Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் இந்தியா கிரிக்கெட் தொடர்

Featured Replies

வங்கதேச அணி அறிவிப்பு

 

தாகா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியில் காயத்தால் பாதிக்கப்பட்ட ஷகாதத் ஹொசைனுக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வானார்.

 

 

வங்கதேசம் செல்லவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் ஜூன் 10ல் நடக்கவுள்ள இப்போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது.

 

 

சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில், 2 பந்து மட்டுமே வீசிய நிலையில் வலது முழங்காலில் காயமடைந்த ஷகாதத் ஹொசைன் 6 மாத காலம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்க முடியாமல் போனது. இவருக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடிய ருபெல் ஹொசைன், இடுப்பு பகுதியில் காயமடைந்ததால் 2வது டெஸ்டில் விளையாடவில்லை. பின் காயத்தில் இருந்து மீண்ட இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

 

 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது கை விரலில் காயமடைந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சந்தேகமாக இருந்தது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர் அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் இவர் விக்கெட் கீப்பராக செயல்படுவது சந்தேகம். ஒருவேளை இவர் ‘கீப்பிங்’ செய்யவில்லை என்றால் அறிமுக வீரர் லிட்டான் தாஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

 

 

வங்கதேச அணி விவரம்: முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ், மோமினுல் ஹக், மகமதுல்லா, சாகிப் அல் ஹசன், சவுமியா சர்கார், ஷுவாகதா ஹோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ருபெல் ஹொசைன், ஜுபைர் ஹொசைன், லிட்டான் தாஸ், அபுல் ஹசன்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433353877/RubelHossaincricket.html

 

  • தொடங்கியவர்

  இருவருக்கு இடம் கிடைக்குமா: சொல்கிறார் முரளிதரன்கோல்கட்டா:

 

‘‘வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்  ‘லெவன்’ அணியில் ஹர்பஜன், அஷ்வின் என, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற வேண்டும்,’’ என, இலங்கை அணியின் முன்னாள் ‘சுழல்’ ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

 

 

வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் 10ம் தேதி டெஸ்ட் போட்டி பதுல்லாவில் துவங்குகிறது.

இதற்கான இந்திய அணியில் 2 ஆண்டுகளுக்குப் பின் ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங் இடம் பிடித்துள்ளார். இருப்பினும், இவருக்கு களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

 

 

இது குறித்து முரளிதரன், 43, கூறியது:

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளராக அஷ்வின், தொடர்ந்து சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்துகிறார். இப்போது ‘சீனியர்’ வீரர் ஹர்பஜன் சிங்கும் அணிக்கு திரும்பியுள்ளார்.

 

வங்கதேச அணிக்கு எதிரான பதுல்லா டெஸ்டில், அஷ்வினுடன் சேர்த்து இவரையும் களமிறக்க வேண்டும். இரண்டு ‘ஆப் ஸ்பின்னர்கள்’ ஒரே நேரத்தில் விளையாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

இதுபோலத்தான் நானும், தற்போது அம்பயராக உள்ள தர்மசேனாவும் ஒரே நேரத்தில் இணைந்து விளையாடினோம்.

ஹர்பஜன் சிங்கை பொறுத்தவரையில் பிரிமியர் தொடர் மட்டுமின்றி, மற்ற தொடர்களிலும் அசத்துகிறார். டெஸ்ட் அரங்கில் ஏற்கனவே 413 விக்கெட் வீழ்த்தி திறமை நிரூபித்துள்ளார்.

 

 

அக்சருக்கு பாராட்டு:

அஷ்வின், ஹர்பஜன் சிங் போல, பிரிமியர் போட்டி உட்பட, கடந்த சில தொடர்களில் அக்சர் படேலும் அசத்தி வருகிறார். மொத்தத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவருமே அனைத்து பிரிவுகளில் சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

 

‘மூவருக்கு’ வரவேற்பு:

இந்திய அணிக்காக சச்சின், கங்குலி, லட்சுமண் உள்ளிட்டோர் பல ஆண்டுகள் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர். இவர்ளை ஆலோசனைக்குழுவில் நியமித்தது வரவேற்கத்தக்க விஷயம். இவரது அனுபவ ஆலோசனை, இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவுவது உறுதி. இவ்வாறு முரளிதரன் கூறினார்.

கோல்கட்டாவில் பயிற்சி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் இன்று 2 அல்லது 3 பிரிவுகளாக கோல்கட்டா வரவுள்ளனர். இங்கு இரண்டு நாட்கள் (ஜூன் 6, 7) பயிற்சி மேற்கொள்ளும் இவர்களை, சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய பி.சி.சி.ஐ.,யின் புதிய ஆலோசனை குழு முதன்முறையாக சந்திக்கிறது. இரண்டு நாள் பயிற்சி பின், வரும் ஜூன் 8ம் தேதி காலை விமானம் மூலம் வங்கதேச தலைநகர் தாகாவுக்கு செல்வார்கள். முதல் டெஸ்ட் வரும் ஜூன் 10ல் பதுல்லாவில் துவங்குகிறது.

 

http://sports.dinamalar.com/2015/06/1433428108/Harbhajanindia.html

 

  • தொடங்கியவர்

ராகுலுக்கு டெங்கு

 

கோல்கட்டா: ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர் லோகேஷ் ராகுல், வங்கதேச தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் 10ம் தேதி டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் கர்நாடகாவை சேர்ந்த லோகேஷ் ராகுல், 23, இடம் பெற்றிருந்தார். இவர், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் சதம் அடித்தார். தற்போது, லோகேஷ் ராகுல், ‘டெங்கு’ காய்ச்லால் அவதிப்படுகிறார். இதனால், வங்கதேச தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக வேறு வீரர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

 

 

பயிற்சி முகாம்:

இதற்கிடையே கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியினர் நேற்று கோல்கட்டாவில் பயிற்சியை துவக்கினர். முதலில் வீரர்களுக்கு உடற்தகுதி சோதனை நடந்தது. இதை அணி இயக்குனர் ரவி சாஸ்திரி பார்வையிட்டார்.

 

ரகானே பிறந்தநாள்:

பின், மாலை 4.45 மணிக்கு உடற் பயிற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரகானேவின் 27வது பிறந்தநாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினர். இன்று மதியம் மீண்டும் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நளை வங்கதேசம் புறப்படுவர்.

 

 

http://sports.dinamalar.com/2015/06/1433611033/indiateam.html

  • தொடங்கியவர்

கொள்கை வெல்வதே கொண்ட லட்சியம்: விராத் கோஹ்லி சபதம்

 

 

ஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அளவு கற்றுக் கொண்டோம். இனி சாதிக்கப் போகிறோம். அணியின் ஒரே லட்சியம் வெற்றி மட்டுமே,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார்.      

வங்கதேசம் செல்லும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் 10ம் தேதி டெஸ்ட் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய வீரர்கள், கோல்கட்டாவில் இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று வங்கதேசம் புறப்படுகின்றனர்.      

இதற்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் கோஹ்லி கூறியது:

 

டெஸ்ட் பற்றி போதுமான அளவு கற்றுக் கொண்டோம். தொலைக்காட்சியில் போட்டிகளை பார்த்தும் சில நுணுக்கங்களை தெரிந்து கொண்டோம். இனி கற்றுக் கொள்வதற்காக விளையாட தேவையில்லை. சாதிக்க தயாராக உள்ளோம்.   

               

வங்கதேச மண்ணில் அணியை வழிநடத்த ஆர்வமாக உள்ளேன். ஒரு நாள், ‘டுவென்டி–20’ போட்டியிலிருந்து டெஸ்ட் முற்றிலும் மாறுபட்டது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் கேப்டனாக இருந்தபோது, சிலவற்றை கற்றுக் கொண்டேன். முன்பு செய்த தவறை எப்படி மாற்றிக் கொண்டோம் என்பதுதான் முக்கியம். இத்தொடரில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த இலக்கும் இல்லை. ஒரு வீரர் சதம் அடித்தும், அணி தோற்றால் அதனால் பயன் இல்லை. அணியின் வெற்றி தான் முதல் லட்சியம். இந்த மனநிலையுடன் தான் போட்டிகளை எதிர்கொள்வோம்.      

