Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை வந்தது பாக் . அணி
 

 

இலங்கை  அணியுடன் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றி விளையாடுவதற்காக பகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, இரண்டு  இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

4lkcrb.jpg

இதில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

 

இதற்காக 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி லாகூரில் கடந்த 8 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில்  இன்று பாகிஸ்தான் அணி லாகூரில் இருந்து இலங்கை வந்தடைந்துள்ளது.

sv6ma9.jpg

பாகிஸ்தான் அணியுடன் துணை பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் வாக்கார் யூனிஸ் ஆகியோர்  வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி விபரம் வருமாறு,

awqe6c.jpg

மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), அசார் அலி (துணை அணித்தலைவர்), அகமது சிக்ஹாட், ஷபிக், எஹ்சான் அடில், ஹரிஸ் சொஹைல், இம்ரான் கான், ஜூனைட் கான், முகமது ஹபீஸ், சர்பிராஸ் அகமது (விக்கெட் காப்பாளர் ), ஷான் மசூட், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா, யூனிஸ் கான், சுல்பிக்கார் பாபர்.

 

http://www.virakesari.lk/articles/2015/06/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சம்பியன் கிண்ணத்திற்கான தகுதியைப் பெற முடியும் - பாகிஸ்தான் அணி பயிற்றுநர் வக்கார் நம்பிக்கை
 

 

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் நாடு­க­ளுக்­கான தரப்­ப­டுத்­தலில் பாகிஸ்தான் 9ஆம் இடத்­தி­லி­ருப்­பதால் 2017 சம்­பியன் கிண்ணப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்­கான தகு­தியைப் பெறு­வ­தற்­கான பலத்த சவாலை தனது அணி எதிர்­கொண்­டுள்­ள­தாக பயிற்­றுநர் வக்கார் யூனிஸ் தெரி­விக்­கின்றார்.

அத்­துடன் சயீத் அஜ்மால் இல்­லாத நிலையில் இலங்­கைக்­கான கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்தில் பாகிஸ்தான் ஓர் அணி­யாக விளை­யாடி வெற்­றி­பெ­ற­வேண்டும் என வக்கார் யூனிஸ் கூறினார்.

 

இலங்­கைக்கு எதி­ராக 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும் 5 போட்டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரிலும் பாகிஸ்தான் விளை­யா­ட­வுள்­ளது.

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெற்­றி­பெற்றால் நாடு­க­ளுக்­கான தரப்­ப­டுத்­தலில் பாகிஸ்தான் எட்டாம் இடத்தைப் பெறும்.

சம்­பியன் கிண்­ணத்­திற்­கான தரப்­ப­டுத்தல் நிலை செப்­டெம்பர் 30ஆம் திகதிவரை கருத்தில் கொள்­ளப்­படும். அது­வரை எட்டாம் இடத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கு பாகிஸ்தான் முயற்­சிக்­க­வுள்­ளது.

 

உலகக் கிண்ணப் போட்­டி­களில் கால் இறு­தி­யுடன் வெளி­யே­றிய பாகிஸ்தான் அதன் பின்னர் பங்­க­ளா­தே­ஷிடம் 0 க்கு 3 என தோல்வி அடைந்­த­துடன் ஸிம்பாப்­வேயை 2 – 0 என சொந்த நாட்டில் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

 

‘‘சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் எமது அணி பலம் குன்­றி­யது என நான் கூற­வில்லை.

ஆனால் டெஸ்ட் கிரிக்­கட்டில் போன்று நாங்கள் பல­சா­லிகள் அல்லர்.

 

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணியில் அனு­ப­வ­மற்ற வீரர்கள் இருப்­பதால் எமது டெஸ்ட் அணி பலம்­வாய்ந்­த­தாகக் காணப்­ப­டு­கின்­றது.

புதிய வீரர்­களைப் பரீட்­சிக்­கும்­போது அந்த அணி சிறந்த நிலையை அடை­வ­தற்கு சில காலம் செல்லும். எனினும் சம்­பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளை­யா­டு­வ­தற்­கான தகு­தியைப் பெறு­வ­தற்கு இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் எமக்கு முக்­கி­யம்­வாய்ந்­தது’’ என வக்கார் யூனிஸ் குறிப்­பிட்டார்.

 

‘‘சம்­பியன் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான தகு­தியை எமது அணி பெறும் என நான் நம்­பு­கின்றேன்.

அதற்கு முன்னர் இலங்­கைக்கு எதி­ரான தொடரில் குறைந்­தது 3 க்கு 2 என வெற்­றி­பெ­று­வது முக்­கியம்.

 

ஆனால் நாங்கள் மூன்று போட்­டி­க­ளுக்கு மேல் வெற்­றி­பெற முயற்­சிப்போம்’’ என்றார் அவர்.

 

இலங்­கைக்கு வருகை தந்­துள்ள பாகிஸ்தான் அணி தனது மூன்று நாள் பயிற்சிப் போட்­டியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் அணியை எதிர்­கொள்­கின்­றது.

இப் போட்டி சி.சி.சி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது.

 

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10554#sthash.nvRxftyy.dpuf


பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி
 

இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொடர்களில் கடந்த இரண்டு வருடங்களாக பிரகாசித்து வரும் ஜெகன் முபாரக் 8 வருடங்களின் பின்னர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

10 டெஸ்ட் போட்டிகளில் 254 ஓட்டங்களை மாத்திரமே இவர் பெற்றுள்ளார். அதிகூடிய ஓட்டங்களாக 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் தரிந்து கௌஷால், குஷால் பெரேரா ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் துஸ்மாந்த சமீரவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அணி விபரம்
அஞ்சலோ மத்தியூஸ், லஹிறு திரிமான்னே, கௌஷால் சில்வா, திமுத் கருணாரத்ன, குமார் சங்ககார, தினேஷ் சந்திமால், கித்ருவான் விதானகே, ஜெஹான் முபாரக், குஷால் பெரேரா, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, தரிந்து கௌஷால், நுவான் பிரதீப், தம்மிக்க பிரசாத், துஸ்மாந்த சமீர, சுரங்க லக்மால்(உபாதையில் இருந்து குணமடைந்தால் அணியில் இணைக்கப்படுவார்)  

 

கபில விஜயதுங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த அணியை தெரிவு செய்துள்ளது. இந்த புதிய தெரிவுக்குழு மிகப் பெரிய மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. எதிர்பார்க்கப்பட்ட அணியே தெரிவு செய்யப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்தன மற்றும் உப்புல் தரங்க அணியில் சேர்க்கப்படாத கவனிக்கத்தக்க முக்கிய வீரர்கள் ஆவர்.

- See more at: http://www.tamilmirror.lk/148089#sthash.kxJcdCKt.dpuf

  • தொடங்கியவர்

azezb5.jpg

  • தொடங்கியவர்

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு : 8 வருடங்களுக்குப் பிறகு முபாரக்கிற்கு இடம்
 

 

பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டிக்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அணியில் அஞ் சலோ மெத்­தியூஸ் தலை­ வ­ரா­கவும், லஹிரு திரி­மான்னே உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ணியில் எட்டு வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஜெகான் முபாரக் சேர்க்­கப்­பட்­டுள்ளார்.


இலங்கை டெஸ்ட் அணித் தெரி­வு­கு­றித்து தெரி­வுக்­குழுத் தலைவர் கபில விஜேகுண­வர்­தன கருத்துத் தெரி­விக்­கையில்,

‘‘எட்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் முபாரக் டெஸ்ட் போட்­டி­களில் பிர­கா­சிக்கத் தவ­றி­ய­போ­திலும் தற்­போது உள்ளூர் கிரிக்கட் போட்­டி­களில் துடுப்­பாட்­டத்தில் அவர் முழு அள­வி­லான திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­கின்றார்.

 

இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டும் அனு­ப­வமும் இள­மையும் கலந்த அணியைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எமது திறந்த கொள்­கையின் அடிப்­ப­டை­யிலும் அவ­ருக்கு வாய்ப்பு வழங்­கி­யுள்ளோம்’’ தெரி­வித்தார்.

