Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

3 வது டெஸ்ட் போட்டியின் 1 நாள் ஆட்ட முடிவில் ஸ்ரீலங்கா  272/8 (86.0 ov)

  • தொடங்கியவர்

பாக்., ‘சுழல்’ தாக்குதல்

Yasir Shah, pakistan

பல்லேகெலே: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இலங்கை வீரர் கருணாரத்னே சதம் அடித்தார்.

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் 1–1 என, தொடர் சமமாக உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் பல்லேகெலேயில் நேற்று துவங்கியது. 13 ஆண்டுக்குப் பின் இலங்கை அணி முதன் முறையாக சங்ககரா, ஜெயவர்தனா இல்லாமல் டெஸ்டிங் களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

கருணாரத்னே அபாரம்:

இலங்கை அணிக்கு கருணாரத்னே, கவுஷல் சில்வா ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. சில்வா (9) ஏமாற்ற, தரங்கா (46) அரைசத வாய்ப்பை இழந்தார்.

பின் வந்த திரிமான்னே (11), கேப்டன் மாத்யூஸ் (3), 7 ஆண்டுக்குப் பின் டெஸ்டில் களமிறங்கிய முபாரக் (25) என, வரிசையாக யாஷிர் ஷா ‘சுழலில்’ சிக்கினர்.

ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும் கருணாரத்னே சதம் (130) அடித்து திரும்பினார். சண்டிமால் (24) நீடிக்கவில்லை. போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.

லக்மல் (1), தரிந்து கவுஷல் (17) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் ‘சுழல்’ வீரர் யாஷிர் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.

http://sports.dinamalar.com/2015/07/1435942617/YasirShahpakistan.html

  • தொடங்கியவர்

இலங்கை அபார பந்துவீச்சு

Dhammika Prasad, cricket

பல்லேகெலே: மூன்றாவது டெஸ்டில் இலங்கை அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறுகிறது.

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பல்லேகெலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.

யாசிர் அசத்தல்:

நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. தரிண்டு கவுஷால் (18), நுவான் பிரதீப் (0) ஏமாற்ற, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 5 விக்கெட் கைப்பற்றினார்.

அசார் அரைசதம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு இலங்கை ‘வேகங்கள்’ தமிகா பிரசாத், நுவன் பிரதீப்ஷான் பதிலடி கொடுத்தனர். மக்சோத் (13), அகமது ஷேசாத் (21) ஏமாற்றினர். யூனிஸ் கான் (3) ‘ரன்–அவுட்’ ஆனார். பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

பின் அசார் அலி (52), டெஸ்ட் அரங்கில் தனது 20வது அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழையால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

சர்பராஸ் அகமது, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். கேப்டன் மிஸ்பா (6), ஈஷான் அடில் (0), யாசிர் ஷா (18), ரஹாத் அலி (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்த போது 3வது முறையாக மழை குறுக்கிட இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சர்பராஸ் அகமது (72) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தமிகா பிரசாத், நுவன் பிரதீப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

http://sports.dinamalar.com/2015/07/1436025906/DhammikaPrasadcricket.html

Sri Lanka 278 & 92/4 (26.0 ov)
Pakistan 215
Sri Lanka lead by 155 runs with 6 wickets remaining
  • தொடங்கியவர்

இலங்கை பலமான நிலை

 
Comment

INMATHIW.jpg

இலங்கை கண்டி பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கையணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தமது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிகொண்டிருந்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று காலையில் 215 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் பறிகொடுத்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக சஃப்ராஸ் அகமட் அதிகபட்சமாக 78 ஓட்டங்களை பெற்றார். இலங்கையணி சார்பாக தம்மிக பிரசாத், நுவான் பிரதீப், தரிந்து கௌஷால் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

63 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கையணி தற்போது ஓட்டங்கள் 291 முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கையணி சார்பாக அணித்தலைவர் மத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தரங்க 48 ஓட்டங்களையும், முபாரக் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் ரகாட் அலி , யாசிர் ஷா தலா 2 விக்கெட்களையும், ஏகசன் அடில் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

http://tamil.wisdensrilanka.lk/article/1764

  • தொடங்கியவர்
Sri Lanka 278 & 313
Pakistan 215 & 2/1 (2.5 ov, target: 377)
Pakistan require another 375 runs with 9 wickets remaining
  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு 377 வெற்றி இலக்கு

 
 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 377 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.216899.jpg

இலங்கை சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இறுதி டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, பந்து வீச முடிவு செய்தார். அதன் படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்சில் இலங்கை அணி 278 ஓட்டங்கள் எடுத்தது. இதில் கருணாரத்ன சதம் விளாசினார். இவர் 14 பவுண்டரி உட்பட 130 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில், யாசிர் ஷா 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இலங்கை பந்து வீச்சில் திணறியது. இதனால் 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் அசார் அலி (52), சர்பிராஸ் அகமது (78) அரைசதம் கடந்தனர். பந்துவீச்சில் பிரசாத், பிரதீப், கவுஷால் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 10 ஓட்டங்களிலும், சில்வா 3 ஓட்டங்களிலும், திரிமன்னே ஓட்டம் எதுவும் பெற்றாது ஆட்டமிழந்தனர்.

