Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழருடன் இரகசியப் பேச்சு நடத்தவில்லை- சிறிலங்கா அரசாங்கம்

Featured Replies

புலம்பெயர் தமிழருடன் இரகசியப் பேச்சு நடத்தவில்லை- சிறிலங்கா அரசாங்கம் JUN 11, 2015 | 1:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sri-lanka-emblem-300x198.jpgநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் வெளிப்படையாக பேச்சு நடத்தியதாகவும், இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று நடந்த வாராந்த செய்தியாளர் சந்திப்பில், லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக, எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

“கடந்தகால கசப்பான அணுபவங்களை மறந்து இன, மத பேதமின்றி நல்லிணக்கத்திற்காக ஒத்துழைப்பு வழங்க முன்வரும் அனைவரின் உதவிகளையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.

கடந்தகால அரசியலை திருப்பி பார்த்தால் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள இயலாது. எமக்கு தனி நபர் அல்லது அமைப்பு மீது நம்பிக்கை கொள்வதனை விட நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதே இலக்காகும்.

நல்லிணக்க ஆணைக்குழு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பல சிபாரிசுகளை முன்வைத்துள்ளது.

அந்த சிபாரிசுகளுக்கமைய நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைத்து இனங்களுக்கிடையிலும் பேச்சு நடத்தப்பட வேண்டிய அதேவேளை வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுடனும் பேச்சு நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் அனைத்து இனங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடனும் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் லண்டனில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து சிறிலங்காவில் இந்த ஆண்டு இறுதியில் புலம்பெயர்ந்தோருக்கான விழா ஒன்றை நடத்தப்படவுள்ளது. ஆண்டுதோறும் இந்த விழாவை தொடர்ந்து முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2015/06/11/news/6910

 

அப்போ சுமந்திரன் அப்புகாத்து கூறியதெல்லாம்.......ட்ரயல் அட் பார் தான்

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

200px-Bottlesofarrack.jpg28b30bd7-c7ae-442a-98aa-0cf6f75abc44.jpg1336400141686.jpg

 

 தமிழ் அகதிகளுக்கான கலை மாலை இப்படித்தான் இருக்குமோ ?

 

 

  10930027_918718371494814_878365085094643                        10931444_918718298161488_758377339864354   10924814_918718001494851_645353461617114


 

 

 

 

 

                             

Edited by BLUE BIRD

சுமந்திரன் இந்த இடத்தில் இருப்பது தான் பிரச்சனை .. பார்ப்பம் ...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

 

நல்லிணக்க முனைப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே, இந்த விழாவின் மூலம் புலம்பெயர்ந்தோரின் நல்லெண்ணத்தை இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்

 

புலம்பெயர்ந்த இலங்கையர்களில் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்கள் நாட்டுக்கு வர விரும்புகின்றனர்

அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு துணையாக இருப்பர். இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற்றது

 

இதில், அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்றார் என்றும் கொலன்னே குறிப்பிட்டார்.

இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புலம்பெயர்ந்தோருடன் இணைந்து நடைமுறைப்படுத்தி இறுதி சமாதானத்தை அடைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் கொலன்னே குறிப்பிட்டுள்ளார்.

 

http://tamilwinterthur.com/?p=36117

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.