 

நடந்து முடிந்த இரண்டு உள்ளூர் கிரிக்கெட் பருவ காலங்­களில் தலா 1000க்கும் மேற்­பட்ட ஓட்­டங்­களைக் குவித்­துள்ள ஜெஹான் முபாரக், நடந்து முடிந்த பருவ காலத்தில் 81.78 என்ற துடுப்­பாட்ட சரா­ச­ரியைப் பதிவு செய்­தி­ருந்தார்.

 

மேலும் அவ­ரது களத்­த­டுப்பு ஆற்றல் அளப்­ப­ரி­யது என ஜொன்டி றோட்ஸ் அண்­மையில் சான்­றிதழ் வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக பெரும்­பாலும் கௌஷால் சில்­வாவும் திமுத் கரு­ணா­ரட்­னவும் விளை­யா­டுவர் எனக் குறிப்­பிட்ட அவர்இ இறுதி பதி­னொ­ருவர் இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை எனவும் கூறினார்.

 

குழாமில் குமார் சங்­கக்­கார உட்­பட நான்கு விக்கட் காப்­பா­ளர்கள் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில் யார் விக்கட் காப்­பா­ள­ராக களம் இறக்­கப்­ப­டுவார் என்­பது தெரி­ய­வில்லை. இலங்கை அணியின் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்­தி­யூஸும் உதவி அணித் தலைவர் லஹிரு திரி­மான்­னவும் தொடர்ந்தும் விளை­யா­ட­வுள்­ளனர்.

 

இவர்­க­ளை­விட துடுப்­பாட்ட வீரர் கித்­ருவன் விதா­னகே, சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான ரங்­கன ஹேரத், டில்­ருவன் பெரேரா, தரிந்து கௌஷால் ஆகி­யோரும் வேகப் பந்து வீச்­சா­ளர்­க­ளான நுவன் பிரதீப், தம்­மிக்க பிரசாத், துஷ்மன்த சமீர ஆகியோரும் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை உபாதைக் குள்ளாகியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலும் இக் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்

 

http://www.virakesari.lk/articles/2015/06/12/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-8-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடரே தமது முதலாவது இலக்கு என்கிறார் வக்கார்

 

இலங்­கைக்கு எதி­ரான டெஸ்ட் தொடர்தான் தனது அணி எதிர்­கொள்ளும் முத­லா­வது சவால். ஆகவே அந்தத் தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­பெ­று­வதே தமது அணியின் முத­லா­வது இலக்கு என பாகிஸ்தான் அணி பயிற்­று­நரும் முன்னாள் வேகப்­பந்­து­வீச்­சா­ள­ரு­மான வக்கார் யூனிஸ் தெரி­வித்தார்.

 

சம்­பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு தகு­தி­பெ­று­வ­தற்கு இலங்­கை­யு­ட­னான தொடரில் வெற்­றி­பெற்றே ஆகவேண்டும் என்ற கட்­டாய நிலையில் இருப்­பதால் அந்தத் தொடர் சவால் மிக்­க­தாக அமை­யுமா என தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் கடந்த வெள்ளி இரவு நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

சம்­பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­கான தகு­தியைப் பெறு­வ­தற்கு செப்­டெம்பர் 30ஆம் திகதி வரை­யான தரப்­ப­டுத்­தலில் பாகிஸ்தான் முதல் எட்டு இடங்­க­ளுக்குள் இடம்­பெற வேண்டும்.

 

தற்­போது பாகிஸ்தான் 9ஆம் இடத்தில் இருக்­கின்­றது.

 

‘‘முதலில் நாம் டெஸ்ட் தொடர் குறித்தே கவனம் செலுத்­துவோம்.

 

இப்­போ­தைக்கு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கட் தொடர்­பற்றி சிந்­திக்க தேவையில்லை.

 

சர்­வ­தேச ஒருநாள் தொடருக்கு முன்னர் மூன்று டெஸ்ட் போட்­டி­களில் நாம் விளையா­ட­வுள்ளோம்.

 

எனவே அதற்கு போதிய கால அவ­காசம் இருக்­கின்­றது. ஆகையால் அதைப் பற்றி பிறகு பார்ப்போம்’’ என வக்கார் யூனிஸ் தெரி­வித்தார்.

‘‘இலங்­கைக்­கான கடந்த மூன்று கிரிக்கெட் விஜ­யங்­களில் எமது அணி வெற்றி­பெற்­றதே இல்லை என்­பதால் இம்­முறை அது குறித்தே கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

மேலும் இலங்­கையை அதன் சொந்த மண்ணில் எதிர்­கொள்­வது என்­பது சவால் மிக்­கது என்­பதை நாங்கள் நன்கு அறிவோம்’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதே­வேளை, புதன்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள ஹயர் கிண்­ணத்­திற்­கான டெஸ்ட் தொடர் தத்தம் அணி­க­ளுக்கு சவால் மிக்­கது என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸும் தெரி­வித்­தனர்.

 

எனினும் தங்­க­ளது அணிகள் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்றி பெற முயற்சிக்கும் எனவும் அவர்கள் குறிப்­பிடத் தவ­ற­வில்லை.

இலங்­கையின் சுழல் பந்த வீச்­சாளர் ரங்­கன ஹேரத்தின் பந்­து­வீச்சில் இதற்கு முன்னர் அடைந்த தோல்­விகள் குறித்து மிஸ்­பா­விடம் கேட்­ட­போது, ‘‘அது ஒரு பிரச்­சினை அல்ல.

அவரை எவ்­வாறு எதிர்­கொள்­ள­வேண்டும் என்­பதை நாங்கள் நன்கு கற்றுவைத்­துள்ளோம். அதற்­கான நுணுக்­கங்­களை நாங்கள் பிர­யோ­கிக்க காத்­தி­ருக்­கின்றோம்.

எனவே அவர் பற்றி அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை’’ என்றார்.

 

இலங்கை குழாமில் நான்கு விக்கெட் காப்­பா­ளர்கள் இடம்­பெறும் நிலையில் டெஸ்ட் அணிக்கு யார் விக்­கெட் ­காப்­பா­ள­ராக விளை­யா­டுவார் என ஏஞ்சலோ மெத்­யூ­ஸிடம் கேட்­ட­போது, ‘‘பெரும்­பாலும் தினேஷ் சந்­திமால் விக்கெட் காப்பாளராக விளையாடுவார் என நினைக்கின்றேன்.

ஆனால் அது குறித்து எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.

 

அத்துடன் இறுதி பதினொருவர் குறித்தும் ஆடுகளத்தின் தன்மைக்கேற்பவே தீர்மானிக்கப்படும்’’ என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10597#sthash.lf6bBRp4.dpuf

  • தொடங்கியவர்

இலங்கை, பாகிஸ்தான் பயிற்சிப்போட்டி சமநிலையில் முடிவு
 

 

இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. கொழும்பு, கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சில் 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அஹமட் செஷாட் 82 ஓட்டங்களையும், யூனிஸ் கான் 64 ஒட்டங்களையும் பெற்றனர். ஜெப்ரி வன்டர்சி 5 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார்.   

 

இலங்கை கிரிக்கெட் தலைவர் அணி 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் கௌஷால் சில்வா 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். சுல்பிகார் பாபர் 6 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு  257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஜெப்ரி வன்டர்சி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டது. 264 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 129 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் உப்புல் தரங்க 50 ஓட்டங்களையும், திமுத் கருனாரட்ன 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

- See more at: http://www.tamilmirror.lk/148380#sthash.seYGB8aF.dpuf

  • தொடங்கியவர்

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று ஆரம்பம்

 

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட ஹயர் கிண்­ணத்­திற்­கான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் நடைபெறவுள்ள முத­லா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் இன்று ஆரம்பமா­க­வுள்­ளது.

