Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கதேசத்தில் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம் மீது தாக்குதல் !

Featured Replies

வங்கதேசத்தில் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம் மீது தாக்குதல் !

கிரிக்கெட் போட்டியை காண வங்கதேசம் சென்ற சச்சினின் தீவிர ரசிகர் சுதிர் கௌதம்  மீது டாக்காவில் சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

sudir.jpg

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி சமன் கண்ட நிலையில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்று இழந்தது. இந்த தொடரை காண சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கௌதம் வங்கதேசத்துக்கு சென்றிருந்தார். போட்டி நடைபெற்ற மிர்பூர் மைதானத்தில உடல் முழுக்க இந்திய முவர்ணத்பை பூசிக் கொண்டு தேசியக் கொடியுடன் மைதானத்தில் அவர் வலம் வந்தார்.

sachin.jpg

இந்நிலையில் நேற்றைய போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதும் டாக்கா நகரில் சில வங்கதேச ரசிகர்கள் சேர்ந்து சுதிர் கௌதம் மீது தாக்குதல் நடத்தினர். சுதிர் வந்த ஆட்டோவை நிறுத்திய அந்த கும்பல் ,கற்களை கொண்டு அவரை தாக்கியுள்ளது. அவர் பயணம் செய்த ஆட்டோவையும் சேதப்படுத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுதில் கௌதமை வன்முறை கும்பலிடம் இருந்து மீட்டனர். இதனால் சிறிய அளவிலான காயங்களுடன் சுதிர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தையடுத்து வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 34 வயதான சுதிர் கௌதம் இந்திய கிரிக்கெட் அணி எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் போட்டியை காண செல்பவர். சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான இவரை சச்சின் தனது வீட்டுக்கே அழைத்து விருந்தளித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48339

  • தொடங்கியவர்

ஜெயில் தண்டனை முதல் அடி உதை வரை... ஒரு கிரிக்கெட் ரசிகனின் 'டெர்ரர்' பயணம்!

ந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான சுதிர் கௌதம் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களால் நேற்று தாக்கப்பட்டுள்ளார். மிர்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியை பார்த்து விட்டு ஆட்டோவில் வந்த அவரை ஒரு கும்பல் வெறித்தனமாக தாக்கியுள்ளது. போலீசார் அந்த வெறிக்கும்பலிடம் இருந்து சுதிர் கௌதமை மீட்டனர். இந்தியாவில் இவரை போன்ற ரசிகர்களால்தான் கிரிக்கெட் இன்று இத்தகைய உன்னத நிலையை அடைந்துள்ளது என்றால் சுதிர் கௌதம் போன்றவர்கள்தான் காரணம் என்றால் மிகையில்லை.

sudir%281%29.jpgஇவர்களுக்கு கிரிக்கெட்டால் பெரிய அளவில் பலன் இல்லை. ஆனாலும் கிரிக்கெட்டை அவர்கள் நேசிக்கும்விதமே தனி. பீகாரை சேர்ந்த சுதிர் கௌதமும் அந்த ரகம்தான். இந்திய அணி எங்கே சென்றாலும் பின்னாலேயே சுதிரும் செல்வார். சச்சின் வீட்டில் சாப்பிடுவார். தெருவோரம் படுத்துக் கொள்வார், ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பார்..திடீரென்று பாகிஸ்தானில் இருப்பார். மறுநாள் லணடன் பறப்பார்.

கடந்த 2002ஆம் ஆண்டு கொல்கத்தா ஏடன் கார்டனில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிதான் சுதிருக்கும் சச்சினுக்குமிடையேயான அறிமுகத்தை முதன் முதலாக ஏற்படுத்தியது. அந்த போட்டியை டி.வி.யில் பார்த்த சுதிர்குமார் சச்சினின் தீவிர ரசிகரானார்.


அடுத்த ஆண்டு அதாவது 2003ஆம் ஆண்டு மும்பையில் நடந்த கிரிக்கெட் போட்டியில், இந்தியா--நியூசிலாந்து அணிகள் மோதின.இந்த போட்டியை பார்க்க, பீகாரின் முஷாபர்பூரில் இருந்து மும்பைக்கு சைக்கிளில் பயணத்தை தொடங்கினார் சுதிர். சுமார் 1700 கி.மீ தொலைவு பயணித்து மும்பை வந்தடைந்தார். சச்சினை சந்தித்து விடவேண்டுமென்பதுதான் அப்போது அவருடைய ஒரே நோக்கம்.

