Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

மூன்றாமிடத்தில் ஸ்மித்
 

அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

 

தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மேலும் கூறியுள்ளார்.

 

இன்றைய போட்டியில் அடம் வோஜஸ் அல்லது பவாட் அஹமட் ஆகியோரில் ஒருவர் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

2011ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் ஓய்வு பெற்ற பின்னர் அவுஸ்திரேலியா அணியில் யாரும் இன்னமும் சரியான முறையில் மூன்றாமிடத்தை மீள் நிரப்புகை செய்யவில்லை. மூன்றாமிடம் டேவிட் பூன் காலத்தில் இருந்து மூன்றாமிடம் அவுஸ்திரேலியா அணிக்கு பிரச்சினையாக இருக்கவில்லை.

 

2011ஆம் ஆண்டு முதல் மைக்கல் கிளார்க், ஷோன் மார்ஸ், உஸ்மான் கஜாவா, ரொப் குயினி, பிலிப் கியூஸ், ஷேன் வொட்சன், எட் கோவன், அலெக்ஸ் டூலான், கிளன் மக்ஸ்வெல் ஆகியோர் குறித்த இடத்தில் விளையாடிய போதும் யாரும் சரியான இடத்தைப் பிடிக்கவில்லை. ஆனால் ஸ்டீபன் ஸ்மித் அண்மைக்காலமாக காட்டிவரும் அபார திறைமை அவரை மூன்றாமிடத்தில் நிலை நிறுத்தும் என நம்பலாம்.

- See more at: http://www.tamilmirror.lk/147543#sthash.VBwX3Lqa.dpuf

  • தொடங்கியவர்

ஆஸி ஆரம்ப வீரர் விளையாடமாட்டார்
 

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் க்றிஸ் ரொஜஸ், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இன்று ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வேளையில் அவரின் தலைக்கவசத்தை மேற்கிந்திய உள்ளூர் வீரர் ஒருவரின் பந்து தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு தலையில் வலி தொடர்ந்தும் இருப்பதனால் முதற்ப் போட்டியில் அவரை விளையாட வேண்டாம் என அணியின் வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.

 

இதன் காரணமாக அவர் அணியில் இடம் பிடிக்கமாட்டார். இவரின் இடத்திற்கு சோன் மார்ஸ் இணைத்துக்கொள்ளப்படுவார் என நம்பப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/147474#sthash.mkAAYVJS.dpuf

  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவுகள் 139/8 (48.2 ov)

  • தொடங்கியவர்

மேற்கு இந்திய தீவுகள் 148

அவுஸ்திரேலியா 15/1

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிவு: தேவேந்திர பிஷூ லெக்ஸ்பின்னில் திணறல

 

டொமினிகா, விண்ட்சர் பார்க்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 153 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

 

நேற்று முதல் நாள் ஆட்டத்தில் அனுபவமற்ற மே.இ.தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 148 ரன்களுக்குச் சுருண்டது. மிட்செல் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், நேதன் லயன், ஸ்டீவ் ஸ்மித் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதனையடுத்து நேற்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங், மே.இ.தீவுகளின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்பாக திணறத் தொடங்கியது, வார்னர் 8 ரன்னிலும், மார்ஷ் 19 ரன்னிலும், கிளார்க் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர், ஆஸ்திரேலியா 85/3 என்று நேற்று ஆட்டத்தை முடித்தது.

 

இதனையடுத்து வியாழக்கிழமையான இன்று 2-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா தேவேந்திர பிஷூ-வின் அபாரமான லெஸ் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஸ்மித், வாட்சன், ஹேடின் ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

 

சுமார் 90 பந்துகளில் 1 பவுண்டரியுடன் திணறலான 25 ரன்களை எடுத்த ஸ்மித் இன்று காலை பிஷூவின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார். ஆனால் பிஷூ அருமையாக அவரை தன் ஃபிளைட்டில் ஏமாற்ற, பந்து சிக்கவில்லை, ராம்தின் ஸ்டம்ப்டு செய்தார்.