 

இரண்டு அணி­களும் புத்­தூக்கம் பெறு­வ­தற்­கா­கவும் வருங்­கால கிரிக்கெட் சந்­த­தி­யி­னரை உரு­வாக்­கு­வ­தற்கும் முயற்­சிக்கும் நிலை­யிலும் சில மூத்த வீரர்கள் தங்­க­ளது திற­மைகள் மூலம் தொடர்ந்தும் விளை­யாடி வரு­கின்­றனர்.

 

சர்­வ­தேச கிரிக்கெட் விளையாட்­டி­லி­ருந்து முழு­மை­யாக ஓய்வு பெற எண்­ணி­யுள்ள குமார் சங்­கக்­கார (37 வயது), ரங்­கன ஹேரத் (37), ஜெஹான் முபாரக் (35), டில்­ருவன் பெரேரா (32) ஆகியோர் இலங்கை குழா­மிலும் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் (41), யூனிஸ் கான் (37), ஸுல்ஃ­பிகார் பாபர் (36), மொஹமத் ஹஃபீஸ் (34) ஆகியோர் பாகிஸ்தான் குழா­மிலும் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­துடன் இவர் கள் அனை­வ­ருமே இன்று ஆரம்­ப­மாகும் டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டுவர் என்­ப­துடன் பிர­கா­சிப்பர் எனவும் நம்­பப்­ப­டு­கின்­றது.

 

இரண்டு அணி­க­ளுக்கும் இடையில் இலங்­கையில் நடை­பெற்ற கடைசி மூன்று டெஸ்ட் தொடர்­க­ளிலும் மஹேல ஜய­வர்­தன (2009ஆம் ஆண்டு), குமார் சங்­கக்­கார (2012), ஏஞ்­சலோ மெத்யூஸ் (2014) ஆகியோர் தலை­மையில் வெற்­றி­யீட்­டி­யுள்ள இலங்கை அணி இம்­முறை மீண்டும் ஏஞ்­சலொ மெத்யூஸ் தலை­மையில் பாகிஸ்­தானை எதிர்­கொள்­கின்­றது.

 

குமார் சங்­கக்­கா­ரவைப் பொறுத்­த­மட்டில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக அவர் விளை­யாடும் கடைசித் தொடர் இது­வாகும்.

 

சரே பிராந்­திய அணிக்­காக நான்கு நாள் கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய சூட்­டோடு நாடு திரும்­பி­யுள்ள குமார் சங்­கக்­கார, அங்கு பிர­கா­சித்­த­துபோல் இங்கும் பிர­கா­சிப்பார் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

1982முதல் டெஸ்ட் தொடர்­களில் விளை­யாடி வரும் இரண்டு நாடுக­ளுக்கும் இடையில் இது­வரை 48 டெஸ்ட் போட்­டிகள் நடைபெற்­றுள்­ள­துடன் பாகிஸ்தான் 17–13 என்ற ஆட்டக் கணக்கில் முன்­னிலை வகிக்­கின்­றது.

 

இலங்­கைக்கு எதி­ரான டெஸ்ட் தொடர் ஒன்றில் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வைத்து பாகிஸ்தான் கடை­சி­யாக வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

 

இலங்­கையில் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் வெற்­றி­பெற்­றது 9 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஆகும்.

 

அந்தத் தொடரில் இன்­ஸமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணித் தலை­வ­ராக விளை­யா­டி­யி­ருந்தார்.

 

நடப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இரண்டு அணி­யி­ன­ருக்கும் சவால் மிக்­கது எனவும் எப்­ப­டி­யா­வது வெற்­றி­பெ­று­வ­தற்கு முயற்சிப்போம் எனவும் இரண்டு அணி­க­ளி­னதும் தலை­வர்கள் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இப் போட்­டிக்­கான இறுதி அணிகள் இன்று காலை தீர்­மா­னிக்­கப்­படும்.

இலங்கை குழாம்:

ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), லஹிரு திரி­மான்ன, துஷ்மன்த சமீர, தினேஷ் சந்­திமால், நுவன் ப்ரதீப், ரங்­கன ஹேரத், திமுத் கரு­ணா­ரட்ன, தரிந்து கௌஷால். சுரங்க லக்மால், ஜெஹான் முபாரக், டில்­ருவன் பெரேரா, குசல் பெரேரா, தம்­மிக்க பிரசாத், குமார் சங்­கக்­கார, கௌஷால் சில்வா, கித்­ருவன் வித்தானகே.

 

பாகிஸ்தான் குழாம்:

மிஸ்பா உல் ஹக் (அணித் தலைவர்), அஸ்ஹர் அலி, அஹ் மத் ஷேஹ்ஸாத், அசாத் ஷஃபிக், ஈஷான் ஆதில், ஹரிஸ் சொஹெய்ல், இம்ரான்கான், ஜுனைத் கான், மொஹ மத் ஹஃபீஸ், சர்ப்ராஸ் அஹ்மத், ஷான் மசூத், வஹாப் ரியாஸ், யசீர் ஷா, யூனிஸ் கான், ஸுல்ஃபிகார் பாபர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10644#sthash.xb9azMoI.dpuf

  • தொடங்கியவர்

இலங்கை - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் மழையால் பாதிப்பு
 

 

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

6f615w.jpg
இன்று காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2015/06/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 

  • தொடங்கியவர்

சங்ககரா, சில்வா அரைசதம்

 

காலே: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கையின் சங்ககரா, கவுஷால் சில்வா அரைசதம் அடித்தனர்.

 

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

முதலில் ‘பேட்டிங்’ செய்த இலங்கை அணிக்கு கருணாரத்னே (21) ஏமாற்றினார். பின் இணைந்த கவுஷால் சில்வா, சங்ககரா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்ககரா, டெஸ்ட் அரங்கில் தனது 52வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய கவுஷால் சில்வா தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.

 

இரண்டாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது சங்ககரா (50) அவுட்டானார். அடுத்து வந்த லகிரு திரிமான்னே (8) நிலைக்கவில்லை. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காணமாக 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. சில்வா (80), கேப்டன் மாத்யூஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் வாகாப் ரியாஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2015/06/1434560721/groundrain.html

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை 300-க்கு ஆல்அவுட்- பாகிஸ்தான் திணறல

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 109.3 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜே.கே.சில்வா 125 ரன்கள் குவித்தார்.

இலங்கையின் காலே நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முற்றிலும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 64 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த தினேஷ் சன்டிமால் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விதாஞ்சே களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜே.கே.சில்வா, பாபர் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் தனது 2-வது சதத்தைப் (261 பந்துகளில்) பூர்த்தி செய்தார்.

இதன்பிறகு விதாஞ்சே 18, தில்ருவன் பெரேரா 15, தமிகா பிரசாத் 0 என அடுத்தடுத்து வெளியேற, 9-வது விக்கெட்டாக ஜே.கே.சில்வா ஆட்டமிழந்தார். அவர் 300 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார். இறுதியில் இலங்கை அணி 109.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்ட மிழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ், ஜல்பிகுர் பாபர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா, முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் தடுமாற்றம்

பின்னர் பேட் செய்த பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஹபீஸ் 2, அஹமது ஷெஸாத் 9, அசார் அலி 8 என அடுத்தடுத்து நடையைக் கட்ட, 9.1 ஓவர்களில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு இணைந்த யூனிஸ் கான்-கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. பாகிஸ்தான் 86 ரன்களை எட்டியபோது யூனிஸ்கானை போல்டாக்கினார் பெரேரா. 79 பந்துகளைச் சந்தித்த யூனிஸ்கான் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து மிஸ்பா உல் ஹக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் 41.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான். ஆசாத் ஷபிக் 14, சர்ஃப்ராஸ் அஹமது 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இலங்கை தரப்பில் தமிகா பிரசாத் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு பாகிஸ்தான் இன்னும் 182 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/முதல்-டெஸ்ட்-கிரிக்கெட்-இலங்கை-300க்கு-ஆல்அவுட்-பாகிஸ்தான்-திணறல்/article7336382.ece

  • தொடங்கியவர்

4 ம் நாள் தேநீர் இடைவேளை வரை பாகிஸ்தான் 390/8

  • தொடங்கியவர்

ஆசாத் ஷபிக், சர்பராஸ் அகமது அபாரம்: 96/5-லிருந்து 417 ரன்கள் விளாசிய

பாகிஸ்தான்

96 ரன்கள் விளாசிய சர்பராஸ் மற்றும் சதம் எடுத்த ஆசாத் ஷபிக் ரன் ஓடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
96 ரன்கள் விளாசிய சர்பராஸ் மற்றும் சதம் எடுத்த ஆசாத் ஷபிக் ரன் ஓடும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

கால்லே சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் எடுத்தது.

