Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கப்பட்ட நெடுந்தீவின் மகள்

Featured Replies

Neduntivu1-300x188.jpg

 

கொழும்பு மிரருக்காக ஜெரா
 
2012 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ஆம் திகதி. யேசுதாஸன் குடும்பத்தில் பேரிழப்பு நடந்த நாள். விடுப்புப் பார்க்கும் தீவான நெடுந்தீவை திரும்பிப் பார்க்க வைத்த நாளும் அதுதான்.
 
யேசுதாஸன் ஒரு   வண்டில்காரன். நெடுந்தீவின் 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கிறார். நெடுந்தீவு படகுத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் பொருள்களை உரியவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதுதான் அவரின் தொழில். அந்தத் தொழில் கிடைக்காத நேரங்களில் (கடலடி காலங்கள் மற்றும் வண்டில் பழுதடைந்த நேரங்கள்) கிடைக்கின்ற கூலிவேலைக்கும் போவார். இந்தத் தொழில்களில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது. மனைவி பிறிடா கிலாறா யேசுதாஸன் வீட்டுப் பணிதான் செய்கிறார். அவர்களுக்கு மொத்தம் 7 பிள்ளைகள். ஆனால் இப்போது 6 பிள்ளைகள்தான் வீட்டில் இருக்கின்றனர். 4 ஆவது பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டனர்.
 
அந்த நான்காவது பிள்ளைக்குப் பெயர் லக்ஸினி. 12 வயது நிரம்பியவள். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் 8 ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். அந்தக் குடும்பத்திலேயே மிகுந்த துடிப்பானவள். மற்றைய சகோதரர்களைவிட வீட்டு வேலைகளைக் கவனிப்பதிலும், பாடசாலைக் கல்வியிலும் சுறுசுறுப்பானவள். விளையாட்டு, ஆடல், பாடல் என எதனையும் விட்டுவைக்காதவள் லக்ஸினி.
 
இந்த இயல்புகளோடுதான் லக்ஸினி 2012,மார்ச் 03 ஆம் திகதியையும் எதிர்கொண்டாள். அன்றுதான் யேசுதாஸன் குடும்பம் மண் வீட்டிலிருந்து சீமெந்தினாலான வீட்டுக்கு மாறும் முயற்சியில் தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. லக்ஸினி சின்னச் சின்ன உதவிகளை ஓடிஓடி செய்துகொண்டிருந்தாள்.  மதிய சமையல் பொழுது நெருங்கவே, யேசுதாஸன் தன்னிடமிருந்த 100 ரூபாய் பணத்தையும் சைக்கிளையும் லக்ஸினியிடம் கொடுத்து சந்தையில் மீன் வாங்கி வரச் சொன்னார்.
 
Neduntivu2.jpg
 
துடிப்பான பெண் பிள்ளை அப்பாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பறந்தது நெடுந்தீவு சந்தைக்கு. அன்றைய தினம் கச்சத்தீவு பெருநாள். சந்தை இல்லை என்கிற விவகாரம் அங்கு போன பிறகுதான் தெரிந்தது. மீன் தேடி சந்தையைவிட்டு வெளியே கொஞ்சத்தூரம் சைக்கிளை மிதித்திருக்கிறாள் லக்ஸினி. அவளுக்குப் பின்னால் 35 வயதைக் கடந்த அவனும் சென்றதை அயலவர்கள் பார்த்திருக்கின்றனர். அதற்குப் பின்னர் லக்ஸினி பற்றிய அவதானிப்புக்கள் எதுவுமில்லை.
 
இதற்கிடையில் லக்ஸினியின் பாடசாலைத் தோழி வீடு தேடி வந்துவிட்டாள். “பாட்டுப்பழகப் போகவேணும், லக்ஸினி எங்க” என்று அவளும் தேடித் தோற்று வீட்டிலிருந்து விடைபெற்றுவிட்டாள்.
 