 

2 ஓவர்களுக்குப் பிறகு 11 ரன்கள் எடுத்திருந்த ஷேன் வாட்சனை தனது அருமையான பிளைட் மூலம் முன்னால் வந்து ஆடச்செய்த பிஷூ பந்தை வெளிப்புறமாகத் திருப்ப டிரைவ் ஆடி எட்ஜ் செய்தார் வாட்சன், அங்கு ஜேசன் ஹோல்டர் அருமையான தாழ்வான கேட்ச் ஒன்றை அள்ளினார்.

 

விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு லெக்ஸ்பின்னருக்கான கனவுப்பந்தை வீசினார் பிஷூ, அதாவது மிடில்-லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி லெக்ஸ்பின்னாகி ஹேடின் மட்டையைக் கடந்து சென்று ஆஃப் ஸ்டம்பின் மேற்புறத்தைத் தாக்கியது. விளையாட முடியாத பந்தாகும் இது.

 

அவர் கிரீசில் நிற்காமல் மேலேறி வந்திருந்தால் ஓரளவுக்காவது சமாளித்திருக்கலாம். ஆனால் ஹேடின் கிரீஸில் தேங்கிவிட்டார்.

 

ஒரு முனையில் ஆடம் வோஜஸ் தற்போது 45 ரன்களுடன் போராட, ஜான்சன் 14 ரன்களுடன் அவருடன் இருக்கிறார். ஆஸ்திரேலியா சற்று முன் வரை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

 

தேவேந்திர பிஷூ 20 ஓவர்கள் 4 மைடன்களுடன் 59 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%82-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/article7282916.ece

  • தொடங்கியவர்

வோக்ஸ் சதம்: ஆஸி., ஆதிக்கம்

 

டொமினிகா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடம் வோக்ஸ் சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 148 ரன்கள் எடுத்தது.

 

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பினர். இருப்பினும் மனம் தளராமல் போராடிய ஆடம் வோக்ஸ், அறிமுக டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார்.

 

கடைசியில் ஹேசல்வுட் (39) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் எடுத்தது. வோக்ஸ் (130) அவுட்டாகாமல் இருந்தார்.

 

மீண்டும் திணறல்:

170 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மறுபடியும் அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் பிராத்வைட் (15), ஹோப் (2) அடுத்தடுத்து அவுட்டாகினர்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்து, 145 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் தோல்வியை தவிர்ப்பது சிரமம் தான்

 

http://sports.dinamalar.com/2015/06/1433354428/JoshHazlewoodaustralia.html

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட்: பிஷு அபாரமாக வீசியும் பிடியை நழுவ விட்ட மே.இ.தீவுகள்

 

மே.இ.தீவுகளுக்கு எதிராக டொமினிகாவில நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆடம் வோஜஸ் சதத்துடன் ஆஸ்திரேலியாவின் கை ஒங்கியுள்ளது.

மே.இ.தீவுகளின் தேவேந்திர பிஷூ 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை கதிகலங்கச் செய்தார். ஆனால் மற்ற வீச்சாளர்கள் ஒருவரும் சோபிக்கவில்லை, ஆட்டத்தில் தீவிரம் இல்லை, முனைப்பும் இல்லை.

 

ஆடம் வோஜஸ் 35-வது வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சதம் அடித்ததன் மூலம் அதிக வயதில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் கண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

 

பிராட் ஹேடின் அபாரமான பிஷூ லெக் ஸ்பின்னுக்கு பவுல்டு ஆகி வெளியேறும்போது ஆஸ்திரேலியா 126/6 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு ஆடம் வோஜஸ் 130 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கடைசி விக்கெட்டுக்காக வோஜஸ்-ஹேசில்வுட் ஜோடி 97 ரன்களைச் சேர்க்க 318 ரன்கள் எடுத்தது.