96/5 என்று சரிந்து கோண்டிருந்த பாகிஸ்தான் அணியை ஆசாத் ஷபிக் (131), சர்பராஸ் அகமது (96), சுல்பிகர் பாபர் (56), யாசிர் ஷா (23) ஆகியோர் தூக்கி நிறுத்தினர். இதனால் இலங்கையின் முதல் இன்னிங்ஸை காட்டிலும் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான், பின்னர் 2-வது இன்னிங்ஸில் இலங்கையின் முக்கிய விக்கெட்டுகளான, முதல் இன்னிங்ஸ் சத நாயகன் சில்வா மற்றும் சங்கக்காரா (18) ஆகியோர் விக்கெட்டைக் கைப்பற்றி நெருக்கடி ஏற்படுத்தியது.

யாசிர் ஷா ஒரு விக்கெட்டையும், வஹாப் ரியாஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்ற, 4ம் நாள் முடிவில் கருணரத்ன 36 ரன்களுடனும், பெரேரா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இன்று 118/5 என்று கடும் நெருக்கடியில் தொடங்கிய பாகிஸ்தான் அணி சர்பராஸ் அகமதுவின் டெஸ்ட் பேட்டிங் நேர்த்தியைக் கலைத்துப் போட்ட அதிரடி ஆட்டத்தினால் மீண்டது. அவர் 86 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து தகுதியுடைய ஒரு சதத்திற்கு முன்பாக தம்மிக பிரசாத் பந்தில் பவுல்டு ஆனார்.

ஆசாத் ஷபிக் அருமையான பொறுமை இன்னிங்ஸை ஆடி கடைசியில் 96-லிருந்து தூக்கி அடித்து பவுண்டரி விரட்டி தனது 7-வது சதத்தை எடுத்தார். இருவரும் 6-வது விக்கெட்டுக்காக 139 ரன்கள் சேர்த்தனர். ரங்கன்னா ஹெராத்தின் அச்சுறுத்தல் ஸ்பின்னுக்கு எதிராக ஆசாத் ஷபிக் அருமையான உத்தியைக் கையாண்டார்.

கடைசியில் சுல்பிகர் பாபர் ஒதுங்கிக் கொண்டு விளாசித் தள்ளினார். 60 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 56 ரன்களை அவர் எடுத்தார். அதுவும் அரைசதம் எடுக்க தில்ருவன் பெரேரா பந்தை லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார். ஆட்டத்தின் போக்கை சர்பராஸ் தனது அதிரடி ஆட்டத்தினால் மாற்ற ஆசாத் ஷபிக்கிற்கு நெருக்கடி குறைந்தது, பீல்ட் பரவலாக்கப்பட அவர் சிங்கிள்களை எடுத்து சர்பராஸிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தார்.

4 விக்கெட்டுகளைச் சாய்த்த தில்ருவன் பெரேரா ரவுண்ட் த விக்கெட்டில் வீசும் போது லெக் ஸ்டம்புக்கு வெளியே நின்றார் சர்பராஸ், சரி ஓவர் த விக்கெட் வீசலாம் என்றால் ஆஃப் ஸ்டம்ப் கார்டு எடுத்து ஆடினார். இதனால் அவரால் பந்தை சுலபமாக எதிர்கொள்ள முடிந்தது. மேலும் ரிவர்ஸ் ஸ்விங் எடுக்கும் போது சர்பராஸ் அகமது சில வேளைகளில் கிரீஸை விட்டு நன்றாக வெளியே வந்து நின்று ஆடினார்.

கடைசியில் தம்மிக பிரசாத் பந்தில் பவுல்டு ஆனார். இன்றைய தினத்தில் பாகிஸ்தான் எழுச்சிக்குச் சொந்தக்காரர் சர்பராஸ் அகமது என்றால் மிகையாகாது.

இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன் எடுத்துள்ளது. நாளை ஆட்டத்தின் கடைசி நாள், சங்கக்காரா ஆட்டமிழந்த வஹாப் ரியாஸ், ஜுனைத் கான், லெக்ஸ்பின்னர் யாசிர் ஷா இலங்கையை வீழ்த்தி வெற்றிக்கு முயற்சி செய்வார்களா என்பது சுவாரசியமான எதிர்பார்ப்பு.

 

http://tamil.thehindu.com/sports/ஆசாத்-ஷபிக்-சர்பராஸ்-அகமது-அபாரம்-965லிருந்து-417-ரன்கள்-விளாசிய-பாகிஸ்தான்/article7337067.ece

  • தொடங்கியவர்

பாகிஸ்தானிடம் சரணடைந்தது இலங்கை

 
 

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.216049.jpg

இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 300 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் சில்வா 125 ஓட்டங்களும், சங்கக்காரா 50 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், உல்பிகர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதில் ஆசாத் ஷாபிக் 14 ஓட்டங்களுடனும், சர்பிராஷ் அஹ்மத் 15 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் சர்பிராஷ் மற்றும் ஆசாத் ஷாபிக் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

சிறப்பாக விளையாடிய சர்பிராஷ் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

மறுமுனையில் விளையாடி ஆசாத் ஷாபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 131 ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 417 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 4, பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ஆம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் 2வது இன்னிங்சில் 206 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கருணரத்ன (79), திரிமன்னே (44) மட்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பாகிஸ்தான் தரப்பில், யாசிர் ஷா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

 

http://www.virakesari.lk/?q=articles/373764

  • தொடங்கியவர்
 

 

 

இலங்கை சுழல்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை என்கிறார் மெத்யூஸ்
2015-06-23 12:40:04

1074842.jpgசுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளுக்கு சாதக­மான காலி ஆடு­க­ளத் தில் பாகிஸ்தான் சுழல்­பந்து வீச்­சா­ளர்­க­ளான யசிர் ஷாவும் ஸுல்ஃபிகார் பாபாரும் தனது சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களை விஞ்சிவிட்­டதை இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 10 விக்கெட்­களால் தோல்வியடைந்த பின்னர் செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் மெத்யூஸ் கருத்து வெளி­யிட்டார்.

 

யசிரும் பாபாரும் தங்­க­ளி­டையே 13 விக்கெட்­களைப் பகிர்ந்­து­கொண்­ட­துடன் மொஹமத் ஹஃபீஸ் இரண்டு விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

 

ஆனால் இலங்­கையின் முன்­னணி சுழல்­பந்­து­வீச்­சா­ளர்கள் முத­லா­வது இன்னிங்ஸில் 221 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்கெட்­களை மாத்­திரம் பகிர்ந்­தனர்.

 

இரண்­டா­வது இன்­னிங்­ஸிலும் இலங்கை சுழல்­பந்து வீச்­சா­ளர்களைப் பாகிஸ்தான் ஆரம்பத் துடுப்­பாட்­டக்­கா­ரர்க ளைப் பதம் பார்த்­தனர். 

 

காலி விளை­யாட்­ட­ரங்க ஆடு­களம் பொது­வாக இலங்கை சுழல்­பந்­து ­வீச்சாளர்­க­ளுக்கு சாத­க­மா­கவே இருந்து வந்­துள்ளது.

 

உலக சாதனை வீரர் முத்­தையா முர­ளி­தரன் இந்த மைதா­னத்தில் 111 விக்கெட்­களைக் கைப்­பற்­றி­யுள்­ள­துடன் ரங்­கன ஹேரத்தும் 61 விக்­கெட்­களை வீழ்த்­தி­யுள்ளார்.