மும்பையில் டிரிடன்ட் ஹோட்டலில், சச்சினின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருப்பதாக சுதிர்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு சென்ற சுதிர்குமார் எப்படியோ செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் அறைக்குள்ளும் புகுந்து விட்டார். அங்கே பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் சூழ்ந்திருக்க, அனைவர் முன்னிலையிலும் அப்படியே சச்சின் காலில் விழுந்து விட்டார் சுதிர்.

சச்சினிடம் கிரிக்கெட் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்த, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் அசந்து விட்டார். அன்றைய தினமே சச்சின், தனது காரில் சுதிரை வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைத்து சென்றார். மதிய உணவுக்கு பின் சச்சின் நியூசிலாந்து- இந்திய அணிகளுக்கிடையேயான போட்டியை காண டிக்கெட்டும் வழங்கினார். சுதிருடன் பேசும் போது, அவருக்கு அப்போது கல்லூரி தேர்வு நடக்கவிருப்பதை சச்சின் தெரிந்து கொண்டார். தேர்வு எழுதிவிட்டு வருமாறு சச்சின் சுதிரிடம் கேட்டுக்கொண்டார்.ஆனால் சுதிரோ, தேர்வு எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்... என்று மும்பையிலேயே இருந்து போட்டியை பார்த்து விட்டுதான் பீகார் கிளம்பினார்.

கட்டாக்கில் நடந்த நியூசிலாந்து - இந்தியா போட்டியின் போது, இந்திய அணி தோற்கும் நிலையில் இருந்தது. அப்போது மைதானத்திற்குள் புகுந்த சுதிர்குமார் சச்சினின் காலை தொட்டு வணங்கினார். பின்னாலேயே போலீசும் துரத்திக்கொண்டு வந்தது. சுதிரை பிடித்து சென்ற போலீசாரிடம், 'தயவு செய்து அவரை அடித்துவிடாதீர்கள்!' என சச்சின் கேட்டுக் கொண்டார்.

அடுத்து ஹைதரபாத்தில் நடந்த போட்டியின் போது சச்சின் சதமடித்தார். மைதானத்திற்குள் புகுந்த சுதிர் சச்னின் பாதங்களை தொட்டார். பின்னாலே வந்த போலீஸ், சுதிரை குண்டுகட்டாக தூக்கி சென்று ஜெயிலில் போட்டுவிட்டது.

sachin%281%29.jpg

தொடர்ந்து மும்பைக்கு சென்ற சுதிர், சச்சினை நேரில் சந்தித்தார். அப்போது பீகாரில் விளையும் அரியவகை பழமான லிட்டிஸ் பழங்களையும் கையோடு எடுத்து சென்று சச்சினுக்கு வழங்கினார். அன்று முதல் சச்சினுக்கும், சுதிருக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அதற்கு பின் சுதிர் பார்க்கவுள்ள அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் சச்சினே செலவு செய்யத் தொடங்கினார்.

கிரிக்கெட் பைத்தியம் காரணமாக 3 வேலைகளை சுதிர் இழந்துள்ளார். முதலில் முஷாபர்பூரில் உள்ள சுதா பால் நிறுவனத்தில் வேலை தொலைந்தது. அடுத்து சிக் ஷா மித்ரா என்ற நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு வேலை கிடைத்தது. அந்த சமயத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்ல, வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு பாகிஸ்தானுக்கு சைக்கிளில் சென்று விட்டார்.

பாகிஸ்தானில் இவருக்கு ஆதரவளித்தது யார் தெரியுமா? பாகிஸ்தான் அணியின் தீவிர கிரிக்கெட் ரசிகரான சாச்சா என்பவர்தான். லாகூர் வந்த சுதிர்குமாரை அன்போடு வரவேற்ற சாச்சா என்ற செல்லப் பெயர் கொண்ட அந்த ரசிகர், கிட்டத்தட்ட சுதிரை தத்து எடுத்துக் கொண்டார். பாகிஸ்தானில் இருந்த வரை இருவரும் சேர்ந்தே போட்டிகளை காண செல்வார்கள், வருவார்கள்.

sudir1.jpg

இந்தியாவில் போட்டி நடந்தால் ரயிலில் செல்வதுதான் சுதிர்குமாரின் வழக்கம். ரயிலில் செல்வதற்காக சுதிர்குமார் டிக்கெட் எடுப்பதில்லை. பல முறை சச்சினின் தீவிர ரசிகர் என்பதால் விடுவிக்கப்பட்டார். ஒரு முறை டிக்கெட் பரிசோதகர் ஒருவர், நீங்கள் சச்சின் பெயரை களங்கப்படுத்துகிறீர்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சுதிர் அதற்கு பின், பிளாட்பார டிக்கெட் இல்லாமல் கூட ரயில் நிலையங்களுக்கு செல்வதில்லை.