 

அதாவது கடைசி 4 விக்கெட்டுகள் இணைந்து வோஜஸ் சதத்துடன் ஆஸ்திரேலியா அணி 192 ரன்களை குவிக்க மே.இ.தீவுகள் அனுமதித்துள்ளது.

 

உணவு இடைவேளைக்கு முன்னரே ஸ்மித், வாட்சன், ஹேடினை வீழ்த்தி 85/3-லிருந்து 126/6 என்று தடுமாறச் செய்தார் தேவேந்திர பிஷூ. ஆனால் அதன் பிறகு ஆடம் வோஜஸ் ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தளர்வான ஷாட் ஒன்றைக்கூட ஆடவில்லை. சிறப்பான கவனத்துடனும், நிதானத்துடனும் அவர் தனது இன்னிங்ஸை திட்டமிட்டார்.

 

அரைசதம் அடித்த பிறகு மர்லன் சாமுயெல்ஸ் பந்தை புல் ஆடினார், ஜெர்மைன் பிளாக்வுட்டுக்கு அது கடினமான வாய்ப்பானது, பிடிக்க முடியவில்லை. 187-வது பந்தில் சதம் எடுத்த வோஜஸ், அதிக வயதில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்து ஜிம்பாப்வேயின் டேவிட் ஹட்டனை அந்த இடத்திலிருந்து நகர்ந்தினார்.

 

சதம் எடுத்த பிறகு 104 ரன்களில் இருந்த போது ஜெரோம் டெய்லர் பந்தில் கல்லியில் ஹோப் ஒரு சுலப கேட்சைத் தவறவிட்டார். ஹேசில்வுட்டுக்கும் கேட்ச் ஒன்று விடப்பட்டது. இவைதான் மே.இ.தீவுகளின் துன்பத்துக்குக் காரணமாகியுள்ளன.

 

126/6 என்ற நிலையில் மே.இ.தீவுகளிடத்தில் தீவிரம் இல்லை, ‘கில்லர் இன்ஸ்டிங்க்ட்’ இல்லை. ஏனோதானோவென்று பந்து வீச்சில் மாற்றம், களவியூகத்தில் ஆக்ரோஷமின்மை என்று ராம்தின்னின் கேப்டன்சி தகுதி மீது பெரும் சந்தேகம் கிளம்பியது.

 

தேவையில்லாமல் 3 விக்கெட்டுகள் எடுத்த பிஷூவை கட் செய்தார். பிறகு 5-6 ஓவர்களுக்குப் பிறகு கொண்டு வராமல் சற்றுப் பொறுத்து கொண்டு வந்தார். இதனால் டெய்ல் எண்டர்களே செட்டில் ஆயினர். பிஷூவுக்கு பந்துகள் ஷேன் வார்ன் போல் திரும்பின. நல்ல கேப்டன் நிச்சயம் நேற்று ஆஸ்திரேலியாவை 150க்குள் சுருட்டியிருப்பார்.

 

ஆனால் மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியாவை 126/6 என்பதிலிருந்து 318 ரன்கள் அடிக்க விட்டதோடு 2-வது இன்னிங்ஸில் 170 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வி அபாயத்தில் வேறு உள்ளது.

 

இன்று 3-ம் நாள் ஆட்டம், 4-ம் நாளுக்குச் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7285999.ece

  • தொடங்கியவர்

ஆடம் வோஜஸ் சதம்: ஆஸ்திரேலியா 318 ரன்கள் குவிப்பு
 

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 107 ஓவர்களில் 318 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆடம் வோஜஸ் தனது அறிமுகப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் குவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் ரொசாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங் ஸில் 53.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்ச மாக ஷாய் ஹோப் 36 ரன்களும், ஹோல்டர் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்தி ரேலிய தரப்பில் மிட்செல் ஜான்சன், ஹேஸில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

தடுமாறிய ஆஸ்திரேலியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய அந்த அணி, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை இழந்தது. அவர் 90 பந்து களில் 1 பவுண்டரியுடன் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பின்னர் வந்த வாட்சன் (11), பிராட் ஹேடின் (8) ஆகியோர் அடுத்தடுத்து பிஷூ பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, 44 ஓவர்களில் 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா. எனினும் மறுமுனையில் நிதானமாக ஆடிய வோஜஸுக்கு பக்கபலமாக பின்வரிசை பேட்ஸ் மேன்கள் விளை யாட, ஆஸ்திரேலியா மெதுவாக சரிவிலிருந்து மீண்டது.