 

உற்சாக சூழ்நிலை: வீரர்கள் தங்கள் திறமை மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் உற்சாகமான சூழ்நிலையை ‘டிரஸ்சிங் ரூமில்’ உருவாக்குவோம். சாதிக்க தேவையான திட்டங்கள், இலக்குகளை வகுத்து செயல்டுவோம். அணியின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு வீரரும் பாடுபட வேண்டும்.

சமீபத்திய உலக கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் நோ–பால் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனை இரு அணிகளும் மறந்து விட்டன. டெஸ்ட் போட்டி சுமுகமான முறையில் நடக்கும்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

 

ரவி சாஸ்திரி சூசகம்

இந்திய அணியின் இயக்குனராக உள்ள ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் பொறுப்பையும் ஏற்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து இவர் கூறுகையில்,‘‘தற்போது அணியில் பேட்டிங், பவுலிங்கிற்கு என பயிற்சியாளர்கள் உள்ளனர். இதனால் தலைமைப்பயிற்சியாளர் பதவிக்கு வேறு ஒருவர் வேண்டாம். ஒருவேளை தேவைப்பட்டால் அந்த பொறுப்பை நான் ஏற்பேன். வங்கதேசத்திலிருந்து திரும்பிய பின், இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரிகளிடம் பேசுவேன். இதன் பின் என் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும். எல்லோரும் எதிர்பார்ப்பதை விட, அணியுடன் நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பேன்,’’ என்றார்.  

 

5 ஆண்டுக்கு முன்...     

இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பிடித்துள்ளார். இது குறித்து இவர் கூறியது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கும்ளே, அமித் மிஸ்ராவுடன் அணியில் விளையாடினேன். இந்த செயல்பாட்டைத்தான் மீண்டும் வெளிப்படுத்த உள்ளேன். மற்ற பவுலர்களுடன் இணைந்து வெற்றிக்கு உதவுவேன்,’’ என்றார்.      

 

தவறை திருத்திக்கொண்டேன்     

இந்திய அணியின் புஜாரா கூறுகையில்,‘‘ கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினேன். இருப்பினும் தொடர்ந்து 30 அல்லது 40 ரன்களில் அவுட்டாகினேன். தற்போது என் தந்தையிடம் பயிற்சி பெற்றேன். முன்னாள் கேப்டன் டிராவிட்டிடம் ஆலோசனை பெற்றேன். தவிர, இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் செய்த தவறை திருத்திக் கொண்டு விட்டேன்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1433669613/RaviShastriindia.html

  • தொடங்கியவர்

வங்கதேசத்தில் இந்திய அணி

 

தாகா: டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, வங்கதேச தலைநகர் தாகாவுக்கு இன்று வந்தது.

 

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பதுல்லாவில் வரும் ஜூன் 10ல் துவங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி்யில் ஈடுபட்டனர். பின், இன்று காலை கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் வங்கதேச தலைநகர் தாகாவுக்கு வந்தனர்.     

 

டெங்கு காய்ச்சல் காரணமாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த லோகேஷ் ராகுல் வங்கதேசம் செல்லவில்லை. இவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.     

 

இவ்விரு அணிகள் இதுவரை 7 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 6 போட்டியில் வென்றது. ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கடைசியாக கடந்த 2010ல் தாகாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இதுவரை 4 முறை (2000–01, 2004–05, 2007, 2009–10) வங்கதேசம் வந்த இந்திய அணி, அனைத்திலும் தொடரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

    

டெஸ்ட் தொடருக்கு பின், இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகளும் மிர்பூரில் (ஜூன் 18, 21, 24) நடக்கவுள்ளன.

 

http://sports.dinamalar.com/2015/06/1433746409/IndiaBangladeshCricketTestViratKohli.html

  • தொடங்கியவர்

இந்திய கிரிக்கெட் அணியின் பங்காளதேஷ் டூரும், பல சுவாரசியங்களும்!

 

 டாக்கா: இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையே வரும் 10ம் தேதி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே வங்கதேச தலைநகர் டாக்கா சென்று சேர்ந்துள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இளம் வீரர்களை உள்ளடக்கியது. நீண்ட இடைவேளிக்கு பிறகு இந்தியா டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் குறித்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை பார்க்கலாம்.

 

7 டெஸ்டுகள் இந்தியா-வங்கதேச அணிகள் 2000வது ஆண்டில் இருந்து இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. வரும் 10ம் தேதி, பதுல்லாவில் இவ்விரு அணிகள் நடுவே டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முன்னதாக, பதுல்லாவில் 2006ல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் நடுவே, நடந்த அந்த டெஸ்டில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வென்றது.

 

தோற்றதில்லை இதுவரை மோதிய 7 டெஸ்டுகளில் ஆறில் இந்தியா வென்றது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. எனவே, வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துள்ளது.

 

கோஹ்லிக்கு முதல்முறை விராட் கோஹ்லி முதல்முறையாக, கேப்டனாக பொறுப்பேற்று இந்தியாவை வழிநடத்தும் டெஸ்ட் போட்டி இதுவாகும். வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியிலும் இப்போதுதான் கோஹ்லி ஆட உள்ளார். இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி ஆடியிருந்தாலும், வங்கதேசத்துடன் இதுவரை அவர் ஆடியதில்லை.

 

அனுபவ வீரர்கள் தற்போதுள்ள இந்திய அணியிலுள்ள முரளி விஜய், ஹர்பஜன்சிங் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள்.

 

ஹர்பஜன்சிங் இரு அணியிலுள்ள வீரர்களிலும், அதிக டெஸ்ட் ஆடிய வீரர் ஹர்பஜன்சிங்தான். அவர் 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 2 வருடங்களுக்கு பிறகு ஹர்பஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு்ள்ள நிலையில் அவர் வங்கதேசத்தை வறுத்தெடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

 

மேஸ்திரியாகும் சாஸ்திரி இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராகவும், பயிற்சியாளராகவும் இந்த தொடரில் பணியாற்ற உள்ளார். அவரும், வங்கதேசத்துக்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளார். பிளெட்சர் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து பயிற்சியாளராகியுள்ளார் ரவி சாஸ்திரி.

 

சச்சின் சாதனை இரு அணிகள் நடுவே சச்சின் அதிக சதம் அடித்த வீரர். 9 இன்னிங்சுகளில் 5 சதங்கள் விளாசியுள்ளார் சச்சின். அதில் 248 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தது பெஸ்ட் ஆகும். இரு அணி வீரர்களிலும் 820 ரன்கள் விளாசிய சச்சின் முதலிடத்திலும், 560 ரன்களுடன் ராகுல் டிராவிட் 2வது இடத்திலும் உள்ளனர்.

 

ஜாகீர் அசத்தல் 14 இன்னிங்சுகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ஜாகீர் கான் முதலிடத்திலுள்ளார். இர்பான் பதான் 4 இன்னிங்சுகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்திலுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/10-facts-about-india-bangladesh-test-fatullah-228323.html

  • தொடங்கியவர்

எப்போதும் கற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையுடன் இனி ஆட முடியாது: விராட் கோலி
 

 

இன்னும் கற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியாது, இனி வெற்றிபெறவே ஆட வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

வங்கதேசத் தொடருக்குச் செல்வதற்கு முன்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை ரவிசாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும் சந்தித்தனர்.

 

அப்போது விராட் கோலி கூறியதாவது: "நாங்கள் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம், எனவே இனியும் நாங்கள் கற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாது. இதுவே சரியான நேரம், நிறைய கற்றுக் கொண்டு விட்டோம், இனி திறன்களை எப்படி செயல்படுத்தினால் முடிவுகள் நமக்கு வெற்றிகரமாக அமையும் என்றும் டெஸ்ட் போட்டிகளை வெல்வதிலும் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதுமே கற்றுக் கொண்டிருக்கிறோம் என்ற மனநிலையில் இனி ஆடமுடியாது.