 

மேலும் இந்த மைதா­னத்தில் இதற்கு முன்னர் பாகிஸ்தான் விளை­யா­டிய மூன்று சந்­தர்ப்­பங்­க­ளிலும் இலங்­கையின் வெற்­றி­களில் ரங்­கன ஹேரத் முக்­கிய பங்­காற்­றி­யி­ருந்தார்.

 

எனினும் இம்­முறை இலங்­கையின் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களால் பாகிஸ்தானை வீழ்த்த முடி­யாமல் போனது.

 

‘‘பாகிஸ்தான் சுழல்­பந்து வீச்­சா­ளர்­களைப் போன்று எமது சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளது திறமை வெளிப்­ப­ட­வில்லை என்­பதை நான் ஒப்­புக்­கொள்­கின்றேன்.

 

போட்டி விளை­யாட ஆரம்­பித்த நாள் முதல் சுழல்­பந்­து ­வீச்­சா­ளர்­க­ளுக்கு சாதக­மாக இந்த ஆடு­களம் அமைந்­தது.

 

எமது பந்­து­வீச்­சா­ளர்கள் மிக­வே­க­மாக விக்கெட்­களை விழ்த்­த­வேண்டும் என்ற தேவை இருந்­தது. ஆனால் அப்­படி எதுவும் நடை­பெ­ற­வில்லை’’ என மெத்யூஸ் குறிப்­பிட்டார்.

 

‘‘பாகிஸ்­தா­னுக்­காக திற­மையை வெளிப்­ப­டுத்­திய யசிர் ஷா அல்­லது பாபாரைப் போன்று ரங்­கன ஹேரத் திற­மையை வெளிப்­ப­டுத்­த­வில்லை என என்னால் கூற­மு­டியும்.

 

இதனை மோசம் என்று கூற­மாட்டேன். ஆனால் துர­தி­ர்ஷ்­ட­வ­ச­மாக இப் போட்­டியில் அவரால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போய்­விட்­டது.

 

சில மாத இடை­வெ­ளி யின் பின்­னரே நாங்கள் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளை­யா­டு­கின்றோம். அத்­துடன் ஹேரத் காயத்­தி ­லி­ருந்து மீண்டு வந்து விளை­யா­டு­வ­துடன் சற்று சிர­மப்­ப­டு­கின்றார்.

 

இந்தப் போட்­டியில் அவர் திறம்­பட செயற்­ப­ட­வில்லை என்­பதை அவரே அறிவார்.

 

எனினும் அவரால் விரை­வாக திற­மையை வெளிப்­ப­டுத்­த  முடியும் என நம்புகின்றேன்’’ என ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

ரங்­கன ஹேரத்தை எதிர்­கொள்­வ­தற்­கான தயார் நிலையில் தனது அணி இருப்­ப­தாக இலங்­கைக்கு வரு­கை­தந்த சில தினங்­களில் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரி­வித்­தி­ருந்தார்.

 

அதற்கு அமைய பாகிஸ்தான் துடுப்­பாட்­டக்­கா­ரர் கள் இலங்கை சுழ்ல்­பந்­து­வீச்­சா­ளர்­களை பதம்­பார்த்­தனர். 

 

அசாத் ஷவீக், சர்வ்ராஸ் அஹ்மத், 10ஆம் இலக்க வீரர் ஸுல்ஃ­பிகார் பாபார் ஆகியோர் மிகத் திற­மை­யா­கவும் வேக­மா­கவும் துடுப்­பெ­டுத்­தா­டி­ய­மையும் பாகிஸ்­தானின் அபார வெற்­றிக்கு கார­ண­மாக அமைந்­தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10748#sthash.QjP4wzzV.dpuf
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சுழல்பந்துவீச்சாளர் டில்ருவன் விளையாடமாட்டார் யசீரை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் மெத்யூஸ்
2015-06-25 10:01:53

10776dilruwan.jpgஇடது கையில் 9 தையல்கள் போடப்­பட்­டுள்ள சுழல்­பந்­து­வீச்­சாளர் டில்­ருவன் பெரேரா இன்று ஆரம்­ப­மாகும் பாகிஸ்தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் விளையா­ட­மாட்டார்.

 

அத்­துடன் நேற்றுக் காலை பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போது வலது பெரு­வி­ரலில் காயத்­திற்­குள்­ளான தம்­மிக்க பிர­சாத்தும் அணியில் இடம்­பெ­று­வது சந்தே­கத்­திற்­கி­ட­மா­கி­யுள்­ளது.

 

காலி டெஸ்ட் போட்­டியில் காய­ம­டைந்த டில்­ரு­வ­னுக்கு போட்டி முடி­வ­டைந்த பின்னர் 9 தையல் போடப்­பட்­ட­தா­கவும் அவரால் விளை­யாட முடி­யாது எனவும் பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்க கேட்­போர்­கூ­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார். 

 

எனவே ரங்­கன ஹேரத்­துடன் பெரும்­பாலும் தரிந்து கௌஸால் சுழல்­பந்து வீச்­சா­ள­ராக இணைய வாய்ப்­புள்­ளது.

 

ரங்­கன ஹேரத்தின் பந்­து­வீச்சை எதிர்­கொள்­வ­தற்கு திட்டம் வகுத்­துள்­ள­தாக காலி டெஸ்ட் போட்­டிக்கு முன்­ப­தாக செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறிய பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், அங்கு வெற்றி அடைந்­ததன் மூலம் அதனை நிரூ­பித்தும் காட்­டினார்.

 

அதே­போன்று முதல் டெஸ்டில் இலங்கை துடுப்­பாட்ட வீரர்­களை பதம் பார்த்த சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான யசிர் அஹ்மத், ஸுல்ஃ­பிகார் பாபார் ஆகி­யோரை எதிர்­கொள்ள இலங்கை அணி­யிடம் திட்டம் உள்­ள­தா என ஏஞ்­சலோ மெத்­யூ­ஸிடம் கேட்­ட­போது, ‘‘காலி டெஸ்ட் போட்­டியில் அடைந்த தோல்­வியின் பின்னர் அது குறித்து நாங்கள் விரி­வாக கலந்­து­ரை­யா­டினோம்.

 

பாகிஸ்தான் சுழல்­பந்­து­வீச்­சா­ளர்­களை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது குறித்து தீவி­ர­மாக ஆராய்ந்தோம்.

 

அவர்­க­ளது பந்­து­வீச்­சுக்­களைத் தடுத்­தா­டு­வ­தை­விட நுட­பத்­தி­ற­னுடன் எதிர்த்­தா­டு­வதே சிறந்­தது என நாங்கள் உணர்­கின்றோம்.

 

எனவே யசிர், ஸுல்ஃ­பிகார், வஹாப் ஆகி­யோ­ரது பந்­து­வீச்­சுக்­களை தெளி­வான மனோ­நி­லை­யோடு எதிர்­கொள்ள எண்­ணி­யுள்னோம்.

 

மேலும் இலங்கை அணி­யினர் சிறந்த மனோ­நி­லை­யுடன் இப் போட்­டியை எதிர்­கொள்வர்’’ என பதி­ல­ளித்தார்.

 

கடை­சி­யாக இந்த மைதா­னத்தில் விளை­யா­டிய மூன்று டெஸ்ட் போட்­டி­களில் இலங்கை தோல்­வி­யையே தழு­வி­யி­ருந்­தது.

 

அந்த மூன்று சந்­தர்ப்­பங்­க­ளிலும் காலி டெஸ்ட் போட்­டியில் வெற்­றி­களை சுவைத்த பின்­னரே இந்த மைதா­னத்தில் இலங்கை அணி தோல்­வி­களைத் தழு­வி­யி­ருந்­தது.

 

ஆனால் இம்­முறை காலியில் தோல்­வியைத் தழு­விய பின்னர் சரா ஓவல் மைதா­னத்தில் இலங்கை விளை­யா­ட­வுள்­ளது.

 

இது இலங்கை அணிக்கு தொல்­லை­யாக அமை­யுமா என மெத்­யூ­ஸிடம் வின­வப்­பட்­ட­போது, ‘‘கடந்த கால முடி­வு­களை வைத்து தற்­போ­தைய நிலை­மையை எடை­போ­டக்­கூ­டாது.