 

பின்வரிசை வீரர்கள் அபாரம்

ஒருபுறம் ஜான்சன் எச்சரிக்கையோடு விளையாட, மறுமுனையில் வோஜஸ் 118 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியா 178 ரன்களை எட்டிய போது ஜான்சனை வீழ்த்தினார் பிஷூ. ஜான்சன் 59 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட் டுக்கு 52 ரன்கள் சேர்த்தது.

ஆனால் பின்னர் வந்த ஸ்டார்க் டக் அவுட்டாக, வோஜுஸடன் இணைந்தார் நாதன் லயன். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் 71-வது ஓவரில் 200 ரன் களை எட்டியது ஆஸ்திரேலியா. அந்த அணி 221 ரன்களை எட்டியபோது 9-வது விக்கெட்டாக லயன் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்தார்.

 

வோஜஸ் சதம்

இதையடுத்து கடைசி விக்கெட்டாக ஹேஸில்வுட் களம்புகுந்தார். இதனால் ஆஸ்திரேலியாவை விரைவாக ஆட்ட மிழக்கச் செய்துவிடலாம் என நினைத்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய ஹேஸில்வுட், மிக நேர்த்தியாக மேற் கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை எதிர்கொண்டார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய வோஜஸ் 187 பந்துகளில் சதமடித்தார். இதனால் 99-வது ஓவரில் 300 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. தொடர்ந்து சிறப்பாக ஆடி ரன் சேர்த்த ஹேஸில்வுட், சாமுவேல்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆக, ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் 107 ஓவர்களில் 318 ரன்களோடு முடி வுக்கு வந்தது.

வோஜஸ் 247 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேஸில்வுட் 87 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார்.

 

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷூ 33 ஓவர்களில் 80 ரன் களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

மே.இ.தீவுகள் தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் 170 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன் னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் பிரத்வெயிட் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 2 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ 3, டவ்ரிச் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

 

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ஸ்டெம்பிங் முறையில் வெளியேற்றியதன் மூலம் 200 பேரை ஆட்டமிழக்கச் செய்த 3-வது மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார் தினேஷ் ராம்தின். ஜெஃப் துஜான் (270), ரிட்லே ஜேக்கப் (219) ஆகியோர் மற்ற இருவர். சர்வதேச அளவில் மேற்கண்ட மைல்கல்லை எட்டிய 16-வது விக்கெட் கீப்பர் ராம்தின்.

ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி 4 விக்கெட்டுகள் மூலம் 192 ரன்கள் கிடைத்தன.

நேற்றைய ஆட்டத்தில் வோஜஸ்-ஹேலில்வுட்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா ஏற்கெனவே எடுத்திருந்த ரன் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.

 

போட்டித் துளிகள்…

35 வயது வோஜஸும், சாதனையும்…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதமடித்த ஆடம் வோஜஸ், ஆஸ்தி ரேலியாவை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டு பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆடம் வோஜஸின் தற்போதைய வயது 35 ஆண்டுகள், 242 நாட்களாகும். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப் போட்டியில் சதமடித்த மூத்த வீரர் என்ற பெருமை அவர் வசமாகியுள்ளது.