ஆன்று சந்தை கூடாது என்பதைத் தாமதமாக அறிந்துகொண்ட லக்ஸினியின் அம்மா, ‘சந்தையில்லையெண்டு எங்கயாது விiளாயடிக் கொண்டிருப்பாள்” என்ற எண்ணத்தை மகளின் தேடலில் பரவவிட்டிருந்தாள். பின்னேரம் 4 மணியாகியும் லக்ஸினி வீடு திரும்பவில்லை. யேசுதாஸன் தேடிப்போன இடங்களிலும் லக்ஸினி இல்லை. அவளின் நண்பிகளும் தம்மோடு வரவேயில்லை எனக் கைவிரித்துவிட்டனர். பதட்டமடைந்துத் தேடத் தொடங்கியது அந்தக் குடும்பம்.
 
யேசுதாஸின் குடும்பத்துக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டிருக்கையில், நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஒரு பெண் சென்றார். 9 ஆம் வட்டாரத்தில் அதாவது பிள்ளையார் கோவில் பக்க காட்டுக்குள் தான் விறகு பொறுக்க சென்றதாகவும், அங்கு சிறுமியொருத்தி ஆடைகள் கிழித்தெறியப்பட்டு, காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேரடி சாட்சியம் கொடுத்தார். இந்தச் செய்தி நெடுந்தீவு முழுவதும் தீயாய் பரவியது. கச்சத்தீவு பெருநாளுக்கு ஆரவாரமாய் புறப்பட்ட மக்கள் கதிகலங்கி நின்றனர். ஆனால் இந்தச் செய்தி மிகத் தாமதமாகவே யேசுதாஸுக்குக் கிட்டியது. கேள்விப்பட்டதும் பதறியடித்துக்கொண்டு தன் மகனோடு அந்தப் பற்றைக்காட்டுக்கு ஓடினார். அவர் தன் கையால் மடித்துக்கொடுத்த 100 ரூபா காசு அந்த மடிப்புக் குலையாமல் அப்படியே கிடக்கிறது. அவள் கெந்திக் கெந்தி ஓடப்பழகிய சைக்கிள் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தாண்டியதும் இரத்த சொட்ட குப்புற கிடக்கிறாள் யேசுதாஸனின் 4 ஆவது மகள். ஆடைகள் கிழித்தெறியப்பட்டதைப் போலவே அவளின் முகத்தையும் குத்திக் கிழித்துக் காயப்படுத்தியிருக்கிறது அயலவர்கள் இறுதியாயக் கண்ட அந்த மனித மிருகம்.
 
அதற்குப் பெயர் ஜெகதீஸ்வரன். ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்தவர். பல திருமணங்களைக் கடந்த வன்முறையாளனாகிய அவர் அப்போதுதான் நெடுந்தீவில் ஒரு திருமணத்தை முடித்திருந்தார்.
 
லக்ஸினி கொல்லப்பட்ட சம்பவம் வெளித்தெரிந்தவுடன் பாலியல் வன்முறையாளன் ஜெதீஸ்வரன்தான் என்பது கண்டறியப்பட்டிருக்கவில்லை. அவரும் ஊர் மக்களுடன் சேர்ந்து இந்த சம்பத்துக்கு எதிராகக் கண்டனம் எழுப்பிக்கொண்டு அலைந்திருக்கிறார்.
Neduntivu3.jpg
 
அப்போதுதான் ஊரவர்கள் ஜெகதீஸ்வரனின் காலில் இரத்தம் படிந்திருப்பதைப் பார்த்தனர். காரணம் கேட்டனர். “அது சுவர் கட்டேக்க கல்லு காலில விழுந்துட்டுது” என்று முதல் சந்தியில் கேட்டவர்களிடமும், “சயிக்கிளால விழுந்திட்டன்” என்று மூன்றாம் சந்தியில் கேட்டவர்களிடமும் விளக்கம் சொல்லி சிக்கிக்கொண்டார் ஜெகதீஸ்வரன்.
 