பின்னர் வீழந்து கிடந்த இருந்த இலங்கை அணியை தரங்க, மெத்யூஸ் தங்களின் நிதானமான ஆட்டத்தால் நிலைநிறுத்தினர்.

தரங்க (48) அரைசதத்தை தவறவிட்டார். சிறப்பாக விளையாடிய மெத்யூஸ் அரைசதம் கடந்தார். முபாரக் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழந்து  228 ஓட்டங்கள் எடுத்து 291 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் நான்காவது நாளான இன்றை ஆட்டத்தை தொடர்;ந்த மெத்தியூஸ் சதத்தை கடந்து 122 ஓட்டங்களையும் சந்திமால் அரைச் சதத்தை கடந்து 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். இதற்கு அடுத்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஏமாற்றினர்.

இதனையடுத்து பாகிஸ்தான அணி 377 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

http://www.virakesari.lk/articles/2015/07/06/பாகிஸ்தானுக்கு-377-வெற்றி-இலக்கு

  • தொடங்கியவர்

யூனிஸ் கான், ஷான் மசூத் அபார சதம்; 377 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தும் பாக். 230/2

 
 
சத நாயகர்களான யூனிஸ் கான் மற்றும் தொடக்க வீரர் ஷான் மசூத். | படம்: ஏ.எப்.பி.
சத நாயகர்களான யூனிஸ் கான் மற்றும் தொடக்க வீரர் ஷான் மசூத். | படம்: ஏ.எப்.பி.

இலங்கைக்கு எதிராக பல்லெகிலேயில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று 377 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிவரும் பாகிஸ்தான் அணி ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 230 ரன்கள் எடுத்துள்ளது.

13/2 என்று தடுமாற்றத்தில் தொடங்கிய பாகிஸ்தான் அணியில், புதிய இடது கை தொடக்க வீரர் ஷான் மசூத் 114 ரன்களுடனும் யூனிஸ் கான் 101 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 377 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுவிட்டால், இலங்கை மண்ணில் அதிகபட்ச இலக்கைத் துரத்திய வரலாற்றை பாகிஸ்தான் நிகழ்த்தும்.

இருவரும் இணைந்து 217 ரன்களைச் சேர்த்து, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிகபட்ச ரன்களை ஜோடியாக சேர்த்து பாகிஸ்தானுக்கான புதிய சாதனை படைத்துள்ளனர்.

பிட்ச் கடுமையாக மந்தமடைந்த நிலையிலும் இலங்கையின் விக்கெட் வீழ்த்தும் தரிந்து கவுஷல் 20 ஓவர்களில் 92 ரன்கள் கொடுத்து, முற்றிலும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாததும் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.

சுரங்க லக்மல், அகமது ஷேசாத்துக்கு ஒரு பந்தை வெளியே இழுத்து பீட் செய்து, பிறகு ஒரு பந்தை உள்ளே கொண்டு வர ஷேசாத் பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்ட,ப் பறந்தது. தம்மிக பிரசாத் லெக் திசை பந்தை அசார் அலி, விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற 13/2 என்று ஆனது.

எதிர்முனையில் ஷான் மசூத் அவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. யூனிஸ் கான் களமிறங்கி தனது அனுபவத்தின் மூலம் பந்துகளை நகர்ந்து வந்து கடைசி நேரத்தில் ரன்னுக்கோ, அல்லது தடுத்தோ ஆடி நம்பிக்கையூட்ட ஷான் மசூத் மெதுவே நம்பிக்கை பெற்றார். ஓவர் பிட்ச் பந்துகளை சிறப்பாக ஆடும் ஷான் மசூத், ஷார்ட் பிட்ச் பந்துகளில் திக்கித் திணறினார்.

தரிந்து கவுஷல் வந்தவுடன் யூனிஸ், ஷான் மசூத் இருவரும் அடிக்கத் தொடங்கினர். யூனிஸ் கான் 71 பந்துகளில் அரைசதம் எடுத்தார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பிட்சில் ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சாளர்களை சில அபாரமான கவர் டிரைவ்களை ஆடினார். அரைசதம் எடுக்கும் முன்னர் பிரசாத் பந்தை மிட்விக்கெட்டில் ஒரு ஷாட்டையும் பிறகு ஒரு கவர் டிரைவையும் அடுத்தடுத்து அடித்து அரைசதம் கடந்தார்.