முன்ன தாக ஜிம்பாப்வேயின் டேவ் ஹக்டன் (35 வயது, 117 நாட்கள்), 1992-ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான போது சதமடித்ததே சாதனையாக இருந்தது. அறிமுகப் போட்டியில் 5-வது வீரராக களமிறங்கி சதமடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையும் வோஜஸ் வசமாகியுள்ளது.

 

தேவேந்திர பிஷூ 50

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 80 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தேவேந்திர பிஷூ. டெஸ்ட் போட்டியில் இதுதான் அவருடைய சிறப்பான பந்துவீச்சு. மேற்கிந்தியத் தீவுகள் லெக் ஸ்பின்னர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சும் இதுதான்.

தனது 13-வது டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய 2-வது மேற் கிந்தியத் தீவுகள் லெக் ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிஷூ.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-318-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7288881.ece

  • தொடங்கியவர்

சாமுயெல்ஸ், டவ்ரிச் அபார ஆட்டத்துக்குப் பிறகு பெரும் சரிவு: ஆஸ்திரேலியா வெற்றி

 

டொமினிகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 3 நாட்களுக்குள் டெஸ்ட் போட்டியை வென்றது.

 

வெற்றி பெறத் தேவையான 47 ரன்களை 5 ஓவர்களில் அடித்து நொறுக்கியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

 

முதல் இன்னிங்ஸில் 148 ரன்களுக்கு சொதப்பி ஆல் அவுட்டான மேற்கிந்திய தீவுகள், அதன் பிறகு தேவேந்திர பிஷூவின் அச்சுறுத்தல் லெக் ஸ்பின் பந்துவீச்சின் காரணமாக ஆஸ்திரேலியாவை 127/6 என்று நெருக்கியது, ஆனால் அதன் பிறகு பிடியை நழுவவிட்டு, கேட்ச்களையும் நழுவ விட்டு ஆடம் வோஜசை ‘அறுவை’ சதம் காண வைத்ததோடு, கடைசி விக்கெட்டுக்காக ஹேசில்வுட், வோஜஸ் 97 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து 170 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

இந்நிலையில் 2-ம் நாளான நேற்று முன் தினம் 25/2 என்ற நிலையில் 3-ம் நாளான நேற்று களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி வந்தவுடன் 5 ரன்னில் டேரன் பிராவோ விக்கெட்டை இழந்தது.

 

ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் வார்னரிடம் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார் டேரன் பிராவோ. 37/3 என்ற நிலையில் சாமுயெல்ஸ், அறிமுக வீரர் டவ்ரிச் இணைந்தனர்.

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய சாமுயெல்ஸ்-டவ்ரிச் ஜோடி

 

சாமுயெல்ஸ், டவ்ரிச் ஜோடி அணியின் பிளவுகளிலிருந்து எழுந்தனர். ஓரளவுக்கு பந்துவீச்சை நிதானமாக ஆடி, அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து உணவு இடைவேளையின் போது ஸ்கோரை 97/3 என்று உயர்த்தினர்.

 

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலிய பந்துவீச்சை இன்னும் சவுகரியமாக ஆடத் தொடங்கினர். நேதன் லயன் ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார் சாமுயெல்ஸ்.

 

டவ்ரிச்சும் லயன் பந்தில் மிட் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து பிறகு மிட்செல் ஜான்சன் பந்தை புல்ஷாட் ஆடிஅரைசதம் பூர்த்தி செய்தார். ஆனால் அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 153. ஒரு சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும் இது.

 

இதனையடுத்து 170 ரன்கள் என்ற முன்னிலையைக் கடந்தது மே.இ.தீவுகள். டவ்ரிச் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தை கிளார்க்குக்கு பிடித்த பீல்டிங் நிலையான ஷார்ட் மிட் ஆனில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதாவது 37/3 என்ற நிலையிலிருந்து கிளார்க் கொடுத்த பல சவால்களையும் கடந்து வந்து 4-வது விக்கெட்டுக்காக 144 ரன்களைச் சேர்த்த நிலையில் மேலும் முன்னிலையை நகர்த்திச் சென்றிருக்க வேண்டிய சூழலில் டவ்ரிச் அவுட் ஆனார்.

