Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”ரொஹிங்யா மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துங்கள்”: மியான்மர் அரசிற்கு ஒபாமா வலியுறுத்தல்

Featured Replies

 
  ”ரொஹிங்யா மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துங்கள்”: மியான்மர் அரசிற்கு ஒபாமா வலியுறுத்தல் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 08:26.33 மு.ப GMT ] rohinga_obama_001.jpgமியான்மர் நாட்டில் பல இன்னல்களுக்கு உள்ளாகி வரும் ரொஹிங்யா சிறுபான்மையின மக்களிடம் பாரபட்சம் காட்டுவதை நிறுத்தங்கள் என அமெரிக்க அதிபரான ஒபாமா அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார்.

மியான்மர் நாட்டில் பிறந்து வளர்ந்த ‘ரொஹிங்யா’ இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்துள்ள மியான்மரின் பெளத்த மத அரசாங்கம், அவர்களை மறைமுகமாக நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆதரவற்ற சூழலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான ரொஹிங்யா மக்கள் கும்பல் கும்பலாக கடல் மார்க்கமாக ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபட்டுவருவதால், மியான்மர் அரசுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மியான்மர் அரசின் நடவடிக்கை குறித்து நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, பல ஆண்டுகள் ஜுண்டா ஆட்சியிலிருந்து விலகி ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், ரொஹிங்யா மக்களிடம் காட்டும் பாரபட்சத்தை மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மியான்மரில் வசித்து வரும் சுமார் 1.3 மில்லியன் ரொஹிங்யா இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

ரொஹிங்யா மக்களின் நிலை குறித்து விரிவாக பேசிய ஒபாமா, ‘ரொஹிங்யா மக்களில் நானும் ஒருவனாக இருந்திருந்தால், நான் பிறந்த பூமியில் வாழவே விரும்புவேன். மேலும், நான் பிறந்த மண்ணில் என் நாட்டு அரசு என்னையும் என் இன மக்களையும் மரியாதையாகவும் பாகுபாடு பார்க்காமல் கவனித்துக்கொள்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வேன்’ என ஒபாமா கூறியுள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் மியான்மர் நாட்டிற்கு சென்றிருந்த ஒபாமா, ரொஹிங்யா மக்களின் பிரச்சனைகளை கண்ட பிறகு, ‘நாட்டின் சீர்த்திருத்தங்கள் முழுமையானதாக இல்லை என்றும் அவற்றை இனி மாற்றவும் முடியாது’ என அந்நாட்டு அரசிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

தற்போதைய செய்திகளின் அடிப்படையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ’ரொஹிங்யா’ மக்களை சேர்க்காமல், தற்போது வரை அவர்களை ‘பெங்காளி’ இனத்தவர்கள் என்றே அடையாளப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரொஹிங்யா மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் குரல் கொடுத்துள்ளதால், மியான்மர் அரசிற்கு சர்வதேச அளவில் நெருக்கடிகள் வலுத்து வருகின்றன.

rohinga_obama_002.jpg

http://newsonews.com/view.php?20360822203PnBdc4eaSmOlJ4cbeMgAAbddccoMQqdbcdTlO40e425BnZ3e034E80o23


 
  காட்டுக்குள் இழுத்து சென்று கற்பழிக்கப்படும் கொடுமை: ரொஹிங்யா பெண்களின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 03:17.52 பி.ப GMT ] ronhinja_muslim_001.jpgரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பலாத்காரம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், ரொஹிங்யா முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பயந்து ரொஹிங்யா முஸ்லிம்கள், மலேசியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆதரவு கோரி சட்டவிரோதமாக செல்கின்றனர்.

ஆதரவு கோரி செல்லும் இவர்கள் பயணிக்கும் வழியிலேயே, பசியாலும் பட்டியாலும் செத்துமடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, சமீபத்தில் மலேசிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 28 கடத்தல் முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கல்லறை தளங்களில் 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த எலும்புக்கூடுகள் கடத்தல்காரர்களால் கடத்தி வரப்பட்ட, ரொஹிங்யா முஸ்லிம் மக்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மலேசிய உள்துறை மந்திரி அகமது ஷாகித் ஹமிதுவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அடைக்கலம் தேடி வந்த ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து நாட்டின் படாங் பேசர் பகுதியில் உள்ள கடத்தல் முகாமில் இருந்து தப்பித்த நூர் கைதா அப்துல் சுகுர் என்ற பெண்மணி, இது குறித்து மலேசிய செய்தி ஊடகமான பெர்னாமாவுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு நாள் இரவிலும் எங்கள் இனத்தை சேர்ந்த 2 அல்லது 3 இளம்பெண்களை காட்டுக்குள் இழுத்துச்சென்று கடத்தல்கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதனால் இரு பெண்கள் கர்ப்பமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மலேசிய பகுதியிலும் நடைபெற்றதாக சுகுரின் கணவரான நூருல் அமின் நோபி ஹுசைனும் கூறியுள்ளார்.

ronhinja_muslim_002.jpg

ronhinja_muslim_003.jpg

http://newsonews.com/view.php?20360822203PnBdc4eaKmOlJ4cbeMgAAbddccoMQAdbcdTlO40e425BnZ2e034E80o23

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.