கடைசியில் கேப்டன் மேத்யூஸ் பவுலிங்கிலும் தன் பங்களிப்பை நிகழ்த்த வேண்டி வந்தார். ஏற்கெனவே பேட்டிங்கில் அவரது சதத்தினால்தான் இலக்கு 377 ரன்களாக உள்ளது. இந்நிலையில் மசூத் 79 ரன்னில் இருந்த போது ஒரு எல்.பி.முறையீடு நிராகரிக்கபப்ட்டது. ரிவியூவில் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டதா என்பது சரியாகத் தெரியாததால் களதீர்ப்பான நாட் அவுட் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நடுவே அஞ்சேலோ மேத்யூஸ் கேப்டனாக ‘தோனி’-யின் டெஸ்ட் போட்டி ஸ்டைலைக் கடைபிடிக்கத் தொடங்கினாரோ என்ற சந்தேகம் எழுந்தது, களவியூகத்தை விரிவுபடுத்தினார். இதில் யூனிஸ் கான், ஷான் மசூத் தங்கள் இஷ்டத்துக்கு சிங்கிள்களை எடுக்க சுத்தமாக அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படவில்லை.

தரிந்து கவுஷலை யூனிஸ் கான் இஷ்டத்துக்க்கு ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிக்கொண்டேயிருந்தார். பீல்டிங் அமைப்பினால் தைரியம் பெற்ற மசூத் இறங்கி வந்து கவுஷலை ஒரு சிக்ஸ் அடித்து தன் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் கவுஷலை ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து யூனிஸ் கான் தனது 30-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதோடு 5-வது முறையாக 4 வது இன்னிங்ஸில் சதம் எடுத்த முதல் வீரரானார் யூனிஸ் கான்.

முன்னதாக இன்று காலை 77 ரன்களில் இறங்கிய மேத்யூஸ் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முபாரக் 35 ரன்களையும், சந்திமால் 67 ரன்களையும் எடுக்க, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை தன் 2-வது இன்னிங்ஸில் 313 ரன்களை எட்டியது.

நாளை 377 ரன்களை பாகிஸ்தான் வெற்றிகரமாகத் துரத்தினால், பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் விரட்டலாக இது அமையும், மேலும் இலங்கை அணியை டெஸ்ட் தொடரில் 2-1 என்று வெற்றியும் பெறும்.

நாளை புதிய பந்து எடுக்கப்படும், அதற்கு இன்னமும் 17 ஓவர்கள் மீதமுள்ளன. இந்த 17 ஓவர்களில் குறைந்தது 65 ரன்களையாவது விக்கெட் இழக்காமல் பாகிஸ்தான் எடுக்க வேண்டும். அதாவது 300 ரன்களை புதிய பந்து எடுப்பதற்குள் எடுத்து விட வேண்டும், யூனிஸ் கான் நிச்சயம் அவுட் ஆக கூடாது, அப்படியெனில் பாகிஸ்தான் சாதனை வெற்றியைப் பெறும்.

http://tamil.thehindu.com/sports/யூனிஸ்-கான்-ஷான்-மசூத்-அபார-சதம்-377-ரன்கள்-வெற்றி-இலக்கைத்-துரத்தும்-பாக்-2302/article7392375.ece

  • தொடங்கியவர்

யூனிஸ் கான் 171 நாட் அவுட்; வெற்றியில் வரலாறு படைத்த பாகிஸ்தான்

 
  • மராத்தான் இன்னிங்ஸ் ஆடிய யூனிஸ் கான். ஸ்வீப் ஆடும் காட்சி. | படம்: ஏ.எப்.பி.
    மராத்தான் இன்னிங்ஸ் ஆடிய யூனிஸ் கான். ஸ்வீப் ஆடும் காட்சி. | படம்: ஏ.எப்.பி.
  • யூனிஸ் கானைப் பாராட்டும் வீரர்கள். | படம்: ஏ.எப்.பி.
    யூனிஸ் கானைப் பாராட்டும் வீரர்கள். | படம்: ஏ.எப்.பி.

பல்லெகிலேயில் நடைபெற்ற 3-வது இறுதி டெஸ்ட் போட்டியில் 377 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதன் சிறந்த துரத்தலைச் சாதித்து வரலாறு படைத்துள்ளது.

380/3 என்ற வெற்றியில் யூனிஸ் கான் 171 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4-வது இன்னிங்சில் அதிகபட்ச இலக்கைத் துரத்தியது பாகிஸ்தான் அணியின் புதிய சாதனையாக அமைந்தது. மேலும் ஆசியாவில் இதுவே மிகச்சிறந்த துரத்தலாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6-வது பெரிய துரத்தலாகும் இது.

