Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவின் சிறிலங்கா வருகை குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரியாதாம்

Featured Replies

ஒபாமாவின் சிறிலங்கா வருகை குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரியாதாம் JUN 17, 2015 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

us-embassy-colombo-300x200.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறிலங்கா பயணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக தாம் எதையும் அறியவில்லை என்றும், அதிகாரபூர்வமாக தமக்கு எதுவும் தெரியாது என்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/06/17/news/7004

 

  • கருத்துக்கள உறவுகள்
அதல்லாம் எங்களுக்கு தெரியாது.
 
நல்லூருக்கு கூட்டிக்கொண்டு போய், சேட்டை கழட்ட வைத்து, எங்கண்ட முரியனிட்ட துண்ணூறு வாங்கி பூச வைக்க வேணும்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

ஒபாமாவின் கொழும்பு பயணம் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கும் தெரியாதாம் JUN 18, 2015 | 0:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

obama-300x200.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆகியோர் சிறிலங்கா வந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்கா வரவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்க அதிபரின் பயணம் தொடர்பான உறுதியான தகவல்கள் எதையும் தாம் அறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க அதிபர் பயணம் தொடர்பாக இப்போது எமக்கு எதுவும் தெரியாது.

இந்த ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்க அதிபர் ஆசியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு புரிந்து கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா பயணம் மேற்கொள்வதை சிறிலங்கா வரவேற்கிறது.

அது சிறிலங்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இருக்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/06/18/news/7022

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.