்மூல வாக்குறுதியை மட்டும் நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவளித்தது.   வடக்கு, கிழக்கு ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டாது எனவும் இரண்டு வருடங்களுக்கு தான் பயங்கரவாத தடை சட்டம் எனவும் முன்னர் ஆட்சியில் இருந்தவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். 

 

 http://www.thinakkural.lk/article.php?article/j8mtpfkjgp4956d80b7040b710504gcvek73199015de6d3b4293c8ffkvjyi#sthash.zqhiSk2p.dpuf

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு சமஷ்டி கிடைத்திருக்கும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இப்பிடியெல்லாம் கஜேந்திரகுமார் சொல்லவில்லை. :o

மகிந்த அகற்றப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நாம் மைத்திரியை ஆதரிப்பதற்கு முன்னம் பெரியண்ணர்களிடம் வாக்குறுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றுதான் சொன்னவர்.

இதற்கு உதாரணமாக போர் நடந்த காலத்தில் 13 க்கு மேலான தீர்வு என்று சொல்லிவந்த இந்தியா, போர் முடிந்த கையோடு தங்களிடம் 13 தான் இறுதித் தீர்வு என்று கதையை மாற்றிய விடயத்தைக் கூறினார்.

இன்று பெரியண்ணர் அமெரிக்கா கொஞ்சம் பேசாமல் இருங்கோ என்கிறாராம். அதாவது ஒழுங்காப் போற படகை ஆட்ட வேண்டாம் என்கிறாராம். நிபந்தனையற்ற ஆதரவு தந்ததினால்தான் இந்த நிலைமை வந்தது என்றுதான் பேசினவர்.

Edited by இசைக்கலைஞன்

இப்பிடியெல்லாம் கஜேந்திரகுமார் சொல்லவில்லை. :o

மகிந்த அகற்றப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நாம் மைத்திரியை ஆதரிப்பதற்கு முன்னம் பெரியண்ணர்களிடம் வாக்குறுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்றுதான் சொன்னவர்.

இதற்கு உதாரணமாக போர் நடந்த காலத்தில் 13 க்கு மேலான தீர்வு என்று சொல்லிவந்த இந்தியா, போர் முடிந்த கையோடு தங்களிடம் 13 தான் இறுதித் தீர்வு என்று கதையை மாற்றிய விடயத்தைக் கூறினார்.

இன்று பெரியண்ணர் அமெரிக்கா கொஞ்சம் பேசாமல் இருங்கோ என்கிறாராம். அதாவது ஒழுங்காப் போற படகை ஆட்ட வேண்டாம் என்கிறாராம். நிபந்தனையற்ற ஆதரவு தந்ததினால்தான் இந்த நிலைமை வந்தது என்றுதான் பேசினவர்.

சுமந்திரன் சொல்லாததை சொன்னதாக எழுதிய இணையத்தளங்களுடைய செய்தியை வைத்து நக்கல்கள் ,நையாண்டிகள் எல்லாம் செய்த யாழ் இணையத்தள கருத்தாளர்களுக்கு கஜேந்திரகுமாருக்கு என்றவுடன் நெஞ்சு பொறுக்குதில்லையோ :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொல்லாததை சொன்னதாக எழுதிய இணையத்தளங்களுடைய செய்தியை வைத்து நக்கல்கள் ,நையாண்டிகள் எல்லாம் செய்த யாழ் இணையத்தள கருத்தாளர்களுக்கு கஜேந்திரகுமாருக்கு என்றவுடன் நெஞ்சு பொறுக்குதில்லையோ :):icon_idea:

சுமந்திரன் சொல்லாததை இணையத்தளங்கள் எழுதியிருந்ததை நான் கவனிக்கவில்லை. அப்படி என்ன எழுதியிருந்தார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச ஆட்சியோ.. மைத்திரி ஆட்சியோ.. ரணில் ஆட்சியோ என்பதல்ல தமிழ் மக்களின் பிரச்சனை. தமிழ் மக்களின் பிரச்சனை என்பது இலங்கைத் தீவில் பாதுகாப்பான அமைதியான வாழ்வியலும்.. தம்மை தாமே ஆளும்.. அரசியல் உரிமையும்.. தமது பொருண்மியம்.. விழுமியம்.. பண்பாடு கலாசாரம் காத்து வாழ்தலும் ஆகும்.

