Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னமரவடியினில் எஞ்சியதும் பறிபோகின்றது?

Featured Replies

Oluvil%20Port.JPGதிருகோணமலையின் தென்னைமரவடி கிராமத்திலுள்ள காணிகளையும் வயல் நிலங்களையும் அயல் கிராமமான பதவி சிறீபுர மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியாக கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களம் காணிக்கச்சேரிகளை நடத்தி பலாத்காரமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தென்னைமரவடி கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் மக்களே வாழ்ந்திருந்தனர்.வேறு எந்த இனத்தவரும் குடியிருந்ததில்லையென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வன்முறை காரணமாக இம்மக்கள் இடம்பெயர்ந்தமையை பயன்படுத்தி பதவியா சிறீPபுர கிராம சிங்கள மக்கள் காணிகளையும் வயல்களையும் கபளீகரம் செய்துள்ளனர். மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட தென்னைமரவடி மக்கள் தமது காணிகளுக்கோ வயல்நிலங்களுக்கோ செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இச்சூழ்நிலையில் கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்களத்தினர் சமாதான முயற்சியென்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் வயல்களையும் பிரித்து எவ்வித உரித்துமில்லாத பதவியா சிறீPபுர மக்களுக்கு வழங்க முற்பட்டுள்ளனர்.

தென்னைமரவடி கிராமத்திலுள்ள பாரம்பரியமாக இருந்த தமிழ்ப் பெயர்கள் அனைத்தையும் சிங்களப் பெயர்களாக மாற்றும் தீவிரமான முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள். புதவியா சிறீபுர கிராம மக்கள் பலாத்காரமாக தாம்பிடித்த காணிகளை தமக்கும் எடுத்துக் கொண்டு தமது உறவினர்களுக்கும் பங்கு பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என கூறப்படுகின்றது.

தென்னைமரவடி மக்களிடம் வலிதான ஆவணங்கள் இருந்தும் இந்த ஆவணங்கள் செல்லுபடியற்றவை.எனது அதிகாரத்தைப் பாவித்து காணிகளை சிங்கள மக்களிற்கு பங்கிட்டுக் கொடுப்பேன் என அப்பாவி மக்களை மிரட்டி காணிகளை பங்கிடும் கிழக்கு மாகாண காணி நிர்வாக திணைக்கள ஆணையாளரின் முறைகெட்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்கள் ஏன் மௌனம் காத்திருக்கின்றனரெனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.http://www.pathivu.com/news/40938/57//d,article_full.aspx

TNA.jpg
 
* சிங்கக்கொடி ஏந்திய திருமலை சிங்கனுக்கு, திருமலையில் நடப்பவை தெரியாதா?
 
* சிங்கக்கொடி தாங்கிய திருமலை சிங்கன், இனியாவது சிங்களத்துக்கு ------ பார்க்க பின் வாசலை புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி, அங்கு இன்றும் நடைபெறும் அட்டூளியங்களை வெளியுலகிற்கு கொணரலாம்?

Edited by நிழலி
அநாகரீக சொற் பிரயோகம் நீக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவிலையும்  வெளிநாடுகளிலையும் இருக்கிற எங்கடை தமிழ் சங்கராபரணங்கள் சிங்களவன்ரை அடிப்பக்கம் கழுவி முடிக்கும் வரைக்கும் எந்த கொம்பனாலையும் எங்கடை இனத்துக்கு காப்புறுதி குடுக்கேலாது.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.