லக்ஸினியை கடைசியாகக் காணும்போது ஜெகதீஸ்வரனே பின்தொடர்ந்தார் என்பதைக் கடைசியாய் கண்டவர்கள் சாட்சி சொன்னார்கள். அவர் வாழும் பகுதியில் இருக்கும் சிறுமிகளைத் துரத்தி வருபவர் என்றும், சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி தன் இச்சைக்குப் பயன்படுத்த முயற்சித்தவர் என்றும், ஊர்காவற்றுறையில் ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் கொன்றவர் எனவும் ஜெகதீஸ்வரனின் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தது அந்தக் கிராமம்.
 
அப்போது நேரம் இரவு 10 மணி. ஜெகதீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து, படுத்துகிடந்த அவரைப் பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அவரைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி அழைத்துச் சென்றனர். மக்கள் தம்மிடமே ஒப்படைக்கும்படியும், தாமே இதற்குத் தண்டனை வழங்கப்போவதாகவும் போராடினர். ஆனாலும் பொலிஸ்தரப்புத்தான் வென்றது. குற்றவாளியைக் கைதுசெய்து சிறைக்கு அனுப்பியது. மக்கள் நீதி வேண்டி போராடினர். ஆனாலும் நெடுந்தீவு மதில்களைக் கடந்து அந்தப் போராட்டங்கள் வெளியில் வரவில்லை. நீதிகோரலுக்கான அவர்களின் குரல் எடுபடவுமில்லை.
 
PPP.jpg
 
ஆனாலும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது. இடையில் பிணை வழங்கி – பின்னர் பிணையை ரத்துச் செய்தது.
 
“இதுவரைக்கும் 20 தரத்துக்கு மேல் நீதிமன்றத்துக்குப் போயிட்டன். தனிய இல்ல ஒவ்வொருக்காலும் போகேக்க 5 சாட்சிகளோட சேர்த்து 5 பேருக்கு குறையாமல் கூட்டிக்கொண்டு போவன். ஒராளுக்குப் போய்வர 750 ரூபாய்க்கு குறையாமல் வேணும். அலைஞ்சும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒவ்வொரு முறையும் திருப்பித் திருப்பி நீங்கள் கேட்கிறமாதிரி ஆரம்பத்தில இருந்து சொல்லுங்கோ எண்டுறாங்கள். குற்றவாளி தலைய கீழ தொங்கப் போட்டுக் கொண்டு நிக்கிறார். எங்களிட்ட கதையைக் கேட்டிட்டு தள்ளி வைக்கிறதாகவும், வீட்டுக்கு நோட்டிஸ் அனுப்புறதாகவும் சொல்லி அனுப்பிடுவினம். கடைசிய இனி யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்புறம், இனி அங்க இருந்து நோட்டீஸ் வரும் எண்டு அனுப்பிச்சினம். பங்குனி மாசம் நோட்டீஸ் வந்தது. அண்டைக்கு போயா. கோர்ட்ஸ் நடக்காதெண்டு நான் போகேல்ல. சாட்சியாளர் போனவ. அங்கயும் ஒண்டு கேட்கேல்லயாம். பிறகு கூப்பிடுறம் எண்டு திருப்பி அனுப்பிட்டினம்,” என்று யேசுதாஸன் சொல்லி முடிக்கையில் அவரின் கண்ணை நனைத்திருக்கும் கண்ணீரில் நம்பிக்கையினத்தின் மொத்த வடிவமும் பிசுபிசுக்கிறது.
 
“போங்கடா நீங்களும் உங்கட நீதியும்” என்ற அர்த்தப்பெயர்ப்பை அது சமநேரத்தில் தருகின்றது.
 
தாமதிக்கப்படும் நீதி இழைக்கப்படும் அநீதிக்கு சமனானது என்ற சட்டமொழி ஒன்று உண்டு. இலங்கையில் எந்தக் குற்றத்துக்குத்தான் தாமதிக்காத நீதி கிடைத்தது? எனவேதான் வித்தியாக்கள் பலியாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.