ஐ.பி.எல் போட்டியில் சச்சின் ஆடியதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகராகிவிட்டார் சுதிர் குமார். இரண்டாவது சீசன் ஐ.பி.எல். போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளையும் சுதிர்குமார் நேரில் பார்த்துள்ளார். இரண்டாவது சீசன் ஐ.பி.எல். போட்டிகள் தென்ஆப்ரிக்காவில் நடைபெற்றதால், ஸ்பான்ஷர்களை பிடிக்க சுதிர்குமாரால் இயலவில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டு கான்பூரில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அதனை பார்க்க சுதிர்குமார் வேலி தாண்டி உள்ளே குதித்து விட்டார். போலீசார் பின்னி எடுத்து விட்டனர். அந்த சமயத்தில் சச்சின்தான் சுதிர்குமாரை காப்பாற்றியிருக்கிறார். மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் சச்சின் அறிவுரை வழங்கினார்.

cyc.jpg

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் ஆட்டம் மிர்பூரில் நடந்தது. இந்த போட்டியை பார்க்க மிர்பூர் சென்ற சுதிர்குமார், தனது தலைமுடியை இந்தியா போன்றே வெட்டிக் கொண்டார்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்ற போது, இந்திய அணி வீரர்களின் டிரெஸ்சிங் அறையில் இருந்து சச்சின் அழைப்பதாக சுதிர்குமாரை வந்து இரண்டு பேர் அழைத்து சென்றனர். அங்கு இந்திய வீரர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாட சுதிரும் அனுமதிக்கப்பட்டார். உலகக் கோப்பையை கையில் ஏந்தியவாறு இந்தியா...இந்தியா என்று கோஷமிட்ட அந்த சாதாரண ரசிகரின் புகைப்படம், அடுத்தநாள் வட இந்திய பத்திரிகைகள் அனைத்திலும் இடம் பெற்றிருந்தது.

சச்சின் விளையாடிய வரை சுதிரின் உடலில் சச்சின் என்றே எழுதப்பட்டிருக்கும். சச்சின் ஓய்வு பெற்ற பின்னர் 'மிஸ் யூ சச்சின்' என்ற வாசகம் சுதிரின் உடலை அலங்கரிக்கிறது.

கடந்த உலகக் கோப்பையை போட்டியை காண சுதிர்குமார் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றிருந்தார். சுதிருக்கு விசா கிடைக்க தாமதம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் சச்சின்தான், சுதிர்குமார்  இந்தியாவின் அடையாளம். அவருக்கு விசா வழங்க ஆவண செய்யவும் என்று டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்துக்கு கடிதம் எழுதினார். பின்னர் விசா வழங்கப்பட, இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு ஒருநாள் முன்னதாக சுதிர்குமார் ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.

sudhir3.jpg

உலகக் கோப்பை நடந்த சமயத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து விமானநிலையத்தில், உடல் முழுவதும் மூவர்ணம் பூசிக்கொண்டு சுதிர்குமார் செல்ல,அவருக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சச்சின் வழங்கிய கடிதத்தை காட்டி சுதிர்குமார் தப்பித்தார்.

தற்போது 34 வயதாகி கிட்ட சுதிர்குமார், திருமணம் செய்து கொள்ளவில்லை. கிரிக்கெட்தான் அவரது முதல் மனைவியாம். கல்யாணம் கட்டிக் கொண்டு ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை பாழாக்க விரும்பவில்லை என்கிறார்.

சுதிர்குமாரின் கிரிக்கெட் பைத்தியம் காரணமாக அவரது தந்தை இவரிடம் பேசுவதில்லையாம். தந்தை வீட்டில் இருந்தால் சுதிர்குமார் வீட்டுக்கு செல்வதை தள்ளிப்போட்டு விடுவாராம். ரக் ஷா பந்தன் சமயங்களில் வீட்டுக்கு சென்று தனது சகோதரியிடம் ராக்கி கட்டிக் கொள்கிறார். மற்றபடி பெரியதாக வீட்டுக்கும் சுதிருக்கும் தொடர்பு இல்லை.