 

தமிழ் மக்களின் இந்த தேசிய இன ஆசையை நிராகரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ள தயங்குகின்ற ஆட்சியாளர்களாகவே இலங்கைத் தீவை ஆளும் பொரும்பான்மை சிங்களத் தலைமைகள் நடந்து வரும் நிலையில் தான் தமிழ் மக்கள் ஆயுத முனையில்.. தம்மை அடக்க முனையும் சிங்கள பேரின சித்தாந்தங்களையும்.. அது ஏவிவிட்ட அதன் படைப்பலத்தையும் எதிர்கொண்டு நின்றார்கள்.

 

அதனை விளங்கியும் விளங்காமலும் தமிழ் மக்களின் சம பல உரிமையை சர்வதேசம் பயங்கரவாதமாக்கி அழித்தமை உண்மையில்.. சர்வதேசம் தமிழ் இனத்துக்கு ஆற்றிய மகா கொடுமை.

 

இதனை சர்வதேசம் விளங்கச் செய்வதற்கு பதில்.. சம்பந்தன் சுமந்திரன் குழுவினர்.. சிங்களப் பேரினத் தலைமைகளை கூஜா பண்ணி எதையாவது பெறலாம் என்ற ஹிந்திய சித்தாந்த அடிப்படையில் செயற்படுவது தவறிழைத்த சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக்கேட்பதற்குப் பதில்.. தமிழ் மக்கள் பிரச்சனையில் இருந்து அது நழுவிச் செல்லும் நிலையையே உருவாக்கி உள்ளது.

 

மகிந்த போன்ற ஒரு கடும் போக்கு பேரினவாதி.. பேரினவாதச் சிந்தனைகளை வெளிப்படையாக அமுலாக்கும் போது அதற்குப் பதில் சொல்ல வேண்டி இருந்த சர்வதேசம் இன்று வெளிப்படையில்... மென்போக்கு அடிப்படையில் செயற்படும் மைத்திரி - ரணில் - சந்திரிக்கா.. மறைமுக கடும்போக்கு பேரினவாதத்தை நம்பி தமிழ் மக்களை ஒப்படைக்க நினைக்கிறது. ஐக்கிய இலங்கை.. இன நல்லிணக்கம் .. பிரிவினை வாத அழிப்பு..என்ற பதங்களை பாவித்து தமிழர்களை மீண்டும் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்குள் கட்டி வைக்க நினைக்கிறது சர்வதேசம். அதுக்கு சம்பந்தன் ஒரு அடிப்படைக்காரணமும் இன்றி.. ஒத்தூதி வருகிறார்.

 

அதனை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. அதனை அவர்கள் சுதந்திரத்திற்குப் பின் இருந்து வலியுறுத்தி வந்தாலும் ஆயுதப் போராட்ட காலம் அதனை உலகிற்கு மிகத் தெளிவாக விளக்கி உள்ள நிலையில்.. சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் தொடர்பில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடக்க அனுமதிக்க முடியாது. அதன் மனச்சாட்சியை கிளறிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர.. மைத்திரியோடு இதயத்தோடு கலந்துவிட்டோம் என்று உண்மைக்குப் புறம்பான அறிக்கைகள் தந்து சர்வதேசம் எமக்கிழைத்த பெரும் கொடுமையில் இருந்து அது எமக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தராமலே நழுவ இடமளிக்கக் கூடாது.

 

இதுதான் இன்று தமிழ் மக்களில்  பெரும்பான்மையானோரின் நிலை. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

இளைய சமூகம் சொல்லும்.. இதையும் கேளுங்கோ.. :icon_idea:

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.