 

கடைசி 6 விக்கெட்டுகள் 35 ரன்களில்

தேநீர் இடைவேளைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணி தனது எதிர்மறை ஃபார்முக்கு திரும்பியது. ஜெர்மைன் பிளாக்வுட் தேவையில்லாமல் லயன் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று தாழ்வான புல்டாசை ஆட முடியாமல் ஸ்டம்ப்டு ஆனார்.

சாமுயெல்ஸுக்கு ஆதரவு தேவை என்ற நிலையில் 74 ரன்களில் அவர் ஜான்சனின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடி பைன்லெக் திசையில் ஹேசில்வுட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

கேப்டன் தினேஷ் ராம்தின் லயன் பந்தில் பவுல்டு ஆனார். ஜெரோம் டெய்லர் ஸ்டார்க்கின் அபாய இன்ஸ்விங்கருக்கு முதல் பந்திலேயே எல்.பி.ஆனார். பிறகு தேவேந்திர பிஷூ, மற்றும் கேப்ரியல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டார்க் காலி செய்தார். ஜேசன் ஹோல்டர் 12 ரன்களில் ஒருமுனையில் தேங்கிப் போனார். 67-வது ஓவரில் 181/3 என்று இருந்த மேற்கிந்திய அணி அடுத்த 6 விக்கெட்டுகளை 19.3 ஓவர்களில் இழந்து வெறும் 35 ரன்களையே எடுத்தது.

ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஜான்சன், ஹேசில்வுட், லயன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

வெற்றி பெற 47 ரன்கள் தேவை என்ற நிலையில் டேவிட் வார்னர் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் விளாசி டெய்லரிடம் இந்த டெஸ்டில் 2-வது முறையாக ஆட்டமிழந்தார். மார்ஷ் 13 ரன்களுடனும், ஸ்மித் 5 ரன்களுடனும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாக ஆடம் வோஜஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7289337.ece

  • தொடங்கியவர்

ஸ்டீவ் ஸ்மித் சதம் *ஆஸி., நிதான ஆட்டம்

 

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார்.

 

வெஸ்ட் இண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி 1–0 என, முன்னிலையில் உள்ளது.

 

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ராம்தின் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஸ்மித் சதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஷேன் மார்ஷ் ஜோடி துவக்கம் கொடுத்தது. டெய்லர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் வார்னர் ‘டக்’ அவுட்டானார். மார்ஷ் (11) ஏமாற்றினார். கேப்டன் கிளார்க் (47), வோஜஸ் (37) நிலைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 9வது சதம் அடித்தார்.

 

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் (135), வாட்சன் (20) அவுட்டாகாமல் இருந்தனர், வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டெய்லர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1434081955/australiawestindiestestjamaica.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 6 மெய்டன் ஓவர்கள் வீசி ஜெரோம் டெய்லர் அசத்தல்!

 

கிங்ஸ்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், தொடர்ந்து 6 ஓவர்கள் மெய்டனாக வீசி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜெரோம் டெய்லர் அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, கிங்ஸ்டன் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர், அபாரமாக பந்து வீசினார். ஜெரோம் டெய்லரின் பந்தை தொடவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயந்தனர்.

 

 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரை டக் அவுட்டாக்கிய ஜெரோம் டெய்லர், தொடர்ந்து ஷான் மார்ஷ் விக்கெட்டையும் வீழ்த்தினார். அது மட்டுமல்ல இந்த போட்டியில் தொடர்ச்சியாக 6 ஓவர்களில், ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் பந்து வீசி அவர் அசத்தினார். ஜெரோம் டெய்லர் வீசிய முதல்  6 ஓவர்களில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் ரன் எடுக்க முடியவில்லை. இந்த போட்டியில் ஜெரோம் டெய்லர் வீசிய 7 வது ஓவரின் 5வது பந்தில்தான் முதல் ரன் எடுக்கப்பட்டது.அதாவது 41வது பந்தில்.

