Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நீதிமன்றக் கலவரம்! இயக்கியது யார்? தலைக்கவசம் அணிந்தவர்கள் யார்?

Featured Replies

4368af055a663c3d5ebaa2b17340ebbc_L.jpg
 
யாழ் நீதிமன்ற வளாகத்தில் கலவர பூமியாக மாற்றியதற்கு யார் காரணம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.
 
புங்குடுதீவு மாணவியை கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
இந்த வகையில் இன்றைய தினமும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று யாழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சந்தேக நபர்கள் அழைத்துவரப்பட்ட போது ஏற்பட்ட கலகத்தைத் தடுப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
 
நீதி கேட்டு வந்தவர்கள் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு குழப்பமடைந்தது ஏன் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
 
நீதிமன்றத்தை அண்மித்திருந்த பொதுமக்கள் மத்தியில் நின்றிருந்தவர்களில் அநேகமானோர் தலைக்கவசங்களை அணிந்து வந்திருந்தனர். இவர்களே நீதிமன்றத்தை நோக்கி வேகமாகவும், ஆக்ரோசமாகவும் நடந்துவந்தனர். இதனைப் பின்தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் இதில் பங்கெடுத்திருந்தனர். 
 
எனினும், நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அங்கிருந்தவர்களை யார் தூண்டியது, அரைக் காற்சட்டை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்தவர்கள் யார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
 
எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்பைக் குறைப்பதற்கும் சந்தேக நபர்களைக் காப்பதற்கும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய நீதிமன்றத் தாக்குதலின் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
 
சந்தேக நபர்களின் தரப்பினரே பொதுமக்களுடன் இணைந்து இவ்வாறு குழப்பம் ஏற்படுத்தி, பாதுகாப்புத் தரப்பைப் பயன்படுத்தி பொதுமக்களை ஒடுக்க நினைத்தார்களா? அல்லது வடக்கில் பொதுமக்களுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினரைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமுடையவர்களை இதனை ஆரம்பித்துவைத்தார்களா? என்ற சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன.
 
மாணவி கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னரே  இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றனவா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
 
அத்துடன், மாணவியின் படுகொலைக்கு நியாயத்தைக் கோரும் பொதுமக்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் அரசியல், சுயநல நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்களின் வலையில் சிக்காதிருக்க, சிந்தித்து செயல்பட வேண்டும் என புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
யாழ் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையினால் இன்று மாலை 5 மணி வரை பாதுகாப்புத் தரப்பினர் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரித்திருந்த நிலையில், இந்த நிலை தொடராதிருக்க பொதுமக்களையும், போராட்டங்களையும் நடத்துபவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் சுமார் 125 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். பல வாகங்களையும் பொலிஸார் தன்வசப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்


02b1a3f165984fa6bf3c7e785f9afa69

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.