 

அப்­போது விளை­யா­டப்­பட்ட ஆடு­க­ளத்­திலும் பார்க்க இந்தப் போட்டி நடை­பெறும் ஆடு­களம் புதி­யது மட்­டு­மல்­லாமல் சிறி­த­ளவு புல் உள்ள ஆடு­க­ள­மாகும்.

 

எனவே போட்­டியின் கடைசி இரண்டு தினங்­களில் பந்­து­வீச்­சுக்கு சாத­க­மாக அமை­யலாம்.

 

அதற்­கேற்ப எமது அணி தயார் நிலையில் இருக்­கின்­றது’’ என்றார்.

 

அணியில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டுமா என அவ­ரிடம் வின­வி­ய­போது,
‘‘துடுப்­பாட்ட வரி­சையில் அதா­வது முத­லா­வது டெஸ்டில் விளை­யா­டிய ஏழு துடுப்­பாட்­டக்­கா­ரர்­களும் அதே வரி­சையில் இடம்­பெ­றுவர்.

 

பந்­து­வீச்­சில்தான் சிக்கல் நில­வு­கின்­றது. 3 வேக­பந்து வீச்­சா­ளர்­க­ளு­டனும் ஒரு சுழல்­பந்­து­வீச்­சா­ள­ரு­டனும் களம் இறங்­கு­வதா அல்­லது ஒரு வேகப்­பந்­து­வீச்­சா­ள­ரு­டனும் 3 சுழல்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளு­டனும் களம் இறங்­கு­வதா என்­பது குறித்து போட்டி ஆரம்­பிப்­ப­தற்கு முன்­ப­தாக தெரி­வா­ளர்­களும் அணி முகா­மைத்­து­வமும் தீர்­மா­னிக்கும்’’ என்றார்.

 

இதேவேளை, காலி விளையாட்டரங்கில் ஈட்டிய வெற்றியை அடுத்து இந்த டெஸ்ட் போட்டியை நம்பிக்கையுடள் எதிர்கொள்ளவுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.

 

‘‘நாங்கள் சக­ல­து­றை­க­ளிலும் பிர­கா­சித்­துள்ளோம். எனவே தொடர்ந்து பிர­கா­சித்து வெற்றி அலையைத் தொடர்­வ­தற்­கான நம்­பிக்­கை­யுடன் இந்த டெஸ்டை எதிர்­கொள்­ள­வுள்ளோம்.‘‘ என மிஸ்பா கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10776#sthash.UJvi5nT3.dpuf
  • தொடங்கியவர்
குமார் சங்கக்கார மூன்றாவது டெஸ்டில் விளையாடுவாரா?
2015-06-25 11:06:41

(நெவில் அன்­தனி)

 

 

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக பல்­லே­க­லையில் ஜூலை 3 ஆம் திகதி முதல் நடைபெ­ற­வுள்ள மூன்­றா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் குமார் சங்கக்கார விளை­யா­டு­வாரா என்­பது குறித்து உறு­தி­யாக எதுவும் கூற­மு­டி­ய­வில்லை என ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான நேற்­றைய சந்­திப்­பின்­போது இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார்.

 

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து மஹேல ஜய­வர்­தன முழு­மை­யாக ஓய்வு­பெற்­றதைத் தொடர்ந்து மற்­றொரு சிரேஷ்ட வீர­ரான குமார் சங்கக்காரவின் ஓய்வு நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

 

1078232.jpg

 

இது குறித்து குமார் சங்­கக்­கார திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளாரா என சரா ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்றுப் பகல் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது கேள்வி எழுப்­பப்­பட்­டது.

 

‘‘மஹேல, சங்­கக்­கார ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்காற்­றி­யுள்­ளனர்.

 

 மஹே­லவைத் தொடர்ந்து குமார் சங்­கக்­கா­ரவும் ஓய்வை நெருங்­கு­வது அணிக்கு பெரும் இழப்­பா­கத்தான் இருக்கும்.

 

15 வரு­டங்­க­ளாக அணிக்­காக விளை­யா­டிய அவ­ரது ஓய்­வுக்குப் பின்னர் அவரது இடத்­திற்கு ஒரு­வரை உரு­வாக்­கு­வது இல­கு­வல்ல.

 

எவ்­வா­றா­யினும் அவர் மூன்­றா­வாது டெஸ்ட் போட்­டியில் விளை­யாட வேண்டும் என்­ப­துதான் எமது விருப்பம்.

 

ஆனால் அவ­ரது முடிவை இன்னும் அறி­விக்­க­வில்லை.

 

ஒரு­வேளை இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யின்­போது அல்­லது முடிவில் அவர் தனது திட்­ட­வட்­ட­மான முடிவை ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் அறிவிக்­கக்­கூடும்’’ என ஏஞ்­சலோ மெத்யூஸ் பதி­ல­ளித்தார்.

 

‘‘உண்­மையில் இலங்கை அணி உரு­மாற்றம் பெறும் காலம் இது. டில்ஷான், மஹேல, சங்­கக்­கார ஆகி­யோரின் இடங்­களை நிரப்­பு­வ­தற்கு இளை­யோரை இனங்­கா­ண்­பது இல­கு­வா­ன­தல்ல.

 

குறிப்­பாக சங்­கா­வி­ட­மி­ருந்து நாங்கள் நிறைய விட­யங்­களைக் கற்று வரு­கின்றோம்.

 

எனவே அணியின் உரு­மாற்றம் நல­மாக அமை யும் என நம்­புவோமாக’’ எனவும் அவர் கூறினார்.

 

குமார் சங்­கக்­கார இது­வரை 131 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி­யுள்­ள­துடன் 227 இன்­னிங்ஸ்­களில் 38 சதங் கள், 52 அரைச் சதங்­க­ளுடன் 12,271 ஓட்டங்­களை மொத்­த­மாக குவித்­துள்ளார். 

 

ஒரு முச்­சதம் அடங்­க­லாக 11 இரட்டைச் சதங்­களைக் குவித்­துள்ள சங்­கக்­கா­ரவின் அதி­கூ­டிய இன்னிங்ஸ் எண்­ணிக்கை ஆட்­ட­மி­ழக்­காத 319 ஓட்டங்களாகும்.

 

பங்களாதேஷுக்கு எதிராக சித்தாகொங் விளையாட்டரங்கில் 2014இல் அவர் இந்த எண்ணிக்கையைப் பதிவு செய்திருந்தார்.

 

டெஸ்ட் அரங்கில் அதிகப்பட்சமாக 12 இரட்டைச் சதங் கள் குவித்துள்ளவர் அவுஸ்திரேலியாவின் டொன் பிரட் மன் ஆவார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10782#sthash.Kbgmx0KO.dpuf
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டம்

 
 

  கொழும்பு பி.சர­வ­ண­முத்து சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று நடை­பெ­று­ம் இலங்கை பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.215901.jpg

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

அந்தவகையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான் சற்றுமுன்னர் வரை ஒரு விக்கெட்டை இழந்து 8 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு மூன்று டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் இரண்டு இரு­பது ஓவர்கள் போட்­டி­களில் விளை­யா­டு­கி­றது. இந்தத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி காலியில் நடந்­தது. இப்­போட்­டியில் பாகிஸ்தான் அணி 10 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/06/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

ஹெராத் பந்து வீசாமலேயே 138 ரன்களுக்குச் சுருண்ட பாகிஸ்தான்

 

  • 2-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்து பாகிஸ்தானை 138 ரன்களுக்குச் சுருட்டிய ஸ்பின்னர் கவுஷல். | படம்: ராய்ட்டர்ஸ்.
    2-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்து பாகிஸ்தானை 138 ரன்களுக்குச் சுருட்டிய ஸ்பின்னர் கவுஷல். | படம்: ராய்ட்டர்ஸ்.
  • இலங்கை டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா. இவர் மணிக்கு 150 கிமீ வேகத்தை தொடுகிறார். | படம்: ஏ.எஃப்.பி.
    இலங்கை டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா. இவர் மணிக்கு 150 கிமீ வேகத்தை தொடுகிறார். | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்புவில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தனது 2-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் இலங்கை ஆஃப் ஸ்பின்னர் தாரிந்து கவுஷல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களுக்குச் சுருண்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையின் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன்னா ஹெராத் பந்துவீச அழைக்கப்பட வேண்டிய தேவையே ஏற்படாமல் போனது.