இதற்கு முன் கடந்த 1994ஆம் ஆண்டு கண்டியில், இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தொடர்ந்து 8 ஓவர்கள் மெய்டனாக வீசியிருந்தார். ஆனால் அந்த 8 ஓவர்களில் வாசிம் அக்ரம் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜெராம் டெய்லர் தொடர்ந்து 6 மெய்டன் ஓவர்கள் வீசி, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.

 

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஜெரோம் டெய்லர் 15 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களைதான் விட்டுக் கொடுத்தார்.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47873

 

  • தொடங்கியவர்

ஸ்மித்துக்கு இரட்டை சதம் மறுத்த ஜேரோம் டெய்லர்: மே.இ.தீவுகள் சரிவு

 

ஜமைக்காவில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 399 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து மேற்கிந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து சரிவு கண்டது.

2ம் நாளான நேற்று 235/4 என்ற நிலையில், இன்று 135 ரன்களுடன் ஸ்டீவ் ஸ்மித்தும், 20 ரன்களுடன் வாட்சனும் தொடங்கினர்.

 

ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு அபாரமான இன்னிங்சை ஆடி 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் 199 ரன்களில் இருந்த போது வேகமான இன்ஸ்விங் யார்க்கரை வீசினார் ஜெரோம் டெய்லர், க்ரீசில் சிக்கிய ஸ்மித்தின் பூட்டில் பட்டது பந்து. ஸ்மித் பேலன்சும் தவறியது. டெய்லர் பலத்த முறையீடு எழுப்ப நடுவர் கையை உயர்த்தினார். மேல்முறையீடு செய்தார் ஸ்மித் ஆனால் அவுட் ஏற்கப்பட்டது. 199 ரன்னில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

 

9 ஆண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லஸ்பி இரட்டை சதம் எடுத்த பிறகு அயல் மண்ணில் இரட்டை சதம் எடுக்கும் ஆஸி.வீரராக ஸ்மித் திகழ்ந்திருப்பார், ஆனால் டெய்லரின் பாதம் பெயர்க்கும் யார்க்கர் ஸ்மித்தின் கனவைத் தகர்த்து அவருக்கு விடை கொடுத்து அனுப்பியது.

ஜெரோம் டெய்லர் 25 ஓவர்கள் 10 மைடன்கள் 47 ரன்கள் 6 விக்கெட்டுகள், அவரது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு இது. மற்ற பவுலர்கள் சோபிக்கமுடியவில்லை.

 

கேப்டன் தினேஷ் ராம்தின் இவரை அதிகம் பயன்படுத்தாதது விவாதத்துக்குரியதே. ஸ்மித்தின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. பந்து மட்டையில் பட்டதாகவே தனது 200-வது ரன்னுக்கு ஓடினார் ஸ்மித், ஆனால் நடுவர் தீர்ப்பு எல்.பி. என்று வந்தது. ஸ்னிக்கோ மீட்டர் இல்லாததால் பந்து மட்டையில் பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை, இதனால் கள நடுவர் இயன் கோல்டின் தீர்ப்பு ஏற்கப்பட்டது.

 

ஷேன் வாட்சன் 25 ரன்களில் டெய்லரின் நேர் பந்தை ஆடாமல் விட்டுவிட முடிவு செய்து பவுல்டு ஆனார். பிராட் ஹேடின் 22 ரன்களில் டெய்லரின் மற்றொரு அபாரமான பந்துக்கு லெக்ஸ்டம்பை இழந்தார்.

