Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த காலத்தில் டக்ளஸ் மணல் திருடினார்! ஊழல் ஒழிப்புக் குழுவில் முறைப்பாடு!

Featured Replies

bf2e95ca05df7a21b60981cf0011ae7e_L.jpg
 
யாழ்ப்பாணம் முழுவதும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகல்வு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மகேஸ்வரி நிதியத்தினால் இந்த சட்டவிரோத மணல் அகல்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி வகிக்கின்றார்.
 
பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் பி.சஞ்ஜீவன் இன்று காலை இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் சமூகமளித்திருந்தார்.
 
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகல்வுகள் குறித்தும், மணலுக்காக பொதுமக்களிடமிருந்து அளவுக்கதிகமாக பணம் அறிவிப்பட்டமை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
2007 ஆண்டு நடுப்பகுதி முதல் 2014ஆம் ஆண்டு இறுதி வரை, வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக இந்த சட்டவிரோத மணல் அகல்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அத்துடன், 286 ரூபாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கியூப் மணல் 13,500 ரூபாவிற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்கப்பட்டு மேலதிகமாக வசூலிக்கப்பட்ட பணத்தை உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நிர்ணயப்படுத்தப்பட்ட விலையே குறித்த 286 ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவை தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அதுகுறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2007 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரையிலான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அதிகாரமிக்க அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவி வகித்துவந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
டாக்கி ஒரு மனித மிருகம் .. கொள்ளைக்காரன் ... அந்த நாயை உள்ளுக்க போட்டு தோல் உரிக்கணும் ...
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கியூப் மணல் 286 ரூபாவா ? எந்த வருடத்தில். முக்கால் கியூப் ஒரு ரக்டர் அளவு?

சட்டத்தரணி சும் இதிலயாவது வெல்லுறாவாரா? சில தினங்களுக்கு முன்னர் டாண் தொலைக்காட்சியில் இது தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் மகேஸ்வரி நிதியம் ஆரம்பிக்கப்பட்ட போது அதை எதிர்த்து வழக்காடி இவர் தோற்றதாகவும் அத்துடன் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக வழக்குப் பதிந்த அனைவருமே தமக்கு மணல் அள்ளும் உரிமத்தை வழங்கும்படி விண்ணப்பித்துள்ளனர் என்றும் கூறினார்கள்.

பாராவூர்தி சங்கத்தினர் தம்மை சும் ஏமாற்றியதாக தாம் சுண்டெலியின் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Edited by MEERA

பொதுமக்களிடமிருந்து பெருமளவான பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் யாழ். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பி.சஞ்சீவன், கொழும்பிலுள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் செய்வாய்க்கிழமை(16), முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் உடனிருந்தார்.  -

 

 

article_1434443120-news%20(1).jpg

 

article_1434443143-sumanthiran%20-%20Cop

 

article_1434443166-news%20(4).jpg

 

 

http://www.tamilmirror.lk/148449#sthash.rI1SkUGm.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.