உணவு இடைவேளையின் போது 70/2 என்று நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் அதன் பிறகு 68 ரன்களுக்கு மடமடவென 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களுக்கு மடிந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. சங்கக்காரா 18 ரன்களுடனும், குஷல் சில்வா 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

42 ரன்கள் அடித்து ஓரளவுக்கு நம்பிக்கை அளித்த மொகமது ஹபீஸை தனது டர்னால் ஏமாற்றிய கவுஷல் பவுல்டு செய்தார். ஷபிக் 2 ரன்னில் எல்.பி.ஆனார்.

பிறகு சர்பராஸ் அகமதுவின் மோசமான அழைப்புக்கு மிஸ்பா உல் ஹக் ரன் அவுட் ஆகி வெளியேறினார். மிஸ்பா 7 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு கடந்த போட்டியின் போக்கை மாற்றி பாக்.கிற்கு வெற்றி தேடித்தந்த சர்பராஸ் அகமதுவும் கவுஷலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு 4 ஒவர்களே பாகிஸ்தான் இன்னிங்ஸ் நீடித்தது.

முன்னதாக சரிவைத் தொடங்கி வைத்தார் யூனிஸ் கான், இவர் 6 ரன்களில் தம்மிக பிரசாத் பந்தை விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முன்னதாக இலங்கைக்கு ஒரு அபாரமான வேகப்பந்து வீச்சாளர் கிடைத்துள்ளதைப் பற்றி கூறியாகவேண்டும். அவர் பெயர் துஷ்மந்த சமீரா. இவர் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். இவருக்கு இது முதல் டெஸ்ட் போட்டி.

இவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் சீராக வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மென்களை காலையில் ஆட்டிப்படைத்தார். சில சமயங்களில் மணிக்கு 150கிமீ வேகத்துக்கு அருகில் கூட வந்தார். இவர் கடைசியில் சுல்பிகர் பாபர் விக்கெட்டை பவுல்டு மூலம் வீழ்த்தினார், மொத்தம் 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு இவர் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினாலும் இவரது பந்து வீச்சு அறிவித்தது என்னவெனில் இலங்கைக்கு ஒரு அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் வந்துள்ளார் என்பதே.

தம்மிக பிரசாத்தும் தன்னால் இயன்ற வரை அந்தப் பிட்சில் பவுன்ஸ் செய்ய முயன்றார். அவர் அகமது ஷேஜாத், அசார் அலி, யூனிஸ் கான் ஆகியோரை வீழ்த்தினார்.

கவுஷல் 10.5 ஓவர்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பிரசாத் 3-ம், சமீரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ரங்கன்னா ஹெராத் பந்து வீச அழைக்கப்பட வேண்டிய தேவையே ஏற்படவில்லை. அதற்குள் பாகிஸ்தான் மூட்டைக் கட்டப்பட்டது.

தொடர்ந்து ஆடிய இலங்கையில், தொடக்க வீரர் கருணரத்னே 28 ரன்களில் ஜுனைத் கானிடம் வீழ்ந்தார். வஹாப் ரியாஸ் வழக்கம் போல் அபாரமாக வீசி 9 ஓவர்கள் 2 மைடன்களுடன் 19 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். நாளை சில்வா, சங்கக்காரா எவ்வளவு நேரம் நீடிப்பார்கள் என்பதைப் பொறுத்து இலங்கையின் முன்னிலை தீர்மானிக்கப்படும்.

http://tamil.thehindu.com/sports/ஹெராத்-பந்து-வீசாமலேயே-138-ரன்களுக்குச்-சுருண்ட-பாகிஸ்தான்/article7354539.ece

  • தொடங்கியவர்

காயத்தைப் பொருட்படுத்தாது பந்துவீசிய வஹாப் ரியாஸ்

 
 
முதல் டெஸ்ட் போட்டியில் திரிமன்ன விக்கெட்டை வீழ்த்திய வஹாப் ரியாஸ். | படம்: ஏ.எஃப்.பி.
முதல் டெஸ்ட் போட்டியில் திரிமன்ன விக்கெட்டை வீழ்த்திய வஹாப் ரியாஸ். | படம்: ஏ.எஃப்.பி.

பந்துவீசும் கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டும் காயத்துடனேயே 9 ஓவர்கள் வீசினார் பாகிஸ்தானின் அயராத வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்.

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் காயத்தைப் பொருட்படுத்தாது 9 ஓவர்கள் வீசிய வஹாப் ரியாஸ், தற்போது இடது கையில் நூலிழை எலும்பு முறிவு காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலக நேரிட்டது.

முதல் இன்னிங்ஸில் நேற்று 138 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆன போது, பேட்டிங்கில் களமிறங்கிய வஹா ரியாஸ், இலங்கையின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா பந்து சற்றே எழும்ப கிளவ்வில் பலமாகத் தாக்கியது.

ஆனால் அவர் காயத்தைப் பொருட்படுத்தாது இலங்கை உடனேயே முதல் இன்னிங்சில் களமிறங்க 9 ஓவர்களை வீசினார். ஆனால் ஒவ்வொரு பந்து வீசிய பிறகும் கையை உதறிய படியே இருந்தார். எல்லைக்கோட்டருகே உடற்கூறு மருத்துவர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து வந்தார்.

கையில் நூலிழை எலும்பு முறிவு ஏற்பட்டும் அதனை பொருட்படுத்தாது 2 மணி நேரம் களத்தில் இருந்து 3 ஸ்பெல்களில் 9 ஓவர்கள் வீசினார்.

“கையில் காயம் ஏற்பட்டும், அதனைப் பொருட்படுத்தாது, மீண்டும் வந்து பல ஓவர்களை வீச வஹாப் ஆசைப் பட்டார். அவரது இந்த ஆட்ட உணர்வை நினைத்து பெருமையடைகிறோம், ‘ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்’ என்று பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பாராட்டியுள்ளார்.

தற்போது எக்ஸ்-ரே எடுக்கப்பட்டதில் அவருக்கு மெலிதான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது, அவர் நலம் பெற குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/காயத்தைப்-பொருட்படுத்தாது-பந்துவீசிய-வஹாப்-ரியாஸ்/article7357876.ece

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஜே.கே.சில்வா 80; இலங்கை- 304/9

 
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் மேத்யூஸ். படம்: ஏ.எப்.பி.
பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் மேத்யூஸ். படம்: ஏ.எப்.பி.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 118.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை முதல்நாள் ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

ஜே.கே.சில்வா அரைசதம்

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 98 ரன்களை எட்டியபோது சங்ககாரா வின் விக்கெட்டை இழந்தது. அவர் 34 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திரிமானி 7 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் மேத்யூஸ் களம் புகுந்தார். மறுமுனையில் நிதான மாக ஆடிய ஜே.கே.சில்வா 163 பந்து களில் அரைசதமடித்தார். இலங்கை அணி 191 ரன்களை எட்டியபோது ஜே.கே.சில்வா 80 ரன்களில் (218 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன்) ரன் அவுட்டானார்.

