Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது பலசேனாவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் கிரம விமலஜோதி தேரர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொது பலசேனாவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் கிரம விமலஜோதி தேரர்!

[Thursday 2015-05-21 09:00]
BBS-Kirama-Wimalajothi-380-seithy.jpg

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதுடன், அமைப்புடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பாதை தமக்கு பொருத்தமான வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகுதல் தொடர்பில் விமலஜோதி தேரர், அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக இயக்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் சுகததாச அரங்களில் நடைபெற்ற போது, பௌத்த பயங்கரவாதி என்றழைக்கப்படும் மியன்மாரின் விராது தேரரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தொடர்ந்தும் இயக்கத்தில் தலைமைப் பதவி வகிப்பது பொருத்தமாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். அசின் விராது தேரரின் இலங்கை விஜயமானது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியதாகவும், பௌத்தர்களின் நன்மதிப்பை குறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். போலி பௌத்த பிக்குகளை இல்லாதொழிக்க, போலியாக பௌத்த மதத்தின் பெயரில் பணம் திரட்டுதல், மோசடி செய்வதனை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

இந்தப் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் அமைப்பில் இணைந்திருப்பதில் பயனில்லை எனவும், தற்போது பொதுபல சேனா செல்லும் பாதையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132473&category=TamilNews&language=tamil

பொது பலசேனாவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் கிரம விமலஜோதி தேரர்!

[Thursday 2015-05-21 09:00]
BBS-Kirama-Wimalajothi-380-seithy.jpg

சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே பொதுபல சேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். போலி பௌத்த பிக்குகளை இல்லாதொழிக்க, போலியாக பௌத்த மதத்தின் பெயரில் பணம் திரட்டுதல், மோசடி செய்வதனை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

இந்தப் பணிகள் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் அமைப்பில் இணைந்திருப்பதில் பயனில்லை எனவும், தற்போது பொதுபல சேனா செல்லும் பாதையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132473&category=TamilNews&language=tamil

உண்மையாண்டாலுமே அதுக்குத்தான் ஆரம்பிச்சிங்களா?  :unsure:

சொல்லவே இல்லை  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.