 

ஸ்மித் தனது அதிரடியைத் தொடங்க ஜோஷ் ஹேசில்வுட் (24) ஸ்டேண்ட் கொடுத்தார். ஆஸ்திரேலியா 399 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மே.இ.தீவுகள் தனது இன்னிங்ஸை தொடங்கியது. அறிமுக வீரர் ரஜீந்திர சந்திரிகா 3-வது ஓவரில் ரன் எடுக்காமல் ஸ்டார்க்கின் வைடு பந்தை துரத்தி ஹேடினிடம் கேட்ச் கொடுத்தார். இது நோ-பால் என்று தெரிந்தது, ஆனால் 3-வது நடுவரான அலீம்தார் இல்லை என்றார்.

 

ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரை வைத்துத் தொடங்கிய மைக்கேல் கிளார்க், ஜான்சனுக்கும் முன்னால் லயனை கொண்டு வந்தார். கிரெய்க் பிராத்வெய்ட் லயனின் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார், ஆனால் திரும்பவில்லை, பவுல்டு ஆனார். மற்றொரு நேர் பந்தில் டேரன் பிராவோ எல்பி ஆனார்.

 

தேநீர் இடைவேளையின் போது மேற்கிந்திய அணி 35/3 என்று ஆனது. கடந்த போட்டியில் நல்ல அரைசதம் கண்ட ஷேன் டோவ்ரிச், ஹேசில்வுட்டின் வெளியே சென்ற பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். ஷாய் ஹோப், லயன் பந்தை ஹேடினிடம் கேட்ச் கொடுத்தார்.

 

தினேஷ் ராம்தினை எல்.பி.யில் வீழ்த்தினார் ஹேசில்வுட். ஜெர்மைன் பிளாக்வுட் மட்டும் ஒரு முனையில் அடித்து ஆட முயன்றார். திருப்தியற்ற ஒரு இன்னிங்ஸில் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 51 ரன்கள் எடுத்து ஹேசில்வுட்டிடம் அவுட் ஆனார். கடைசியாக பெருமாள் ஜான்சனிடம் வீழ்ந்தார்.

 

மே.இ,.தீவுகள் 143/8. இன்று 3-ம் நாள் ஆட்டம். பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜேசன் ஹோல்டர் 13 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். அவருக்கு ஆதரவளிக்க டெய்லர், ரோச் உள்ளனர்.

 

ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லயன் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஸ்டார்க், ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7312696.ece

  • தொடங்கியவர்

வெஸ்ட் இண்டீஸ் திணறல்

 

கிங்ஸ்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை எட்ட திணறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது.

 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 399, வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஸ்டீவ் ஸ்மித் (54), கிளார்க் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இதனையடு்தது 392 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஸ்டார்க் ‘வேகத்தில்’ பிராத்வைட்,  ராஜேந்திரா சந்திரிகா டக்–அவுட்டாகினர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 2 வி்ககெட்டுக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ (8), டவ்ரிச் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2015/06/1434081955/australiawestindiestestjamaica.html

  • தொடங்கியவர்

கோப்பை வென்றது ஆஸி., : வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

 

கிங்ஸ்டன்: இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது, தொடரை 2-0 என இழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடறது.

 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 399, வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 392 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ (8), டவ்ரிச் (1) அவுட்டாகாமல்  இருந்தனர்.     

 

நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் டவ்ரிச் (4), ஸ்டார்க் ‘வேகத்தில்’ போல்டானார். ஹேசல்வுட் பந்தில் டேரன் பிராவோ (11), பிளாக்வுட் (0) வெளியேறினர். மிட்சல் ஜான்சன் ‘வேகத்தில்’ ஹோப் (16) போல்டானார். வாட்சன் பந்தில் ஹோல்டர் (1) நடையை கட்டினார். 

உணவு இடைவேளையின் போது, 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 72 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.

 

  பின்வரிசை வீரர்களுகம் சொதப்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’.  வீராசாமி பெருமாள் (23) அவுட்டாகாமல் இருந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவிர, 2-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது.  ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 3, ஹேசல்வுட், லியான், ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

http://sports.dinamalar.com/2015/06/1434081955/australiawestindiestestjamaica.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.