 

இப்போது நாம் நிறைய அனுபவம் பெற்றுள்ளோம், எனவே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக எந்த வகையில் திறமையை வெளிப்படுத்தினால் அவர்களை வெல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு மனநிலைதான். ஒரு அணியாக திரண்டு விளையாடினால் எதுவும் சாத்தியமே.

 

ஒவ்வொரு டெஸ்ட் முடிந்தவுடன் நாங்கள் அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து கற்றுக்கொண்டோம் என்ற மனநிலை இனி தேவையில்லை. இனி வெற்றி பெறுவதில்தான் கவனம் இருக்க வேண்டும்.

 

இலக்குகளை எட்டுவதற்கான லட்சியங்கள், திட்டங்கள் எங்களிடம் உள்ளன. வங்கதேசத் தொடரிலிருந்து இந்த வகையிலேயே சிந்திப்போம்" என்றார்.

தோனிக்கும், கோலிக்கும் உள்ள வித்தியாசம் இதில் தெரிகிறது. தோனி எப்போதும் ஆட்டத்தின் ‘முடிவுகளை’ விட ‘வழிமுறைகளே’ முக்கியம் என்பார். நிறைய முறை தோனி ‘புரோசஸ்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

 

ஆனால் விராட் கோலி, இனி முடிவுகள்தான் முக்கியம், எப்போதும் கற்றுக் கொண்டேயிருக்கிறோம் என்ற மனநிலையில் ஆட முடியாது என்கிறார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article7295005.ece

  • தொடங்கியவர்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு கருதி வங்கதேசத்தில் மதரசா முடல்!

 

 

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் டெஸ்ட் போட்டி நாளை மிர்பூரில் தொடங்குவதை முன்னிட்டு வங்கதேச அதிகாரிகள் இந்திய வீரர்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

 

இதன் ஒரு பகுதியாக மிர்பூர் ஃபாதுல்லா கிரிக்கெட் மைதானம் அருகே செயல்பட்டு வந்த மதரசா என்ற இஸ்லாமிய மத போதனைகள் வழங்கும் மையத்தை தற்காலிகமாக வங்கதேச அதிகாரிகள் மூடியுள்ளனர்.

 

இது குறித்து மதரசா நிர்வாகியான மவுலான அப்துல் சக்கூர், ''கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி தற்காலிகமாக இந்த மதராசாவை  மூடுமாறு பாதுபாப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். மதராசாவுக்கு அரசே இது போன்ற வேண்டுகோள் விடுத்திருப்பதால் மூடுவது அவசியமாகிறது. இதனால் இங்கு தங்கியிருந்த மாணவர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அளித்து விட்டோம்.

 

பெற்றோர் இல்லாத அனாதரவான 25 பேரை மட்டும் எங்களுடன் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளோம்'' என்றார்.

ஃபாதுல்லா மைதானத்தில் இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய-வங்கதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கடைசியாக நடைபெற்றது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அங்கு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் கூடுதல் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது இந்திய அணியிடம் வங்சதேச அணி தோற்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனால் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் சர்ச்சையை உருவாக்கும்விதத்தில் பேனர்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் டாக்காவில் இஸ்லாமிய மதத்துக்கு எதிராக இணையத்தில் கருத்து வெளியிட்டவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மதரசாக்களில் படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு வங்கதேச அரசு மதராசாக்களை தீவிரமாக கண்காணித்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47698

 

  • தொடங்கியவர்

இந்திய டெஸ்ட் அணியின் புத்தெழுச்சிக்கு வித்திடுமா கோலி தலைமை?
 

பாதுல்லா மைதானத்தில் புதன்கிழமை வங்கதேச அணியை இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது.

 

 

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் காலிறுதியில் நுழைந்து இந்திய அணியிடம் தோற்று வெளியேறிய வங்கதேச அணி, அதன் பிறகு ரோஹித் சர்மாவுக்கு அன்று கொடுத்த நோ-பால் தீர்ப்பு குறித்து தாறுமாறாக கோபாவேசத்தில் கடும் கருத்துகளை பிசிசிஐ-க்கு எதிராக வைத்தனர்.

 

வங்கதேச அணி வீரர்கள் சிலரும் இந்திய அணியின் வெற்றியை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கினர். இந்நிலையில் நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக, உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை ஒருநாள் போட்டித் தொடரில் 3-0 என்று கிளீன் ஸ்வீப் செய்ததோடு டி20-யிலும் வீழ்த்தியது. டெஸ்ட் போட்டியில் 0-1 என்று தோற்றது. ஆனாலும் சில சாதனைகளை முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர்கள் பேட்டிங்கில் நிகழ்த்தினர்.

 

வங்கதேச அணியில் குறிப்பாக தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்த மஹமுதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், டெஸ்ட் பேட்டிங் ஸ்பெஷலிஸ்ட் என்று கருதப்படும் மொமினுல் ஹக் ஆகியோர் கவனிக்கத்தக்கவர்கள். பந்துவீச்சில் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வதுடன், எழுப்பவும் செய்யும் மொகமது ஷாகித் என்ற வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் கவனிக்கத் தக்கவர். பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்குக்கு சாதகமான ஆட்டக்களத்தில் இவர் சிறப்பாகவே வீசினார். அதே போல் ரூபல் ஹுசைன் விளையாடுகிறார். இவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் ஒரு வீச்சாளர்.

 

தற்போதைய வங்கதேச அணியில் 7 வீரர்கள், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர். மாறாக இந்திய அணியில் 3 வீரர்கள் மட்டுமே விளையாடியுள்ளனர்.

 

விராட் கோலி முழுநேர டெஸ்ட் கேப்டனாக களமிறங்குகிறார். அவர் பேசுவதை வைத்துப் பார்க்கும் போது, வங்கதேசம் நிச்சயம் தடுமாறும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இவர் கடைசி நாளன்று இலக்கைத் துரத்தி வெற்றி பெற ஆடியது ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு, ஒரு கேப்டனாக துரத்தலை சதத்துடன் வழிநடத்தினார். மேலும் அது தோல்வியே அல்ல என்றும் வாதிட்டார், இத்தகைய மனப்பாங்கு கொண்ட கேப்டன்கள் இந்திய மண்ணிலிருந்து உருவாவது அரிதே,

 

எனவே முதன்முதலாக தோற்றாலும் பரவாயில்லை வெற்றி பெறவே ஆட வேண்டும், டிரா என்பது கடைசிபட்சமாக இருக்க வேண்டும் என்று நமக்கு தெரிந்த வரையில் எந்த ஒரு இந்திய கேப்டனும் கூறியதில்லை என்றே படுகிறது. அவரும் அந்த அணுகுமுறையையே கையாளவார் என்று எதிர்பார்க்கலாம்.

நாளைய டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஹர்பஜன் இருவருமே இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏனெனில், வங்கதேச அணியில் இடது கை வீரர்கள் அதிகம் என்பதால் ஆஃப் ஸ்பின் பலம் தேவை என்பதால்தான் ஹர்பஜன் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

வேகப்பந்து வீச்சில் புவனேஷ் குமார் தேவையில்லை என்று நினைத்தால், ஏனெனில் அவரது வேகம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், அல்லது இசாந்த் சர்மா அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. 3 வேகம், 2 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. நம்மைக் கேட்டால் இசாந்த் சர்மா தேவையில்லை என்றே கூற வேண்டியுள்ளது. வருண், உமேஷ் போன்றவர்களுக்கு ஒரு அனுபவம் பெற நல்ல வாய்ப்பாக வங்கதேசத்தை தேர்ந்தெடுப்பது சிறந்ததுதான்.

விஜய், தவன், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா என்று 7 வீரர்கள் கணக்கு வந்து விடுகிறது. எனவே 2 ஸ்பின்னர்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்களே சாத்தியம். இதில் அணித் தேர்வை கோலி, சாஸ்திரி மிக துல்லியமாக முடிவெடுக்க வேண்டும்.