பின்னர் வந்த தினேஷ் சன்டிமால் 1, விதாஞ்சே 3 என அடுத்தடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர். இதையடுத்து தமிகா பிரசாத் களமிறங்க, மறுமுனையில் நின்ற கேப்டன் மேத்யூஸ் 99 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இலங்கை அணி 275 ரன்களை எட்டியபோது தமிகா பிரசாத் 35 ரன்களிலும், மேத்யூஸ் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த தரின்டு கவுஷல் 18 ரன்களில் வெளியேற, ஆட்டநேர முடிவில் 118.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை. ஹெராத் 10 ரன்களுடனும், சமீரா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

யாசிர்-50

பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் யாசிர் ஷா, நேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது டெஸ்ட் போட்டியில் தனது 50-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக வக்கார் யூனிஸ், சபீர் அஹமது, முகமது ஆசிப் ஆகியோர் 10 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

http://tamil.thehindu.com/sports/பாகிஸ்தானுக்கு-எதிரான-2வது-டெஸ்ட்-ஜேகேசில்வா-80-இலங்கை-3049/article7360718.ece

  • தொடங்கியவர்
இலங்கைக்கு வெற்றி இலக்கு 153 ஓட்டங்கள்; பாகிஸ்தானின் 2ஆவது இன்னிங்ஸில் அலி சதம்
2015-06-28 19:19:37

10813ali2.jpgபாகிஸ்தானுக்கு எதிராக பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கைக்கு 153 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் நான்காம் நாளான இன்றைய ஆட்டம் பிற்பகல் 4.00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 329 ஓட்டங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை வழங்கப்பட்ட நிலையில் திடீரென கடும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.


பிற்பகல் 4.00 மணியளவில் மைதானத்தைப் பார்வையிட்ட மத்தியஸ்தர்கள், மைதானம் போட்டியைத் தொடர்வதற்கு உகந்ததாக இல்லை எனத் தெரிவித்து நான்காம் நாள் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.


போட்டியின் நான்காம் இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் என்ற நல்ல நிலையில் இருந்து தொடர்ந்த பாகிஸ்தான், எஞ்சிய எட்டு விக்கெட்களை 158 ஓட்டங்களுக்கு இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 329 ஓட்டங்களாக இருந்தது.

10813_prasad.jpg

 


பாகிஸ்தான் சார்பாக அஸ்ஹர் அலி திறமையாக துடுப்பெடுத்தாடி 117 ஒட்டங்களைப் பெற்றார். இது அவரது 9ஆவது டெஸ்ட் சதமாகும். இவரைவிட யூனிஸ் கான் 4 ஓட்டங்களைப் பெற்றார்.


இலங்கை பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத் 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10813#sthash.twam9p5L.dpuf
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பாகிஸ்தானுடனான 2 ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணிக்கு 7 விக்கெட் வெற்றி
2015-06-29 12:23:51

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்று 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

 

10835_sl-vs-pak2.jpg

 

பி.சரவணமுத்து அரங்கில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 153 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலங்கை அணி இன்றுஅடைந்தது.

 

இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடர் தற்போது 1:1 விகிதத்தில் சமநிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10835#sthash.NKPQHH62.dpuf
  • தொடங்கியவர்
தவறுதலாக இரண்டு தரம் பதியபட்ட செய்தி நீக்கபட்டது

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பாகிஸ்தானுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சங்காவின் இடத்தை உப்புல் தரங்க நிரப்புகின்றார்
2015-07-03 09:58:16

109163841435.jpgபாகிஸ்­தா­னுக்கு எதி­ராக பல்­லே­க­லையில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள மூன்­றா­வதும் தீர்­மா­ன­மிக்­க­து­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் குமார் சங்­கக்­கா­ர­வுக்குப் பதி­லாக உப்புல் தரங்க விளை­யா­டுவார் என இலங்கை அணியின் உதவித் தலைவர் லஹிரு திரி­மான்ன தெரி­வித்­துள்ளார்.

 

பல்­லே­கலை விளை­யாட்­ட­ரங்க கேட்­போர்­கூ­டத்தில் நேற்­றுப்­ பிற்­பகல் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டனான சந்­திப்­பின்­போதே அவர் இந்தத் தக­வலை வெளி­யிட்டார்.

 

சுமார் ஒரு வருட இடை­வெ­ளியின் பின்னர் உப்புல் தரங்க, டெஸ்ட் அரங்கில் மீள் பிர­வேசம் செய்­கின்றார்.

 

குமார் சங்­கக்­கா­ரவின் இடத்தை ஏற்­க­னவே குழாமில் இடம்­பெறும் ஜெஹான் முபாரக் அல்­லது குசல் ஜனித் பெரேரா நிரப்­புவார் என்ற அபிப்­பி­ராயம் பர­வ­லாக நில­வி­யது.

 

ஆனால் இந்த அபிப்­பி­ராயம் என்­பது தவ­றா­னது என்­பதை திரி­மான்­னவின் பதில் வெளிப்­ப­டுத்­தி­யது.

 

இதே­வேளை ‘‘குமார் சங்­கக்­கார விளை­யாடததன் கார­ண­மாக சிரேஷ்ட வீரர்கள் பொறுப்­பு­ணர்­வுடன் விளை­யாட வேண்­டிய நிலையில் இருக்­கின்­றனர். அந்தப் பொறுப்பை நிறை­வேற்­று­வ­தற்­கான மன உறு­தி­யுடன் இப் போட்­டியை எதிர்­கொள்­ள­வுள்ளோம்’’ என்றார் திரி­மான்ன.

 

இது இவ்­வா­றி­ருக்க, இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­போது சிறு உபா­தைக்­குள்­ளான வேகப்­பந்­து­வீச்­சாளர் துஷ்­மன்த சமீர இந்தப் போட்­டியில் விளை­யா­டு­வாரா இல்­லையா என்­பது அவ­ரது பூரண தேகா­ரோக்­கி­யத்­தி­லேயே தங்­கி­யுள்­ள­தாக லஹிரு திரி­மான்ன கூறினார்.

 

மிஸ்பா கருத்து

 

இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் அடைந்த தோல்­வி­யினால் தமது அணி சோர்ந்­து­வி­ட­வில்லை என ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் பேசிய பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரி­வித்தார்.

 

யூனிஸ் கான் பிர­கா­சிக்­கா­தது பாகிஸ்தான் அணிக்கு நெருக்­க­டியைத் தோற்­று­விக்­கின்­ற­தா? எனக் கேட்­கப்­பட்­ட­போது, ‘‘நாளை (இன்று) ஆரம்­ப­மாகும் டெஸ்ட் போட்­டியில் அவர் பிர­கா­சிப்­பதைப் பார்ப்­பீர்கள்’’ என நம்­பிக்­கை­யுடன் பதி­ல­ளித்தார்.

 

இதே­வேளை, பந்­து­வீச்­சுப்­பாணி தொடர்­பாக சென்­னையில் ஆய்­வுக்கு உட்­பட வேண்டும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள மொஹமத் ஹவீஸ், நேற்­றுக்­காலை இந்­திய தூத­ர­கத்­திற்கு விசா பெறு­வ­தற்­காக சென்­ற­தாக தெரி­கின்­றது.

 

ஒரு­வேளை அவ­ருக்கு விசா கிடைப்­பதில் தாமதம் ஏற்­பட்டால் மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டுவார் என நேற்றுப் பகல் தெரி­விக்­கப்­பட்­டது.

 

இலங்கை குழாம்:

 

ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), லஹிரு திரி­மான்ன (உதவி அணித் தலைவர்), திமுத் கரு­ணா­ரட்ன, கௌஷால் சில்வா, உப்புல் தரங்க, ஏஞ்­சலோ மெத்யூஸ், தினேஷ் சந்­திமால், கித்­ருவன் வித்­தா­னகே, தம்­மிக்க பிரசாத், தரிந்து கௌஷால், ரங்­கன ஹேரத், ஜெஹான் முபாரக், துஷ்­மன்த சமீர, டில்­ருவன் பெரேரா, குசல் ஜனித்  பெரேரா.

 

பாகிஸ்தான் குழாம்:

 

மிஸ்பா உல் ஹக் (அணித் தலைவர்), அஸ்ஹர் அலி (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அசாத் ஷவிக், பாபார் அஸாம், ஏஷான் அலி, இம்ரான் கான், ஜுனைத் கான், மொஹமத் ஹவீஸ், சர்வ்ராஸ் அஹ்மத், ஷான் மசூத், யசிர் ஷா, யூனிஸ் கான், ஸுல்ஃபிகார் பாபார்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=10916

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.