மேலும், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் மண்ணில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 2-1 என்று வீழ்த்தி மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

மேலும் 13/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் (125), யூனிஸ் கான் (171 நாட் அவுட்) இணைந்து 3-வது விக்கெட்டுக்காக சேர்த்த 242 ரன்கள் 4-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் அதிசிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும் இது.

வெற்றி பெற 122 ரன்கள் தேவை என்ற நிலையில் இறங்கிய கேப்டன் மிஸ்பா 59 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்தார். முபாரக் வீசிய 104-வது ஓவரின் முதல் பந்தை மிஸ்பா லாங் ஆனில் ஒரு சிக்சரை அடித்து வெற்றி ரன்களை எடுத்தார்.

இன்று காலை 230/2 என்று தொடங்கியது பாகிஸ்தான். இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக வீசினர். இதனால் அடிக்க நினைத்த ஷான் மசூத் சற்றே திணறினார். தாரிந்து கவுஷல் என்ற ஆஃப் ஸ்பின்னர் அறிமுகம் செய்யப்பட்டவுடன் சிறையிலிருந்து விடுபட்ட பறவை போல் மேலேறி வந்தார் ஷான் மசூத் பந்து அவரைத் தாண்டியது 125 ரன்களில் ஸ்டம்ப்டு ஆனார்.

கவுஷல் நன்றாக பந்துகளை திருப்பினாலும், சீரற்ற முறையில் வீசியதால் மிஸ்பா, யூனிஸ் கான் அவரை ஸ்வீப் செய்து முறியடித்தனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியம் காட்டியதால் இன்று முதல் பவுண்டரியே 10-வது ஓவரில்தான் வந்தது. அதுவும் ஸ்லிப் இல்லாத நிலையில் யூனிஸ் கானின் எட்ஜ் மூலம் வந்தது.

புதிய பந்து எடுக்கும் முன்னரே விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியதால் புதிய பந்து எடுக்கும் போது வெற்றிக்கு 101 ரன்களே தேவைப்பட்டது. தம்மிக பிரசாத் பந்தில் யூனிஸ் பேடில் வாங்க ஒரு பலத்த முறையீடு எழுந்தது ஆனால் அவுட் இல்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு கவுஷல் மோசமாக வீச பவுண்டரிகள் வரத் தொடங்கின. கவுஷல் 31 ஓவர்களில் 153 ரன்களுக்கு 1 விக்கெட் என்று முடிந்தார். ரங்கன்னா ஹெராத் இல்லாததை நிச்சயம் மேத்யூஸ் உணர்ந்திருப்பார்.

யூனிஸ் கான் 171 நாட் அவுட்டாக திகழ்ந்தார். சிறந்ததொரு டெஸ்ட் இன்னிங்ஸ். 13/2 என்ற நிலையில் 377 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக்கியது இவரது பேட்டிங் என்றால் அது மிகையாகாது. 4-வது இன்னிங்ஸ் துரத்தலில் 5-வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ளார் யூனிஸ் கான். தடுமாறிய தொடக்க வீரர் ஷான் மசூதின் ஆட்டமே யூனிஸ் ஆடிய எளிதான வழிமுறைகளினால் மாறி சதம் வரை கொண்டு வந்ததும் யூனிஸ் கானின் அனுபவமும், துணைக் கண்ட 4-ம் நாள், 5-ம் நாள் பிட்சில் எப்படி ஆட வேண்டும் என்ற உத்தியும் பாகிஸ்தானுக்கு ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தது.

ஆட்ட நாயகனாக யூனிஸ் கான் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/யூனிஸ்-கான்-171-நாட்-அவுட்-வெற்றியில்-வரலாறு-படைத்த-பாகிஸ்தான்/article7395311.ece

  • தொடங்கியவர்

தொடரைக்கைபற்றியது பாகிஸ்தான்

 

INSERIES.jpg

கண்டி பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஏழு விக்கெட்களால் வெற்றி கொண்டதையடுத்து  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 : 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

இறுதி ஐந்தாம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி வெற்றிக்கு மேலும் 147 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் சதம் பெற்றிருந்த ஷன் மசூட்டின் விக்கெட்டினை மாத்திரம் பறிகொடுத்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்களையும், ஷன் மசூத் 125 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இருந்த இலங்கையணி தமது சகல விக்கெட்களையும் இழந்து 278 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில்  அதிகபட்சமாக டிமுத் கருணாரட்ன 130 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யாசிர் ஷா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி வெறும் 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் பறிகொடுத்திருந்தது. அதிகபட்சமாக சஃப்ராஸ் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக தம்மிக பிரசாத், நுவான் பிரதீப், தரிந்து கௌஷால் தலா 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கையணி 313 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மத்தியுஸ் 122 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் இம்ரான் கான் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக யூனிஸ்கானும், போட்டித்தொடரின் ஆட்டநாயகனாக யாசிர் ஷாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

http://tamil.wisdensrilanka.lk/article/1773

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.