 

 

ஆட்டக்கள நிலவரம்:

பிட்சில் நல்ல பசும்புல் இருப்பது கண்டு வங்கதேச பயிற்சியாளர் ஹதுரசிங்கே ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். ஆனால் மொமினுல் ஹக் கூறும் போது பாதுல்லா பிட்ச் மந்தமாகவே இருக்கும் என்றார். நல்ல வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சிலநாட்களில் மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை இந்தியா-வங்கதேச அணிகள் 7 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 6-இல் வென்றுள்ளது, 1 போட்டி டிரா ஆகியுள்ளது.

 

கோலியின் தலைமையின் கீழ் இந்தியா டெஸ்ட் போட்டியில் புதிய அத்தியாயம் திறக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வங்கதேச அணி இப்போது நல்ல மேம்பாடடைந்த அணியாகும், மேலும் உள்ளூரில் ரசிகர்கள் ஆதரவு அவர்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.

எந்த நிலையிலும் சோர்வடையாமல் இந்திய அணி உத்திகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவது அவசியம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/article7298499.ece?homepage=true

  • தொடங்கியவர்

'கேப்டன்' கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்!

 

இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு கேப்டனாக பணியாற்றியவர் என்ற பட்டியலில் இடம் பிடித்து விட்டார் விராட் கோலி.

இருபத்தி ஆறு வயதில் சுமார் 33 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள விராட் கோலிக்கு,  ஒரு டெஸ்ட்  தொடருக்கான கேப்டன் பதவி கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது.

 

தற்போதைய அணியில் கேப்டனாகும் தகுதி கோலிக்கு நிறையவே இருக்கிறது. பெரும்பாலானவர்கள் விராட் கோலியின் ஆக்ரோஷ மனப்பான்மை காரணமாக, அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் அல்ல என விமர்சிக்கின்றனர்.

 

தோனியை பொறுத்தவரை மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பவர், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனப்பான்மையை தவிர்த்து, தோல்வி அடையக்கூடாது அல்லது தோல்வியை தள்ளிப்போடவேண்டும் என்ற மனநிலையை கொண்டிருப்பவர். இதனாலேயே அயல் நாடுகளில் இந்திய அணி வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் ஆக்ரோஷ பாணி உத்திகளை கடைபிடிக்கவே இல்லை, இவைதான் வாஷ் அவுட் போன்ற மோசமான தோல்விக்கு வித்திட்டது.

 

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடுவார்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமின்றி சொற்போரிலும் ஆக்ரோஷம் காண்பிப்பார்கள். ஆனால், தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆட்டத்தில் மட்டும் ஆக்ரோஷம் காண்பிப்பார்கள். இந்த இரண்டு அணியினரையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது என்பது எந்தவொரு அணிக்கும் குதிரைகொம்புதான்.

 

விராட் கோலியின் திட்டம் என்பது இந்தியாவை தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியாக மாற்றிக்காட்டுவது என்பதே. கங்குலியும், தோனியும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்கள். ஆனால், விராட் கோலி இந்தியாவை உச்சாணிக் கொம்பில் உட்காரவைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனை விராட் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். "களத்தில் வெற்றிக்காகவே விளையாடவேண்டும். அணியில் ஒருவர் சதமடித்து அணி தோற்றுவிட்டால் சதத்துக்கு பயன் இல்லை" என்ற வார்த்தைகள் மூலம் தனது  திட்டத்தை சூசகமாக தெரிவித்து விட்டார்.

 

இதுவரை விராட் கோலி கேப்டனாக இருந்த போட்டிகளை கவனித்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் புரியும். அது நல்ல உடற்தகுதியுடன், முழு திறனையும் விளையாட்டில் காண்பிப்பவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் உண்டு, சொதப்பினால் அவர்களுக்கு கல்தா என்பதே. தோனியிடம் கற்றுக்கொண்ட உத்திகளை வைத்து கொண்டு கங்குலி போல தைரியமாக முடிவு எடுப்பவராக கோலி தென்படுகிறார்.

 

இப்போது 26 வயதுதான் ஆகிறது, விராட் நன்றாக செயல்பட்டால் குறைந்தது 5-6 ஆண்டுகளுக்கு கேப்டனாக செயல்பட முடியும். பொதுவாக இந்திய அணியில் கடந்த 15 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்தவர்கள், அந்த சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட ஆட்டத்திறனில் சோடை போயிருக்கிறார்கள், இந்த லிஸ்டில் சச்சின் முதல் தோனி வரை அனைவரையுமே சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், விராட் கேப்டனாக பதவியேற்ற முதல் மூன்று இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

 

"எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும், பட்டாசும் சும்மாவே கொளுத்தாமதான் வெடிக்கும்" என ஸ்டேட்டஸ் தட்டும் கோலி, ரசிகர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக காப்பாற்றுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

 

கங்க்ராட்ஸ் கோலி.

 

கோலி முன் இருக்கும் ஐந்து சவால்கள்...

 

1. அனுஷ்கா ஷர்மா சர்ச்சையை தவிர்க்க வேண்டும். மற்ற இடங்களில் எப்படி இருந்தாலும் மைதானத்துக்குள் இருந்து கொண்டு ஹீரோயிசம் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடும் 22 கிரிக்கெட் வீரர்களும், தங்களது காதலி முன் சாகசம் செய்ய நினைத்தால் நன்றாகவா இருக்கும்?

 

2. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்தியாவுக்கு ஆசியாவை தாண்டி சுற்றுப்பயணம் இல்லை. இந்தியாவில் பந்துகள் எகிறாது என்பதால் இதுவரை தோல்வியில் தத்தளித்த இந்திய அணிக்கு இனி உற்சாகம்தான். எனினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நடக்கும் தொடர்களை கருத்தில் கொண்டு இந்தியாவில் வேகபந்துக்கு சாதகமான ஆடுகளங்களை உருவாக்கவும், வீரர்கள் வேகப்பந்தை சமாளிக்கும் திறனை வளர்த்துகொள்ளவும் கோலி பி.சி.சி.ஐ. மூலம் முயற்சிக்க வேண்டும்.

 

3. சிறந்த வேகபந்து வீச்சாளர்களை உருவாக்குவது அவசியம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் இந்திய அணி எதிரணியின் பத்து விக்கெட்டுகளை வீழ்த்த பிரம்ம பிரயத்தனம் செய்ததை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையில் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

 

4. இந்திய அணிக்கு வரும் நான்காண்டுகள் முக்கியமான கால கட்டம், தோல்வியில் இருந்து மீள்வது மட்டுமின்றி வலுவான அணியாகவும் மாறுவது அவசியம். அதற்கு கோலி முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

5. சீனியர்களை ஒதுக்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தனது சொல்பேச்சை வேதவாக்காக எடுத்துகொள்பவர்கள் மட்டுமே அணியில் இருக்கவேண்டும் என சர்வாதிகார மனநிலைக்கு செல்லக்கூடாது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47736

  • தொடங்கியவர்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியாவின் வலுவான அடித்தளத்தை ஆட்டிப் பார்க்கும் மழை!

 

 

பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் இருவரின் சிறப்பான ஆட்டத்தால், நல்ல தொடக்கம் கண்டது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் தடை பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் இன்று தொடங்கியது.

