Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தில் 14 வயது சிறுமியொருவர் சடலமாகக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்

Featured Replies

Vgirl1_CI.JPG
 
சுருக்கிட்ட நிலையில் இந்தச் சிறுமி இறந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நேரம், தனிமையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதென,  ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். 
 
பாடசாலைக்குச் சென்றிருந்த இந்தச் சிறுமியின் சகோதரி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்து மூடியிருந்த கதவைத் திறந்தபோது தனது சகோதரி சுருக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். 
 
இதனையடுத்து, அவர் தெரிவித்த தகவலையடுத்து அயலவர்கள் ஒன்று கூடியிருந்த போதே தாய் தந்தையர் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 
தந்தையாருடனும், ஒரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்த இந்ச் சிறுமி நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச் செல்லாதிருந்த இந்தச் சிறுமியே, தனது தாயார் இரண்டு வருடங்களாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிந்தபோது வீட்டுச் சமையல் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்துள்ளார். 
 
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த ஓமந்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். திடீர் மரண விசாரணை அதிகாரி அமிர்தலிங்கம் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் நடத்தியதன் பின்னர் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 
 
இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும், புதிய வேலர் சின்னக்குளத்திற்குச் சென்று விடயம் குறித்து கேட்டறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சம்பவ இடத்தில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சிறுமியின் சடலத்தைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.  
 
சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழர் பிரதேசங்களில் உண்மையாக என்னதான் நடக்கின்றது????
 
பழி தீர்ப்பதற்கு பச்சிளம் சிறுமிகளா கிடைக்கின்றார்கள்?????
 
எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் இந்த நேரத்திலாவது ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர் பிரதேசங்களில் உண்மையாக என்னதான் நடக்கின்றது????
 
பழி தீர்ப்பதற்கு பச்சிளம் சிறுமிகளா கிடைக்கின்றார்கள்?????
 
எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் இந்த நேரத்திலாவது ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

புத்தளத்தில் முதலாம் வகுப்பு சிறுமி ஒருவரை, காட்டுக்குள் (தீய நோக்குடன்) கடத்திச் செல்லப்படுவதை கண்ட ஒருவர் கிராமத்தவரையும், பொலிசாரையும் அழைத்து, அவர்கள் சிறுமியை மீட்டு, அந்த காமுகனையும் கைது செய்தனர்.
 
இது குறித்த dailymirror செய்தியின் கீழ், ஒரு வாசகர், உங்களை போன்றே, எமது  மக்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்.
 
கருமம் பிடிச்ச சனியனுக்கு, எதுவும் அறியா குழந்தையா கிடைத்தது? பார்க்கும் போதே ரத்தம் கொதித்தது.  :blink:
 
நல்ல காலமாக சிறுமி, பயத்தில் அழுததால், அவள் இருக்குமிடத்தை தேடியவர்கள், அவன், தனது கடத்தல் நோக்கத்தினை தொடங்கும் முன்னர் கண்டு பிடித்து  விட்டனர். 
 
மக்கள் வருவதை கண்டதும், ஓடி ஒளிந்து கொண்டவனை துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்து இழுத்து வந்தார்கள் மக்கள்.
 
 
மீட்கப்பட்ட பச்சிளம் சிறுமி - சிறுமியின் அதிர்ஷ்டம்.
 
---------------600-6.jpg
 
---------600-7.jpg
 
கைது
 
---------------600-12.jpg
 
---------------600-10.jpg

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.