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தும் ஒரே இலக்குதான் சுதிரின் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம். இந்த உலகில் உயிரோடு இருக்கும் வரை சச்சினின் பெயரை அவர் உடலில் தாங்கி நிற்க வேண்டுமென்பதுதான் அவரது ஒரே ஆசை.

சுதிர்குமார் போன்ற ரசிகர்களால்தான் கிரிக்கெட் உயிர் வாழ்கிறது உன்னதமாக... என்றே சொல்லத் தோன்றுகிறது!

 

http://www.vikatan.com/news/article.php?aid=48363

  • தொடங்கியவர்

நாளை 3வது ஒருநாள் போட்டி: போலீஸ் பாதுகாப்புடன் பார்க்கிறார் இந்திய ரசிகர் சுதிர் கௌதம்!

sudi.jpgமிர்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததும் வங்கதேச ரசிகர்கள் சிலர் இந்திய அணியின் சூப்பர் ஃபேன் என்று அழைக்கப்படும் சுதிர் கௌதமை தாக்கினர். பின்னர் போலீசார் வந்து சுதிர் கௌதமை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு சென்றனர்.

இந்நிலையில் நாளை 3வது போட்டியை காணவும், சுதிர் கௌதம் போகப்போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மைதானத்தில் அவரை சுற்றி 2 போலீஸ்காரர்களை பாதுகாப்பாக நிறுத்த டாக்கா தலைமை காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சுதிர் கௌதம் கூறுகையில், '' 2வது ஒருநாள் போட்டி முடிந்ததும் சில ரசிகர்கள் மைதானத்தில் வைத்தே என்னிடம் வம்பு செய்து கொண்டிருந்தனர். உடனே அங்கிருந்து நான் வெளியேறி விட்டேன். ஆனாலும் என்னை பின் தொடர்ந்து வந்து தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று டாக்கா நகர போலீஸ் அதிகாரி ஒருவர் என்னை சந்தித்தார். புகார் அளிக்கவும் கேட்டுக் கொண்டார். ஆனால் நான் புகார் அளிக்க விரும்பவில்லை. இதையடுத்து எனக்கு 2 போலீஸ்காரர்களை காவலுக்கு நியமித்து சென்றார். இதற்கு முன் 7 முறை வங்க தேசத்துக்கு நான் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வந்துள்ளேன். ஆனால் ஒரு முறை கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை" என்றார்.

நாளை மதியம் 1.30 மணிக்கு இந்திய -  வஙகதேச அணிகள் மோதும் 3வது போட்டி மிர்பூரில் தொடங்குகிறது. ஏற்கனவே முதல் இரு போட்டிகளிலும் தோற்றதால் அதிர்ச்சியில் இருக்கும் இந்திய அணி,  ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

http://www.vikatan.com/news/article.php?aid=48425

  • தொடங்கியவர்

வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய ரசிகரை விராட்கோலி, ரெய்னா சந்தித்து ஆறுதல்!

ங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய ரசிகர் சுதிர் கௌதமை, இந்திய அணியின் துணைகேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

sudhir.jpg

மிர்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச ரசிகர்கள் சிலரால் இந்திய அணியின் தீவிர ரசிகரான சுதிர் கௌதம் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுதிர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. எனினும் சுதிரின் பாதுகாப்புக்கு வங்கதேச போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். வங்கதேசத்தில் அவர் இருக்கும் வரை 2 போலீசார் சுதிரின் பாதுகாப்புக்கு என்று தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

sudhifb.jpg

வீடியோவை காண க்ளிக் செய்க...

 

poli.jpg

இந்நிலையில் முஷாஃபர்பூரில் நேற்று இந்திய அணி வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மைதானத்துக்கு சுதிர் வந்தார். அப்போது இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி, சுதிரை சந்தித்து, தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் தனது செல்போன் எண்ணை சுதிரிடம் கொடுத்து, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுமாறு விராட் கோலி அவரிடம் கூறினார்.

அதோடு சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சுதிர் கௌதமை சந்தித்து ஆறுதல் கூறினர். சுரேஷ் ரெய்னா, சுதிர் மேல் கை போட்டுக் கொண்டு அவரிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48461

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.