 

 டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர். முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். 22.2 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. இந்நிலையில் 23.3 ஓவர்களின்போது, இந்தியா விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்திருந்த நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. உடனே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

விஜய் 70 பந்துகளில் 33 ரன்களுடனும், தவான் 71 பந்துகளில், 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தத்தில், ஆட்டத்தின் முதல் செஷன் இந்தியாவுக்கு சாதகமாகவே மாறியது. ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்தியாவின் வெற்றி பிரகாசமாகியுள்ளது. ஏனெனில், ஆட்டத்தின் கடைசி இரு நாட்களும், பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்கின்றனர் பிட்ச் வல்லுநர்கள். இப்போட்டியில், இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஹர்பஜன் சிங் 2 வருடங்களுக்கு பிறகு அணிக்குள் வந்துள்ளார். அஸ்வினும் 11 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

 

வேகபந்து வீச்சு பொறுப்பை வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய மூவரும் பார்த்துக்கொள்ள உள்ளனர். இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா. வங்கதேச அணி விவரம்: முஷ்பிகுர் ரகிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், மொமினுல் ஹாக், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்கார், லிட்டோன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சுவகடா சோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ஜுபைர் ஹொசைன்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/one-off-test-harbhajan-returns-as-india-bat-first-against-bangladesh-228426.html

  • தொடங்கியவர்

ஷிகர் தவான் 150 ரன் :முதல் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 239 ரன் குவிப்பு!

 

ஃபதுல்லா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சதமடித்து அசத்தினார். முரளி விஜயும் அரை சதமடித்தார்.

இந்தியா–வங்கதேச அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஃபதுல்லாவில் இன்று தொடங்கியது. ஹர்பஜன்சிங் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். அவர் கடைசியாக 2013–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடி இருந்தார். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

 

இந்திய அணி உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் ஆகிய  3 வேகப்பந்து வீச்சாளர்களுடனும்,  அஸ்வின், ஹர்பஜன் ஆகிய 2 சுழற்பந்து வீரர்களுடனும் களம் இறங்கியது.

 

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘டாஸ்’ வென்று, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முரளி விஜயும், ஷிகார் தவானும் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். முரளி விஜய் பொறுமையை கடைபிடிக்க, மறுமுனையில் இருந்த ஷிகர் தவான் அதிரடியில் ஈடுபட்டார். முகமது சகீத் வீசிய  7–வது ஓவரில் அவர் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதன் காரணமாக 10.5 வது ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.

 

தவான் 47 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடங்கும். 14–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3–வது அரை சதமாகும். 23.3–வது ஓவரில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 107 ரன்னை எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தவான் 74 ரன்னிலும், முரளிவிஜய் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.

 

மழை விட்டதும் தொடர்ந்து விளையாடிய இந்திய வீரர்களில், தவான் 101 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார். முரளி விஜய் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 44வது ஓவரில் 220 ரன்களை கடந்தது.தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 158 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். அதேவேளையில் முரளி விஜயும் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.

 

இந்நிலையில் இன்றைய  ஆட்ட நேர முடிவில், 56 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களை எடுத்தது. தவான் 150 ரன்களையும் முரளி விஜய் 89 ரன்களையும் எடுத்திருந்தனர்.

 

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47771

  • தொடங்கியவர்

இந்தியா- வங்கதேசம் டெஸ்ட் 2வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு! 3 நாள் மழைக்கு வாய்ப்பு

 

 

 பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் இருவரின் சிறப்பான ஆட்டத்தால், முதல் நாளிலேயே நல்ல தொடக்கம் கண்டுள்ள நிலையில் 2வது நாள் ஆட்டம் மழையால் தாமதமாகிவருகிறது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் நேற்று தொடங்கியது.

 

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

 

மழை காரணமாக 4 மணி நேரங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் நேற்று மொத்தம் 56 ஓவர்கள்தான் வீசப்பட்டன. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 239 ரன்கள் எடுத்திருந்தபோது நேற்றயை ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷிகர் தவான் 150 ரன்கள், முரளி விஜய் 89 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். இன்று காலை மீண்டும் பதுல்லாவில் மழை பெய்ததால், 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைபட்டுள்ளது.

 

மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடங்கும். இதனிடையே 3 நாட்களுக்கு மழை இருக்கலாம் என்று அந்த நாட்டு வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், ஷிகர் தவான், அஜிங்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா. வங்கதேச அணி விவரம்: முஷ்பிகுர் ரகிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், மொமினுல் ஹாக், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்கார், லிட்டோன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சுவகடா சோம், தைஜுல் இஸ்லாம், முகமது ஷாகித், ஜுபைர் ஹொசைன்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/one-off-test-day-2-start-play-delayed-due-heavy-rain-228514.html

  • தொடங்கியவர்

ஆயிரம்தான் அடி வாங்கினாலும், வங்கதேசம் ஒரு வைடு கூட போடலியே!

 

பதுல்லா: என்னதான் இந்திய பேட்ஸ்மேன்களிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டாலும், வங்கதேச பவுலர்கள் ஒருவர் கூட ஒரு வைடோ, நோபாலோ வீசவில்லை, எக்ஸ்ட்ராவாக ஒரு ரன்னும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

 

 

நடுவில் நாலு மணி நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. எனவே, 90 ஓவர்கள் வீச முடியாமல், 56 ஓவர்களிலேயே ஆட்ட நேரம் முடிவடைந்தது. இருப்பினும் இந்திய அணியின் ஒரு விக்கெட்டை கூட வங்கதேச பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. தவான் 150 ரன்களுடனும், விஜய் 89 ரன்களுடனும் களத்தில் நின்றனர். வங்கதேச கேப்டன், மொத்தம் 7 பவுலர்களை பந்து வீசச் செய்து விக்ககெட் விழுமா என்று எதிர்பார்த்தார்.

 

ஆனால், ஒரு வித்தையும் பலிக்கவில்லை. சவுமியா சர்கார், சுகவதா ஹோம், ஷாகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஜுபைல் ஹொசைன், இம்ருல் கையேஸ், முகமது ஷாகித் ஆகிய 7 பவுலர்களும், கற்ற வித்தை மொத்தத்தை இறக்கியும் பயனில்லை. ஆனால், 56 ஓவர்கள் வீசியும், இந்திய வீரர்களிடம் நன்கு அடிபட்டும் கூட ஒரு பவுலரும் ஒரு வைடோ, நோபாலோ கூட போடவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். அதுமட்டுமல்ல, லெக் பைஸ், பைஸ் போன்றவகைகளிலும் கூட ரன் வரவில்லை. ஆக மொத்தம், 239 ரன்களையும், இந்திய பேட்ஸ்மேன்கள் இருவரும் வியர்வை சிந்திதான் சம்பாதித்துள்ளனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/bangladesh-bowlers-not-concede-single-extra-run-228496.html

  • தொடங்கியவர்

வங்கதேச டெஸ்ட்: 3வது நாள் ஆட்டத்தில், அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

 

பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்துவரும் இந்தியா, 3ம் நாளான இன்று அடுத்தடுத்து தவான், ரோகித் ஷர்மா மற்றும் கேப்டன் கோஹ்லி விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

 

 டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 5 ஓவர்களில் தடுத்தாடிய இந்திய வீரர்கள், அதன்பிறகு அடித்தாட தொடங்கினர். குறிப்பாக ஷிகர் தவான் ஆட்டத்தில் அதிரடியுடன், நேர்த்தியும் இருந்தது. ஒருமுனையில் தவான் அடித்தாடிய நிலையில், விஜய் மிகவும் பொறுமை காட்டி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். மழை காரணமாக 4 மணி நேரங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் நேற்று மொத்தம் 56 ஓவர்கள்தான் வீசப்பட்டன.

 

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி, 239 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷிகர் தவான் 150 ரன்கள், முரளி விஜய் 89 ரன்கள் எடுத்து களத்தில் நின்றனர். நேற்று காலை மீண்டும் பதுல்லாவில் மழை பெய்ததால், 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் தடைபட்டது. மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை விடாமல் பெய்ததால், 2வது நாள் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்படுவதாக, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் அம்பயர்கள் அறிவித்தனர். இதையடுத்து, 3வது நாள் ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இன்று தொடங்கியது. இந்திய தொடக்க வீரர்கள் இருவருமே தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தனர். முதல் நாள் ஆட்டத்தில் 89 ரன்களுடன் களத்தில் நின்ற விஜய், இன்று சதம் கடந்தார்.

