Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்றலுக்கான சூழல் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கற்றலுக்கான சூழல் தனியார் கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டும்
e375f3703e98338c885ff8ff1d92d7ff.jpg
தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளரிற்கு தெல்லிப்பழை சுகாதார வைத்திய பிரிவினரும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இனைந்து கருத்தரங்கொன்றை நடாத்தியிருந்தனர்.
 
இது தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது,
 
குறித்த கருத்தரங்கில் கல்வி நிலையங்களின் அமைப்பு முறை மாணவர்களது ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
 
இதன்படி கல்வி நிறுவனமொன்றின் சுற்று சூழல் டெங்கு நோய் மற்றும் எனைய நோய்கள் ஏற்படதா வகையில் காணப்பட வேண்டும். நிறுவனத்தின் நான்கு புற எல்லைகளும் சிரான முறையில் வேலிகள் அமைக்கப்பட்டு சுத்தமாகவும் காற்றொட்டம் நிறைந்ததாகவும் மாணவர்கள் கல்வி கற்பதற்கேற்ற சூழல் காணப்பட வேண்டும்.  அத்துடன் நிறுவனத்தில் ஆண்கள் பெண்கள் என தனித் தனியான முறையில் மலசலகூட வசதிகள் காணப்பட வேண்டும்.
 
கல்வி நிறுவனத்தின் பெயர் பலகை நிறுவன முகப்பில் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் அதில் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் தொடர்பிலக்கம் முகவரி என்பன தெளிவான முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் . என்பன தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களது ஆண்மிக நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு கல்விச் செயற்பாடுகள் நடாத்தப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதே வேளை கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்பாக கூறப்பட்ட விடயங்களாவன,
 
மாணவர்களது வரவு அவதானிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறைபாடுகள் அல்லது எதாவது பிரச்சனைகள் காணப்படுமிடத்தில் அது தொடர்பாக குறித்த மாணவர்களது பெற்றோருடன் தொடர்பு கொண்டு அது தொடர்பாக கூற்ப்பட வேண்டும். அத்துடன் மாலை வேளைகளில் 6, 6.30 மணிக்கு பின்னர் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது எனவும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களின் முன்னால் கூட்டமாக நிற்க முடியாது எனவும் பெண் பிள்ளைகளை கிண்டல் செய்வது அல்லது வேறு எதாவது தொந்தரவு செய்யவோ அணுமதிக்க கூடாது அவ்வாறு எதாவது நடந்தால் உடனடியாக அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக ஜின் மாதம் முதல் கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக கல்வி நிறுவனத்தால் கவனம் செலுத்தப்படவில்லையாயின் குறித்த கல்வி நிறுவனத்திற்கான சுகாதார பிரிவின் சிபாரிசு வழங்கப்படாததுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய பணிமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
குறித்த சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 16 கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் மேற்படி கூட்டத்தில் பத்து நிறுவனங்களே பங்கு பற்றியிருந்தன. இந் நிலையில் எனைய நிறுவனங்களிற்கு இவ் விடயம் தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்
 
தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளருக்கு தெல்லிப்பளை சுகாதார வைத்திய பிரிவினரும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இனணந்து கருத்தரங்கொன்றை நடாத்தியிருந்தனர்.
 
இது தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது,
 
குறித்த கருத்தரங்கில் கல்வி நிலையங்களின் அமைப்பு முறை மாணவர்களது ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.
 
இதன்படி கல்வி நிறுவனமொன்றின் சுற்று சூழல் டெங்கு நோய் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படதா வகையில் காணப்பட வேண்டும். நிறுவனத்தின் நான்கு புற எல்லைகளும் சீரான முறையில் வேலிகள் அமைக்கப்பட்டு சுத்தமாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் மாணவர்கள் கல்வி கற்பதற்கேற்ற சூழல் காணப்பட வேண்டும்.  அத்துடன் நிறுவனத்தில் ஆண்கள் பெண்கள் என தனித் தனியான முறையில் மலசலகூட வசதிகள் காணப்பட வேண்டும்.
 
கல்வி நிறுவனத்தின் பெயர் பலகை நிறுவன முகப்பில் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் அதில் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் தொடர்பிலக்கம் முகவரி என்பன தெளிவான முறையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் . என்பன தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டன. அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களது ஆன்மீக நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு கல்விச் செயற்பாடுகள் நடாத்தப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதேவேளை கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்பாக கூறப்பட்ட விடயங்களாவன,
 
மாணவர்களது வரவு அவதானிக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறைபாடுகள் அல்லது ஏதாவது பிரச்சினைகள் காணப்படுமிடத்தில் அது தொடர்பாக குறித்த மாணவர்களது பெற்றோருடன் தொடர்பு கொண்டு அது தொடர்பாக கூறப்பட வேண்டும். அத்துடன் மாலை வேளைகளில் 6, 6.30 மணிக்கு பின்னர் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது எனவும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களின் முன்னால் கூட்டமாக நிற்க முடியாது எனவும் பெண் பிள்ளைகளை கிண்டல் செய்வது அல்லது வேறு ஏதாவது தொந்தரவு செய்யவோ அனுமதிக்க கூடாது அவ்வாறு ஏதாவது நடந்தால் உடனடியாக அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக ஜீன் மாதம் முதல் கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக கல்வி நிறுவனத்தால் கவனம் செலுத்தப்படவில்லையாயின் குறித்த கல்வி நிறுவனத்திற்கான சுகாதார பிரிவின் சிபாரிசு வழங்கப்படாததுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
குறித்த சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 16 கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில் மேற்படி கூட்டத்தில் பத்து நிறுவனங்களே பங்குபற்றியிருந்தன. இந்நிலையில் ஏனைய நிறுவனங்களுக்கு இவ் விடயம் தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=820704053427268985#sthash.uNxQSHsX.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.