 

அதேநேரம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 150 ரன்கள் எடுத்திருந்த தவான், மேற்கொண்டு 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 173 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இரட்டை சத நாயகன், ரோகித் ஷர்மாவோ, 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் பந்தில் கிளீன் பௌல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து 14 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லியும், ஜுபைர் ஹொசைன் பந்தில் பௌல்ட் ஆகி வெளியேற இந்தியா 310 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாளில் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3வது நாளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பனும் விஜயுடன், அஜிங்ய ரஹானே ஜோடி சேர்ந்து அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-vs-bangladesh-test-murali-vijay-hits-century-on-3rd-day-228584.html

  • தொடங்கியவர்

சதமடித்து தனது தேர்வு சரியானது என்று நிரூபித்த தமிழர்!

 

 

இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை  தமிழகத்தின் பங்களிப்பு ஸ்ரீகாந்துக்கு பிறகு குறைந்துதான் போனது. ஸ்ரீகாந்த் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில்தான் அதிக கவனம் செலுத்துவார். அதிரடி ஆட்டக்காரர். அவருக்கு பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் இருந்து அவ்வப்போது இந்திய அணிக்கு தலைகாட்டுவதும் போவதுமான இருந்தனர். யாருக்கும். இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.  இந்த குறைமுரளி விஜய்தான் ஓரளவுக்கு போக்கினார் என்று சொல்ல வேண்டும்.

2vcyetf.jpg

 

சென்னையை சேர்ந்த இந்த 31 வயது முரளி விஜய் தனது வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து இந்தளவுக்கு உயரத்தை எட்டியுள்ளார். திருவல்லிகேணி மேன்ஷனில் வாழ்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னரே முரளி விஜய்க்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. 12வது வகுப்பில் பெயிலான அவர் சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி கண்டவர் என்றாலும் அது மிகையில்லை.

 

கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் முரளி விஜய்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அணிக்கு மீண்டும் திரும்ப அவர் போராட்டம் நடத்திக் கொண்டார். வங்க தேச அணிக்கு எதிராக மீண்டும் அணியில் இடம் பிடித்த அவர் மிர்பூர் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான்னைத் தொடர்ந்து சதமடித்து அசத்தினார். 

 

இதில் 10 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளி விஜய் அடித்த 6வது சதமாகும். இதன் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் தன்னை தேர்வு செய்தது சரியானதுதான் என்று முரளி விஜய் நிரூபித்துள்ளார்.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47857

  • தொடங்கியவர்

ரஹானேயின் தன்னலமற்ற ஆட்டம்: 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 462/6

 

பாதுல்லாவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 462 ரன்கள் எடுத்துள்ளது.

 

தேநீர் இடைவேளையின் போது கனமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து 103.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் இன்று முடித்து கொள்ளப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. அஸ்வின் 2 ரன்களுடனும், ஹர்பஜன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஷாகிப் அல் ஹசன் 24.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.

 

இன்று 47.3 ஓவர்களே ஆட்டம் நடைபெற்றது. இந்திய-வங்கதேச டெஸ்ட் போட்டியா அல்லது இந்தியா, வங்கதேச அணிகளின் மழைக்கு எதிரான டெஸ்ட் போட்டியா என்ற கேள்வி எழுகிறது.

 

லெக் ஸ்பின்னர் ஜுபைர் ஹுசைன் விராட் கோலி, மற்றும் விருத்திமான் சஹா ஆகியோரை நல்ல பந்தில் வீழ்த்தினார். மற்றபடி அந்த அணியின் பந்து வீச்சில் ஒன்றுமில்லை.

இன்று காலை 239/0 என்று தொடங்கிய இந்திய அணி முன்னதாக டிக்ளேர் செய்யும் நோக்கத்துடன் அதிரடி முறையைக் கையாண்டது. முரளி விஜய் தனது 3-வது டெஸ்ட் 150 ரன்களை எடுத்தார். ஆனால் அஜிங்கிய ரஹானேயின் தன்னலமற்ற இன்னிங்ஸ் இன்று ‘டிரெண்ட்’ ஆகிக் கொண்டிருக்கிறது. அவர் 103 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 98 ரன்களில் ஷாட் அடிக்கப் போய் அவுட் ஆனார்.

 

தாக்குதல் ஆட்டம் ஆட முடிவெடுத்ததால் விக்கெட்டுகள் கொத்தாக விழுந்தன, முதலில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, அடுத்ததாக விஜய், சஹா, ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

 

மீண்டும் ஷாகிப் உல் ஹசன் தாமதமாகவே அழைக்கப்பட்டார். அவர் வந்தவுடனேயே ஷிகர் தவன் விரைவு ரன்களை எடுக்க முயன்றதால் சில மிஸ்-ஹிட்கள் ஏற்பட்டது. இப்படியாக 3-வது மிஸ் ஹிட் முன்புற விளிம்பில் பட்டு பவுலர் ஷாகிப் உல் ஹசனிடமே கேட்ச் ஆனது. தவண் 195 பந்துகளில் 23 பவுண்டரிகளுடன் 173 ரன்களுக்கு அவுட் ஆனார்.

 

ரோஹித் சர்மா இறங்கி ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களில் இருந்த போது விரைவு ரன் குவிப்புக்கான பரிந்துரை நிலவியதால், ஷாட்டிற்குச் சென்றார்.

ஷாகிப் உல் ஹசன் ஒரு பந்தை உள்ளே திருப்ப ஒரு பெரிய கவர் டிரைவுக்குச் சென்ற ரோஹித் சர்மா மட்டைக்கும், பேடிற்கும் இடையே பந்தை புக அனுமதிக்க பவுல்டு ஆனார். ஒன்று ஷார்ட் தேர்வில் தவறு, மற்றொன்று அதனை அடித்த முறையும் தவறு. ஒரு அனுபவ வீரர் இப்படி அவுட் ஆகியிருக்க கூடாது.

 

கோலியுன் விரைவு ரன்களுக்காகவே ஆடினார். 14 ரன்களில் 2 பவுண்டரிகளுடன் ஆடி வந்த போது ஜுபைர் ஹுசைனின் கூக்ளியை கணிக்கவில்லை. மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார்.

 

ரஹானேவை ஜுபைர் ஹுசைன் பீட் செய்தார். நெருக்கமான ஒரு எல்.பி.முறையீடும் எழுந்தது. மீண்டும் ஒரு பந்தில் பீட்டன் ஆனார் ரஹானே. அதன் பிறகு தளர்வான பந்து வீச்சை ரஹானே விளாசினார்.

 

முரளி விஜய் தனது ஆஸ்திரேலியா ஃபார்மை அப்படியே தொடர்ந்து 201 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சதம் எடுத்தார். ரஹானே 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் அரைசதம் எடுக்க உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 398 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 144 ரன்களுடனும் ரஹானே 55 ரன்களுடனும் உணவு இடைவேளைக்குச் சென்றனர்.

 

150 ரன்களை எட்டிய முரளி விஜய் ஒரு மிகப்பெரிய ஸ்வீப் செய்து பந்தை விட்டார் எல்.பி என்று தீர்ப்பளிக்கப்பட்டது, ஆனால் பந்து லைனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 90 ரன்களில் வந்த போதும் ரஹானே தன்னலமற்று ஆடி இரண்டு பவுண்டரிகளை அடித்து 98 ரன்களில் வந்தார்.

100 நிச்சயம் என்று எதிர்பார்த்த நிலையில் ஷாகிப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று பவுல்டு ஆனார். முன்னதாக சஹா 6 ரன்னில் ஜுபைரின் அருமையான கூக்ளிக்கு பவுல்டு ஆனார்.

 

462/6 என்ற நிலையில் மழை குறுக்கிட்டது, ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. நாளை 4-ம் நாள். இந்தியா 500 ரன்கள் எடுக்குமா அல்லது அதற்கு முன்னரே கோலி டிக்ளேர் செய்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-4626/article7309693.ece

  • தொடங்கியவர்

வங்கதேசத்தை காப்பாற்றியது மழை.. டிராவை நோக்கி டெஸ்ட் போட்டி!

 

 

 பதுல்லா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 462 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கிய நிலையில் 111 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் பாதி நாள்தான் நடைபெற்றது. நாளை டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் என்பதால் போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. டெஸ்ட் போட்டி பதுல்லா நகரில் புதன்கிழமை தொடங்கியது.

 

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

 

முதல் நாளில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 239 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 3வது நாளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக 2வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. 3ம் நாளான நேற்று மாலை டீ இடைவேளையின்போது, 462 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடை பட்டது. இதன்பிறகு மாலை வரை மழை தொடர்ந்ததால், 3வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அஸ்வின் 2 ரன்கள், ஹர்பஜன் சிங் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை இந்திய அணி மேற்கொண்டு பேட்டிங் செய்யாமல் நேற்றைய ஸ்கோருடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது.

 

வங்கதேச அணியின் ஸ்கோர் 27 ரன்களாக இருந்தபோது, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தமிம் இக்பால், அஸ்வின் பந்தில் கீப்பர் விருதிமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து இம்ருல் கயேஸுடன், மொமினுல் ஹாக் ஜோடி சேர்ந்தார். ஆனால், ஹர்பஜன் பந்தில் மொமினுல் ஹக், உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், 2 ரன்களில் அஸ்வின் பந்தில் ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 30.1 ஓவர்களில் வங்கதேசம் 111 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது.

 

மாலைவரை மழை பெய்ததால் 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 351 ரன்கள் பின்தங்கியுள்ள வங்கதேசத்தின் அனைத்து விக்கெட்டுகளையும் விரைவிலேயே வீழ்த்தி, மீண்டும் அந்த அணியை பேட் செய்ய வைத்து அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது ஒரே நாளில் சாத்தியப்படாது என்பதால், டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான நாளை, போட்டி டிரா ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/bangladesh-test-india-declare-first-innings-at-462-6-228666.html

  • தொடங்கியவர்

இந்தியா- வங்க தேசம்: போட்டித் துளிகள்
 

 

3

முரளி விஜய், ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி 2-வது முறையாக ஒரே இன்னிங்ஸில் தலா 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இதன்மூலம் மேற்கண்ட மைல்கல்லை எட்டிய 3-வது தொடக்க ஜோடி என்ற பெருமை விஜய்-தவன் ஜோடிக்கு கிடைத்துள்ளது. சனத் ஜெயசூர்யா-அட்டப்பட்டு, கிரீம் ஸ்மித்-ஹெர்ஷெல் கிப்ஸ் ஆகியோர் மற்ற இரு ஜோடிகள் ஆவர்.

5

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தொடக்க வீரர்கள் இருவரும் ஒரே இன்னிங்ஸில் சதமடிப்பது இது 5-வது முறையாகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் 4 முறை ஒரே இன்னிங்ஸில் சதமடித்துள்ளனர்.

101

நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஷகிப் அல்ஹசன். உள்ளூர் மண்ணில் 28-வது போட்டியில் விளையாடி வரும் அல்ஹசன் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

7

நேற்றைய ஆட்டத்தில் ரஹானே 98 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த 2 ஆண்டுகளில் 90-களில் அவுட்டான 7-வது இந்திய பேட்ஸ்மேன் ரஹானே ஆவார்.

1,034

கடந்த 12 மாதங்களில் டெஸ்ட் போட்டியில் 1,034 ரன்கள் குவித்துள்ளார் முரளி விஜய். இதன்மூலம் கடந்த ஓர் ஆண்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்த 7-வது வீரர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7312289.ece

  • தொடங்கியவர்

மழை விளையாடிய இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் டிரா
 

 

மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

 

ஃபதுல்லா நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் 5 நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டன. 2-வது நாள் ஆட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவன் 173, முரளி விஜய் 150, அஜிங்க்ய ரஹானே 98 ரன்கள் சேர்த்தனர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 103.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 462 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

 

பின்னர், முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 30.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக கடைசி நாளான இன்ரு முதல் செசன் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் அதிகபட்சமாக இம்ருள் கெய்ஸ் 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 

பின்னர் வந்தவர்களில் அறிமுக வீரர் லிட்டன் தாஸ் 44 ரன்களும், சவும்ய சர்க்கார் 37 ரன்களும் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேறியதால் 65.5 ஓவர்களில் 256 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.

 

இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு பாலோ ஆன் கொடுத்தது.

 

இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் ஆட்டநேர முடிவில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

ஷிகர் தவன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

போட்டித் துளிகள்

* இந்தியாவும், வங்கதேசமும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 6-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகள் மழை காரணமாக டிராவாகியுள்ளன.

 

* ஃபதுல்லா டெஸ்ட் போட்டியில் 1,106 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் நடைபெற்ற டெஸ்டில் குறைவான பந்துகள் வீசப்பட்ட போட்டி இதுதான்.

* அஸ்வின் 87 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவுக்கு வெளியில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன்னர் வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்டில் அவர் 5 விக்கெட் வீழ்த்தியது கிடையாது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article7315277.ece

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டம்: இந்திய வீரர்களுக்கு ரவி சாஸ்திரி விருந்து!

 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி சமனில் முடிவுற்றாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரவு விருந்தளித்தார்.

 

ஃபாதுல்லாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறவில்லையென்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே செய்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான், 173 ரன்களும்  முரளி விஜய் 150 ரன்களும் குவித்தனர். அஸ்வின் சுழலில் வங்க தேசம் மிரண்டு போனது. ஹர்பஜன் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் 416 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

 

இதையடுத்து அணியின் தற்காலிக பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, நேற்று டாக்காவில் உள்ள பாஷ் குல்ஷன் பகுதியில் உள்ள கிளப் ஒன்றில், இந்திய வீரர்களுக்கு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் அனைத்து இந்திய வீரர்களும் பங்கேற்றனர். ரவி சாஸ்திரியின் சொந்த ஏற்பாட்டில் நடந்த இந்த விருந்தில், வங்கதேச ஸ்பெஷல் உணவுகளுடன் இந்திய உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. வீரர்கள் அனைவரும் விரும்பி உணவுகளை உண்டனர்.

 

டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைத்த ஹர்பஜன் சிங்,ரித்திமான் சாகா ஆகியோர் இன்று டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகின்றனர். இதனால் நேற்றே இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் தோனி, இன்று மாலை டாக்கா சென்றடைகிறார். நாளை முதல் அவர் மிர்பூரில் சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48000

  • தொடங்கியவர்

வங்கதேச ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்கு 'தண்ணிலதான் கண்டம்'!

 

 டாக்கா: டெஸ்ட் தொடருக்கு மட்டுமில்லாமல், ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், மழை பெய்து ஆட்டத்தை கலைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக வங்கதேச வானிலை இலாகா தகவல்கள் உறுதி செய்கின்றன. வங்கதேசத்தின் பதுல்லா நகரில் நடைபெற்ற இந்தியா-வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு நடுவேயான டெஸ்ட் போட்டியின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

 

வட போச்சே வங்கதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக அந்த நாட்டின் பருவமழை சீசனான ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டி தற்போதுதான் நடத்தப்பட்டது. அது இந்தியாவுக்கு பாதகமாக முடிந்தது டெஸ்ட் போட்டி டிரா ஆனதால் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

இப்பவுமா இந்நிலையில், ஜூன் 18ம் தேதி முதல் 24ம் தேதிவரை நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளதாக வானிலை இலாகா கூறுகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் பக்கெட்டை கவிழ்த்தியது போல மழை கொட்டி தீர்ப்பதாக கிரிக்கெட் கமாண்டேட்டர் ஹர்ஷா போக்லே டிவிட் செய்துள்ளார் என்பதை வைத்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும்.

 

நம்மள பாடாபடுத்துதே மூன்று ஒருநாள் போட்டிகளுமே பகல் இரவு ஆட்டமாகும். அனைத்தும் மிர்பூர் நகரில் நடக்க உள்ளன. அங்கும் மழை விடாமல் பெய்து வருகிறது. இந்த மழை 24ம் தேதிவரை நீடிக்கும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது. இப்படியே போட்டிகள் டிராவில் முடிந்து கொண்டிருந்தால் ஒருநாள் தரவரிசையிலும் இந்தியா பின்னுக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

ஒருவேள தண்ணில கண்டமா? இந்திய அணி உலக கோப்பை தொடரை முடித்துவிட்டு, தற்போதுதான் ஒரு தொடரில் ஆடி வருகிறது. ஆனால், ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு தண்ணீரில்தான் கண்டம் போல. ரவி சாஸ்திரியை நல்ல சாஸ்திரியாக பார்த்து தோஷம் கழிக்கச் செய்ய வேண்டியதுதான் போலும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/rain-threat-over-india-bangladesh-odis-228767.html

  • தொடங்கியவர்

அடுத்த சவாலுக்கு இந்தியா ‘ரெடி’ * நாளை ஒருநாள் தொடர் ஆரம்பம்

 

மிர்புர்: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாதிக்க, தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி விடைபெற்றதால், கோஹ்லி தலைமையில் வங்கதேசம் சென்றது இந்திய அணி. இரு அணிகள் மோதிய பதுல்லா டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

அடுத்து இரு அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி நாளை மிர்புரில் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 21, 24 ல் அடுத்த இரு போட்டிகளும் மிர்புரில் நடக்கும். சமீபத்தில் சொந்தமண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் வங்கதேச அணி, பாகிஸ்தானை 3–0 என்ற கணக்கில் வீழ்த்தி முழுமையாக தொடரை வென்றது.

 

இதையடுத்து இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேசத்தை எதிர் கொள்ள தயாராகி வருகிறது. இதற்காக கேப்டன் தோனி, ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, ரவிந்திர ஜடேஜா, குல்கர்னி, அக்சர் படேல், அம்பதி ராயுடு மற்றும் மோகித் சர்மா அடங்கிய இந்திய அணி நேற்று முன்தினம் வங்கதேசம் சென்றது.

ஒருநாள் தொடரில் இடம்பெறாத ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, புஜாரா, வருண் ஆரோன், சகா, கரண் சர்மா மற்றும் முரளி விஜய் உள்ளிட்டோர் இந்தியா திரும்பினர்.

 

தீவிர பயிற்சி:

முதல் நாளில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. அதேநேரம் வங்கதேச வீரர்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். நாளை முதல் போட்டி துவங்கவுள்ள நிலையில், நேற்று இந்திய அணியினர் தங்களது வழக்கமான பயிற்சியை துவக்கினர். முதன் முறையாக ஒருநாள் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் கோஹ்லி இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

லாபம் இல்லை:

நாளை துவங்கும் ஒருநாள் தொடரை இந்திய அணி (117 புள்ளி) முழுமையாக (3–0) அல்லது 2–1 என வென்றால் கூட, தற்போதைய ‘நம்பர்–2’ இடத்தை கடந்து முன்னேற முடியாது. அதே புள்ளி (117) தொடரும். ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் (129) நீடிக்கும்.

 

மாறாக 1–2 என, தொடரை இழந்தால் 2 புள்ளியை இழந்து (115) தொடர்ந்து 2வது இடத்தில் இருக்கும். தசம புள்ளி வித்தியாசத்தில் நியூசிலாந்து (115) 3வது இடம் பெறும்.

வங்கதேச அணி (88 புள்ளி) தற்போது 8வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் (88), பாகிஸ்தான் (87) அணிகள் 7, 9 வது இடத்தில் உள்ளன.

 

இந்தியாவுக்கு எதிரான தொடரை 3–0 என, முழுமையாக கைப்பற்றினால், 96 புள்ளிகள் பெறும். 2–1 என, வென்றால் 93 புள்ளி பெறலாம். 1–2 என, தொடரை இழந்தால் கூட, தசம புள்ளிகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பின் தள்ளி 7வது இடம் பிடிக்கும்.

 

இதனால் ‘டாப்–8’ அணிகள் மட்டும் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை, 2017, ஜூன் 1–19, இங்கிலாந்து) தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பில் நீடிக்கலாம்.

 

 

http://sports.dinamalar.com/2015/06/1434475462/indiabangladeshodicricketseriesdhoni.html

  • தொடங்கியவர்

ஒவ்வொரு போட்டியும் அழுத்தம் கொடுக்கக் கூடியதே: ரெய்னா
 

 

வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்குவதையடுத்து அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

 

தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, “எதிரணியினரை ஒருபோதும் எளிதாக எடைபோட மாட்டோம். ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு தற்போது முழு டெஸ்ட் அணி வந்ததையடுத்து முழு ஒருநாள் போட்டி அணியும் களத்தில் இறங்க தயாராகவுள்ளது. சமீபமாக வங்கதேசம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, இதுவே இந்தத் தொடரை எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத வைக்கிறது.

 

உலகக் கோப்பை எங்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் வேறு வகையானது. ஆனாலும் நாட்டுக்காக ஆடும் போது ஒவ்வொரு போட்டியுமே அழுத்தம் கொடுக்கக் கூடியதே. சிறப்பாக விளையாடி நாட்டுக்கு வெற்றி பெற்றுத்தருவதே முக்கியம்.

 

உலகக் கோப்பையில் வங்கதேச பவுலர் தக்சின் அகமது சிறப்பாக பந்துவீசினார். மேலும் மஷ்ரபே மோர்டசா, தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் போன்ற வீரர்களும் உள்ளனர். நிறைய இளம் வீரர்கள் உலகக் கோப்பையில் வங்கதேச அணியில் நன்றாக விளையாடியுள்ளார்கள்.

 

நமது அணியைப் பொறுத்தவரையில், நிறைய ஒருநாள் போட்டிகளை வென்றுள்ளோம், ஓய்வறையில் நல்ல சூழலும், தன்னம்பிக்கையான போக்கும் நிலவுகிறது. எங்கள் வலுவுக்கேற்ப விளையாடுவதோடு, ஒவ்வொரு ஆட்டத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முயற்சி செய்கிறோம். மேலும் அனைத்து போட்டிகளையும் வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம்.

 

இந்த ஒருநாள் தொடரில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டது நல்ல விஷயம். மழையால் ஆட்டங்கள் நிறைய பாதிக்கப்படும்போது கூடுதல் நாள் ஒதுக்குவதே சிறந்தது” என்றார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/article7325639.ece

  • தொடங்கியவர்

முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசம் அதிரடி தொடக்கம்
 

 

மிர்பூரில் நடைபெறும் இந்திய-வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்து வரும் வங்கதேசம் அதிரடி தொடக்கம் கண்டுள்ளது.

8 ஓவர்கள் முடிவில் அந்த அணி 66 ரன்களுக்கு விக்கெட் இழக்கவில்லை. தமிம் இக்பால் 25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்களுடனும், சவுமியா சர்க்கார் 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

 

பிட்சில் மருந்துக்குக் கூட ஒன்றும் இல்லை. விளாசல் பிட்ச். இதில் உமேஷ் யாதவ் பந்து ஒன்று தமிம் இக்பாலின் அரிதான எட்ஜைத் தொட்டுச் செல்ல, விநோதமான, சற்றே வைடாக நிற்த்தப்பட்ட ஸ்லிப் திசையில் தவனுக்கு சற்று முன்னால் பந்து விழுந்து பீல்டிங்கையும் கோட்டைவிட பவுண்டரிக்குப் பறந்தது. அதே ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார் தமிம்.

 

உமேஷ் யாதவ் பந்தை மேலேறி வந்து கவர் திசையில் சிக்ஸ் தூக்கினார் தமிம்.

 

இந்திய அணியில் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரெய்னா, தோனி, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா விளையாடுகின்றனர்.

10 ஓவர்களுக்குள்ளேயே 4 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றால் பிட்சின் நிலவரம் என்னவென்பது நமக்கு புரிகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7329332.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.